Friday, March 28, 2014

ஆக்சிஜன்

Photo: சுவாசத்தின் மூலமாக நாம் பெறும் தனிமம் எது என்பது உங்களுக்கே தெரியும். என்றாலும் சொல்லிவிடுகிறேன் அது ஆக்சிஜன் மட்டுமே. 
நம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற சிவப்பு அணுக்கள் இருக்கின்றன. இதன் மூலக்கூறு எடை 68,000 டால்டன்களாகும். இந்த மூலக்கூறில் 'ஹீம்' என்கிற இரும்புச்சத்தை கொண்ட பகுதி 5% இருக்கிறது. மனிதனின் ஒரு லிட்டர் இரத்தத்தில் 150 கிராம் ஹீமோகுளோபின் உள்ளது. நாம் சுவாசிக்கும் போது ஹீமோகுளோபின் மூலக்கூறில் உள்ள 4 இரும்பு அணுக்கள் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறோடு இணைகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் தனிமங்கள் நிறைய இருந்தாலும், நுரையீரலில் காற்று நுண்ணறைகளில் இருக்கும் இரத்தத் தந்துகிகளில் இருக்கும் ஹீமோ குளோபின் ஆக்சிஜனை மட்டும் ஈர்த்துக் கொள்கிறது. மீதி தனிமங்கள் காற்றோடு வெளியேறிவிடும். ஈர்க்கப்பட்ட ஆக்சிஜனானது இரத்தத்தோடு கலந்து நுரையீரல் சிரை வழியாக இதயத்துக்குச் செல்லும். இதயத்திலிருந்து மகாதமணி என்ற இரத்தக் குழாய் வழியாக உடல் முழுக்கச் செல்லும். அங்கிருக்கும் கார்பனை எடுத்துக் கொண்டு மேல்சிரைக்கு செல்லும் இரத்தம் நுரையீரல் தமனி வழியாக மீண்டும் நுரையீரலுக்குச் செல்லும். அந்த கார்பன் வெளியேறும் காற்றுடன் வெளியேறிவிடும். இவ்வளவு வேலைகள் சுவாசத்தின் போது நடப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும். மூச்சை இழுத்துவிடுவதோடு சரி. என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. நம் உடல் உழைப்பை நாம் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் உயிர்வாழ நம்மைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நம் உள் உறுப்புகள் உழைத்துக் கொண்டிருக்கின்றன. சரி, இந்த ஆக்சிஜன் தனிமத்தை சுவாசம் மூலம் நாம் பெறாவிட்டால் நாம் இயங்கமுடியாது. உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. 
யாருடைய உடலில் எல்லாம் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதோ, அவர்களுக்கு ஆக்சிஜன் சரிவரக் கிடைக்காது. எனவே உடல் சோர்ந்து போகும். இதையே இரத்தசோகை என்பார்கள். சிவப்பு அணுக்கள் குறைபாடு இருப்பதால் உடல் வெளிறிப் போகும்.கண்ணின் கீழ்பகுதி வெள்ளையாக இருக்கும். நகம் வெள்ளையாக இருக்கும். உடனடியாக ஹீமோகுளோபினை அதிகப் படுத்த தகுந்த உணவு முறைகளைக் கையாள வேண்டும்.சுவாசத்தின் மூலமாக நாம் பெறும் தனிமம் எது என்பது உங்களுக்கே தெரியும். என்றாலும் சொல்லிவிடுகிறேன் அது ஆக்சிஜன் மட்டுமே.
நம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற சிவப்பு அணுக்கள் இருக்கின்றன. இதன் மூலக்கூறு எடை 68,000 டால்டன்களாகும். இந்த மூலக்கூறில் 'ஹீம்' என்கிற இரும்புச்சத்தை கொண்ட பகுதி 5% இருக்கிறது. மனிதனின் ஒரு லிட்டர் இரத்தத்தில் 150 கிராம் ஹீமோகுளோபின் உள்ளது. நாம் சுவாசிக்கும் போது ஹீமோகுளோபின் மூலக்கூறில் உள்ள 4 இரும்பு அணுக்கள் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறோடு இணைகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் தனிமங்கள் நிறைய இருந்தாலும், நுரையீரலில் காற்று நுண்ணறைகளில் இருக்கும் இரத்தத் தந்துகிகளில் இருக்கும் ஹீமோ குளோபின் ஆக்சிஜனை மட்டும் ஈர்த்துக் கொள்கிறது. மீதி தனிமங்கள் காற்றோடு வெளியேறிவிடும். ஈர்க்கப்பட்ட ஆக்சிஜனானது இரத்தத்தோடு கலந்து நுரையீரல் சிரை வழியாக இதயத்துக்குச் செல்லும். இதயத்திலிருந்து மகாதமணி என்ற இரத்தக் குழாய் வழியாக உடல் முழுக்கச் செல்லும். அங்கிருக்கும் கார்பனை எடுத்துக் கொண்டு மேல்சிரைக்கு செல்லும் இரத்தம் நுரையீரல் தமனி வழியாக மீண்டும் நுரையீரலுக்குச் செல்லும். அந்த கார்பன் வெளியேறும் காற்றுடன் வெளியேறிவிடும். இவ்வளவு வேலைகள் சுவாசத்தின் போது நடப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும். மூச்சை இழுத்துவிடுவதோடு சரி. என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. நம் உடல் உழைப்பை நாம் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் உயிர்வாழ நம்மைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நம் உள் உறுப்புகள் உழைத்துக் கொண்டிருக்கின்றன. சரி, இந்த ஆக்சிஜன் தனிமத்தை சுவாசம் மூலம் நாம் பெறாவிட்டால் நாம் இயங்கமுடியாது. உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது.
யாருடைய உடலில் எல்லாம் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதோ, அவர்களுக்கு ஆக்சிஜன் சரிவரக் கிடைக்காது. எனவே உடல் சோர்ந்து போகும். இதையே இரத்தசோகை என்பார்கள். சிவப்பு அணுக்கள் குறைபாடு இருப்பதால் உடல் வெளிறிப் போகும்.கண்ணின் கீழ்பகுதி வெள்ளையாக இருக்கும். நகம் வெள்ளையாக இருக்கும். உடனடியாக ஹீமோகுளோபினை அதிகப் படுத்த தகுந்த உணவு முறைகளைக் கையாள வேண்டும்.

No comments:

Post a Comment