Friday, March 28, 2014

உங்கள் பயணம் இனிதே நிறைவு பெற என் வாழ்த்துக்கள்.

Photo: தவம், தியானம் என்று எடுத்துக் கொண்டால்  பலவகைகளும், அவற்றைக் குறித்துப் பல கருதுக்களும் நிலவுகின்றன. எனினும் எல்லா தவ முறைகளும் நம் சிந்தையை தெளிவிக்கும் விதமாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அவரவர் இடம், காலம், அனுபவங்களுக்குத் தக்கவாறு சொல்லி வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான். நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாத ஒரே விதமான சத்துவகுணமுள்ள, நிறைவான, ஆனந்தமான சிந்தனையை அடைவதே நோக்கமாக இருக்கிறது. தவம் என்றாலே நம் மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த அண்டசராசங்களின் பிறப்பிடமாகவும், அவற்றை இயக்கிக் காக்கும் வல்லமையான சக்தியாகவும் விளங்கும் இறையாற்றலோடு நமது ஆன்ம சக்தியை இணைப்பதற்கு செய்யப்படும் முயற்சியே ஆகும். சத்துவகுணம் மேலோங்கி நிற்கும் போது சிந்தனைகளற்ற ஒருமையான வெறுமையான ஒரு நிலை வாய்க்கிறது. நம் இதயத்தில் ஏற்பட்டுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பரம்பொருளின் தெய்வீக ஆற்றல் நம்முள் பாய்கிறது. அப்படிப் பாய்கின்ற தெய்வீக ஆற்றல் நம் உடலிலும் பரவுகிறது. அந்த ஆற்றல் திணிவு பெறும்போது ஏற்படும் அழுத்தம் நம் உயிர்சக்தியை பரம்பொருளை நோக்கி உந்தித் தள்ளுகிறது. இதற்கான கடுமையான முயற்சியே சாதனை எனப்படுகிறது. தவசித்தியின் மறுபெயரே சாதனை. 

இதற்கு நம் உடற்கூற்றின் தத்துவங்களை அறிந்திருப்பது அவசியமாகும். ஏனென்றால் அவற்றின் மூலமாகவே முயற்சி செய்து நம் மனப்பாங்கில் சிறுகச் சிறுக மாற்றங்களை ஏற்படுத்தி மேன்மையடைய முடியும். தவத்தில் சித்தி அடைகின்ற வரை சில,பல தடைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியதிருக்கிறது. அவற்றை நாம் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறத் தேவையான மனோபலத்தை தவத்தின் மூலமாகவே தான் பெற வேண்டும். அதாவது தடைகளை அலட்சியப்படுத்தி விட்டு இலக்கு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு தீவிரத்தைக் கூட்ட வேண்டும். உடல் சம்மந்தமான சில இடையூறுகளை அனுபவம் மிக்கவர்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். சிலருக்கு இயல்பாகவே பிறவியிலேயே மனம் அந்த மேன்மையான நிலையை பெற்றிருப்பதுண்டு. அது முற்பிறவியின் தொடர்ச்சி என்றும் மரபு வழி வினைப் பதிவுகளின் விளைவு என்றும் இரு விதமாகக் கூறப்படுகிறது. 

முன்பெல்லாம் என்னிடம் யாராவது நீங்கள் தியானம் செய்வதில்லையா என்று கேட்டால் நான் மனநிறைவாக இருக்கிறேன், எதைப் பற்றியும் கவலையில்லை, மனதை ஒரே நிலையில் வைத்திருக்கிறேன், எந்த சலனமும் இல்லாமல் மன அமைதியோடு இருக்கிறேன் பிறகு எதற்கு தவம் செய்ய வேண்டும் என்று கூறுவேன். ஆனால் அது உண்மையான மன அமைதி அல்ல. அது நிஜமான தன்னிறைவு அல்ல. ஆழ்மனதில் எல்லாவற்றையும் போட்டு அமுக்கி வைக்கிற ஒரு மனப்பாங்கு. அதன் விளைவாக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள் உருவாகி விடும். எதிர்பார்பும், நமக்கு இதை விட ஆனந்தம் கிடைக்காதா என்ற ஏக்கம் இல்லாத மனிதரே கிடையாது. அப்படி இருப்பதாகச் சொன்னால் அது பொய். ஞானிகள் இருப்பார்கள் ஆனால் உலகாய வாழ்வில் உழன்று கொண்டிருப்பவனால் அது இயலாத காரியம். 

எந்த வித சிந்தனையுமில்லாமல் ஏற்படுத்தும் வெற்றிடத்திற்கும், இப்படி எல்லாவற்றையும் வலுக்கட்டாயமாக அமுக்கி வைப்பதால் ஏற்படுத்தும் வெற்றிடத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இயல்பாக மனதை ஆன்ம விசாரத்தால் வெற்றிடமாக்கும் போது அதில் ஒரு தன்னிறைவும், ஆனந்தமும் நிலவுகிறது. ஆனால், உணர்வுகளை வலுக்கட்டாயமாக  அமுக்கி வெற்றிடத்தை உருவாக்க முயலும் போது அந்த உணர்வுகள் அல்லது எண்ணங்கள் வேறு வழியாக கிளம்பி முரண்பட்ட பல்வேறு உணர்வுகளுக்குக் காரணமாகி விடுகின்றன. அதனால்தான் காமிய தவம் இயற்றுபவர்கள் தங்கள் தவசித்தியை இழந்து விடுகின்றார்கள். கடும் தவமியற்றி அற்புத சித்திகளைப் பெற்றாலும், அமுக்கி, அடக்கி வைத்த உணர்வுகள் மீண்டும் கிளம்பி கோபம், காமம், அகந்தை, சாபமிடுதல் போன்ற தவ வாழ்வுக்கு முரண்பட்ட உணர்வுகளைத் தூண்டி விடுவதால் தவசித்தியை இழப்பதோடு அகலபாதாளத்திற்குப் போய் வீழ்கிறார்கள். இந்த நிலை புராணங்கள், இதிகாசங்கள் வாயிலாக நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

எனவே தவமியற்றி அதன் மூலம் எண்ணங்களைக் குறைத்து, மிருகத்தனமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய எண்ணங்களை அழித்து அமைதியான மனநிலையை உருவாக்க வேண்டும். அந்த வேளையில் சத்துவகுணமுடையவர்களோடு கொள்ளும் இணக்கமும், அவர்கள் கூறும் சத்துவ குணத்தை மேலோங்கச் செய்யும் உபதேஷங்களைக் கேட்பதும், சத்துவகுணத்தை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்வதும் நம்மை மேலும் மன அமைதி உடையவர்களாகத் திகழச் செய்யும். இப்படிப்பட்ட சூழலில் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் சத்துவகுணமே மேலோங்கி நிற்பதால் நிலவும் மனஅமைதியால் நம் ஆனாமாவானது அறிவொளியாகப் பிரகாசிக்கும். இதையே ஞானம் என்கிறார்கள். அந்தப் பிரகாசத்தால் சூரியனைக் கண்டு மலரும் தாமரை போல நம் இதயத் தாமரை மலரும். அந்த இதயத் தாமரையே நம் மனதை ஒருமைப்படுத்தி குவிக்கவேண்டிய மையமாகும். இது லப்டப் எனத் துடிக்கும் தூல இதயமல்ல. இது ஆன்மீக இதயம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆன்மிக இதயத்திலேயே இறைவன் உறைவதாகச் சொல்வார்கள். எனவே, அது மலர்ந்தவுடன் நம் மனமானது அந்தப் பரம்பொருளால் ஈர்க்கப்படும். இப்போது ஏற்கனவே நம்முள் ஏற்பட்டுள்ள பரம்பொருள் சக்தியின் திணிவு நம் உயிர் சக்தியை உந்தித் தள்ள, இதயத் தாமரை மலர்ந்தவுடன் மனமானது பரம்பொருளால் ஈர்க்கப்பட என இந்த இரண்டும் ஒரு சேர நடக்கும் போது பரவெளி தரிசனம் கிட்டும். கோடிக் கணக்கான சம்ஸ்காரங்களை அழித்து, முரண்பட்ட உணர்வுகளை அழித்து, எல்லா தத்துவங்களையும் கடந்து, முக்குணங்களையும் கடந்து இப்படி பல படித்தங்களைக் கடந்து நிற்கிறது நம் இலக்கு. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பார்களல்லவா அந்த அண்ட மகாசகதியையும், பிண்டத்திலுள்ள அதே மகாசக்தியையும் இணைப்பதற்கு நாம் மேற் கொள்ளும் ஆன்மிகப் பயணம் பல்வேறு நிலைகளையும், படித்தரங்களையும், சூக்கும, அமானுஷ்ய அனுபவங்களையும் கொண்டது. உங்கள் பயணம் இனிதே நிறைவு பெற என் வாழ்த்துக்கள்.
தவம், தியானம் என்று எடுத்துக் கொண்டால் பலவகைகளும், அவற்றைக் குறித்துப் பல கருதுக்களும் நிலவுகின்றன. எனினும் எல்லா தவ முறைகளும் நம் சிந்தையை தெளிவிக்கும் விதமாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அவரவர் இடம், காலம், அனுபவங்களுக்குத் தக்கவாறு சொல்லி வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான். நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாத ஒரே விதமான சத்துவகுணமுள்ள, நிறைவான, ஆனந்தமான சிந்தனையை அடைவதே நோக்கமாக இருக்கிறது. தவம் என்றாலே நம் மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த அண்டசராசங்களின் பிறப்பிடமாகவும், அவற்றை இயக்கிக் காக்கும் வல்லமையான சக்தியாகவும் விளங்கும் இறையாற்றலோடு நமது ஆன்ம சக்தியை இணைப்பதற்கு செய்யப்படும் முயற்சியே ஆகும். சத்துவகுணம் மேலோங்கி நிற்கும் போது சிந்தனைகளற்ற ஒருமையான வெறுமையான ஒரு நிலை வாய்க்கிறது. நம் இதயத்தில் ஏற்பட்டுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பரம்பொருளின் தெய்வீக ஆற்றல் நம்முள் பாய்கிறது. அப்படிப் பாய்கின்ற தெய்வீக ஆற்றல் நம் உடலிலும் பரவுகிறது. அந்த ஆற்றல் திணிவு பெறும்போது ஏற்படும் அழுத்தம் நம் உயிர்சக்தியை பரம்பொருளை நோக்கி உந்தித் தள்ளுகிறது. இதற்கான கடுமையான முயற்சியே சாதனை எனப்படுகிறது. தவசித்தியின் மறுபெயரே சாதனை.

இதற்கு நம் உடற்கூற்றின் தத்துவங்களை அறிந்திருப்பது அவசியமாகும். ஏனென்றால் அவற்றின் மூலமாகவே முயற்சி செய்து நம் மனப்பாங்கில் சிறுகச் சிறுக மாற்றங்களை ஏற்படுத்தி மேன்மையடைய முடியும். தவத்தில் சித்தி அடைகின்ற வரை சில,பல தடைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியதிருக்கிறது. அவற்றை நாம் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறத் தேவையான மனோபலத்தை தவத்தின் மூலமாகவே தான் பெற வேண்டும். அதாவது தடைகளை அலட்சியப்படுத்தி விட்டு இலக்கு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு தீவிரத்தைக் கூட்ட வேண்டும். உடல் சம்மந்தமான சில இடையூறுகளை அனுபவம் மிக்கவர்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். சிலருக்கு இயல்பாகவே பிறவியிலேயே மனம் அந்த மேன்மையான நிலையை பெற்றிருப்பதுண்டு. அது முற்பிறவியின் தொடர்ச்சி என்றும் மரபு வழி வினைப் பதிவுகளின் விளைவு என்றும் இரு விதமாகக் கூறப்படுகிறது.

முன்பெல்லாம் என்னிடம் யாராவது நீங்கள் தியானம் செய்வதில்லையா என்று கேட்டால் நான் மனநிறைவாக இருக்கிறேன், எதைப் பற்றியும் கவலையில்லை, மனதை ஒரே நிலையில் வைத்திருக்கிறேன், எந்த சலனமும் இல்லாமல் மன அமைதியோடு இருக்கிறேன் பிறகு எதற்கு தவம் செய்ய வேண்டும் என்று கூறுவேன். ஆனால் அது உண்மையான மன அமைதி அல்ல. அது நிஜமான தன்னிறைவு அல்ல. ஆழ்மனதில் எல்லாவற்றையும் போட்டு அமுக்கி வைக்கிற ஒரு மனப்பாங்கு. அதன் விளைவாக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள் உருவாகி விடும். எதிர்பார்பும், நமக்கு இதை விட ஆனந்தம் கிடைக்காதா என்ற ஏக்கம் இல்லாத மனிதரே கிடையாது. அப்படி இருப்பதாகச் சொன்னால் அது பொய். ஞானிகள் இருப்பார்கள் ஆனால் உலகாய வாழ்வில் உழன்று கொண்டிருப்பவனால் அது இயலாத காரியம்.

எந்த வித சிந்தனையுமில்லாமல் ஏற்படுத்தும் வெற்றிடத்திற்கும், இப்படி எல்லாவற்றையும் வலுக்கட்டாயமாக அமுக்கி வைப்பதால் ஏற்படுத்தும் வெற்றிடத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இயல்பாக மனதை ஆன்ம விசாரத்தால் வெற்றிடமாக்கும் போது அதில் ஒரு தன்னிறைவும், ஆனந்தமும் நிலவுகிறது. ஆனால், உணர்வுகளை வலுக்கட்டாயமாக அமுக்கி வெற்றிடத்தை உருவாக்க முயலும் போது அந்த உணர்வுகள் அல்லது எண்ணங்கள் வேறு வழியாக கிளம்பி முரண்பட்ட பல்வேறு உணர்வுகளுக்குக் காரணமாகி விடுகின்றன. அதனால்தான் காமிய தவம் இயற்றுபவர்கள் தங்கள் தவசித்தியை இழந்து விடுகின்றார்கள். கடும் தவமியற்றி அற்புத சித்திகளைப் பெற்றாலும், அமுக்கி, அடக்கி வைத்த உணர்வுகள் மீண்டும் கிளம்பி கோபம், காமம், அகந்தை, சாபமிடுதல் போன்ற தவ வாழ்வுக்கு முரண்பட்ட உணர்வுகளைத் தூண்டி விடுவதால் தவசித்தியை இழப்பதோடு அகலபாதாளத்திற்குப் போய் வீழ்கிறார்கள். இந்த நிலை புராணங்கள், இதிகாசங்கள் வாயிலாக நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

எனவே தவமியற்றி அதன் மூலம் எண்ணங்களைக் குறைத்து, மிருகத்தனமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய எண்ணங்களை அழித்து அமைதியான மனநிலையை உருவாக்க வேண்டும். அந்த வேளையில் சத்துவகுணமுடையவர்களோடு கொள்ளும் இணக்கமும், அவர்கள் கூறும் சத்துவ குணத்தை மேலோங்கச் செய்யும் உபதேஷங்களைக் கேட்பதும், சத்துவகுணத்தை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்வதும் நம்மை மேலும் மன அமைதி உடையவர்களாகத் திகழச் செய்யும். இப்படிப்பட்ட சூழலில் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் சத்துவகுணமே மேலோங்கி நிற்பதால் நிலவும் மனஅமைதியால் நம் ஆனாமாவானது அறிவொளியாகப் பிரகாசிக்கும். இதையே ஞானம் என்கிறார்கள். அந்தப் பிரகாசத்தால் சூரியனைக் கண்டு மலரும் தாமரை போல நம் இதயத் தாமரை மலரும். அந்த இதயத் தாமரையே நம் மனதை ஒருமைப்படுத்தி குவிக்கவேண்டிய மையமாகும். இது லப்டப் எனத் துடிக்கும் தூல இதயமல்ல. இது ஆன்மீக இதயம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆன்மிக இதயத்திலேயே இறைவன் உறைவதாகச் சொல்வார்கள். எனவே, அது மலர்ந்தவுடன் நம் மனமானது அந்தப் பரம்பொருளால் ஈர்க்கப்படும். இப்போது ஏற்கனவே நம்முள் ஏற்பட்டுள்ள பரம்பொருள் சக்தியின் திணிவு நம் உயிர் சக்தியை உந்தித் தள்ள, இதயத் தாமரை மலர்ந்தவுடன் மனமானது பரம்பொருளால் ஈர்க்கப்பட என இந்த இரண்டும் ஒரு சேர நடக்கும் போது பரவெளி தரிசனம் கிட்டும். கோடிக் கணக்கான சம்ஸ்காரங்களை அழித்து, முரண்பட்ட உணர்வுகளை அழித்து, எல்லா தத்துவங்களையும் கடந்து, முக்குணங்களையும் கடந்து இப்படி பல படித்தங்களைக் கடந்து நிற்கிறது நம் இலக்கு. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பார்களல்லவா அந்த அண்ட மகாசகதியையும், பிண்டத்திலுள்ள அதே மகாசக்தியையும் இணைப்பதற்கு நாம் மேற் கொள்ளும் ஆன்மிகப் பயணம் பல்வேறு நிலைகளையும், படித்தரங்களையும், சூக்கும, அமானுஷ்ய அனுபவங்களையும் கொண்டது. உங்கள் பயணம் இனிதே நிறைவு பெற என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment