சாகும்
நாள் தெரிந்து விட்டால் வாழும் நாட்கள் நரகமாகிப் போகும் என்ற புதுத்
திரைப்படப் பொன்மொழியைக் கேட்கிறோம். ஆனால் இங்கே எல்லோருக்கும்
தெரிந்துதான் இருக்கிறது. எப்போது, எப்படி என்பது மட்டுமே தெரியாதே தவிர
எல்லோரும் மரணத்தை தெரிந்து கொண்டுதான்
இருக்கிறார்கள். யாரும் பயப்படுவதில்லை. நேற்று நம்முடன் இருந்தவன் இன்று
இல்லை. என்றாலும் இவர்களுக்கு ஒரு நம்பிக்கை, இறைவன் நம்மை காப்பாற்றுவார்
என்று. அவர் உன்னைப் படைத்து அனுப்புவதற்கு முன்பாகவே உபாயங்களை
படைத்திருந்தார். ஆனால் அதை நீ அறியவே இல்லை என்கிற போது உன்னால் மட்டும்
அல்ல, கடவுளால் கூட உன்னைக் காப்பாற்ற முடியாது. எனக்கு பைபிளின் ஒரு கதை
நினைவுக்கு வருகிறது. ஒரு முறை ஏசுநாதர் மக்களுக்கு உபதேசங்கள் சொல்லிக்
கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடத்திலே சென்று ஐயா, உங்கள் வாழ்க்கை
சிக்கல் இல்லாததும், பாவங்கள் இல்லாததுமாக இருக்கிறதென்ன ? யாரிடமும்
நீங்கள் கோபிப்பதில்லை, அமைதியும், அன்பும் நிறைந்த புனிதமானவராக
இருக்கிறீர்கள். நாங்கள் அவ்வாறில்லையே ? எங்கள் வாழ்க்கையும் உங்கள்
வாழ்வைப் போன்று இல்லையே ஏன் ? என்று கேட்டான். அவர் அவனைப் பார்த்து, அது
எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். நீ இன்னும் ஏழு நாட்களில் மரணம்
அடையப் போகிறாய் அது தெரியுமா உனக்கு ? என்று கேட்டார். அனைவரும் அதிர்ச்சி
அடைந்தனர். அந்த மனிதன் வீட்டுக்கு ஓடிப்போய்விட்டான். அவனுக்கு ஒன்றும்
புரியவில்லை. பயத்தில் நோய்வாய்ப்பட்டான். படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
நாட்களை எண்ணிக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். ஆறு நாட்கள்
முடிந்தது. ஏழாவது நாளும் வந்தது. ஏசு நாதர் தாமே அவன் வீட்டுக்குச்
சென்றார். எல்லா மக்களும் என்ன நடக்குமோ என்று எண்ணியபடி அவர் பின்னால்
சென்றனர். அவன் ஏசுநாதரை வணங்கித் தொழுதான். ஏசு நாதர், எப்படி
இருக்கிறாய்? என்று கேட்டார். அவனும், எல்லாம் ஆயிற்று, இனிப் புறப்பட
வேண்டியதுதான் என்றான்.
அப்போது ஏசுநாதர் கேட்டார், இந்த ஆறு நாட்களில் நீ எவ்வளவு பாவங்கள் செய்தாய் ?எத்தனை தீய எண்ணங்கள் உன் மனதில் உதித்தன ? சொல் என்றார். அவனோ, மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற எனக்கு தீய விஷயங்களைக் குறித்து எண்ணுவதற்கு நேரம் ஏது ? மரணம்தான் சதா கண் முன்னே வந்து நின்று கொண்டிருக்கிறதே என்றான். ஏசுநாதர் சிரித்தபடி சொன்னார், இப்போது புரிகிறதா ? என் வாழ்க்கை ஏன் பாவங்கள் இல்லாமல் இருக்கிறது என்று? மரணம் என்ற சிங்கம் எபோபோது பாயலாம் என்று முன்னே காத்துக் கொண்டிருக்கும் போது, யார்தான் தீமை செய்வார் ? யார் தான் பாவங்களைச் செய்வார் ? பயம் இல்லாதவனும், கவலை இல்லாதவனும் பாவங்களைச் செய்து துன்புறுவான். சாவைப் பற்றி பயம் இருந்து கொண்டே இருந்தால் யாரும் பாவம் செய்ய மாட்டார்கள என்றார்.
கதை எத்தனையோ சொன்னாலும், மனிதன் மரணத்தின் நினைவை மறக்க முயன்று கொண்டே இருக்கிறான். மரணத்தைப் பற்றி யாரேனும் பேச்செடுத்தாலே போதும், ஏன் அபசகுணமாகப் பேசுகிறாய் ? என்கிறான். என்றாலும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் மரணத்தை நோக்கியே என்பதை யாரும் தவிர்க்க முடியாது. எனவே இதைக் கூறி பயங்காட்டி பாவம் செய்யாமல் தடுக்கலாம் என்று பல கதைகள் சொல்லி வைக்கப் போக, இவனோ, எப்படி என்றாலும் சாவது நிஜம். எனவே சாவதற்குள் எல்லா சுகங்களையும் அனுபவித்து விட வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நம் சந்ததிகளுக்கு சுருட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் படுகிறான். பல குருமார்களும், மகான்களும், ஞானிகளும், சித்தர்களும் நம்மை நல்வழிப்படுத்த சொல்லி வைத்த விஷயங்களை தவறான கோணத்தில் பார்த்து, தப்பிதமாகப் புரிந்து கொண்டு இன்றளவும் பாவங்களையும், கொலைகளையும் செய்கிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள். தாம் போன பாதையில் முட்களயும் கற்களையும் நீக்கி மலர்களைத் தூவிச் சென்றனர் மகான்கள். இவர்களோ தம் வருங்கால சந்ததிகளுக்கு பாதையில் இரத்தத்தை தெளித்து வரவேற்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் இவர்கள் பாவங்களை மன்னிப்பாராக.

No comments:
Post a Comment