Wednesday, April 9, 2014

அன்போடு செய்யப்படும் காரியம் சிறியதாக இருப்பினும், அதன் விளைவு பேரானந்தம்..

Photo: அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே! 

அன்பு பெருகியதால் என்னைக் காக்க வந்த இறைவனே, பரம்பொருளே என்று விளக்கம் சொல்வார்கள். ஆனால், இறைவனோ அன்பே வடிவமானவன். அவனுடய அன்பு பெருகுவதும் இல்லை, குறைவதும் இல்லை. அது அண்டசராசரமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே உன்னுடைய அன்பெனும் சுவாபத்தை என் உள்ளத்தில் பெருகச் செய்து என் பவ வினைகளை அழித்து என்னைக் காக்க வந்து என் துன்பங்களையெல்லாம் நீக்கியருளிய இறைவனே, பரம்பொருளே என்பதுதான் சரியான பொருளாகும். பரம்பொருள் மேல் கொள்ளும் அன்பானது நம்மை வினைகளில் இருந்து காத்து முக்தி நிலையாகிய பேரானந்தத்தைத் தந்தருளும். வினைத் தூய்மை பெருகும் அளவு துன்பங்கள் நீங்கி விடும். அதுவே இன்பப் பெருக்கு. 
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே! 
ஆக அன்பு வேறு இறைவன் வேறு அல்ல. உள்ளத்தில் அன்பு பெருகுமளவுக்குப் பரம்பொருளின் சாந்நித்தியம் அங்குப் பொங்கி வழிகிறது. உலகிலேயே சிறந்த அன்பு இரண்டுதான். ஒன்று காணக்கிடைக்காதக் கடவுளின் அன்பு, மற்றொன்று காணக் கூடிய கடவுளாகியத் தாயின் அன்பு. தன்னைக் காட்சிப்படுத்த முடியாத காரணத்தால்தான் கடவுள் தாயைப் படைத்ததாகச் சொல்வார்கள். 

ஆன்மிகம் என்றால் ஆலயங்களுக்குப் போவதுதான் என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள். ஆன்மிகம் என்றாலே அது அன்புதான். அன்பு இல்லாத உள்ளத்தில் பக்தி வளராது. எனவே அன்பு இல்லாதவன் கடவுளை உணர முடியாது. ஏனெனில் அன்புதான் கடவுள். அன்பு என்பது ஒரு உணர்வுதானே என்று கேட்கக் கூடும். அன்பு என்பது உணர்வல்ல, அதுதான் நம் இயல்பு. அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம். அதுவாக நாம் மாறாத வரை அதுவாகிய இறைவனை அடையவே முடியாது. எனவேதான் பாட்டுச் சித்தர் பாரதியார் ''உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்'' என்று நினைவூட்டுகிறார். அன்பில் எல்லாம் அழியும், துன்பமழியும், சோர்வு அழியும், பயம் அழியும், கோபம் அழியும் இப்படித் தீயவைகளெல்லாம் அழியும். ஆனால் அன்பு என்றுமே அழியவே அழியாது. வறண்ட பாலைவனத்தில் கூட எங்கோ ஓரிடத்தில் ஈரம் இருக்கிறது. ஆனால் மனிதனின் உள்ளத்தில் ????????? அன்பு சுரந்தால்தான் மனம் விசாலமாகும். அது அகண்டாகாரத்தில் கலக்கும். அந்நிலையில் மனிதனும் தெய்வமாகிறான். 

ஒரு பிடி அன்பான கண்ணீரில் நனைந்த அவலுக்குக் கண்ணன் அடிமையாகி விடுகின்றான். ஒரு அன்பான துளசி இலைக்கு பரந்தாமன் அடிமையாகிறான். ஒரு வில்வ தளத்திற்குப் பரமன் அடிமை. அன்பான சொல்லைக் கேட்டால் சக்தி மயங்கி விடுகிறாள். ஒரே ஒரு அருகம் புல்லை அன்போடு சமர்ப்பித்தால் கணபதி கட்டுப்படுகிறார். அன்போடு கண்ணீர் சொறியும் அன்பருக்கு முன் முருகன் ஓடி வருகிறான். அன்போடு மண் விளக்கை ஏற்றினால் போதும் மகாலட்சுமி வந்து அமர்ந்து கொள்கிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்திக்கு எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. அன்பனின் எச்சில் மாமிசத்தையும், எச்சில் தீர்த்தத்தையும், தலையில் சூடிய மலர்களையும் இறைவன் ஏற்றுக் கொள்கிறான். அன்பான ஆண்டாளின் சூடிக் கொடுத்த மாலையையே நாறாயணன் விரும்புகிறான். எனவே அன்புதான் பக்தி. அன்புதான் ஆன்மிகம். இவைகளில் எதையும் கூடச் செய்ய முடியவில்லையா ? பரவாயில்லை, போகட்டும். அடுத்தவரோடு பேசும் பொழுது அன்போடு இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொல்வதானாலும் கூட அதை இனிமையாகச் சொல். அன்புதான் பக்தி. அதைத்தான் இறைவன் விரும்புகிறார். பக்தன் என்ன கொண்டு வருகிறான் என்று இறைவன் பார்ப்பதில்லை. சில பச்சிலைகளை உள்ளன்போடு போட்டால் போதும் பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசு கூத் தன் எஜமானர் அன்பாகத் தரும் ஒரு பிடி புல்லுக்கு நெகிழ்ந்து போகிறது. தான் உண்ணும் பொழுது அதிலிருந்து ஒரு பிடி அன்னத்தை பசித்தவனுக்கு அன்போடு தந்தால் போதும் அவன் மனம் குளிர்ந்து விடுகிறது. 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை 
யாவர்க்குமாம் பாசுவுக்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. - திருமூலர். 

எனவே அன்போடு செய்யப்படும் காரியம் சிறியதாக இருப்பினும், அதன் விளைவு பேரானந்தம் தரக் கூடியதாக இருக்கும். அன்பினால் அடைய முடியாதது எதுவுமில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது. அன்பினால்தான் வேற்றுமை மறைந்து எல்லாம் இறை சொரூபமே என்ற ஞானம் பிறக்கிறது.
அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்கவந்த

1 comment:

  1. Casino Nights : The Home of the Video Poker World - KT Hub
    Visit 울산광역 출장샵 Casino Nights Casino Nights 광주광역 출장안마 for the perfect Poker tour! 김포 출장마사지 Located at the top of Las Vegas' famous 세종특별자치 출장안마 landmarks: Casino Night, Skyline 이천 출장샵 Hotel & Casino

    ReplyDelete