Friday, March 28, 2014

மரணத்தை தவிர்க்க முடியுமா ?

Photo: 'மரணம்''
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மரணம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. எல்லோருடைய மனமும் இதைத்தான் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். என்னைக்கானாலும் ஒருநாள் சாகத்தான் போகிறோம் என்று தத்துவார்த்தமாகப் பேசி சமாளிப்பார்கள். ஆனால் மரணத்தின் விளிம்பில் கிடக்கும் கடைசி நொடி கூட மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கத்தான் செய்கிறது. மனம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மரணம் ஒரு நொடிப் பொழுதில் அரங்கேறி விடும். ஆனால் மனம் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தான் நிறைய பேருக்கு அந்த சுகமான உடையை மாற்றும்(உடலை மாற்றுவது) அனுபவம் மரண வேதனையாகிப் போகிறது. மரணம் எப்போதும் நம் பின்னால் நின்று கொண்டே இருக்கிறது. நமது ஒவ்வொரு எட்டும் அதை நோக்கிதான். நாம் கழிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அதை நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணத்தை வெல்ல நாம் சித்தர்கள் அல்ல. மனிதன் மரணத்தை மறக்கவே விரும்புகிறான். சென்னைக்கு போகவேண்டும் என்று டிக்கட் எடுத்து வந்து உட்கார்ந்தாகி விட்டது. இனி நீங்கள் உட்கார்ந்தே இருந்த போதும் வண்டி சென்னை கொண்டு போய் சேர்த்துவிடும். பிறவி எடுக்கும் போதே ரிட்டன் டிக்கட்டும் கொடுத்தாகிவிட்டது. இனி நீங்கள், உட்கார்ந்தே இருந்தாலும், ஓடிக்கொண்டே இருந்தாலும், மரணத்தை பற்றி எண்ணினாலும், எண்ணா விட்டாலும் அது வந்தே தீரும். வராமல் போகாது. மற்ற எந்த விஷயங்களிலும் உறுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மரணம் மட்டும் உறுதி. சூரியன் மேற்கு திசையில் அடிவானத்தை சென்றடையும் பொழுதெல்லாம் நம் ஆயுளின் ஒரு நாளையும் எடுத்துக் கொண்டு போய்விடுகிறான். இவ்வாறாக வாழ்க்கையின் பகுதிகள் குறைந்து கொண்டே போகிறது. வாழ்க்கை தேய்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு துளியாக வாழ்க்கை பாத்திரத்தில் நீர் குறைந்து கொண்டே போகிறது. தருமர் இதைக் குறித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

பெரும்பாலும் எல்லோருமே முகத்தை மலர்ச்சி உள்ளதாகவும், சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறோம். உலர்ந்த தலைக்கு எண்ணெய் பூசுதல், முகத்துக்கு பவுடர் பூசுதல், தலை நரைத்து போயிருந்தால் சாயம் பூசுதல், ரோட்டில் போகிற பெண்களெல்லாம் அருகே ஓடி வரும் படியான விளம்பரத்தில் உள்ள செண்ட் அடித்துக் கொள்ளுதல்.(அந்த வாசனை பிடிக்காமல் நாய் விரட்டிக் கொண்டு வரும். அதை விளம்பரத்தில் காட்ட மறந்து விட்டார்கள்)இதையெல்லாம் மனிதன் செய்து கொள்கிறான். ஆனால் மார்பின் மீது மரணம் டிஸ்கோ ஆடிக் கொண்டிருக்கிறது. அதை மறைக்கவோ, மாற்றவோ முடியாது. ஆனால் இதனாலெல்லாம் மரணத்தை தவிர்க்க முடியுமா ? நேற்று உறவினர் இறந்த போது மரணம் எதிரில் வந்து நின்றதே ? மறந்து விட்டாயா ? விலங்குகளுக்கும் இந்த இயல்பு உண்டு. மரணத்தை நேருக்கு நேராகப் பார்க்க விரும்புவதில்லை. முயல் வேட்டை நாய்கள் துரத்தி வரும் போது, முடியாத கட்டத்தில் முகத்தை பூமியில் அழுத்தியவாறு அப்படியே நின்று விடுமாம். மானை சிங்கமோ, புலியோ விரட்டும் போது பயங்கர வேகமாகத் துள்ளித் துள்ளி ஓடி தப்பிக்க முயற்சி செய்யுமாம். விடாமல் துரத்தும்போது மானின் சக்தி குறைந்து விடுமாம். என்ன செய்ய ? பின்னால் எமன் சிங்க உருவில் விரட்டிக் கொண்டு வருகிறான். சிங்கத்தின் பக்கம் பார்க்கவும் முடியவில்லை. உடனே என்ன செய்யுமாம், தரையில் தன் கொம்புகளையும், முகத்தையும் நுழைத்துக் கொண்டு நிராதரவாய் நின்றுவிடுமாம். இப்போது நீ வந்து என்னைச் சாப்பிடலாம் என்று அழைப்பது போல் உள்ள நிலை அது. மரணத்தை அது ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆனாலும் அதை நேரில் சந்திக்கும் தைரியம் அதற்கு இல்லை. ஒரு சிங்கத்தின் கோரப்பற்களுக்குள் சிக்கி உயிரை விட விருப்பம் இல்லை. வேறு வழியில்லை எனவே முகத்தை தரையில் அழுத்திக் கொண்டு மரணத்தை வரவேற்றுக் காத்திருக்கிறது.நம் நிலையும் அதுதான். நாமும் மரணத்தை எதிரில் பார்க்க விரும்புவதில்லை. அதிலிருந்து தப்புவதற்காக நாம் பல ஆயிரம் உபாயங்கள், யுக்திகளை கண்டு பிடித்த போதிலும், இறுதியில் அது தன் பேராற்றலினால் நம் கழுத்தை பிடித்து நெறித்து கொன்றே விடுகிறது. எனவே மனிதனானவன் அஞ்சாமல் மரணத்தைக் குறித்துச் சிந்தித்து அதைக் கடப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கத் துணிய வேண்டும். நம் வாழ்க்கையின் மறுமுனை மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நினைவிலிருத்தி இறுதிக் கணத்தை புண்ணியமாகவும், புனிதமாகவும், இனியதாகவும் ஆக்குவதற்கு ஆயுள் முழுவதும் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பாட்டிக்கு வயதாகி விட்டது. எதையோ எடுக்க வேண்டும் என்று போகிறார். ஆனால் மறந்துவிடுகிறது. ஆனால் சிறு வயதில் காணாமல்போன நகையைப்பற்றி மட்டும் தெளிவாகப் பேசுகிறார். அது எப்படி ? அதைப்பற்றி வாழ்நாள் முழுவதும் பேசிப் பேசி அது பதிந்து விட்டது. அது போலத்தான் நாம் நம்முடைய வாழ்நாள் முழுவதிலும் எண்ணங்களாலும், செயலாலும் புனிதமானவராக இருந்தால் நம் இறுதி கணமும் சுகமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மரணம்''

No comments:

Post a Comment