Friday, March 28, 2014

கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பல வியாதிகள் தீரும்

Photo: சில நேரங்களில் சம்மந்தமில்லாத இருவேறு நிலையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் ஒன்றாக அமைந்துவிடும். இது குறித்து நான் வியப்படைவதுண்டு. அகத்தியர் குணபாடநூலில் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்ற குறிப்பு காணப்படுகிறது. இன்னும் சில சித்தர் பாடல்களில் கடல் நீர்தான் அமுரி என்றும், அதை மருந்து அரைக்கப் பயன்படுத்தினால் மருந்து வீரியம் உள்ளதாகத் திகழும் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதன் காரணம் என்ன ? இதற்கு முன் நான் போட்ட ஒரு பதிவைப் படித்துவிட்டு ஒரு அன்பர் கேட்டார். சமீபத்தில் திருச்செந்தூர் சென்றிருந்த போது என் மகள் கேட்டாள் ''அப்பா கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது'' என்று. இதில் வியப்பு என்னவென்றால் இரண்டுக்கும் பதில் ஒன்றுதான். அதற்குக் காரணம் தாதுக்கள் அல்லது தாது உப்புக்கள் என்று சொல்லப் படும் தனிமங்கள்தான். ஆறானது, மலைகளில் இருந்தும் தரைகளில் இருந்தும் பாய்ந்து செல்லும் போது, சும்மா போவதில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்கிறது. மணல், கற்கள் இவையெல்லாம் நாம் பார்ப்பவை. ஆனால், நாம் பார்க்க முடியாத சில பொருள்களையும் அது கொண்டு போகிறது. அவைதான் தாதுக்கள். ஒரு சில பொருள்கள் தவிர உலகம் முழுவதும் தாதுப் பொருள்களால் ஆனதுதான். இன்னும் கண்டுபிடிக்காத தாதுப் பொருள்களும் இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. மழை நீர் தரையின் மீது விழுந்து ஓடும் போதெல்லாம் மண்ணிலும், பாறைகளில் இருக்கும் தாதுப் பொருள்களை அரித்தும், கரைத்தும் தன்னோடு எடுத்துக் கொண்டு ஓடுகிறது.அந்த நீரை உறிஞ்சும் தாவரங்களால் அந்த தாதுப் பொருள்கள் உட்கொள்ளப் படுகின்றன.மற்றபடி பெரும்பாலான தாதுக்கள் கடலுக்கு போய் சேருகின்றன. இந்த தாதுக்களின் சேர்க்கையால் தான் கடின நீர், மென்னீர் என்பது எல்லாம். நீரின் சுவை மாறுவதும் இந்த தாதுக்களின் சேர்க்கையால்தான். உதாரணமாக கந்தகம் உள்ள நீர் அழுகிய முட்டை போல நாறும். சில தாதுக்கள் அடங்கிய நீரைத்தான் மருந்தாக உட்கொள்கிறோம். தான் கொண்டு செல்லம் மண், மண்துகள், பாறைத்துகள் எல்லாவற்றையும் ஓடும் நீரானது சமவெளிகளில் விட்டு சென்றாலும், தாதுக்களை கரைத்து தன்னோடு கொண்டு போய் கடலில் கலந்து விடுகிறது. ஆற்று நீர் கடலில் கலந்து கொண்டே இருக்கிறது. கடல் நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக்கிக் கொண்டே இருக்கிறது. இது உலகம் தோன்றிய காலம் தொட்டு நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஆவியாகிய நீரில் உள்ள தாதுக்கள் எல்லாம் கடலில் தங்கித் தங்கிதான் கடல்நீர் தாதுக்கள் அதிகமுள்ள நீராகி அது உவர்ப்பு சுவை உடையதாக இருக்கிறது. அதில் தனிமச் சத்துக்கள் அதிகமிருப்பதால்தான் அகத்தியர் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பல வியாதிகள் தீரும் என்கிறார்.
Photo: சில நேரங்களில் சம்மந்தமில்லாத இருவேறு நிலையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் ஒன்றாக அமைந்துவிடும். இது குறித்து நான் வியப்படைவதுண்டு. அகத்தியர் குணபாடநூலில் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்ற குறிப்பு காணப்படுகிறது. இன்னும் சில சித்தர் பாடல்களில் கடல் நீர்தான் அமுரி என்றும், அதை மருந்து அரைக்கப் பயன்படுத்தினால் மருந்து வீரியம் உள்ளதாகத் திகழும் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதன் காரணம் என்ன ? இதற்கு முன் நான் போட்ட ஒரு பதிவைப் படித்துவிட்டு ஒரு அன்பர் கேட்டார். சமீபத்தில் திருச்செந்தூர் சென்றிருந்த போது என் மகள் கேட்டாள் ''அப்பா கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது'' என்று. இதில் வியப்பு என்னவென்றால் இரண்டுக்கும் பதில் ஒன்றுதான். அதற்குக் காரணம் தாதுக்கள் அல்லது தாது உப்புக்கள் என்று சொல்லப் படும் தனிமங்கள்தான். ஆறானது, மலைகளில் இருந்தும் தரைகளில் இருந்தும் பாய்ந்து செல்லும் போது, சும்மா போவதில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்கிறது. மணல், கற்கள் இவையெல்லாம் நாம் பார்ப்பவை. ஆனால், நாம் பார்க்க முடியாத சில பொருள்களையும் அது கொண்டு போகிறது. அவைதான் தாதுக்கள். ஒரு சில பொருள்கள் தவிர உலகம் முழுவதும் தாதுப் பொருள்களால் ஆனதுதான். இன்னும் கண்டுபிடிக்காத தாதுப் பொருள்களும் இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. மழை நீர் தரையின் மீது விழுந்து ஓடும் போதெல்லாம் மண்ணிலும், பாறைகளில் இருக்கும் தாதுப் பொருள்களை அரித்தும், கரைத்தும் தன்னோடு எடுத்துக் கொண்டு ஓடுகிறது.அந்த நீரை உறிஞ்சும் தாவரங்களால் அந்த தாதுப் பொருள்கள் உட்கொள்ளப் படுகின்றன.மற்றபடி பெரும்பாலான தாதுக்கள் கடலுக்கு போய் சேருகின்றன. இந்த தாதுக்களின் சேர்க்கையால் தான் கடின நீர், மென்னீர் என்பது எல்லாம். நீரின் சுவை மாறுவதும் இந்த தாதுக்களின் சேர்க்கையால்தான். உதாரணமாக கந்தகம் உள்ள நீர் அழுகிய முட்டை போல நாறும். சில தாதுக்கள் அடங்கிய நீரைத்தான் மருந்தாக உட்கொள்கிறோம். தான் கொண்டு செல்லம் மண், மண்துகள், பாறைத்துகள் எல்லாவற்றையும் ஓடும் நீரானது சமவெளிகளில் விட்டு சென்றாலும், தாதுக்களை கரைத்து தன்னோடு கொண்டு போய் கடலில் கலந்து விடுகிறது. ஆற்று நீர் கடலில் கலந்து கொண்டே இருக்கிறது. கடல் நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக்கிக் கொண்டே இருக்கிறது. இது உலகம் தோன்றிய காலம் தொட்டு நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஆவியாகிய நீரில் உள்ள தாதுக்கள் எல்லாம் கடலில் தங்கித் தங்கிதான் கடல்நீர் தாதுக்கள் அதிகமுள்ள நீராகி அது உவர்ப்பு சுவை உடையதாக இருக்கிறது. அதில் தனிமச் சத்துக்கள் அதிகமிருப்பதால்தான் அகத்தியர் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பல வியாதிகள் தீரும் என்கிறார்.சில நேரங்களில் சம்மந்தமில்லாத இருவேறு நிலையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் ஒன்றாக அமைந்துவிடும். இது குறித்து நான் வியப்படைவதுண்டு. அகத்தியர் குணபாடநூலில் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்ற குறிப்பு காணப்படுகிறது. இன்னும் சில சித்தர் பாடல்களில் கடல் நீர்தான் அமுரி என்றும், அதை மருந்து அரைக்கப் பயன்படுத்தினால் மருந்து வீரியம் உள்ளதாகத் திகழும் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதன் காரணம் என்ன ? இதற்கு முன் நான் போட்ட ஒரு பதிவைப் படித்துவிட்டு ஒரு அன்பர் கேட்டார். சமீபத்தில் திருச்செந்தூர் சென்றிருந்த போது என் மகள் கேட்டாள் ''அப்பா கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது'' என்று. இதில் வியப்பு என்னவென்றால் இரண்டுக்கும் பதில் ஒன்றுதான். அதற்குக் காரணம் தாதுக்கள் அல்லது தாது உப்புக்கள் என்று சொல்லப் படும் தனிமங்கள்தான். ஆறானது, மலைகளில் இருந்தும் தரைகளில் இருந்தும் பாய்ந்து செல்லும் போது, சும்மா போவதில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்கிறது. மணல், கற்கள் இவையெல்லாம் நாம் பார்ப்பவை. ஆனால், நாம் பார்க்க முடியாத சில பொருள்களையும் அது கொண்டு போகிறது. அவைதான் தாதுக்கள். ஒரு சில பொருள்கள் தவிர உலகம் முழுவதும் தாதுப் பொருள்களால் ஆனதுதான். இன்னும் கண்டுபிடிக்காத தாதுப் பொருள்களும் இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. மழை நீர் தரையின் மீது விழுந்து ஓடும் போதெல்லாம் மண்ணிலும், பாறைகளில் இருக்கும் தாதுப் பொருள்களை அரித்தும், கரைத்தும் தன்னோடு எடுத்துக் கொண்டு ஓடுகிறது.அந்த நீரை உறிஞ்சும் தாவரங்களால் அந்த தாதுப் பொருள்கள் உட்கொள்ளப் படுகின்றன.மற்றபடி பெரும்பாலான தாதுக்கள் கடலுக்கு போய் சேருகின்றன. இந்த தாதுக்களின் சேர்க்கையால் தான் கடின நீர், மென்னீர் என்பது எல்லாம். நீரின் சுவை மாறுவதும் இந்த தாதுக்களின் சேர்க்கையால்தான். உதாரணமாக கந்தகம் உள்ள நீர் அழுகிய முட்டை போல நாறும். சில தாதுக்கள் அடங்கிய நீரைத்தான் மருந்தாக உட்கொள்கிறோம். தான் கொண்டு செல்லம் மண், மண்துகள், பாறைத்துகள் எல்லாவற்றையும் ஓடும் நீரானது சமவெளிகளில் விட்டு சென்றாலும், தாதுக்களை கரைத்து தன்னோடு கொண்டு போய் கடலில் கலந்து விடுகிறது. ஆற்று நீர் கடலில் கலந்து கொண்டே இருக்கிறது. கடல் நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக்கிக் கொண்டே இருக்கிறது. இது உலகம் தோன்றிய காலம் தொட்டு நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஆவியாகிய நீரில் உள்ள தாதுக்கள் எல்லாம் கடலில் தங்கித் தங்கிதான் கடல்நீர் தாதுக்கள் அதிகமுள்ள நீராகி அது உவர்ப்பு சுவை உடையதாக இருக்கிறது. அதில் தனிமச் சத்துக்கள் அதிகமிருப்பதால்தான் அகத்தியர் கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் பல வியாதிகள் தீரும் என்கிறார்.

No comments:

Post a Comment