Friday, March 28, 2014

எல்லோராலும் யோகம் பயிற்சி செய்ய இயலாதல்லவா ? அவர்கள் என்ன செய்வது ?

Photo: எனக்கு சிறு வயதாக இருக்கும் போது என் தாயார் ''மாடிக்குப் போகாதே அங்கே உன் அப்பா யோகாப்பியாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்று சொல்வார்கள். அது என்ன அப்பியாசம் ? அப்பியாசம் என்றால் பழக்கம். நாம் செய்கிற பெரும்பாலான செயல்கள் பழக்கத்தால்தான் நடைபெறுகிறது. பழகி விட்டால் அந்த செயல் நம் உணர்வில்லாமலேயே நடந்து விடுகிறது. இதில் நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் அனைத்தும் அடங்கும். இளம் வயது முதலே நாம் பழகி வந்த செயல்களையே மீண்டும், மீண்டும் செய்து வருகிறோம். காரணம் என்னவென்றால் அந்த செயல் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. அது பிறகு எண்ணமாகி, செயலாகி, விளைவைத் தருகிறது. 

இதில் இந்த சம்ஸ்காரங்கள் அதாவது எண்ணங்கள் விதைகளாகும். அதனால் எழும் ஆசை செடி போன்றது. அது வளர்ந்து பெரிதாகி பேராசையாகி விடுகிறது. சித்தத்தில் எண்ணம் உதிக்கின்ற வரை அது அமைதி அடையவே முடியாது. நாம் இது வரை எண்ணங்களைப் பற்றி சிந்திக்காமல், அதை அடக்காமல் அதன் போக்கில் விட்டு விட்டு இருந்து பழகி விட்டோம். அதை அடக்க நாம் பழகிக் கொள்ளவில்லை. இது மட்டுமா ? சரியாக சுவாசிக்கப் பழகிக் கொள்ளவில்லை. சரியான உணவு முறையைப் பழகிக் கொள்ளவில்லை. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் தவறாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளே வாழ்வில் பலவிதமான சிக்கல்களும், குழப்பங்களும், துன்பங்களும், கவலைகளும்.................. 

மருத்துவர் இழுத்து மூச்சு விடு என்கிற போதுதான் நாம் சுவாசிப்பதே நமக்கு உணர்வுக்கு வருகிறது. அதுவும் ஒரே தடவையில் சரியாகச் செய்வதில்லை. ஹூம் இன்னும் நன்றாக இழுத்து மூச்சு விடு என்று மீண்டும் சொன்னால்தான் அதையும் சரியாகச் செய்கிறோம். மருந்துகளை எல்லாம் எழுதிய சீட்டை வாங்கிக் கொண்ட பிறகுதான் மெதுவாகக் கேட்கிறோம். சார் என்ன சாப்பாடு........? அவர், வேறென்ன கஞ்சி, பன், ரஸ்க்தான் என்கிற போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. வியாதி வருவதற்கு முன்பே கண்ட குப்பைகளையும் உள்ளே தள்ளாமல் இருந்தால் இந்த சிக்கலே வராதல்லவா ? பெரும்பாலான வியாதிகள் உணவுக் கட்டுபாடு இல்லாததாலும், சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ளாததாலும்தான் வருகிறது.

நானும் விதிவிலக்கல்ல. என் அனுபவமே இங்கே பேசுகிறது. இந்த பழக்கங்கள் எல்லாம் பழகிப் பழகி நம் இயல்பாகவே ஆகிவிட்டது. நானும், என்னைச் சேர்ந்தவர்களும், என் ஊர்காரர்களும், என் தேசத்தினரும் என்று இது ஒரு நவீன கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. முறை தவறுவது என்பது ஒரு இயல்பாகவே ஆகிப் போன நிலையில், நம் புலன்கள் அனைத்தும் புற உலகில் அலைந்து கொண்டே இருக்கிறது. உள்ளுணர்வு என்ற ஒன்றைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. புலன்கள் வழியாக மனம் வெளியே அலைகிற வரையில், அது தன் பரிசுத்தத்தை, யதார்த்தத்தை இழக்கிறது. சேற்றில் புரண்டு ஓடுகின்ற வெள்ள நீரைப் போல அது தன் இயல்பான தன்மையைப் பறிகொடுத்து விடுகிறது. மனதை இந்த வெளி விவகாரங்களில் இருந்து மீட்டெடுத்து, ஆன்மாவோடு இணைக்கிற போதுதான் சித்தம் தெளிவடையும். ஆத்மாவை சார்ந்திருப்பதுதான் மனதின் யதார்த்த நிலை. வெளி விஷயங்களில் அலைந்து கொண்டிருப்பது மலமடைந்த, மாசு படிந்த நிலை. இதனால் அதன் பேராற்றல் குன்றிப் போய்விடுகிறது. 

இனி என்னதான் செய்வது ? காலகாலமாக உடலோடும், உணர்வோடும் கலந்து விட்ட பழக்கங்களை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியுமா ? முடியும். பழக்கத்தை பழக்கத்தால்தான் மாற்ற முடியும். இடையறாத பழக்கத்தினால் எந்த முயற்சியிலும் வெற்றியடைய முடியும். புதிய பழக்கங்கள் அழுத்தம் பெறும் போது பழைய பழக்கங்கள் மறைந்து போகும். பாடல்கள் அடங்கிய ஒலி நாடாவில் புதிய பாடலை அழுத்தி பதிய வைக்கும் போது பழைய பாடல் மறைந்து போகிறதல்லவா ? அதைப் போலத்தான். இப்படி மனதை நேர் வழியில் செலுத்த கற்றுத் தருவதே இராஜ யோகம் எனப்படும். அதற்கு அது எட்டுவகையான பயிற்சிகளை அல்லது பழக்கங்களை முன் வைக்கிறது. அவற்றில் தீவிரமடையும் போது பழைய தீய பழக்கங்கள் மறைந்து, புதிய நல்ல பழக்கங்களே இயல்பாகி விடும் போது மனதை ஒரு நிலைப்படுத்து கடினமில்லை.  

எல்லோராலும் யோகம் பயிற்சி செய்ய இயலாதல்லவா ? அவர்கள் என்ன செய்வது ? முதலில் தனியாக அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் சற்று சிரமமாகத் தோன்றினாலும், பழக்கத்திற்கு வரும் போது இயல்பாகி விடும். புற விஷயங்களில் ஓடும் மனம் பற்பல எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். பாலையும் தண்ணீரையும் ஒன்றாக வைத்தால் கலந்து விடும். ஆனால் பாலைத் தயிராக்கி முயற்சி செய்து கடையும் போது வெண்ணையாகி விடுகிறது. அதை நீரிலே போட்டாலும் அது நீரோடு ஒட்டுவதில்லை. அது போல முயற்சி செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி பழகி விட்டால், அவன் எங்கிருந்த போதும் மனம் புற விஷயங்களிலும், புலன்களின் வழியிலும் போகாது. அது தன் இயல்பாகிய ஆன்மாவைச் சார்ந்திருக்கும் நிலையிலேயே நிலை பெறும். அப்போது புதிய எண்ணங்கள் தோன்றாது. பழைய எண்ணங்கள் என்னவாயிருக்கும் ? மன ஒருமைப்பாட்டுக்கான அழுத்தமான புதிய முயற்சியின் போது பழைய எண்ணங்கள் அழிந்து போயிருக்கும். இனி எல்லாம் சுகமே. சந்தோஷம், மகிழ்ச்சி. ஆனந்தம், பரமானந்தம் அதுவே பேரானந்தம்.
எனக்கு சிறு வயதாக இருக்கும் போது என் தாயார் ''மாடிக்குப் போகாதே அங்கே உன் அப்பா யோகாப்பியாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்று சொல்வார்கள். அது என்ன அப்பியாசம் ? அப்பியாசம் என்றால் பழக்கம். நாம் செய்கிற பெரும்பாலான செயல்கள் பழக்கத்தால்தான் நடைபெறுகிறது. பழகி விட்டால் அந்த செயல் நம் உணர்வில்லாமலேயே நடந்து விடுகிறது. இதில் நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் அனைத்தும் அடங்கும். இளம் வயது முதலே நாம் பழகி வந்த செயல்களையே மீண்டும், மீண்டும் செய்து வருகிறோம். காரணம் என்னவென்றால் அந்த செயல் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. அது பிறகு எண்ணமாகி, செயலாகி, விளைவைத் தருகிறது.

இதில் இந்த சம்ஸ்காரங்கள் அதாவது எண்ணங்கள் விதைகளாகும். அதனால் எழும் ஆசை செடி போன்றது. அது வளர்ந்து பெரிதாகி பேராசையாகி விடுகிறது. சித்தத்தில் எண்ணம் உதிக்கின்ற வரை அது அமைதி அடையவே முடியாது. நாம் இது வரை எண்ணங்களைப் பற்றி சிந்திக்காமல், அதை அடக்காமல் அதன் போக்கில் விட்டு விட்டு இருந்து பழகி விட்டோம். அதை அடக்க நாம் பழகிக் கொள்ளவில்லை. இது மட்டுமா ? சரியாக சுவாசிக்கப் பழகிக் கொள்ளவில்லை. சரியான உணவு முறையைப் பழகிக் கொள்ளவில்லை. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் தவறாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளே வாழ்வில் பலவிதமான சிக்கல்களும், குழப்பங்களும், துன்பங்களும், கவலைகளும்..................

மருத்துவர் இழுத்து மூச்சு விடு என்கிற போதுதான் நாம் சுவாசிப்பதே நமக்கு உணர்வுக்கு வருகிறது. அதுவும் ஒரே தடவையில் சரியாகச் செய்வதில்லை. ஹூம் இன்னும் நன்றாக இழுத்து மூச்சு விடு என்று மீண்டும் சொன்னால்தான் அதையும் சரியாகச் செய்கிறோம். மருந்துகளை எல்லாம் எழுதிய சீட்டை வாங்கிக் கொண்ட பிறகுதான் மெதுவாகக் கேட்கிறோம். சார் என்ன சாப்பாடு........? அவர், வேறென்ன கஞ்சி, பன், ரஸ்க்தான் என்கிற போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. வியாதி வருவதற்கு முன்பே கண்ட குப்பைகளையும் உள்ளே தள்ளாமல் இருந்தால் இந்த சிக்கலே வராதல்லவா ? பெரும்பாலான வியாதிகள் உணவுக் கட்டுபாடு இல்லாததாலும், சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ளாததாலும்தான் வருகிறது.

நானும் விதிவிலக்கல்ல. என் அனுபவமே இங்கே பேசுகிறது. இந்த பழக்கங்கள் எல்லாம் பழகிப் பழகி நம் இயல்பாகவே ஆகிவிட்டது. நானும், என்னைச் சேர்ந்தவர்களும், என் ஊர்காரர்களும், என் தேசத்தினரும் என்று இது ஒரு நவீன கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. முறை தவறுவது என்பது ஒரு இயல்பாகவே ஆகிப் போன நிலையில், நம் புலன்கள் அனைத்தும் புற உலகில் அலைந்து கொண்டே இருக்கிறது. உள்ளுணர்வு என்ற ஒன்றைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. புலன்கள் வழியாக மனம் வெளியே அலைகிற வரையில், அது தன் பரிசுத்தத்தை, யதார்த்தத்தை இழக்கிறது. சேற்றில் புரண்டு ஓடுகின்ற வெள்ள நீரைப் போல அது தன் இயல்பான தன்மையைப் பறிகொடுத்து விடுகிறது. மனதை இந்த வெளி விவகாரங்களில் இருந்து மீட்டெடுத்து, ஆன்மாவோடு இணைக்கிற போதுதான் சித்தம் தெளிவடையும். ஆத்மாவை சார்ந்திருப்பதுதான் மனதின் யதார்த்த நிலை. வெளி விஷயங்களில் அலைந்து கொண்டிருப்பது மலமடைந்த, மாசு படிந்த நிலை. இதனால் அதன் பேராற்றல் குன்றிப் போய்விடுகிறது.

இனி என்னதான் செய்வது ? காலகாலமாக உடலோடும், உணர்வோடும் கலந்து விட்ட பழக்கங்களை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியுமா ? முடியும். பழக்கத்தை பழக்கத்தால்தான் மாற்ற முடியும். இடையறாத பழக்கத்தினால் எந்த முயற்சியிலும் வெற்றியடைய முடியும். புதிய பழக்கங்கள் அழுத்தம் பெறும் போது பழைய பழக்கங்கள் மறைந்து போகும். பாடல்கள் அடங்கிய ஒலி நாடாவில் புதிய பாடலை அழுத்தி பதிய வைக்கும் போது பழைய பாடல் மறைந்து போகிறதல்லவா ? அதைப் போலத்தான். இப்படி மனதை நேர் வழியில் செலுத்த கற்றுத் தருவதே இராஜ யோகம் எனப்படும். அதற்கு அது எட்டுவகையான பயிற்சிகளை அல்லது பழக்கங்களை முன் வைக்கிறது. அவற்றில் தீவிரமடையும் போது பழைய தீய பழக்கங்கள் மறைந்து, புதிய நல்ல பழக்கங்களே இயல்பாகி விடும் போது மனதை ஒரு நிலைப்படுத்து கடினமில்லை.

எல்லோராலும் யோகம் பயிற்சி செய்ய இயலாதல்லவா ? அவர்கள் என்ன செய்வது ? முதலில் தனியாக அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் சற்று சிரமமாகத் தோன்றினாலும், பழக்கத்திற்கு வரும் போது இயல்பாகி விடும். புற விஷயங்களில் ஓடும் மனம் பற்பல எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். பாலையும் தண்ணீரையும் ஒன்றாக வைத்தால் கலந்து விடும். ஆனால் பாலைத் தயிராக்கி முயற்சி செய்து கடையும் போது வெண்ணையாகி விடுகிறது. அதை நீரிலே போட்டாலும் அது நீரோடு ஒட்டுவதில்லை. அது போல முயற்சி செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி பழகி விட்டால், அவன் எங்கிருந்த போதும் மனம் புற விஷயங்களிலும், புலன்களின் வழியிலும் போகாது. அது தன் இயல்பாகிய ஆன்மாவைச் சார்ந்திருக்கும் நிலையிலேயே நிலை பெறும். அப்போது புதிய எண்ணங்கள் தோன்றாது. பழைய எண்ணங்கள் என்னவாயிருக்கும் ? மன ஒருமைப்பாட்டுக்கான அழுத்தமான புதிய முயற்சியின் போது பழைய எண்ணங்கள் அழிந்து போயிருக்கும். இனி எல்லாம் சுகமே. சந்தோஷம், மகிழ்ச்சி. ஆனந்தம், பரமானந்தம் அதுவே பேரானந்தம்.

No comments:

Post a Comment