அவன்
பாவம் செய்கிறான், ஆனால், கோடீஸ்வரனாக இருக்கிறான். நான் மனதால் கூட
யாருக்கும் தீங்கு நினைத்ததில்லை, ஆனால் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று
வருந்துபவர்கள்தான் அதிகம். இன்னும் சிலர் ஆன்மாவென்பது எல்லோருக்குள்ளும்
இருக்கிறது. அதுதான் நம்மை வழி
நடத்துகிறது. அப்படியிருக்கும் போது நான் செய்கிற நல்லது கெட்டது எல்லாம்
அதன் செயல்தானேயன்றி எப்படி என் செயலாகும் ? ஆட்டுவதும் அவனே, ஆடுவதும்
அவனே என்று அதி புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தன் தவறை
தானே நியாயப்படுத்திக் கொண்டு நல்லவன் போன்ற போலி முலாம் பூசி
நடிப்பவர்களும் உண்டு. இப்படி பாவம் புண்ணியமென்றெல்லாம் பேசிக்
கொண்டிருந்தால் இந்த கலியுகத்தில் வாழ முடியுமா ? ஒருவனை ஏமாற்றாமல் ஒருவன்
வாழ முடியாது. ஒன்றைக் கொன்றுதான் ஒன்று உயிர் வாழ முடியும். இதுதான்
இயற்கையின் நீதி என்றெல்லாம் பேசி அழிந்து போகிறவர்களும் உண்டு. ஒரு
விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவென்பது நமக்குள்
மட்டுமல்ல அண்டசராசரமெங்கும் நிறைந்து நிற்கும் ஒரு சக்தி. அது நமது
இயக்கத்திற்கான சக்தியாக இருக்கிறது அவ்வளவுதான். செயல் என்பது நம்மைச்
சார்ந்தது. நம் புலன்கள், இந்திரியங்கள், மனம் சார்ந்தது. எல்லாம்
ஆத்மாவின் செயல் என்றால் எல்லோரும் ஒரே விதமாகவல்லவா இயங்கிக்
கொண்டிருப்போம்.
எனவே அந்த சக்தியை மறந்து நம் இந்திரியங்கள், புலன்கள் வழி போகும் போது நாம் வினைகளின் வழியே சுழன்று கொண்டிருக்கிறோம். மனம் ஜட நிலையில் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே வேகமாக சுழலும் இந்த பூமியில் ஜட நிலையில் உள்ள நாம் மையத்தை விட்டு விலகி சுற்றிக் கொண்டே இருக்கிறோம். குடத்தை வேகமாகச் சுழற்றும் போது தண்ணீர் அதன் ஓரங்களில் சுழலும், நடு மையம் வெற்றிடமாகத் திகழும். அது போலவே இதுவும். நம் மனம் சூக்கும நிலையை அடைந்தால் மட்டுமே நடுமையத்தை நோக்கி ஈர்க்கப்படும். புலன்கள், இந்திரியங்களைக் கடந்து மனதை உள்முகமாகச் செலுத்தி அதை சூக்கும நிலைக்குக் கொண்டு செல்லும் போது நாம் மையத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு அதில் கலந்து பரமாத்மாவை அடைகிறோம். மின் சக்தி இருந்தாலும் எல்லா விளக்கும் எரிவதில்லையல்லவா ? அது போல சுழன்று கொண்டேயிருக்கிற நம்முடைய ஜீவன் இந்த உடல் பழுதடைந்தாலும், வேறு உடலை உருவாக்கிக் கொண்டு மீண்டும், மீண்டும் வினை வழியே சுழன்று கொண்டேயிருக்கிறது. எனவே நம் மனதை இந்த வினைகளில் இருந்து பிரித்து சுழற்சியிலிருந்து விலகினால் ஒழிய நாம் மீட்சியை அடைவது கடினம். இது விஞ்ஞானம்தான். இதையேதான் நம் முன்னோர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், உதாரணப்படுத்த இன்றைய சூழலில் உள்ளது போன்ற மற்றவர்கள் புரிந்து கொள்ளத் தக்க வகையில் உள்ள உபகரணங்களோ, பெயர்களோ, சொற்களோ அன்று இல்லை. அதனால்தான் கதைகள் மூலமாகவும், வடிவங்கள் மூலமாகவும் தத்துவங்களை உணர்த்தினார்கள்.
எனவேதான் முதலில் தீய செயல்களைத் துறந்து விடு. பிறகு நல்ல செயல்களையும் துறந்து விடு என்கிறார்கள். அதற்கு அவர்கள் கால அவகாசம் தருகிறார்கள். முதல் இரண்டு ஆஸிரமங்களைக் கடந்து வாழ்ந்து நிறைவடைந்த பிறகு மூன்றாவது ஆஸிரமத்திலேதான் அதாவது, வானப்பிரஸ்தத்தில் தான் அதை நடைமுறைப் படுத்தப்படுத்தச் சொல்கிறார்கள். உலகில் உள்ள பொருள்களில் சுகமும் உண்டு, துக்கமும் உண்டு. ஏனென்றால் அதற்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு. எனவே அழிவில்லாத என்றும் நிலைத்திருக்கும் பொருளை அடைவதே பேரின்பம் என்கிறார்கள். மூன்று குணங்களில் மயங்கிக் கிடக்காமல் அதைக் கடக்க வேண்டும் என்கிறார்கள். இந்த உலகைப் பொருத்த வரை பாவம் செய்பவனுக்கும் கீர்த்தி உண்டாகிறது, புண்ணியம் செய்தவனுக்கும் கீர்த்தி உண்டாகிறது. ஆனால், முன்னது கெட்ட கீர்த்தியாகும். இது நல்ல கீர்த்தியாகும். ஆக பாவம் செய்தவன் கெட்டவனாகவே வாழ்ந்து கீர்த்தியை அனுபவிப்பான். புண்ணியம் செய்தவன் நல்லவனாகவே வாழ்ந்து கீர்த்தியை அனுபவிப்பான். பாவத்தை அடிக்கடி செய்து கெட்டவனாக வாழ்கிறவன் அறிவு அழிந்து போகிறது. எனவே அவன் சதாசர்வ காலமும் பாவத்தையே செய்து கொண்டிருப்பான். எனவே அறிவழிந்து மனம் ஜட நிலையில் திகழும் அவன் பிறவிச் சுழலில் உழன்று கொண்டேயிருப்பான். ஒருவன் கோடி கோடியாகப் பண்தை பெற்றிருந்தும், புலனடக்கம் இல்லையென்றால் அதனால் அடையும் நிலை என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். அறிவற்ற மூடன் தன் புலன்களை அடக்காது, கெட்டதை நல்லதாகவும், நல்லதைக் கெட்டதாகவும் நினைத்து உழன்று கொண்டிருப்பான்.
புண்ணியம் செய்தால் அவ்வாறல்ல. அறிவு வளரும். எனவே அவன் பாவத்தைத் தவிர்த்து விட்டு சதாசர்வ காலமும் புண்ணியத்தை செய்து கொண்டேயிருப்பான். அறிவு வளரும் அளவுக்கு மனம் தெளிவடைந்து, தூய்மை பெற்று சூக்கும நிலைக்கு எளிதாகச் செல்லும். எனவே அவன் உயிர்மையத்தை அடைந்திடுவான். இதனால்தான் மனிதராகப் பிறந்தவர்கள் மனதைப் பாவத்தின் வசப்பட விடாமல் கட்டுப்படுத்தி, எப்பொழுதும் புண்ணிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். இதைக் குறித்து திருதராஷ்டிரருக்கு விதுரர் தர்மத்தை குறித்து உபதேசம் செய்யும் போது சொன்ன நீதி என்னவென்றால்,
''ஒன்றாகிய புத்தியினால், இரண்டாகிய நன்மை தீமைகளை ஆராய்ந்து, மூன்றாகிய நண்பன், பகைவன், உதாசீனன் ஆகியோர்களை, நான்காகிய சாம, தான, பேத, தண்ட முறைகளால் வசப்படுத்திக் கொண்டு, ஐந்தாகிய இந்திரியங்களை வென்று, ஆறாகிய சாஸ்திரங்களை கற்றுணர்ந்து, அதன்படி நடந்து, ஏழாகிய மது, மாது, சூது, வேட்டை, கடுஞ்சொல், கடுந்தண்டனை, விரயம் இவைகளை விலக்கி வாழ்ந்தால் அதுவே தர்மம். அவனே மேன்மையை அடைவான் என்கிறார்.

No comments:
Post a Comment