Friday, March 28, 2014

சமுத்திரத்தில் விந்திய மலை மிதக்கிறது!

Photo: கும்பகோணம் என்றாலே கோவில்கள் நகரம் என்று சொல்லும் அளவிற்கு திரும்பும் திசையெல்லாம் கோவில்கள். சிவவாக்கிய சித்தரின் ஜீவசமாதியும் அங்கே இருக்கிறது. ஶ்ரீஇராகவேந்திரர் மடமும் அங்குள்ளது. நான் அங்கிருந்த போது ஓரிரு முறை அங்கு போய் அமர்ந்து விட்டு வந்திருக்கிறேன். அங்கே இருக்கும் மூல ப்ருந்தாவனம் அஜய விஷயீந்திரர் என்ற ஶ்ரீ விஜயீந்திர தீர்த்தருக்குரியது. என்றாலும், இராகவேந்திர சுவாமிகளின் மகிமையால் அது இன்றளவும் ஶ்ரீ இராகவேந்திர சுவாமிகள் மடம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. இராகவேந்திர சுவாமிகளின் இயற்பெயர் வெங்கடநாதாச்சார்யார் என்பதாகும். இவருக்கு குரு ஶ்ரீஸுதீந்திரர் ஆவார். ஶ்ரீஸுதீந்திரருடைய குரு ஶ்ரீவிஜயீந்திரர் ஆவார். ஸுதீந்திரரும், விஜயீந்திரரும் குரு சிஷயர்களாக இருந்து பரிபாலணம் செய்து வரும் போதுதான் இராவேந்திரர் வருகிறார். அதற்குப் பிறகு பின்னாளில் ஶ்ரீஸுதீந்திரர், இராகவேந்திர சுவாமிகளுக்கு ஆச்ரமம் அளித்தார். இதில் இந்த அஜய்ய விஜயீந்திர சுவாமிகளின் மகிமை சொல்லில் அடங்காது. 1539 ல் இருந்து 1595 வரை அவர் அந்த மடத்தை பரிபாலணம் செய்து வந்திருக்கிறார். அப்போதிருந்த சைவ சமய பண்டிதர்கள் அனைவரையும் வாத்தில் வென்று சிவன் கோவில் நிர்வாகம் மற்றும் சைவ மடத்தின் நிரவாகம் அனைத்தையும் தன் மடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார். அவரின் கீர்த்தியினால் பொறாமை அடைந்தவர்களுடைய ஏவலினால் அவரைப்  போட்டிக்கு அழைத்த அனைவரையும் பலவிதமான அற்புதங்களைச் செய்து தோற்று ஓடச் செய்திருக்கிறார்.

தன் பல்லக்கை காற்றில் மிதக்கச் செய்தது, தன்னுடன் வாதம் செய்ய வந்தவர் தன்னை இழிவு படுத்துவதற்காக ஒரு குட்டிச் சுவரில் புலித் தோலை போட்டு அமர்ந்து கொண்டு எக்காளமாய் சிரித்தது கண்டு, அந்தக் குட்டிச் சுவரையே அந்தரத்தில் பறக்க வைத்தது, மாந்திரீகனை தோற்கடித்தது, களக்கூத்தாடியைத் தோற்கடிக்க கும்பேஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து ஸாரங்கபாணி கோவில் கோபுரம் வரை பூகட்டும் நாரினால் திரிக்கப்பட்ட கயிற்றில் பாதுகையுடன் நடந்து காண்பித்தது, சிற்பியைத் தோற்கடித்தது, பௌத்த துறவிகளை வாதத்தில் வென்றது, நகை செய்யும் தொழிலில் திறமையானவரை வென்றது, கைதேர்ந்த நெசவாளியை வென்றது, ஸாரங்கபாணி கோவில் தெப்பக் குளத்தை கையகப்படுத்த சூழ்சிக்காரர்கள் குளத்திற்குள் நீரில் போட்டு வைத்த லிங்கங்கள் மற்றும் நந்தி சிலைகளை மறையச் செய்தது, சூழ்சிக்காரர்களில் ஒருவன் தலையில் அட்சதையைப் போட்டு அவன் வாயாலேயே உண்மையை சொல்ல வைத்தது, சங்கீதக் காரனை வென்றது, மோகத்தில் வீழ்த்தும் காம நடன அசைவைக் காட்டும் நாட்டியக்காரிகளிடம் மயங்காமல் இருந்தது என்று பல அற்புத சித்துக்களைச் செய்து மகிமைபடுத்தியுள்ளார். பக்தியின் மேன்மையை வெளிப்படுத்தியுள்ளார். 64 கலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். நியாயம், மீமாம்ஸா, வ்யாகரணம், ஜோதிடம், போன்ற சாஸ்திரங்களில் நூற்றுக் கணக்கான நூல்களை இயற்றியுள்ளார். 

அப்படிப்பட்ட மகான் மேல் பொறாமை கொண்ட சிலர் ஏவி விட்டதன் பேரில் ஒரு பிரபலமான வேசியானவள் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சிவராத்திரி அன்று வருகை தந்த சுவாமிகளிடம் 64 கலைகளும் வல்லவரான சுவாமிகளால் காம சாஸ்திரத்தில் என்னை ஜெயிக்க முடியுமா ? என்று கேட்டு விட்டு தைரியமாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு வழியை மறித்து நின்று கொண்டிருந்தாள். அவளை கண்டிக்கச் சென்றவர்களை கையமர்த்தி நிறுத்திய சுவாமிகள் அவளை நோக்கி நாளை மாலை ஶ்ரீமடத்துக்கு வா உனக்கு பதில் கிடைக்கும் என்று சொல்லி விட்டு போய் விட்டார். மறுநாள் மாலை மடத்தின் முன் பயங்கரக் கூட்டம். என்ன நடக்கும் என்ற ஆவலில் மக்கள் ஆங்காங்கே கூடி நின்று கொண்டிருக்கும் போது வேசியானவள் வருகிறாள். வாயிலில் நின்ற வேலைக்காரனிடம் உங்கள் சுவாமிகள் எங்கே ? எனது கலையில் உங்கள் சுவாமிகளால் என்னை ஜெயிக்க முடியுமா ? என்று தளுக்கி மினுக்கிக் கொண்டு வெட்கமில்லாமல் கேட்கிறாள். வாயில் காப்போன் அவளிடம் '' சுவாமிகளைப் பார்ப்பது இருக்கட்டும், சுவாமிகள் நீ வந்தால் உன்னை அடிக்கச் சொல்லி தந்த இந்த பூச்செண்டிற்கு பதில் சொல் என்று சொல்லி அவள் வலது புஜத்தில் அந்தப் பூச்செண்டால் ஒரு அடி அடித்தான். 

அவ்வளவுதான், அந்த வேசியானவள் புயலில் சிக்கிய கொடியைப் போல நடுங்கி, வெளிப்படுத்த முடியாத ஆனந்த அவஸ்தையை அனுபவிப்பவள் போல மூடிய கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டு கூனிக் குறுகி மெய் மறந்தவளாகக் கீழே விழுந்தாள். உடலெல்லாம் வியர்க்க, பெரு மூச்சு விட்டவளாகக் கீழே கிடந்த அவளைப் பார்த்து ஜனங்கள் கலவரமடைந்தனர். கொஞ்ச நேரம் கழித்து வெட்கத்துடன் எழுந்த அவள் வாயில் காப்போனை நோக்கி கையை கூப்பியபடி, ஐயா, இந்த உலகத்தில் இது போன்ற ஆச்சரியம் உண்டா ? இன்றைய தினம் நான் கண்டும், கேட்டுமறியாத ஆனந்தத்தை அடைந்தேன். புஷ்பத்தினால் நீ அடித்த அடியில் நான் தோல்வியுற்றேன். ஞானிகளுக்கெல்லாம் அரசனான ஶ்ரீபாதரிடம் தகாத வார்த்தைகளைப் பேசி பெரிய குற்றம் செய்து விட்டேன் என்று கண்ணீர் வடித்தாள். வாயில் காப்போனும் அவளிடம் மந்திர அட்சதையைக் கொடுத்து, இது சுவாமிகள் உனக்களிக்கச் சொன்னார், இதைப் பெற்றுக் கொள். இனிமேலாவது திருந்தி வாழ்வாயாக என்று சொல்லி அனுப்பி வைத்தான். ஜனங்களெல்லாம் ஆச்சர்யமடைந்தனர். சுவாமிகளிடம் கேட்ட போது நேற்றைய தினம் அவள் வருவாள் என்பது முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்த காரணத்தால் காமாரியானவரும்(மனமதனின் எதிரியானவர்), மனோ நியாமகனானவருமான முக்கண்ணனைப் பிரார்த்தித்துச் சரணடைந்தோம். அவர் அனுக்ரஹித்தார் என்று சிவ பெருமானை மகிமைப்படுத்தினார். 

அப்போது அதில் ஒரு மலையாளி ப்ராமணர் மஹா தவசிகளும், காற்றையும், இலைகளையும், தண்ணீரையும் அருந்தி கடும் தவமியற்றிய விசுவாமித்திரர், பராசரர் போன்றவர்களே அழகிய மங்கைகளின் மோஹ வலையில் வீழ்ந்து விட்டார்கள். நீங்களோ மடாதிபதி. புஷ்டியான அன்னம், நெய், தயிர், பாதாம் பருப்பு கலந்த பால், பழங்கள் போன்ற வற்றை சாப்படுபவர். நீங்கள் இந்திரிய நிக்ரஹம் செய்துள்ளீர்கள் என்று சொன்னால் சமுத்திரத்தில் விந்திய மலை மிதக்கிறது என்று சொல்வதைப் போன்றதுதான் என்று கிண்டலாகச் சொன்னார். இதைக் கேட்டு பொருமையுடன் புன்னகைத்த சுவாமிகள், இந்திரிய நிக்ரஹம் என்பது ஆகாரத்தைப் பொறுத்ததல்ல. உதாரணமாக மதம் கொண்ட யானையின் மத்தகத்திலுள்ள இரத்தம், மாமிசம் போன்ற புஷ்டியான ஆகாரங்களைத் தின்று ஜீவிக்கும் சிங்கம் ஒரு வருஷத்தில் குறிப்பிட்ட காலத்தில்தான் பெண் சிங்கத்தோடு புணர்கிறது. ஆனால், கல்லையும், மண்ணையும் தின்று ஜீவிக்கும் புறாவோ ஒவ்வொரு நொடியும் காமியாக உள்ளது. எனவே, இந்திரிய நிக்ரஹம் என்பது, ஆகாரத்தையோ, சூழலையோ பொறுத்தது அல்ல. அது முழுக்க முழுக்க மனதைப் பொறுத்தது. பரிசுத்தமான, திடமான மனதோடு ஆசையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திரிய நிக்ரஹம் சாத்தியம் என்றார். பக்தியானாலும், யோகமானாலும் மனம் வசப்படாத வரை பலன் கானல் நீரே என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கும்பகோணம் என்றாலே கோவில்கள் நகரம் என்று சொல்லும் அளவிற்கு திரும்பும் திசையெல்லாம் கோவில்கள். சிவவாக்கிய சித்தரின் ஜீவசமாதியும் அங்கே இருக்கிறது. ஶ்ரீஇராகவேந்திரர் மடமும் அங்குள்ளது. நான் அங்கிருந்த போது ஓரிரு முறை அங்கு போய் அமர்ந்து விட்டு வந்திருக்கிறேன். அங்கே இருக்கும் மூல ப்ருந்தாவனம் அஜய விஷயீந்திரர் என்ற ஶ்ரீ விஜயீந்திர தீர்த்தருக்குரியது. என்றாலும், இராகவேந்திர சுவாமிகளின் மகிமையால் அது இன்றளவும் ஶ்ரீ இராகவேந்திர சுவாமிகள் மடம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. இராகவேந்திர சுவாமிகளின் இயற்பெயர் வெங்கடநாதாச்சார்யார் என்பதாகும். இவருக்கு குரு ஶ்ரீஸுதீந்திரர் ஆவார். ஶ்ரீஸுதீந்திரருடைய குரு ஶ்ரீவிஜயீந்திரர் ஆவார். ஸுதீந்திரரும், விஜயீந்திரரும் குரு சிஷயர்களாக இருந்து பரிபாலணம் செய்து வரும் போதுதான் இராவேந்திரர் வருகிறார். அதற்குப் பிறகு பின்னாளில் ஶ்ரீஸுதீந்திரர், இராகவேந்திர சுவாமிகளுக்கு ஆச்ரமம் அளித்தார். இதில் இந்த அஜய்ய விஜயீந்திர சுவாமிகளின் மகிமை சொல்லில் அடங்காது. 1539 ல் இருந்து 1595 வரை அவர் அந்த மடத்தை பரிபாலணம் செய்து வந்திருக்கிறார். அப்போதிருந்த சைவ சமய பண்டிதர்கள் அனைவரையும் வாத்தில் வென்று சிவன் கோவில் நிர்வாகம் மற்றும் சைவ மடத்தின் நிரவாகம் அனைத்தையும் தன் மடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார். அவரின் கீர்த்தியினால் பொறாமை அடைந்தவர்களுடைய ஏவலினால் அவரைப் போட்டிக்கு அழைத்த அனைவரையும் பலவிதமான அற்புதங்களைச் செய்து தோற்று ஓடச் செய்திருக்கிறார்.

1 comment: