Friday, March 28, 2014

இயற்கையே குரு..

Photo: வீடு பேற்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு உள்ளவர்கள் மனம் தீமையை இயல்பாகவே விலக்கி விடும். அவ்வாறு தீமையை விலக்குவதால் நன்மையும், உண்மையுமான இறைவனை நோக்கி மனம் திசை மாறும். இது இயல்பான இயம யோகமாகும். இந்த இயம நிலையில் உள்ளவர்களைத் தேடி குருவானவர் வருவார். வருவார் என்றால் அவர் நாம் இருக்கும் இடத்திற்கு வருவார். அதை நாம் புரிந்து கொண்டு, அவரை உணர்ந்து கொண்டு அவரை சரண் புகுந்து கொள்வோம். குரு என்றால் பெரியவர் அல்லது இருட்டை விலக்குபவர் என்று பொருளாகும். பொதுவாக மனிதனின் ஆதி குரு சிவன் என்பார்கள். ஆரம்ப குரு மாதாவும், பிதாவுமே. இதிலும் கூட ஒரு சூக்குமம் உள்ளது. தாய், தந்தையர் ஸ்தூல உலகில் உலகாயத்தில் நமக்கு குருவாக இருப்பது உண்மைதான். ஆனால் உயிர்கள் என்ற பொதுவான நிலையில் மாயையான மாதா பரா சக்தியே சூக்கும நிலையில் குரு ரூபிணியாகத் திகழ்கிறாள்.

அவள், மீன் தனது முட்டையை கண்ணால் பார்த்தும், ஆமை தன் முட்டையை மனதால் நினைத்தும், கோழி தன் முட்டையைத் தொட்டும் அடைகாத்து அருள்வது போல் உயிர்களை மூன்று நிலைகளில் சூக்கும குருவாக நின்று பக்குவப்படுத்துகிறாள். இதையே மச்ச தீட்சை, குக்குட தீட்சை, கமட தீட்சை என்பார்கள். உலகுக்கே தந்தையான சிவனே ஆதி குருவாகத் திகழ்ந்தாலும் தன் மகனாகிய முருகனையே குருவாகக் கொண்டு உபதேசம் பெற்று சற்குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதால் அவர் ஆதி குரு மட்டுமல்ல, ஆச்சாரியன் என்ற நிலையையும் பெறுகிறார். ஆச்சாரியன் என்றால் நடந்து காட்டுபவர் அல்லது ஒரு சம்பிரதாயத்தில் இறங்கி வாழ்ந்து காட்டுபவர் என்று பொருள். குரு என்பவர் உள் மனம், தவம், அறிவு இவற்றை தெளிவிப்பவர். குருவானவர் பேச வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது. மௌனமாகவே இருந்தும் அதாவது சூக்கும நிலையிலும் கூட நல்வழிப் படுத்துவார். இதையே மௌனகுரு என்பார்கள். தக்ஷிணா மூர்த்தியும் கூட மௌனகுரு என்று சொல்லப்படுவதுண்டு. 

சிவன் முருகனிடமும், பராசக்தி சிவனிடமும், ராமர் வசிஷ்டரிடமும், கண்ணன் சாந்தீபனிடமும் உபதேஷம் பெற்று குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதாகச் சொல்வார்கள். தாத்தாத்ரேயரோ ஒருபடி மேலே போய் உலகில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், உயிரினங்களிடமிருந்தெல்லாம் பாடம் கற்று இயற்கையையே குருவாக அடையாளப்படுத்தினார். 
குருவுக்கும் சீடனுக்கும் ஏற்படும் தொடர்பே தீட்சை. குருவின் வல்மையான ப்ராண சக்தியானது சீடனுக்குள் புகுந்து அவனை நல் வழியில் செலுத்த ஆரம்பிப்பதையே தீட்சை என்கிறோம். இது மந்திர ரூபமாகவோ, ஸ்பரிசமாகவோ, கண்பார்வை மூலமாகவோ, எண்ணத்தின் மூலமாகவோ  நடை பெறும். குருவானவர் சீடனோடு சூக்குமத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார். கேள்விகள் கேட்டுத் தெளிபவனை விட குருவின் உபதேஷத்தை எந்த வித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்பவன் விரைவில் மேன்மை அடைவான். 

ஓம் சற்குருவே போற்றி. அவர் தம் கருணையே போற்றி. சற்குரு பெருமானின் திருப் பாதங்களே சரணம்.
வீடு பேற்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு உள்ளவர்கள் மனம் தீமையை இயல்பாகவே விலக்கி விடும். அவ்வாறு தீமையை விலக்குவதால் நன்மையும், உண்மையுமான இறைவனை நோக்கி மனம் திசை மாறும். இது இயல்பான இயம யோகமாகும். இந்த இயம நிலையில் உள்ளவர்களைத் தேடி குருவானவர் வருவார். வருவார் என்றால் அவர் நாம் இருக்கும் இடத்திற்கு வருவார். அதை நாம் புரிந்து கொண்டு, அவரை உணர்ந்து கொண்டு அவரை சரண் புகுந்து கொள்வோம். குரு என்றால் பெரியவர் அல்லது இருட்டை விலக்குபவர் என்று பொருளாகும். பொதுவாக மனிதனின் ஆதி குரு சிவன் என்பார்கள். ஆரம்ப குரு மாதாவும், பிதாவுமே. இதிலும் கூட ஒரு சூக்குமம் உள்ளது. தாய், தந்தையர் ஸ்தூல உலகில் உலகாயத்தில் நமக்கு குருவாக இருப்பது உண்மைதான். ஆனால் உயிர்கள் என்ற பொதுவான நிலையில் மாயையான மாதா பரா சக்தியே சூக்கும நிலையில் குரு ரூபிணியாகத் திகழ்கிறாள்.

அவள், மீன் தனது முட்டையை கண்ணால் பார்த்தும், ஆமை தன் முட்டையை மனதால் நினைத்தும், கோழி தன் முட்டையைத் தொட்டும் அடைகாத்து அருள்வது போல் உயிர்களை மூன்று நிலைகளில் சூக்கும குருவாக நின்று பக்குவப்படுத்துகிறாள். இதையே மச்ச தீட்சை, குக்குட தீட்சை, கமட தீட்சை என்பார்கள். உலகுக்கே தந்தையான சிவனே ஆதி குருவாகத் திகழ்ந்தாலும் தன் மகனாகிய முருகனையே குருவாகக் கொண்டு உபதேசம் பெற்று சற்குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதால் அவர் ஆதி குரு மட்டுமல்ல, ஆச்சாரியன் என்ற நிலையையும் பெறுகிறார். ஆச்சாரியன் என்றால் நடந்து காட்டுபவர் அல்லது ஒரு சம்பிரதாயத்தில் இறங்கி வாழ்ந்து காட்டுபவர் என்று பொருள். குரு என்பவர் உள் மனம், தவம், அறிவு இவற்றை தெளிவிப்பவர். குருவானவர் பேச வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது. மௌனமாகவே இருந்தும் அதாவது சூக்கும நிலையிலும் கூட நல்வழிப் படுத்துவார். இதையே மௌனகுரு என்பார்கள். தக்ஷிணா மூர்த்தியும் கூட மௌனகுரு என்று சொல்லப்படுவதுண்டு.

சிவன் முருகனிடமும், பராசக்தி சிவனிடமும், ராமர் வசிஷ்டரிடமும், கண்ணன் சாந்தீபனிடமும் உபதேஷம் பெற்று குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதாகச் சொல்வார்கள். தாத்தாத்ரேயரோ ஒருபடி மேலே போய் உலகில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், உயிரினங்களிடமிருந்தெல்லாம் பாடம் கற்று இயற்கையையே குருவாக அடையாளப்படுத்தினார்.
குருவுக்கும் சீடனுக்கும் ஏற்படும் தொடர்பே தீட்சை. குருவின் வல்மையான ப்ராண சக்தியானது சீடனுக்குள் புகுந்து அவனை நல் வழியில் செலுத்த ஆரம்பிப்பதையே தீட்சை என்கிறோம். இது மந்திர ரூபமாகவோ, ஸ்பரிசமாகவோ, கண்பார்வை மூலமாகவோ, எண்ணத்தின் மூலமாகவோ நடை பெறும். குருவானவர் சீடனோடு சூக்குமத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார். கேள்விகள் கேட்டுத் தெளிபவனை விட குருவின் உபதேஷத்தை எந்த வித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்பவன் விரைவில் மேன்மை அடைவான்.

ஓம் சற்குருவே போற்றி. அவர் தம் கருணையே போற்றி. சற்குரு பெருமானின் திருப் பாதங்களே சரணம்.

No comments:

Post a Comment