Friday, March 28, 2014

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்

Photo: முரண்பாடுகளைக் கடந்து...... 

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் ? கண்டிருந்தால் அதைப் பற்றிச் சொல்லலாம் தானே ? அதைப் பற்றி தேடும் போது, எட்டாம் நிலை அது எட்டா நிலை என்று சொல்வது நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் எட்டு என்பது சூக்குமமான எண்ணாகக் கருதப்படுகிறது. மேஜிக் நம்பர் எய்ட் என்பார்கள். உண்மையில் அது மேஜிக் அல்ல, லாஜிக். அதில் கீழும், மேலுமாக இரண்டு வட்டங்கள் காணப்படுகின்றன. மேலுள்ள வட்டமானது தோற்றத்துக்கு வராத ப்ரம்மத்தைக் குறிப்பதாகும். கீழுள்ள வட்டமானது தோற்றத்துக்கு வந்துள்ள பிரபஞ்சத்தைக் குறிப்பதாகும். இந்த அண்ட சராசரங்களின் ஒழுங்கான நியதியான இயக்கத்தைக் குறிப்பதாகவே தராசின் இரு தட்டுகளாக எட்டு என்கிற எண் அமைந்துள்ளது. நமது யோக சாஸ்திரங்களைப் பொறுத்த வரை அஷ்டாங்க யோகத்தில் எட்டாவது நிலை சமாதி. அதாவது துரியம். ஏழாவது சக்கரமான சகஸராரத்தைக் கடந்தால் வருவது எட்டாவது நிலையான துரியம். துரியம் என்பது ப்ரம்மம். 

இதில் ப்ரம்மம் என்பது இருப்பு நிலை. அது குணம் கடந்தது. எந்த வித உபாதிகளோ, உணர்வுகளோ அற்றது. அனைத்திற்கும் மூலமானது பரப்ரம்மம். கீழே உள்ள பிரபஞ்சத்தில் ஈஸ்வரனோ மாயையோடு சம்மந்தப்பட்டு உபாதிகளோடு பிரபஞ்ச உணர்வையும் கொண்டிருக்கிறது. ஐந்தொழில்களைப் புரிந்து உயிர்களை பக்குவப்படுத்தி ப்ரம்மத்தோடு இணைவதற்கு ஏதுவாக இயங்க வைக்கிறது. உண்மையில் இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான்.  ப்ரம்மமாகிய துரியம் என்பது ஒரு நிலையே அல்ல. அது முழுவதும் அமைதியும், ஆனந்தமும் கொண்டது. விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளுக்கும் அடிப்படையாக நிற்கிறது. அதைப் புலன்களால் உணர முடியாது. அதற்கு குணங்களும், உருவமும், நிறமும் இல்லாத காரணத்தால் அதை விளக்க முடியாது. அதற்கு ஒலியும், மணமும், ருசியும், ஸபரிசமும் இல்லாத காரணத்தால் விவரித்துச் சொல்ல முடியாது. அதுவே அகண்ட ஏகசராசரமாகத் திகழ்கிறது. இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கின்ற போது, 

துரியமானது உள்ளே உள்ள உலகமும், வெளியே தோற்றமாக உள்ள உலகமும் அல்லது இரண்டும் சேர்ந்ததுமே ஆகும். இத்தகைய வல்லமையான பிரம்மாண்டத்தை யாரால்தான் தொகுத்து இன்னதென்று விவரித்து விட முடியும் ? அது என்ன சாதாரண உணர்வு நிலையா என்ன ? அதை யாராலும் பார்த்து அறியவும் முடியாது.  எண்ணிப் பார்க்கவும் முடியாதது. அதுவே அனைத்து ஜீவாத்மாக்களின் உணர்வின் சாரமாக இருக்கிறது. கட்டுப்பாடுகளுள்ள பிரபஞ்சத்தின் எந்த அடையாளமும் அதற்கு இல்லை. எனவேதான் அதை யாராலும் அறிந்து உணரவோ, விளக்கவோ முடியவில்லை. ஆகவே அது இதுவரை யாராலும் சொல்லப்படாததாகும். அது முழுவதும் அமைதி நிரம்பியது. பேரானந்தமானது. ஆனால், துரியமாகிய உயர்ந்த வஸ்துவை தியானத்தின் மூலம் அடைய முடியும். அவ்வாறு அடைந்தவர்களின் மொத்த ஜீவனும் பரிசுத்தப்பட்டு வெறுமையடைந்து விடுவதால், தான் அடைந்த உணர்வையோ, நிலையையோ இன்னதென்று சொல்வதற்கு உள்ளே எந்த பதிவுகளும் இல்லாமல் போய்விடுகின்றது. மீண்டு வருபவர்கள் அந்த ப்ரம்மமாகவே இருக்கிறார்கள். எனவேதான் அதுவல்ல, இதுவல்ல என்று பலவாறாக விளக்கப்படுகிறது.
முரண்பாடுகளைக் கடந்து......

No comments:

Post a Comment