Friday, March 28, 2014

தாதாதா தாதாதா தாக்குறைக்கென்

Photo: ''டாடாடாடாடாடா தோட்டத்தில் 555555பறிப்பது ? டாடா வருகிறேன்.'' பக்கத்து வீட்டுக் குழந்தை இதை எழுதி என் கையில் கொடுத்த போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிள் இதுக்கு அர்த்தம் என்ன ? நான் திருதிரு என்று விழித்தேன். ஐயோ, உங்களுக்கு இது கூடத் தெரியாதா ? நக்கல் வேறு. சரி என்ன செய்ய சரண்டர். நீயே சொல்லிவிடு என்றேன்.

(ஆறுடா)ஆருடா தோட்டத்தில் (ஆறஞ்சு)ஆரஞ்சு பறிப்பது ? (இரண்டு டா) இருடா வருகிறேன். இதுதான் அந்த வரிகள் என்ற போது, ஆஹா சரியா கவனிக்காம விட்டுவிட்டோமே என்று நினைத்தேன். இது வார்த்தை விளையாட்டு. குழந்தைகள் விளையாட்டு என்பதால் ர காரம் உச்சரிப்பு தவறாக இருந்தாலும், ரசனையாக இருக்கிறது. சமிபத்தில் வள்ளலார் வெண்பா ஒன்று படித்தேன். அதைச் சுவாமிகள் இது போல எழுதியிருப்பார். அதில் ஆழ்ந்த கருத்துக்கள் மறைந்திருக்கும். அந்தப் பாடலும் ரசனையாக இருக்கும்.

தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம் - போதாதா நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே
எந்தாய் எனப் புகழவே.

முதல் வரியில் ஏழு தா எழுத்துக்கள். அதாவது '''எழுதா''. இப்போது படியுங்கள். எழுதாக் குறைக்கு என் செய்குதும் யாம்.அதாவது என் தலையில் எழுதாமல் விட்டதற்கு நான் என்ன செய்ய ? என்று பொருள் கொள்வோம். ஆனால் வள்ளல் பெருந்தகை குறிப்பிடுவது எழுதாக் குறை என்பது உணர்த்தா குறைக்கு என்பதாகும்.
அடுத்த வரியில் மூன்று தா க்கள். அந்த மூன்றில் இரண்டைத் தனியாகவும், ஒன்றைத் தனியாகவும் பிரிக்கும் போது, தாதா தா, அதாவது தாதா என்றால் வள்ளல். தா என்றால் கொடு. வள்ளலே கொடு என்றுலகில் நான் அலைந்தது போதாதா ? என்று கொள்வோம். ஆனால், அதை மாற்றிப் படிக்க வேண்டும். அது எவ்வாறெனில் ''வரையாது கொடுக்கும் வள்ளலே நான் அலைந்தது போதாதா .'' நந்தா விளக்கே. விளக்கின் ஜோதியே, ஜோதியின் ஒளியே. நமச்சிவாயமே. தாயைப் போன்ற தயாபரனே.
அடுத்த வெண்பாவைப் பாருங்கள்.

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகல் இடையை இரட்டித் - தகவின்
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர்
திருச்சிற் சபை யானைத் தேர்ந்து

பகுதி தகுதி விகுதி என்ற மூன்று சொற்களிலும் உள்ள மூன்று கு வையும் இரட்டிக்கும் போது (3 x 2 =6) அறுகு ஆகும். அறுகம் புல்லைக் கொண்டு திருச்சிற்சபை யானை(விநாயகர்) அர்ச்சிக்கவேண்டும். அர்ச்சித்தால் என்ன கிடைக்கும் ? அந்த மூன்று சொற்களின் முதல் எழுத்து கிடைக்கும். அதாவது பகுதியில் ப, 
தகுதியில் த, 
விகுதியில் வி
மூன்றும் சேர்ந்தால் பதவி.அதாவது பதவி கிடைக்கும். என்ன பதவி ? அதற்கு அந்த மூன்று சொற்களில் உள்ள கடைசி மூன்று தி என்ற எழுத்துக்களையும் சேர்த்து சொல்லும் போது முத்தி என்றாகும். முக்திப் பதவி கிடைக்கும். ஆனால் இதன் உட் பொருள் வேறு. அறு என்றால் ஒழி. கு என்றால் குற்றம். மும்மலங்களாகிய குற்றங்களை ஒழித்து, சிரசில் இருக்கும் சிற்சபையானை அறிந்து அனபோடு கூடினால் முக்தியாகிய பதவி கிடைக்கும் என்பதே.
'டாடாடாடாடாடா தோட்டத்தில் 555555பறிப்பது ? டாடா வருகிறேன்.'' பக்கத்து வீட்டுக் குழந்தை இதை எழுதி என் கையில் கொடுத்த போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிள் இதுக்கு அர்த்தம் என்ன ? நான் திருதிரு என்று விழித்தேன். ஐயோ, உங்களுக்கு இது கூடத் தெரியாதா ? நக்கல் வேறு. சரி என்ன செய்ய சரண்டர். நீயே சொல்லிவிடு என்றேன்.

(ஆறுடா)ஆருடா தோட்டத்தில் (ஆறஞ்சு)ஆரஞ்சு பறிப்பது ? (இரண்டு டா) இருடா வருகிறேன். இதுதான் அந்த வரிகள் என்ற போது, ஆஹா சரியா கவனிக்காம விட்டுவிட்டோமே என்று நினைத்தேன். இது வார்த்தை விளையாட்டு. குழந்தைகள் விளையாட்டு என்பதால் ர காரம் உச்சரிப்பு தவறாக இருந்தாலும், ரசனையாக இருக்கிறது. சமிபத்தில் வள்ளலார் வெண்பா ஒன்று படித்தேன். அதைச் சுவாமிகள் இது போல எழுதியிருப்பார். அதில் ஆழ்ந்த கருத்துக்கள் மறைந்திருக்கும். அந்தப் பாடலும் ரசனையாக இருக்கும்.

தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம் - போதாதா நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே
எந்தாய் எனப் புகழவே.

முதல் வரியில் ஏழு தா எழுத்துக்கள். அதாவது '''எழுதா''. இப்போது படியுங்கள். எழுதாக் குறைக்கு என் செய்குதும் யாம்.அதாவது என் தலையில் எழுதாமல் விட்டதற்கு நான் என்ன செய்ய ? என்று பொருள் கொள்வோம். ஆனால் வள்ளல் பெருந்தகை குறிப்பிடுவது எழுதாக் குறை என்பது உணர்த்தா குறைக்கு என்பதாகும்.
அடுத்த வரியில் மூன்று தா க்கள். அந்த மூன்றில் இரண்டைத் தனியாகவும், ஒன்றைத் தனியாகவும் பிரிக்கும் போது, தாதா தா, அதாவது தாதா என்றால் வள்ளல். தா என்றால் கொடு. வள்ளலே கொடு என்றுலகில் நான் அலைந்தது போதாதா ? என்று கொள்வோம். ஆனால், அதை மாற்றிப் படிக்க வேண்டும். அது எவ்வாறெனில் ''வரையாது கொடுக்கும் வள்ளலே நான் அலைந்தது போதாதா .'' நந்தா விளக்கே. விளக்கின் ஜோதியே, ஜோதியின் ஒளியே. நமச்சிவாயமே. தாயைப் போன்ற தயாபரனே.
அடுத்த வெண்பாவைப் பாருங்கள்.

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகல் இடையை இரட்டித் - தகவின்
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர்
திருச்சிற் சபை யானைத் தேர்ந்து

பகுதி தகுதி விகுதி என்ற மூன்று சொற்களிலும் உள்ள மூன்று கு வையும் இரட்டிக்கும் போது (3 x 2 =6) அறுகு ஆகும். அறுகம் புல்லைக் கொண்டு திருச்சிற்சபை யானை(விநாயகர்) அர்ச்சிக்கவேண்டும். அர்ச்சித்தால் என்ன கிடைக்கும் ? அந்த மூன்று சொற்களின் முதல் எழுத்து கிடைக்கும். அதாவது பகுதியில் ப,
தகுதியில் த,
விகுதியில் வி
மூன்றும் சேர்ந்தால் பதவி.அதாவது பதவி கிடைக்கும். என்ன பதவி ? அதற்கு அந்த மூன்று சொற்களில் உள்ள கடைசி மூன்று தி என்ற எழுத்துக்களையும் சேர்த்து சொல்லும் போது முத்தி என்றாகும். முக்திப் பதவி கிடைக்கும். ஆனால் இதன் உட் பொருள் வேறு. அறு என்றால் ஒழி. கு என்றால் குற்றம். மும்மலங்களாகிய குற்றங்களை ஒழித்து, சிரசில் இருக்கும் சிற்சபையானை அறிந்து அனபோடு கூடினால் முக்தியாகிய பதவி கிடைக்கும் என்பதே.

No comments:

Post a Comment