இந்த
தனிமங்கள் குறித்து இன்னும் நிறைய விளக்கங்கங்கள் தருவதற்கு முன் சில
விஷயங்களைப் பற்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்றைய விஞ்ஞானம்
கண்டுபிடிக்கிற இந்த தனிமங்கள் பற்றிய ஆராய்ச்சியை எல்லாம் (கோடிக்கனக்கில்
செலவு செய்து) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நம் சித்தர்கள் கண்டறிந்தார்கள். சித்தர்களின் ரசவாத சித்து கூட
இந்த தனிமங்களின் விளையாட்டுதான். மருத்துவத் துறையில் சித்தர்கள் இந்த
தனிமங்களைக் கையாண்டுதான் அனேகம் வியாதிகளைக் குணமாக்கியுள்ளனர். எந்தெந்த
மூலிகைகளில் எந்தெந்த தனிமங்கள் இருக்கின்றன என்பதை அவர்களே முதலில்
கண்டுபிடித்தார்கள்.விஞ்ஞானத்தின் கருத்துப்படி தனிமங்களின் தன்மைகள் மாற
வேண்டுமானால் அதனுள் இருக்கும் அணுக்களின் எடை மாற வேண்டும். அதாவது
நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறும் போது அணுக்களின் எடையும் மாறும். அதுபோல
புரோட்டான்களின் எண்ணிக்கை மாறுபடும் போது தனிமங்களின் இராசயனத் தன்மை
மாறும். இந்த விளைவின் படியே ஒரு தனிமம் வேறொரு தனிமமாக மாறும். இந்த
தத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்த நம் நாட்டு
சித்தர்கள் இரசவாதம் மூலம் உலோகங்களை மாற்றிக் காட்டினார்கள். இந்த
தனிமங்களின் உதவியால் அவர்கள் அனைத்தையும் சாதித்தார்கள். இந்த தனிமங்களின்
உதவியோடு காயகல்ப தேகம் பெற்று, அதன் மூலம் தவ ஆற்றலைப் பெருக்கிக் கொண்டு
ஞானமடைந்தார்கள். பல சித்துக்களை செய்தார்கள். எந்த வித உபகரணங்களின் உதவி
இல்லாமலேயே வானியல், உடலியல், வைத்தியம் இன்னும் பல விஷயங்களை ஞானத்தால்
பெற்றார்கள்.
No comments:
Post a Comment