Wednesday, March 26, 2014

Photo: மெழுகை உருக்கி பல பாத்திரங்களில் ஊற்றி வைத்தோமானால், அது கெட்டிப்படும் போது 
எந்த பாத்திரத்தில் ஊற்றப்பட்டதோ அந்தப் பாத்திரத்தின் வடிவத்தைப் பெற்றிருக்கும். அது போல, நம் மனமானது எந்தப் பொருளைப் பற்றி நிற்கிறதோ அதன் வடிவத்தைப் பெற்று விடும். நான் இதைச் சொல்லும் போது என் நண்பர் என் வாழ்வில் அதிக நேரம் நான் பணத்தைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன். ஆனால், இன்னும் நான் ஏழையாகவே இருக்கிறேனே என்று கேட்டார். நான் சொன்னேன் நீங்கள் பணத்தைப் பற்றி சிந்திப்பதை விடுத்து, அதை அடைந்தவர்கள் குறித்தும், அதை அவர்கள் அடைய மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் சிந்தித்திருந்தால் ஒரு நாளில்லை ஒரு நாள் பணக்காரராக ஆகியிருப்பீர்கள் என்று கூறினேன். ஆனால், இந்தக் கோட்பாடு ஜட வஸ்துகளான பருப் பொருள்களுக்கே பொருந்தும். பரம்பொருளுக்குப் பொருந்தாது. பரம்பொருளை நீங்கள் சித்தித்துக் கொண்டேயிருக்கிற பட்சத்தில் திடீரென்று ஒருநாள் நீங்கள் பரம்பொருளை அடைந்திடுவீர்கள் என்பது உறுதி. ஏனென்றால் பரம்பொருள் மனதை விட சூக்குமமானது, எனவே மனமானது அந்நிலையை அடைந்திடும். ஆனால் பருப் பொருளின் அனுபவங்கள் அடைய உடலாகிய ஜடப் பொருளின் உதவி மனதிற்குத் தேவை. எனவே அதற்கு புறவுலகின் முயற்சிகள் தேவைப்படுகின்றன. 

விஞ்ஞானத்தின் கண்களுக்கு ஸ்தூல உடலைத் தாண்டி எதுவும் தென்படுவதில்லை. தற்போது நுணுக்கமான சில விஷயங்களை அதிர்வலைகள் மற்றும் ஒளி அலைகள் மூலம் கண்டுபிடிக்க முற்படுகிறார்கள். மனம், மூளை குறித்து பலவிதமாக ஆராய்ந்து பார்க்கிறார்கள். கண்டுபிடிப்புகளுக்குத் தக்கவாறு தங்கள் யுக்திகளை மாற்றிக் கொள்கிறார்கள். மேலும் மேலும் நுட்பமாக, நுணுக்கமாக ஆராய முற்படுகிறார்கள். பல்வேறு நாடுகளும் பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்து முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் நம் முன்னோர்கள் கூறியுள்ள சூக்கும சரீரங்களை அவர்களால் கண்டு பிடிக்க முடிவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, மையமாக உயிர் இருக்கிறது. உயிர் இல்லை என்றால் எதுவும் நடைபெறாது. அந்த உயிரைச் சுற்றி நுட்பமான பல்வேறு அடுக்குகள் காணப்படுகின்றன. அவை எல்லாவற்றிற்கும் மேலே, வெளிப்புறமாக அமைந்திருக்கும் ஓடுதான் நம் உடல். ஆனாலும், நம் வாழ்நாள் முழுவதும் இந்த உடலே நாம் என்று எண்ணியே வாழ்ந்து முடிந்து போகிறோம். மனதையும், புத்தியையும் முழுமையாக உணர்ந்தவர்கள் வெகு சிலரே. அப்படியானால் ஆன்மாவை உணர்ந்தவர்கள் ? 

ஆன்மா என்று குறிப்பிடுகிற அந்தப் புனிதமான வஸ்துவே நம் மூலம். அதுவே நம் இயல்பு. அது எல்லாம் உணர்ந்தது. எல்லாம் அறிந்தது. அப்படிப்பட்ட ஆன்மாவையே பல்வேறு நுட்பமான உறைகள் சூழ்ந்துள்ளன. இந்த உறைகளுக்கும் நம் ஆன்மாவுக்கும் சம்மந்தமேயில்லை. எனினும் இந்த ஆன்மாவின் ஒளி அறிவில் பிரகாசிப்பதனால்தான் மற்ற உறைகள் அனைத்தும் செயலுக்கு வருகின்றன. இப்படி வெளியில் இருக்கும் உறையாகிய சரீரத்தை விட மற்ற உறைகள் நுட்பமானவை. எனவே அவை காட்சிக்கு வருவதில்லை. அப்படிப்பட்ட உறைகளை நம் முன்னோர்கள் உடல் நீங்களாக நான்காக குறிப்பிடுவார்கள். வேறு பல தேசங்களில் இன்னும் அதிக எண்ணிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. உடலை விட பிராண உறை நுட்பமானது. பிராண உறையைக் காட்டிலும் மன உறை நுட்பமானது. மன உறையக் காட்டிலும் புத்தி உறை நுட்பமதானது. புத்தி உறையக் காட்டிலும் ஆனந்த உறை அல்லது பேரின்ப உறை நுட்பமானது. இத்தனை நுட்பங்களையும் கடந்து எல்லாவற்றையும் விட நுட்பமான, எல்லாவற்றிற்கும் ஆதாரமான ஆன்மா விளங்குகின்றது. அதுவே நம் உயிர் மையம். அதுவே நம் ஆன்மிக இதயம். இந்த ஐந்து உறைகளுக்கும் நடுவே ஆறாவதாக அது திகழ்கிறது. இப்பொழுது கவனியுங்கள் ஆறு உறைகள், ஆறு சக்கரங்கள் இவையாவும் ஒன்றுக் கொன்று தொடர்புடைய தத்துவங்களாகும். மேலோட்டமாக பார்த்தால் புரிவதை விட நுட்பமாக அறிந்துணர முற்படும் போது ஒவ்வொரு சூக்குமங்களாக விரியும். அப்பொழுது எல்லாம் வெட்ட வெளிச்சமாகப் புலப்படும். அப்படி வெட்ட வெளிச்சமாக எல்லாவற்றையும் உணர்ந்தவர்கள் வெட்ட வெளியை உணர்ந்தவர்களாவார்கள். 

இப்படி, உடலும், மற்ற உறைகளும், ஆன்மாவும் இணைந்த ஒரு தத்துவமாகவே மனிதன் தத்துவமயமாகத் திகழ்கிறான். இந்தத் தத்துவங்களைக் கடந்தவன் மட்டுமே ஆன்மாவை உணர முடியும். ஒவ்வொரு தத்துவமாக விரிந்து உடலைப் பற்றி நிற்கும் மனம் உள்முகமாகத் திருப்பி ஒவ்வொரு தத்துவமாக உள்முகமாக வந்த வழியே ஒடுங்கிச் செல்லும் போது இறுதில் தன்னையே இழந்து நான் என்ற உணர்வில் போய் கரைந்து விடுகிறது. அப்பொழுது ஆன்மாவின் ஒளி அதில் பிரகாசிக்கும் பொழுது மாயாமலங்கள் நீங்கி பரிசுத்தமான மனம் அறிவொளி ஓங்கித் திகழ்கிறது. இதுவே ஞானம். இதுவே தன்னை அறிதல். இப்பொழுது இன்னும் சற்று நுட்பமாக நோக்கும் போது உணவு உறையை வலுப்படுத்துவதற்கு ஆசனம் தரப்படுகிறது. பிராண உறையை வலுப்படுத்தி உணர்ந்து அதைக் கடப்பதற்கு பிராணாயாமம் உதவுகிறது. மனதை புலன்களின் பற்றிலிருந்து பிரித்து உள்முகமாகச் செலுத்துவதற்கு பிரத்தியாகாரம் உதவுகிறது. புத்தியை ஒரு விஷயத்தில் நிலைத்திருக்கச் செய்வதற்கு தாரணையும், தியானமும் உதவுகிறது. இந்த ஐந்து உறைகளையும் ஐந்து விதப் பயிற்சிகள் மூலம் கடந்தவர்கள் ஆறாவது நிலையாகிய ஆன்மாவை உணர்வதே ஸமாதி எனப்படுகிறது. இயம, நிமங்கள் எதற்காகவென்றால், புறவுலக வாழ்வில் மனதின் சீர்கேடுகளைக் களைவதற்காகவே. அது உள்முகமான பயணத்தின் முன்னேற்பாடு அவ்வளவுதான். 

இதையே இயம, நியமங்களைச் சரியை என்றும், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் கிரியை என்றும், தாரணை, தியானம் யோகம் என்றும், ஸமாதியை ஞானம் என்றும் சொல்வார்கள். இயமம் பக்தி யோகம், நியமம் கர்ம யோகம், ஆசனம், பிராணாயாமம் ஹட யோகம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இராஜயோகம், ஸமாதியில் ஞான யோகம். இப்படி நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் நம் முன்னோர்கள் எவ்வளவு நேர்த்தியாக தெய்வீக வாழக்க்கையின் பயணத்தை வடிவமைத்திருப்பார்கள் என்பது புரிய வரும். நம் ரிஷகள் இந்த ஐந்து உறைகளை ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம், காரண சரீரம் என்று மூன்றாகச் சுருக்கி உரைத்தார்கள். அதிலே இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கவும், அதிலுள்ள பொருள்களைப் புலன்கள் மூலம் நுகரவும் இந்த ஸ்தூல சரீரம் உதவுகிறது. அந்த நிலையையே ஜாக்கிரதம் என்கிற விழிப்பு நிலை என்று உரைத்தார்கள். மனமும், புத்தியும் ஒன்று சேர்ந்து சூக்கும சரீரம் ஆகின்றன. அவைகளைக் கொண்டு உள்முகமாக நோக்கும் நிலையினை சொப்பனம் என்கிற கனவு நிலையாக விளக்குகிறார்கள். விழிப்பு நிலையைக் கடந்து, கனவுலைகையும் சுருட்டி வைத்து விட்டால் நம் நிலை என்ன ? அதுதான் கனவற்ற உறக்கமாகிய சுழுப்தி. இதுவே காரண சரீரம். இந்த கனவற்ற உறக்கத்திலிருந்து ஏற்படும் உள்முகமான விழிப்பு நிலையே பூரண விழிப்பு நிலையாகும். இதுதான் தூங்காமல் தூங்குவது. இந்த மூன்று உடல்களையும் கடந்து பூரண விழிப்பு நிலையை அடைந்த ஒருவன் ஆன்மாவின் அன்பு உலகை அடைகிறான். நமது முயற்சி என்னவென்றால் எல்லா உறைகளுக்கும், சரீரங்களுக்கும், ஆன்மாவோடு உள்ள போலி ஒற்றுமையை திட்டமிட்டு அழிப்பதுதான். அப்போதுதான் நாமே ஒளி, நாமே ஆன்மா, நமக்குள் இருக்கும் நாமே உயிர்மையம் என்பதை கண்டு கொள்வோம்.
மெழுகை உருக்கி பல பாத்திரங்களில் ஊற்றி வைத்தோமானால், அது கெட்டிப்படும் போது

No comments:

Post a Comment