Friday, March 28, 2014

மலையில் உள்ள குகை போல மனத்திலும் குகை உண்டு

Photo: பிரமண்யம் என்றால் பிரம்மஞானத்தை விரும்புதல் அல்லது கடைபிடித்தல் என்பதாம். ஸு என்பது உபசர்கம். அது நலம் இனிமை ஆகிய இரண்டும் கூடி உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதாவது நல்லவர்களுக்கு இனியவன் என்றும், பிரம்மாகிய நலத்த்தின் கண் ஆசையை உடையவன் என்றும் பொருள்படுகிறது. தவத்தின் விளைவே முருகன். சிவனின் ஐம்பொறிகளில் இருந்து ஐந்தும் மனத்திலிருந்து ஒன்றும் ஆக ஆறு ஒளிப்பிழம்புகள் கிளம்பி கங்கையை உலர்த்திவிட்டு, நாணல் காட்டில் உள்ள நீர் நிலையாம் சரவணப் பொய்கையில் பிரவேசித்து, ஆறுமுகமும் பன்னிரு தோளும் உடைய குழவியாக உருவெடுத்து வந்ததால் ஷண்முகன் என்றும், ஆறுமுகம் என்றும் வழங்கப்படுகிறான். சூரியன் போன்றவன் சிவன். அவன் சேய்மையில் விளங்குவதால் சேயோன். அழலைப் போன்றவன்அண்ணலின் குமாரன். அதாவது நம் சொரூபமாகவே சுப்ரமணியன் இருக்கிறான். இந்த முருகனை அறியும் போது நம்மையே நாம் அறிகிறோம். ஆறுமுகமும் பன்னிரு தோளும் ஒரு மேனியும் உடையவனாக சரவணபவன் குறிக்கப்படுவதற்கு பல பொருள்கள் பல அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன. மனிதனாகப் பிறந்தவனிடத்தில் உள்ள மகிமையெல்லாம் உருவெடுத்தவன் முருகன். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தும் மனமும் சேர்த்து ஆறு தத்துவங்களும் ஆறு முகமாக அமைந்துள்ளன. நம் உடலின் கண் உள்ள ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாகும். பன்னிரு கைகளும் ஆற்றலைக் குறிப்பவை. அதாவது முயற்சி உடைய மனிதன் பல கைகளை உடையவனுக்கு ஒப்பானவன் என்பதே அதன் உட்பொருள். 

சக்தியை மூன்று சக்திகளாகச் சொல்வார்கள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பவைகளாம். முருகனிடத்தில் இம்மூன்றும் மிளிர்வது கண்கூடு. சிவனின் ஞானத்தில் விளைந்தவனாதலால் அவன் ஞான சொரூபி. ஞானசக்தியாகவே வடிவெடுத்தவன் அவன். இச்சா சக்தியாக வள்ளியும், கிரியையில் மேம்பட்டவர்களே வானவர்கள் எனப்படுவர். அவர்களால் அளிக்கப்பட்ட கிரியாசக்தியே தெய்வயானை. கீதையில் கண்ணன் சேனைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்று கூறியுள்ளதை இங்கே குறிப்பிட வேண்டும். தகைமையே உருவெடுத்தவன் முருகன். எனவே கிரியையில் மேம்பட்ட வானவர்கள் அவனை சேனைத்தலைவனாக ஏற்றுக்கொண்டனர். ஆத்மாவானது அழியாது என்றும் இளமையாகத் திகழ்வது. எனவே முருகனைப் போற்றுபவர்கள் ஆத்ம சொரூபத்தின் இளமையைப் போற்றுபவர் ஆவர். தெளிந்த மனதோடு ஆத்மாவைப் போற்றுபவர்களுக்கு பார்க்குமிடமெங்கும் தெய்வத்தின் அழகு தரிசனம் தோன்றும். அந்த அழகே முருகனாக குறிகாட்டப்படுகிறது.

மனதை அடக்குபவன் மாயையைக் கடப்பவனாவான். மனமாகிய மயிலை அடக்கி அதன்மேல் அமர்ந்து சக்தியாகிய பாம்பையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து உலகனைத்தையும் வலம் வருவான். மனம் அடங்கினால் அதற்கு சக்தியாகிய பாம்பும் அடங்கி நடக்கும். அதனால் சித்திகள் பெற்று எல்லா புவனங்களையும் வலம் வரலாம். மனதை அடக்கும் சான்றோருக்கு பிரம்மாவின் படைப்பின் இரகசியமே தெரியும். அதனால்தான் பிரம்மாவையே அடக்கி சிறைவைப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் படைப்பையும் வென்றவர்களாவர். மனத்தகத்து ஓயாது எழும் தீய எண்ணங்களை சம்ஹாரம் செய்பவன் சிவக்குமாரன். மலையில் உள்ள குகை போல மனத்திலும் குகை உண்டு. அதை தஹராகாசம் என்றும் கந்த கோட்டம் என்றும் கூறுவாரர்கள். அந்தக் குஹையின் கண் ஒடுஙுகுபவன் குஹப்பிரம்மம். அதன்கண் மறைந்திருப்பதால் மறைநாயகன். மனம் ஒடுங்கி அறிவு விரிந்து பேரறிவில் லயப்படுவதால் வேதநாயகன். பிறவிப் பிணியை போக்கிக் கொள்வதால் ஞானபண்டிதன். சித்தத்தில் உள்ள மலம் அறுபட்ட ஒவ்வொரு ஜீவனும் சிவக்குமாரனே. அவனே தந்தைக்கு ஒப்பானவன். அவனே சிவகுருநாதன். அவனே சுவாமிக்குப் பிரியமான சுவாமிநாதன். எனவே நம் சொரூபத்தை உள்முகமாக நாம் அறியவேண்டும் என்பதை உணர்த்தப் படைக்கப்பட்டவரே ஸுப்ரமணியர்.
பிரமண்யம் என்றால் பிரம்மஞானத்தை விரும்புதல் அல்லது கடைபிடித்தல் என்பதாம். ஸு என்பது உபசர்கம். அது நலம் இனிமை ஆகிய இரண்டும் கூடி உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதாவது நல்லவர்களுக்கு இனியவன் என்றும், பிரம்மாகிய நலத்த்தின் கண் ஆசையை உடையவன் என்றும் பொருள்படுகிறது. தவத்தின் விளைவே முருகன். சிவனின் ஐம்பொறிகளில் இருந்து ஐந்தும் மனத்திலிருந்து ஒன்றும் ஆக ஆறு ஒளிப்பிழம்புகள் கிளம்பி கங்கையை உலர்த்திவிட்டு, நாணல் காட்டில் உள்ள நீர் நிலையாம் சரவணப் பொய்கையில் பிரவேசித்து, ஆறுமுகமும் பன்னிரு தோளும் உடைய குழவியாக உருவெடுத்து வந்ததால் ஷண்முகன் என்றும், ஆறுமுகம் என்றும் வழங்கப்படுகிறான். சூரியன் போன்றவன் சிவன். அவன் சேய்மையில் விளங்குவதால் சேயோன். அழலைப் போன்றவன்அண்ணலின் குமாரன். அதாவது நம் சொரூபமாகவே சுப்ரமணியன் இருக்கிறான். இந்த முருகனை அறியும் போது நம்மையே நாம் அறிகிறோம். ஆறுமுகமும் பன்னிரு தோளும் ஒரு மேனியும் உடையவனாக சரவணபவன் குறிக்கப்படுவதற்கு பல பொருள்கள் பல அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன. மனிதனாகப் பிறந்தவனிடத்தில் உள்ள மகிமையெல்லாம் உருவெடுத்தவன் முருகன். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தும் மனமும் சேர்த்து ஆறு தத்துவங்களும் ஆறு முகமாக அமைந்துள்ளன. நம் உடலின் கண் உள்ள ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாகும். பன்னிரு கைகளும் ஆற்றலைக் குறிப்பவை. அதாவது முயற்சி உடைய மனிதன் பல கைகளை உடையவனுக்கு ஒப்பானவன் என்பதே அதன் உட்பொருள்.

சக்தியை மூன்று சக்திகளாகச் சொல்வார்கள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பவைகளாம். முருகனிடத்தில் இம்மூன்றும் மிளிர்வது கண்கூடு. சிவனின் ஞானத்தில் விளைந்தவனாதலால் அவன் ஞான சொரூபி. ஞானசக்தியாகவே வடிவெடுத்தவன் அவன். இச்சா சக்தியாக வள்ளியும், கிரியையில் மேம்பட்டவர்களே வானவர்கள் எனப்படுவர். அவர்களால் அளிக்கப்பட்ட கிரியாசக்தியே தெய்வயானை. கீதையில் கண்ணன் சேனைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்று கூறியுள்ளதை இங்கே குறிப்பிட வேண்டும். தகைமையே உருவெடுத்தவன் முருகன். எனவே கிரியையில் மேம்பட்ட வானவர்கள் அவனை சேனைத்தலைவனாக ஏற்றுக்கொண்டனர். ஆத்மாவானது அழியாது என்றும் இளமையாகத் திகழ்வது. எனவே முருகனைப் போற்றுபவர்கள் ஆத்ம சொரூபத்தின் இளமையைப் போற்றுபவர் ஆவர். தெளிந்த மனதோடு ஆத்மாவைப் போற்றுபவர்களுக்கு பார்க்குமிடமெங்கும் தெய்வத்தின் அழகு தரிசனம் தோன்றும். அந்த அழகே முருகனாக குறிகாட்டப்படுகிறது.

மனதை அடக்குபவன் மாயையைக் கடப்பவனாவான். மனமாகிய மயிலை அடக்கி அதன்மேல் அமர்ந்து சக்தியாகிய பாம்பையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து உலகனைத்தையும் வலம் வருவான். மனம் அடங்கினால் அதற்கு சக்தியாகிய பாம்பும் அடங்கி நடக்கும். அதனால் சித்திகள் பெற்று எல்லா புவனங்களையும் வலம் வரலாம். மனதை அடக்கும் சான்றோருக்கு பிரம்மாவின் படைப்பின் இரகசியமே தெரியும். அதனால்தான் பிரம்மாவையே அடக்கி சிறைவைப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் படைப்பையும் வென்றவர்களாவர். மனத்தகத்து ஓயாது எழும் தீய எண்ணங்களை சம்ஹாரம் செய்பவன் சிவக்குமாரன். மலையில் உள்ள குகை போல மனத்திலும் குகை உண்டு. அதை தஹராகாசம் என்றும் கந்த கோட்டம் என்றும் கூறுவாரர்கள். அந்தக் குஹையின் கண் ஒடுஙுகுபவன் குஹப்பிரம்மம். அதன்கண் மறைந்திருப்பதால் மறைநாயகன். மனம் ஒடுங்கி அறிவு விரிந்து பேரறிவில் லயப்படுவதால் வேதநாயகன். பிறவிப் பிணியை போக்கிக் கொள்வதால் ஞானபண்டிதன். சித்தத்தில் உள்ள மலம் அறுபட்ட ஒவ்வொரு ஜீவனும் சிவக்குமாரனே. அவனே தந்தைக்கு ஒப்பானவன். அவனே சிவகுருநாதன். அவனே சுவாமிக்குப் பிரியமான சுவாமிநாதன். எனவே நம் சொரூபத்தை உள்முகமாக நாம் அறியவேண்டும் என்பதை உணர்த்தப் படைக்கப்பட்டவரே ஸுப்ரமணியர்.

No comments:

Post a Comment