Wednesday, March 26, 2014

ஒழுக்கம், ஐம்புலனடக்கம், தர்மம், தானம், வேதாந்த விசாரணை, உருவ வழிபாடு ஆகிய அனைத்திலும் மேம்பட்டது தியானமேயாகும். புறத் தேடல் பயிற்சியாகும். அகத் தேடல் முயற்சியாகும். சாமி யார் ? என்பதை அறிய முயற்சிப்பவன் சாமியார். சாவை மீறியவன் சாது. பரத்தை உணர்ந்தவன் பரதேசி. ப்ரம்மத்தை அறிந்தவன் பிரமணன். சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். ஞானம் பெற்றவன் ஞானி. ஞானம் பெற முனைப்பாக செயல்படுபவன் முனிவன். தவம் செய்து வென்றவன் தவசி. யோகத்தில் திளைத்தவன் யோகி. இப்படி அவரவர் உயர்ந்த செயல்களால் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். இறைவனே மெய்ப்பொருள். அந்த மெய்ப்பொருளாகிய இறைவன் நம் உடம்பிலும் இடம் கொண்டிருக்கிறான். அவனை உணர்ந்து, அடைந்து பேரின்பம் பெறவே நாம் பிறந்திருக்கிறோம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த மெய்ப்பொருளைக் காண்பதெவ்வாறு ? அது எங்கே உறைந்திருக்கிறது ? என்பதுவே தேடல். உடலுக்குள் நீ உலாவியதைக் காணாமல் கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே என்கிறார் பட்டினத்தார். உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன் என்கிறார் திருமூலர். மெய்ப்பொருளைக் காணமுடியும், கண்டோம் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அந்த வான் பற்றி நின்ற மெய்ப் பொருள் புருவ மத்தியில் இருப்பதாக சிவவாக்கியர் மற்றும் சித்தர்கள் அனைவரும் கூறுகின்றனர். என்னை த்விஜன் என்கிற மறுபிறப்பாளனே காணமுடியும் என்று பகவான் கீதையில் சொல்கிறார்.

இந்த உலகில் உதிக்கும் உயிர்கள் நால்வகை யோனிகள் வழியாகவே தோன்றுகின்றன. வித்து, புழுக்கம், முட்டை, கருவாகி கர்ப்பத்திலிருந்து என்பவையாகும். இதை உணர்த்துவதாக யாகங்களில் யோனி குண்டம் அமைப்பார்கள். ஆனால் ஐந்தாவது யோனி ஒன்று உண்டு. இதனை குரு மூலமாக உபதேஷம் பெற்று அந்த ஐந்தாவது யோனியின் மூலம் பிறப்பவனே மறுபிறப்பாளன் என்கிற த்விஜன். படங் கொண்ட அல்குல் பணி மொழி வேதப் பரிபுரையே, என்று இந்த ஐந்தாவது யோனியையே அபிராமிப் பட்டர் அல்குல் என்று பாடுகிறார். இறைவனாகிய மெய்ப்பொருள் உலக மெங்கும் நீக்கமற நிரம்பி இருக்கிறது. இதை ஆதியிலே மறைத்தவன் வல்லவன் என்பார் வள்ளலார். துடியாகவே திறந்து சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடிக்கும் என்பார் காகபுசுண்டர். ஒருவருக்கும் வெளியே சொல்லாதே , சொன்னால் தலை வெடிக்கும் என்பார் அகத்தியர். தன்னந்தனி நின்ற அது தான்றிய இன்னும் ஒருவருக்கு இசைவிப்பதுவோ என்பார் அருணகிரி நாதர். அனைத்து சித்தர்கள் மற்றும் ஞானிகளும் மெய்ப்பொருளை உபதேஷம் மூலமாகவே உணர்த்த வேண்டும். வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்றே சொல்கின்றனர். மெயபபொருளை முப்பொருள் என்று வள்ளலார் சொல்வார். ஓரெழுத்து, ஒருபொருள், ஒத்தது, மும்மூர்த்திகள், முச்சக்திகள், சத்சித் ஆனந்தம் என்று பலவாறாக மெய்பொருள் உணர்த்தப்படுகிறது. இப்படி முப்பொருள் உண்மையாக உள்ள மெய்ப்பொருளை நம் உடம்பில் கண்டு தவம் முடித்தனர் சித்தர்கள்.

கண்டாரும் கிடையாது, விண்டாரும் சொன்னதில்லை, அண்டாண்ட கோடி எல்லாம் ஒன்றாய் சமைந்திருக்கும் என்று நந்தனார் பாடுகிறார். அந்த ஒன்றையே சித்தர்கள் வாலை, காயத்ரி, பஞ்சாட்சரம், எட்டிரண்டு, ஓரெழுத்து, வாசி, மெய்ப்பொருள், முப்பு, தியானம், தவம் என்று தச் தீட்சையாக வழங்கியிருக்கிறார்கள். மேலும் அதனை ஏழாவது அறிவு, பிரம்மம், சூன்யம் என்றும் கூறி அது நம் உடலின் பத்தாவது வாசலில் உள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இருக்கும் இடம் மூன்றாவது கண்ணாகிய புருவ மத்தி என்றும், அண்ட உச்சி என்றும், அது இராப்பகல் இல்லாத இடம் என்றும், சக்தியைத் தவிர யாரும் தொடாத இடம், இன்ப துன்பங்கள் உணருமிடம், மனசாட்சியாக இருக்குமிடம், ஏகாந்தமாக இருக்கும் மோன இடம், சிற்றம்பலம், பொன்னம்பலம், திரு பாற்கடல், பிறந்த இடம், செத்த இடம், சாவாதிருக்குமிடம், காமம், கோபம் தோன்றுமிடம், இரக்கம் கருணை உதிக்குமிடம், காரண காரியம் உணர்த்தும் சூக்கும இடம் என்றெல்லாம் சொல்லி அது நமது உடலில் புருவ மத்தியில் இருப்பதாக உரைப்பர். உண்மையில் புருவ மத்தி என்பதே பரிபாஷையாகும். மூக்கு நுனி என்பர் ஆனால் '' பாரப்பா புருவ மத்தி ஏதென்றால் அது பரப்பிரம்மமான அண்ட உச்சி'' என்கிறார் காக புசுண்டர். மெய்ப்பொருளை வெளிப்படையாக எழுதி வைத்த கோரக்கரை சட்டை முனி சித்தர் கடிந்து அந்த ஏடுகளைக் கிழித்து போட்டதாக வரலாறு உண்டு. அந்த மெய்பொருளை அடைய செல்லும் இடம் இடுக்கமான, நெருக்கமானதென்றும், இடுக்கான வழியே உட்செல்லுங்கள், அழிவுக்குச் செல்லும் வழி அகலமானது, விரிவானது, அந்த வழியே உட் செல்பவர் பலர். ஆனால் மெய்வாழ்வுக்கு செல்லும் வழி இடுக்கானது ஒடுக்கமானது அதில் செல்பவர்கள் சிலரே என்று ஏசுநாதர் சித்தர் சொல்கிறார்.

மெய்ப்பொருளையும் அது இருக்கும் இடத்தையும் அறிந்து கொள்வதே சாகாக்கலை. எனவே மெய்ப்பொருள் இறைவனாக இருப்பதை உணர்ந்து இதயத்தில் இருத்தி தியானிப்பவர்கள் அதை கண்டு உணர்வார்கள். தன்னை உணரும் இடமே அதுவாக இருக்கும். எனவே நாமாகவே எண்ணம் கொண்டு தியானம் பழகி செய்து வரவர குருவருளும் கூடி வரும், திருவருள் தரிசனமும் கிட்டும்.
Photo: ஒழுக்கம், ஐம்புலனடக்கம், தர்மம், தானம், வேதாந்த விசாரணை, உருவ வழிபாடு ஆகிய அனைத்திலும் மேம்பட்டது தியானமேயாகும். புறத் தேடல் பயிற்சியாகும். அகத் தேடல் முயற்சியாகும். சாமி யார் ? என்பதை அறிய முயற்சிப்பவன் சாமியார். சாவை மீறியவன் சாது. பரத்தை உணர்ந்தவன் பரதேசி. ப்ரம்மத்தை அறிந்தவன் பிரமணன். சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். ஞானம் பெற்றவன் ஞானி. ஞானம் பெற முனைப்பாக செயல்படுபவன் முனிவன். தவம் செய்து வென்றவன் தவசி. யோகத்தில் திளைத்தவன் யோகி. இப்படி அவரவர் உயர்ந்த செயல்களால் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். இறைவனே மெய்ப்பொருள். அந்த மெய்ப்பொருளாகிய இறைவன் நம் உடம்பிலும் இடம் கொண்டிருக்கிறான். அவனை உணர்ந்து, அடைந்து பேரின்பம் பெறவே நாம் பிறந்திருக்கிறோம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த மெய்ப்பொருளைக் காண்பதெவ்வாறு ? அது எங்கே உறைந்திருக்கிறது ? என்பதுவே தேடல். உடலுக்குள் நீ உலாவியதைக் காணாமல் கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே என்கிறார் பட்டினத்தார். உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன் என்கிறார் திருமூலர். மெய்ப்பொருளைக் காணமுடியும், கண்டோம் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அந்த வான் பற்றி நின்ற மெய்ப் பொருள் புருவ மத்தியில் இருப்பதாக சிவவாக்கியர் மற்றும் சித்தர்கள் அனைவரும் கூறுகின்றனர். என்னை த்விஜன் என்கிற மறுபிறப்பாளனே காணமுடியும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். 

இந்த உலகில் உதிக்கும் உயிர்கள் நால்வகை யோனிகள் வழியாகவே தோன்றுகின்றன. வித்து, புழுக்கம், முட்டை, கருவாகி கர்ப்பத்திலிருந்து என்பவையாகும். இதை உணர்த்துவதாக யாகங்களில் யோனி குண்டம் அமைப்பார்கள். ஆனால் ஐந்தாவது யோனி ஒன்று உண்டு. இதனை குரு மூலமாக உபதேஷம் பெற்று அந்த ஐந்தாவது யோனியின் மூலம் பிறப்பவனே மறுபிறப்பாளன் என்கிற த்விஜன். படங் கொண்ட அல்குல் பணி மொழி வேதப் பரிபுரையே, என்று இந்த ஐந்தாவது யோனியையே அபிராமிப் பட்டர் அல்குல் என்று பாடுகிறார். இறைவனாகிய மெய்ப்பொருள் உலக மெங்கும் நீக்கமற நிரம்பி இருக்கிறது. இதை ஆதியிலே மறைத்தவன் வல்லவன் என்பார் வள்ளலார். துடியாகவே திறந்து சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடிக்கும் என்பார் காகபுசுண்டர். ஒருவருக்கும் வெளியே சொல்லாதே , சொன்னால் தலை வெடிக்கும் என்பார் அகத்தியர். தன்னந்தனி நின்ற அது தான்றிய இன்னும் ஒருவருக்கு இசைவிப்பதுவோ என்பார் அருணகிரி நாதர். அனைத்து சித்தர்கள் மற்றும் ஞானிகளும் மெய்ப்பொருளை உபதேஷம் மூலமாகவே உணர்த்த வேண்டும். வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்றே சொல்கின்றனர். மெயபபொருளை முப்பொருள் என்று வள்ளலார் சொல்வார். ஓரெழுத்து, ஒருபொருள், ஒத்தது, மும்மூர்த்திகள், முச்சக்திகள், சத்சித் ஆனந்தம் என்று பலவாறாக மெய்பொருள் உணர்த்தப்படுகிறது. இப்படி முப்பொருள் உண்மையாக உள்ள மெய்ப்பொருளை நம் உடம்பில் கண்டு தவம் முடித்தனர் சித்தர்கள். 

கண்டாரும் கிடையாது, விண்டாரும் சொன்னதில்லை, அண்டாண்ட கோடி எல்லாம் ஒன்றாய் சமைந்திருக்கும் என்று நந்தனார் பாடுகிறார். அந்த ஒன்றையே சித்தர்கள் வாலை, காயத்ரி, பஞ்சாட்சரம், எட்டிரண்டு, ஓரெழுத்து, வாசி, மெய்ப்பொருள், முப்பு, தியானம், தவம் என்று தச் தீட்சையாக வழங்கியிருக்கிறார்கள். மேலும் அதனை ஏழாவது அறிவு, பிரம்மம், சூன்யம் என்றும் கூறி அது நம் உடலின் பத்தாவது வாசலில் உள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இருக்கும் இடம் மூன்றாவது கண்ணாகிய புருவ மத்தி என்றும், அண்ட உச்சி என்றும், அது இராப்பகல் இல்லாத இடம் என்றும், சக்தியைத் தவிர யாரும் தொடாத இடம், இன்ப துன்பங்கள் உணருமிடம், மனசாட்சியாக இருக்குமிடம், ஏகாந்தமாக இருக்கும் மோன இடம், சிற்றம்பலம், பொன்னம்பலம், திரு பாற்கடல், பிறந்த இடம், செத்த இடம், சாவாதிருக்குமிடம், காமம், கோபம் தோன்றுமிடம், இரக்கம் கருணை உதிக்குமிடம், காரண காரியம் உணர்த்தும் சூக்கும இடம் என்றெல்லாம் சொல்லி அது நமது உடலில் புருவ மத்தியில் இருப்பதாக உரைப்பர். உண்மையில் புருவ மத்தி என்பதே பரிபாஷையாகும். மூக்கு நுனி என்பர் ஆனால் '' பாரப்பா புருவ மத்தி ஏதென்றால் அது பரப்பிரம்மமான அண்ட உச்சி'' என்கிறார் காக புசுண்டர். மெய்ப்பொருளை வெளிப்படையாக எழுதி வைத்த கோரக்கரை சட்டை முனி சித்தர் கடிந்து அந்த ஏடுகளைக் கிழித்து போட்டதாக வரலாறு உண்டு. அந்த மெய்பொருளை அடைய செல்லும் இடம் இடுக்கமான, நெருக்கமானதென்றும், இடுக்கான வழியே உட்செல்லுங்கள், அழிவுக்குச் செல்லும் வழி அகலமானது, விரிவானது, அந்த வழியே உட் செல்பவர் பலர். ஆனால் மெய்வாழ்வுக்கு செல்லும் வழி இடுக்கானது ஒடுக்கமானது அதில் செல்பவர்கள் சிலரே என்று ஏசுநாதர் சித்தர் சொல்கிறார். 

மெய்ப்பொருளையும் அது இருக்கும் இடத்தையும் அறிந்து கொள்வதே சாகாக்கலை. எனவே மெய்ப்பொருள் இறைவனாக இருப்பதை உணர்ந்து இதயத்தில் இருத்தி தியானிப்பவர்கள் அதை கண்டு உணர்வார்கள். தன்னை உணரும் இடமே அதுவாக இருக்கும். எனவே நாமாகவே எண்ணம் கொண்டு தியானம் பழகி செய்து வரவர குருவருளும் கூடி வரும், திருவருள் தரிசனமும் கிட்டும்.

No comments:

Post a Comment