Wednesday, March 26, 2014

Photo: துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர். - குறள்.

மனிதன் தன் வாழ்வை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்த குடும்பத்தினர் தம் வாழ்வையும் கெடுக்கும் குடி. மது அறிவைக் கெடுக்கும். குடியைக் கெடுக்கும். விலங்கைவிடக் கேவலமாக நடக்க ஏதுவாகிவிடும். நல்லோர்களின் நட்பை இழக்கக் காரணமாகிடும். அது விஷம் குடிப்பதற்குச் சமம். குடிகாரனுக்கும் செத்தவனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சொன்னது. பஞ்சமகா பாவங்களான(கொலை, களவு, பொய், பிறன் மனை விரும்பல், கள்ளுண்ணுவது) ஐந்தில் ஒன்றான குடியைத் தவிர்ப்பது அவசியமானதல்லவா ? ஆனால் நிலை என்ன ? அரசாங்கமே அதற்கு வழிவகை செய்து கொடுக்கிறது. கேவலமாக இருக்கிறதல்லவா ? கேட்டால், அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு விடுமாம். இதைவிட மோசமான கேடு கெட்ட வசனம் என்னவாக இருக்க முடியும். மக்கள் குடியைக் கெடுத்து தான் அரசு நடக்கும் என்றால் அது அரசே அல்ல. அரசாள்பவர் எமனுக்குச் சமமானவர். இது நாடல்ல சுடுகாடு.

இத்தனை பாலியல் வன் கொடுமைகள் நடக்கின்றனவே, அதற்கெல்லாம் மூலக் காரணம் மதுவே அன்றி வேறில்லை. தீர விசாரித்துப் பாருங்கள், இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்பவர்கள் குடித்திப்பார்கள். போதையில் தாம் செய்கிற செயலின் விளறைவுகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் செய்துவிடுவார்கள்.
திருமந்திரமும் குடிப்பவர்களை கடுமையாகவே விமர்சிக்கிறது.
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்வர்
காமத்தோர் காமக் கள்ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக்குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 327.

கடவுள் வழிபாடு என்ற பெயரில் வாமாசாரிகள், காபாலிகர்கள் கள்ளுண்டு காமக் களியாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் திருமூலர் காலத்திலே. அதன் தீமையைச் சொல்லும் விதமாகவே இந்தத் திருமந்திரம் அமைந்துள்ளது. சக்தி வழிபாடு என்ற பெயரில் தேவியைத் திருப்தி செய்வதாகக்கூறி, தாம் மது அருந்தி அழிவர். காமத்தை அடக்க முடியாதவர்கள் காம்போதை ஏறி காமக் களியாட்டங்களில் திளைத்து சித்தம் கலங்கிக் கெடுவர்.ஓம் காரத்தை ஓதுபவர்கள் நாதசித்தி பெற்று சிரசின் மேல் வெளிப்படும் ஒளியில் தம் உணர்வை நிறுத்தி மகிழ்ந்திடுவர். சிவ நாமத்தை சிரத்தையுடன் ஓதுபவர்கள் அப்பொழுதே சிவனை வணங்கும் இன்பத்தை அடைவர் என்று சொல்கிறார். அதாவது மதுவும், காமமும் இறைநிலையை அடையப் பெருந்தடையாகும் என்பதே சூட்சுமக் கருத்தாகும்.

சக்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சக்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சக்தி சிவஞானத்து தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானானந்தத்தில் சேர்தலே. 332.
யோகிகள் கால்கட்டி ஓண் மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே. 335.
சிவ யோகிகள் காற்றை உள்ளடக்கி பிராணனை வசப்படுத்தி சந்திரமண்டலத்தில் சிவானந்தத்தை நல்கும் ஞானாமிர்தத்தை அருந்தி என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வார்கள். அட்டமகா சித்திகளும் கைவரப் பெறுவார்கள். ஆனால் மோகியர்களோ கள்ளினைக் குடித்து அறிவு கெட்டு மீண்டும் மீண்டும் பஞ்சமகா பாதகங்களைச் செய்து பாவத்தில் அமிழ்ந்து
பித்துப் பிடித்து அழிந்து போவார்கள். சக்தியை அடைய விரும்புவதற்காக குறிப்பிட்ட மதத்தினர் மதுவினை அருந்துவர். மதுவை அருந்தி தன்னை மறப்பதால் அவர்கள் ஜீவசக்தியாகிய அறிவு சக்தி அழிகிறதே அல்லாமல் வேறில்லை. உண்மையான சிவ ஞானத்தில் திளைத்து சக்தியை அடைய முடியுமே அன்றி, மது அருந்தி அடைய முடியாது. சமயத்தின் பெயரால் மயக்கம் தரும், அறிவைக் கெடுக்கும் மது அருந்துபவர்கள் அறிவிலிகள். அவர்கள் நஞ்சுக்குச் சமமான மதுவை அருந்துவார்கள். உண்டாரை மயங்கச் செய்கின்ற மதுவானது அவர்ளுக்கு எப்போதும் காம வேட்கையைத் தூண்டி விடுவதாகும். எனவே மது அருந்துபவர்கள் எப்போதும் சிற்றின்பத்தையே விரும்பிக் கிடப்பர். அவர்கள் பேரின்பத்தை அடைவது என்பது இயலாத காரியமே.
மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
மயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. 33.

முடிவாக ஒரு நல்ல அரசின் கடமை பூரண மதுவிலக்காகும் என்று திருமூல நாயனார் அறிவுறுத்துவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதாவது மூச்சுக் காற்றை உள்ளடக்கி, பிராணனை வசப்படுத்தி, மூலாதாரத்தில் உள்ள மூலக்கனலை சிரசின் மேல் ஏற்றி, அங்கு காணும் பால் போன்ற சந்திர மண்டல ஒளியைக் கொண்டு, மதி மண்டலம் அறிந்து, அங்கு பெருகும் அமிர்தத்தை பருகுபவர்கள் யோகியர் ஆவர். அதைவிடுத்து ஆனந்தம் தரும் என்று எண்ணி நஞ்சாகிய மதுவை உண்பவர்களை, மேலும் இப்பழக்கத்திற்கு ஆளாகாதபடித் திருத்துவது அரச தர்மமாகும். அதைவிடுத்து மதுவிலக்கை விலக்கி மதுக்கடைகளை அரசே நடத்தி குடி கெடுக்கும் குடியை ஆதரிப்பது அரச தர்மமாகாது.
கால்கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேலேற்றிப்
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய்வேந்தன் கடனே. 246.

மக்கள் நல்வாழ்விலும் மேன்மையிலும் கவனம் கொள்வதே சிறந்த அரசின் கடமையாகும்.துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

மக்கள் நல்வாழ்விலும் மேன்மையிலும் கவனம் கொள்வதே சிறந்த அரசின் கடமையாகும்.

No comments:

Post a Comment