Thursday, April 10, 2014

பரம்பொருள்...

Photo: மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர்.

ஒன்றில் இருந்து மற்றொன்றில் இல்லாமல் போனால் அதை எப்படி பூரணம் என்று சொல்ல முடியும் ? பரம் பொருள் எல்லாவற்றிலும் நீக்கமற நிரம்பியிருக்கிறார் என்பது உண்மையானால், அவர் கல்லிலும் இருப்பார், புல்லிலுமிருப்பார். பிறகு ஏன் அவர் நட்ட கல்லில் இல்லை என்று சொல்கிறார்கள் ? கறியைத் தன்னகத்து கொண்டிருக்கின்ற சட்டிக்கு அதன் சுவை தெரியுமா ? அது போல கல்லுக்கு தனக்குள் இருக்கும் பரமனைத் தெரியாது. அப்படியானால், அதைத் தெரிந்து கொள்வது எது ? என்றால், அது மனிதனின் அறிவு மட்டுமே. உலகில் வேறு எதுவும் தான் பரமனின் அம்சம் என்பதை உணராது. எனவே இத்தகைய மகத்துவம் பொருந்திய மனத்தை உடைய மனிதன் தன்னுள்ளும் பரமன் இருக்கிறான் என்று உணராமல் வீணே புற விஷயங்களில் தன் மனதை உழலச் செய்து தனது சக்திகள் அனைத்தையும் விரையம் செய்கிறானே, என்ற ஆதங்கத்தில் அப்படிச் சொன்னார்களே தவிர அவர்களுக்கும் தெரியும் கல்லுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று. நெறியைப் பற்றிக் கொண்டே இருக்காதே, குறியை நோக்கி முன்னேறு என்பது கோட்பாடு. ஏறிய பின் ஏணியை அங்கேயே விட்டு விட வேண்டும். பின்னால் வருபவர்கள் ஏறுவார்கள். அதைத் தூக்கி நம் தலையில் வைத்துக் கொண்டு அலையக் கூடாது என்பதே சொல்ல வரும் கருத்து.

மனதின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சில பாடல்கள் அப்படித் தெறித்து விழுகின்றன. நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. மூக்கு முகர்கின்றது. நாக்கு சுவையை உணர்த்துகிறது. தோலில் தொடு உணர்வு உள்ளது. ஆனால், இவை அனைத்தும் இயங்கினாலும் மனம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த உணர்வுகள் நம் அறிவுக்குப் புலப்படுமா ? புலப்படாது. இவ்வாறு இவை அனைத்தின் மூலமாகவும் உலகை அறிவது மனமே ஆகும். மனம் புலன்கள் மீது தன் கவனத்தை செலுத்தா விட்டால் காதில் ஒலி கேட்டாலும் கேட்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. கண் பார்த்தாலும் பார்க்காதது போன்ற நிலை ஏற்படுகிறது. எனவே எல்லா இயக்கங்களுக்கும், அவற்றை உணர்வதற்கும் காரணமாக இருப்பது மனமேயாகும். அப்படி நமக்குள் மனமாகவும், பிரபஞ்ச வெளியில் பிரபஞ்ச மனமாகவும் விளங்குவது பரம்பொருளே. தத்துவங்களாக விரிந்த நிலையில் பல்வேறு ஆற்றல்களாகச், சக்திகளாகப் பிரிந்து நின்று இயங்கும், பரம்பொருள் ஒடுக்க நிலையில் அனைத்தையும் தன்னகத்தே ஒடுக்கிய பேராற்றல் களமாகத் திகழ்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மனம் இயங்குவது விரிவுபட்ட நிலை. மனம் இயங்கவில்லை என்றால் அதுவே ஒடுக்க நிலை. எனவேதான் மனதற்ற நிலையை வேண்டித் தவமியற்றுகிறார்கள். மனதை புற விசயங்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தால் அது எண்ணங்களாக விருத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதை உள்முகமாகச் செலுத்தி, அதன் பிறப்பிடத்தை நோக்கி கொண்டு செல்லும் பொழுது, அதன் விருத்திகள் அனைத்தும் ஒடுங்கி, ஒடுக்க நிலையான பரம்பொருள் நிலையை அடைகின்றது.

எனவே வார்த்தைகளில் தேங்கி நிற்காமல், அதன் உட்பொருளைத் தேடும் பொழுது, ஒருநாளில்லை ஒரு நாள் உண்மைப் பொருள் அறிவில் விளங்க வரும். சிவசக்தி தத்துவ உணர்வே ஞானம். அதைப் பழமாக உருவகப்படுத்தினார்கள். முருகன் தன் ஆற்றலின் மூலம் அடைய நினைக்கிறார். வினாயகர் தன் அறிவின் மூலம் அடைகிறார். இதன் உட்கருத்து வெற்றி, தோல்வியைக் குறிப்பதல்ல. எவர் எவ்வழி சென்றாலும் ஞானத்தின் மூலமாகவே மெய்ப் பொருளை உணரவோ, அடையவோ முடியும் என்பதே. உடனே முருகன் கோவித்துக் கொண்டு, கோவணம் உடுத்தி, தண்டம் கொண்டு மலை உச்சியில் போய் அமர்ந்து கொண்டார் என்பார்கள். கோவணம் உடுத்தி என்பது பற்றுகளைக் களைவதைக் குறிப்பது. ஆறு முகம் என்கிற ஆறு அறிவினையும் அடக்கி தலை உச்சியில் மனதை வைத்து நிலைத்து நிற்பதையே மலை உச்சியாகச் சொன்னார்கள். வேல் கீழே விரிவு பட்ட மனம் மேலே இலக்கை நோக்கி குவிகின்ற நிலையைக் குறிப்பது. தண்டம் என்பது முதுகுத் தண்டாகிய சுழுமுனை நாடியைக் குறிப்பது. ஆறு அறிவால் தான் பெற்ற ஆற்றல்களையெல்லாம் ஒடுக்கி மனதைத் தலை உச்சிக்குக் கொண்டு செல்லும் பொழுது குண்டலினியாகிய சக்தி மேலேறி வருவாள் மெய்ப் பொருளை விளக்கிடுவாள். இதையே சக்தியாகிய உமையவள் வந்து முருகனுக்கு பரம்பொருளின் திருவிளையாடல்களை விளக்கியதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு புராணங்களுக்குள்ளும் எவ்வளவோ நுட்பங்கள் மறைந்திருக்கின்றன.

உபநிடதங்களாகட்டும், இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், சித்தர்கள் பாடல்களாகட்டும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருக்குறளாகட்டும் இவை அனைத்துமே மனிதன் பரம்பொருளை அடைவதைக் குறித்து சொல்லப்பட்ட நுட்பங்களே தவிர வேறொன்றுமில்லை.
மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர்.

1 comment:

  1. Really very usefull artical. Thanks for this blog.
    /Arun

    ReplyDelete