ஓவியரைப்
பார்க்கவில்லை, ஆனால் ஓவித்தைப் பார்த்ததுமே நமக்கு ஓவியரின் திறமை
புரிந்து விடுகிறது. கவிதையை வாசித்ததுமே கவிஞரின் கூர்த்த மதி நுட்பம்
நமக்கு விளங்கி விடுகின்றது. அது போலத்
தான் கடவுளும். கடவுள் அல்லது பரம்பொருளைப் பற்றிப் பேச வந்தவுடன், சிலர்
என்னிடம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள்
உணர்ந்திருக்கிறீர்களா ? இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது ? என்று
கேட்கிறார்கள். ஓவியத்தைப் போலவும், கவிதையைப் போலவும் அவரது படைப்புகள்
நம் கண் முன்னே பரந்து, விரிந்து
கிடக்கின்றன. ஓயாது ஒவ்வொரு நிகழ்வுகள் மூலமாகவும் தன் வல்லமையை அவர் நிகழ்த்திக் கொணடே இருக்கிறார். வேறென்ன வேண்டும் அவரது வல்லமையைப் புரிந்து கொள்வதற்கு ? அவ்வாறு புரிந்து கொள்ளத் தேவையான அறிவையும் அவரே தந்தருளியிருக்கிறார். அதற்கான ஆற்றலையும் அவரே தருகிறார். அவற்றைக் கொண்டே அவரை நாம் ஆராய்ந்து அறிந்து, உணர்ந்து தெளிகிறோம். கண்ணுக்குத் தெரியாத அளவு பரந்து விரிந்து கிடக்கும் கடல் எவ்வளவு தூரம் இவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு கப்பலைப் பயன்படுத்துகிறோம். அந்தக் கப்பல் நீராவியில் இயங்குகிறது. நீரின் பரப்பை அறிந்து கொள்ள நீரைப் பயன்படுத்துகிறோம். அது போலக் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள கடவுள் தந்த அறிவையும், ஆற்றலையும் நெறியாக, முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

அதாவது இயங்கா
நிலையில் சூக்குமமாகவும் இருக்கும் பரம்பொருளை இயங்கும் நிலைகளை வைத்து
ஆராய்ந்து அறிந்து கொள்கிறோம். ஒரு கட்டிடத்தில் பல மனிதர்கள்
உறங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் எத்தகையவர்,
என்னென்ன திறமை கொண்டவர் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியுமா ?
முடியாது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் வல்லவராக இருப்பார்கள். அது
அவர்கள் விழித்தெழுந்து செயல்படும் பொழுதுதான் தெரிந்து கொள்ள
முடியும்.இவர் ஓவியர், இவர் கவிஞர், இவர் இசைப்பவர் என்பதெல்லாம் செயலுக்கு
வரும் பொழுதுதான் தெரிய வரும். உறக்கம் என்கிற ஒடுக்க நிலையில் ஆற்றல்
உள்ளவர் யார் ? ஆற்றல் இல்லாதவர் யார் ? என்றெல்லாம் கண்டு பிடிக்க
முடியாது. அது போல இயக்க நிலையில் சிருஷ்டியின் மூலம் நிகழும் செயல்களை
வைத்து இறைவனின் வல்லமையை நம்மால் உணர முடியும். அப்பொழுது அவர் இயங்கா
நிலையிலும், இயக்க நிலையிலும், இயக்கும் சக்தியாகவும் விரிந்து நின்று
செயல்படுவது விளங்கும். அது எப்படி உங்களுக்கு விளங்குவது, உங்கள்
அறிவுக்கு எட்டுவது என் அறிவுக்கு எட்டுவதில்லை என்று கேட்கிறவர்களுக்கு
ஒன்று சொல்வேன், இத்தகைய நுட்பமான, அதி நுட்பமான விஷயங்களை ஆராய்ந்து
அறிவதற்கு மன ஒருமைப்பாடும், புத்தி கூர்மையும் அவசியமாகும்.
ஒரு ஊரில் பலதரப்பட்ட மனிதர்கள் வசிக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், வசதியானவர்கள், ஏழைகள் என்று பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கென்று வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். ஆனால், கடவுளுக்கென்று தனியான வசிப்பிடம் எதுவும் கிடையாது. அப்படி ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்தில் இல்லா விட்டால் அவரைப் பூரணன் என்று அழைக்க முடியாது. பூரணன் என்றால் நிறைவானவர் அல்லது நிறைபொருள் என்று பொருள். சிலர் சொல்வார்கள் அவர் கைலாயத்தில் இருக்கிறார், வைகுண்டத்தில் இருக்கிறார். சொர்க்கத்தில் இருக்கிறார். நரகத்தில் இருக்க மாட்டார். மேலுலகத்தில் இருப்பார் பாதாளத்தில் இருக்க மாட்டார். இப்படிக் கதைகதையாகச் சொல்லுவார்கள். அப்படி ஓரிடத்தில் இருந்து ஓரிடத்தில் இல்லாமல் போனால் அவர் எப்படி பூரணனாவார் ? அப்படிச் சொல்வதன் உட்பொருள் என்னவென்றால் தீயவைகள் அல்லது தீய குணங்கள் நிரம்பிய இடத்து அவர் இயக்கமற்ற நிலையில் இருப்பார். அங்கு இயங்கும் நிலை இருக்காது. நன்மை ஓங்கியவிடத்து அவரின் இயக்க சக்தியும் ஓங்கியிருக்கும் என்பதாகும். நல்லவர்களிடத்தும், தீயவர்களிடத்தும் கடவுள் நிறை பொருளாக இருக்கவே செய்கிறார். எனினும் அவரை தீயவர்களின் மனமானது உணர்ந்து கொள்வதில்லை.
அது எப்படி என்றால் சூரிய ஒளியானது எல்லவாற்றின் மேலும் சமமாகவே விழுகிறது. பாதரசம் பூசிய கண்ணாடியில் விழும் போது அது சுயம் ஜோதியாகப் பிரிதிபலித்துப் பிரகாசிக்கிறது. ஆனால் மண்ணாங்கட்டியின் மீது விழும் பொழுதோ அது பிரிதிபலிப்பதில்லை. சூரியனுடைய சான்னித்தியத்தை அது பிரிதிபலிப்பதில்லை. கெட்டவர்கள் உள்ளத்திலும் கடவுள் ஆன்மாவாக நிரம்பியிருந்தாலும், அவர்கள் அறிவில் ஆன்ம ஒளி, மண்ணாங்கட்டியில் சூரிய ஒளி பிரிதிபலிக்காததைப் போல பிரிதிபலிப்பதில்லை. எனவே அவர்கள் அறிவு இருளில் அதாவது அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. நன்மை மேலோங்கிய விடத்து ஆன்ம ஒளி அறிவொளியாகப் பிரகாசிக்கிறது. கடவுளுக்கு நிர்மலன் என்று ஒரு பெயருண்டு. எவனொருவன் தன் முயற்சியால் மாயாமலங்களை களைந்து எறிகின்றானோ அவன் நிர்மலனாகி விடுகிறான். அழுக்கு நீரைக் காய்ச்சி நீராவியாக்கி விட்டால், அது மீண்டும் தூய நீராகி விடுவது போல மனதில் உள்ள மாயாமலங்களெனும் அழுக்குகளை நீக்கி விடும் பொழுது மனதற்ற நிலை வாய்க்கிறது. இதுவே சித்தாந்தம். அதாவது சித்தம் என்பது மனது. அந்தம் என்பது முடிவு. சித்தாந்தம் என்பது மனதற்ற நிலை என்பதாம். அதாவது மனதிற்கு எட்டுகிற அளவு பரம்பொருளின் பெருமைகளை மனமானது எண்ணித் திளைத்துக் கொண்டே இருக்கும் பொழுது, முடிவில் அந்த மனமே பரம்பொருளில் கரைந்து விடுகின்றது. இதுவே சித்தாந்தம்.

No comments:
Post a Comment