Friday, March 28, 2014

இன்றா ? நாளையா ? என்றைக்கு ? எப்போது ? எப்படி ?

Photo: இன்றா ? நாளையா ? என்றைக்கு ? எப்போது ? எப்படி ? எதனால் ? என்றெல்லாம் பல கேள்விகள், பல தேதிகள் குறிக்கப்பட்டு அதையும் தாண்டி இந்த உருண்டை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. தன் முடிவே எப்போது என்று தெரியாத நிலையில், சில மேதாவிகள் பூமியின் முடிவுக்கு நாள் குறித்துச் சொல்லி மக்களை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் பாரத தேசத்து மகான்கள் இதைக் குறித்து முன்பே தகவல்களைத் தந்திருக்கிறார்கள். இந்திய வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திர நூல்களில் பூமியின் தோற்றம், முடிவு குறித்து புள்ளி விவரங்கள் காணப்படுகினன்றன. அதை நம்புவதா ? வேண்டாமா என்பதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம். ஆனால் எனக்கு கிடைத்த தகவல்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மனிதன் சுவாசத்தை அடிப்படையாக வைத்தே இந்த பூமியின் வயதை நம் முன்னோர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு மனிதனின் சுவாசம் 21600 என்றும், அதை முழுச் சதுரக் கூறால் பெருக்க வரும் எண்ணிக்கையே கிரேதாயுகத்தின் வயது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 21600 x 80 = 17,28,000 ஆண்டுகள். அதே சுவாசத்தை முக்கால் சதுரக் கூறால் பெருக்க வரும் எண்ணிக்கை திரேதாயுகத்தின் வயது. அதாவது 21600 x 60=12,96,000 ஆண்டுகள். அடுத்து அரை சதுரக் கூறால் பெருக்க வரும் விடையான 21000 x 40 = 8,64,000 ஆண்டுகள் துவாபரயுகத்தின் வயது. அதே சுவாசத்தின் எண்ணிக்கையை கால் சதுரக் கூறாகிய 20 ஆல் பெருக்க வரும் எண்ணிக்கையே கலியுகத்தின் வயது. அதாவது 21600 x 20 = 4,32,000 ஆண்டுகள். இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மகாயுகம். அதாவது ஒரு மகாயுகம் 43,20,000 ஆண்டுகள் கொண்டது. இதைப்போல 71 மகாயுகங்களைக் கொண்டது ஒரு மனு. அதாவது 43,20,000 x 71 = 30,67,20,000 ஆண்டுகள். இதைப் போன்ற பதி நான்கு மனுக்கள் கொண்டது ஒரு கற்பம். அதாவது 14 x 30,67,20,000 = 4,29,40,80,000 ஆண்டுகள். இதில் வாமதேவ கற்பம் என்ற முதல் கற்பமே முடிந்திருக்கிறது. 
இப்போது சுவேதவராக கற்பம் என்கிற இரண்டாவது கற்பம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 6 மனுக்கள்  முடிந்து விட்டன. ஏழாவது மனுவான வைவஸ்வதன் என்கிற மனு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மனு போக மீதம் ஏழு மனுக்கள் முடிந்தாலே இந்த கற்பம் முடிவடையும். அதற்குப் பிறகு 28 கற்பங்கள் நடந்து முடிந்தாலே மகா பிரளயம் தோன்றி உலகம் எங்கும் நீரில் மூழ்கி அழியும். 13 - 4 - 1989 வரை ஒரு கற்பம் முடிந்து, 6 மனுக்கள் முடிந்து ஏழாவது மனுவில் 5089 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ளன.  
13 - 4 -1989 வரை பூமியின் வயது 6254913089 ஆண்டுகள். இன்னும்( 13 - 4 - 2013 வரை கலியுகத்தில் 426887 ஆண்டுகள் மீதமுள்ளன. இது பூர்த்தியாகும் போது 28 மகாயுகங்கள் முடிந்து விடும். அது போக வைவஸ்வதன் மனுவில் 43 மகாயுகங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு 185760000 ஆண்டுகள் ஆகும். இது போக இந்த கற்பத்தில் ஏழு மனுக்கள் மீதமுள்ளன அவற்றிற்கு 2147040000 ஆண்டுகள்.  ஆக மொத்தம் இந்த இரண்டாவது கற்பத்திற்கே 2333226887 ஆண்டுகள் பாக்கி உள்ளன. அதற்குப் பிறகு 28 கற்பங்கள் உள்ளன . ஆது 28 x 4294080000 = 120234240000. ஆக மொத்தம் 122567466887 ஆண்டுகள் இனி இந்த பூமி வான மண்டலத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆரம்பம் முதல் மகாபிரளயம் வரை மொத்த வயது 128822380000 ஆண்டுகள் ஆகும். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன் உலகம் அழிவதால் உங்களுக்கு இந்தப் பிறவியில் மரணம் ஏற்படாது.
இன்றா ? நாளையா ? என்றைக்கு ? எப்போது ? எப்படி ? எதனால் ? என்றெல்லாம் பல கேள்விகள், பல தேதிகள் குறிக்கப்பட்டு அதையும் தாண்டி இந்த உருண்டை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. தன் முடிவே எப்போது என்று தெரியாத நிலையில், சில மேதாவிகள் பூமியின் முடிவுக்கு நாள் குறித்துச் சொல்லி மக்களை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் பாரத தேசத்து மகான்கள் இதைக் குறித்து முன்பே தகவல்களைத் தந்திருக்கிறார்கள். இந்திய வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திர நூல்களில் பூமியின் தோற்றம், முடிவு குறித்து புள்ளி விவரங்கள் காணப்படுகினன்றன. அதை நம்புவதா ? வேண்டாமா என்பதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம். ஆனால் எனக்கு கிடைத்த தகவல்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மனிதன் சுவாசத்தை அடிப்படையாக வைத்தே இந்த பூமியின் வயதை நம் முன்னோர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு மனிதனின் சுவாசம் 21600 என்றும், அதை முழுச் சதுரக் கூறால் பெருக்க வரும் எண்ணிக்கையே கிரேதாயுகத்தின் வயது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 21600 x 80 = 17,28,000 ஆண்டுகள். அதே சுவாசத்தை முக்கால் சதுரக் கூறால் பெருக்க வரும் எண்ணிக்கை திரேதாயுகத்தின் வயது. அதாவது 21600 x 60=12,96,000 ஆண்டுகள். அடுத்து அரை சதுரக் கூறால் பெருக்க வரும் விடையான 21000 x 40 = 8,64,000 ஆண்டுகள் துவாபரயுகத்தின் வயது. அதே சுவாசத்தின் எண்ணிக்கையை கால் சதுரக் கூறாகிய 20 ஆல் பெருக்க வரும் எண்ணிக்கையே கலியுகத்தின் வயது. அதாவது 21600 x 20 = 4,32,000 ஆண்டுகள். இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மகாயுகம். அதாவது ஒரு மகாயுகம் 43,20,000 ஆண்டுகள் கொண்டது. இதைப்போல 71 மகாயுகங்களைக் கொண்டது ஒரு மனு. அதாவது 43,20,000 x 71 = 30,67,20,000 ஆண்டுகள். இதைப் போன்ற பதி நான்கு மனுக்கள் கொண்டது ஒரு கற்பம். அதாவது 14 x 30,67,20,000 = 4,29,40,80,000 ஆண்டுகள். இதில் வாமதேவ கற்பம் என்ற முதல் கற்பமே முடிந்திருக்கிறது.
இப்போது சுவேதவராக கற்பம் என்கிற இரண்டாவது கற்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 6 மனுக்கள் முடிந்து விட்டன. ஏழாவது மனுவான வைவஸ்வதன் என்கிற மனு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மனு போக மீதம் ஏழு மனுக்கள் முடிந்தாலே இந்த கற்பம் முடிவடையும். அதற்குப் பிறகு 28 கற்பங்கள் நடந்து முடிந்தாலே மகா பிரளயம் தோன்றி உலகம் எங்கும் நீரில் மூழ்கி அழியும். 13 - 4 - 1989 வரை ஒரு கற்பம் முடிந்து, 6 மனுக்கள் முடிந்து ஏழாவது மனுவில் 5089 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ளன.
13 - 4 -1989 வரை பூமியின் வயது 6254913089 ஆண்டுகள். இன்னும்( 13 - 4 - 2013 வரை கலியுகத்தில் 426887 ஆண்டுகள் மீதமுள்ளன. இது பூர்த்தியாகும் போது 28 மகாயுகங்கள் முடிந்து விடும். அது போக வைவஸ்வதன் மனுவில் 43 மகாயுகங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு 185760000 ஆண்டுகள் ஆகும். இது போக இந்த கற்பத்தில் ஏழு மனுக்கள் மீதமுள்ளன அவற்றிற்கு 2147040000 ஆண்டுகள். ஆக மொத்தம் இந்த இரண்டாவது கற்பத்திற்கே 2333226887 ஆண்டுகள் பாக்கி உள்ளன. அதற்குப் பிறகு 28 கற்பங்கள் உள்ளன . ஆது 28 x 4294080000 = 120234240000. ஆக மொத்தம் 122567466887 ஆண்டுகள் இனி இந்த பூமி வான மண்டலத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆரம்பம் முதல் மகாபிரளயம் வரை மொத்த வயது 128822380000 ஆண்டுகள் ஆகும். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன் உலகம் அழிவதால் உங்களுக்கு இந்தப் பிறவியில் மரணம் ஏற்படாது

No comments:

Post a Comment