Tuesday, April 1, 2014

மனம் இயங்கும் விதம்

Photo: மனம் இயங்கும் விதம்

ஆழ்மனது வெளிமனது & உள்மனது என இருபிரிவாக உள்ளன. அது போக என உயர்ந்த நிலை மனதாகவும் உள்ளது. மேல் மனது ஒரு எண்ணஅலை நீளத்தில் இயங்கும் & ஆழ்மனதும் வேறு ஒரு எண்ண அலைநீளத்திலும் இயங்கும். அதுபோல் சூப்பர் கான்சியஸ் மனதும் அதன் அருகில் இயங்கும் நிலையில் உள்ளது.

காலை சூரிய உதயத்திற்கு முன் ஆழ்மனது மிகவும் நிலைக்குச் சென்று சுறுசுறுப்பாகவும், அதிக விழிப்பு, தெளிவு நிலையில் இருக்கும். அமைதியான குளத்து நீரின் தன்மையை ஒட்டி இருக்கிறது.அந்த நேரம் நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், அறிவு, படிப்பு, விளையாட்டு பற்றிய சிந்தனை செயல்கள் மூளையில் பதிந்து செயல்படுகின்றன. அதற்கான இயக்கம் அன்று நடைபெறுகின்றன.

ஆராய்ச்சி செய்யும் மனது & தேர்ந்தெடுக்கும் மனது & புத்தகம், உடைகள். வாகனங்கள், வீடுகள், உணவுகளைத் தேடும் மனது & தடுமாறும் மனது. சூழலால் பாதிப்படையும் மனது & எல்லா முடிவுகளையும் தீர்மானிக்கும் மனது வெளி மனது.
ஆனால் சில அனிச்சை செயல்கள் நமது உடலில் பல நேரம் இயங்க வேண்டும். அவைகள் புற மனதைத் தவிர்த்தே பல நேரங்களில் நடைபெறுகின்றன.
உணவு, ஜீரணம், இரத்த ஓட்டம், மூச்சு சுவாசம், ஜீரண நீர் சுரப்புகள், நாளமில்லா சுரப்பி இயக்கங்கள் இவைகள் அனைத்தும் ஆழ்மனதினால் நம்மை அறியாமலே இயல்பாக, இனிமையாக, சுலபமாக பல நேரம் நடைபெறும். அதுவே ஆரோக்கியத்தின் உன்னத நிலை.
குறிப்பாக ஆழ்மனது ஏதேனும் விஷயத்தில் ஒன்றிவிட்டால் அதை செயல்படுத்த முனையும். காரணங்கள் தேடாது. ஆராய்ச்சி செய்யாது. வாதம், விவாதம் செய்யாது.

ஆழ்மனதில் எது ஆழமாக பதிவு செய்யப்படுகிறதோ அது பல மடங்கு உத்வேகத்துடன் செயல்பட்டு பல்கிப் பெருகும்.அது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம். புறமனது உலக விஷயங்களை, அனுபவங்களை வாங்கி ஆழ்மனது மூலம் பதிவுகளைத் தருகின்றன.பல நேரம் புறமனது வழியாகவே ஆழ்மனதுக்கு செய்திகளின் பதிவு நடக்கின்றன. சில நேரம் புறமனது தவிர்த்தும் ஆழ்மனதில் சில பதிவுகள், சிந்தனைகள் பதிவு ஏற்படும். அதன் தாக்கம் அதனால் உருவாகும் உன்னத செயல்கள் வாழ்வில் பிரமிப்பை அளிக்கும். அது நிலையில் உன்னத, பூரண நிலை எய்தும்.

புறமனது :புற மனது & மேல் மனது & ஐந்து இந்திரியங்களின் துணையுடன் இயங்குகிறது. நம்மை சுற்றிய சூழல் செயல்பாடுகள். அதன் மூலம் பொது அறிவு, கல்வி, அனுபவம் மூலம் புற மனம் செயல்படுகிறது.சூழல் மாறும் சமயம் புறமனது செயல்பாடுகளை உடன் மாற்றும், உயிரைக் காப்பாற்றும் அவசர நடவடிக்கையில் நமது புற மனமும், செயலும் எப்படி இருக்கும் என தீர்மானிக்க இயலாது.

ஆழ்மனது:
ஆழ்மனது உணர்ச்சிகளின் சங்கமத்தால் இயங்கும். மேலும் முக்கிமான எண்ணங்களின் பதிவு அலுவலகம், சேமிக்கும் அறை எனலாம். ஆழ்மனது நமது உடம்பில் இருந்து வெளிசென்று வரலாம். நினைத்தவுடன் வேறு இடம், உலகு, நாடு சென்று வரும். பல சமயம் டெலிபதி மூலம் காரண மனது அறியாமல் பல செய்திகள், தீர்வுகளை, உண்மை விஷயங்களை உணர்த்தும்.
பல நேரம் ஆழ்மனதின் செயல்பாடுகள் புரியாத புதிராக இருக்கும். பிரமிக்கத்தக்கதாக இருக்கும். ஆச்சரியப்பட வைக்கும்.

அதிகாலை நேரமும் தியான சமயத்திலும் ஆழ்மனதின் ஓட்டத்துடன் புறமனது இணைந்திடுவதால் இயங்குவதால் அளப்பரிய உன்னத பிரமிப்பு ஊட்டும். மாயாஜால சக்திகளைப் பெற்றிடுகிறோம். அனுபக்கிறோம். பிறருக்கும் வல்லமை வழங்கும் வலிமையைப் பெறுகிறோம். ஆரோக்கியம் அடைகிறோம். மன அழுத்தம் சமன் ஏற்பட அதுவே உகந்த காலம் & நமது ஆர்வ சக்தி, வாழ்க்கை சக்தி பேட்டரி முழு அளவில் அப்பொழுது சார்ஜ் செய்யப்படுகிறது.
நமது புறமனது பல நேரம் ஆழ்மனதின் காவல்காரன், வாட்ச்மேன் மற்றும் பல தவறான செய்திகளைத் தவிர்க்கவும், தவறான செயல்களைத் தவிர்க்கவும் செய்கின்றன.

சில நேரம் ஆழ்மனது சில குறிப்பிட்ட ஆலோசனை படியும் புறமனதை இணைத்து இயங்கச் செய்யும். பல நேரம் ஆலோசனைக்கு செவி சாய்க்காது.
ஒரு பிரச்சனையில் புறமனது பல தீர்வுகளைத் தரும் சமயம் அதன் செயலை அகமனதிடம் ஒப்படைக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஒரு தீர்வை அகமனதின் மூலம் மறுநாளோ, ஓய்வுநேரத்திலோ, அதிகாலை நேரத்திலோ, தியான நேரத்திலோ உணவு நேரத்திலோ நமக்குத் தந்திடும். பலா இதை உணர்ந்திருக்கலாம்.

நம்மில் மறைந்து இருக்கும் அற்புத சக்தியை, மாய உலகை வெளிக் கொண்டுவதில் தியானமும் இயற்கை உணவுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.
சிந்தனை சக்தி, அறிவு சக்தி, செயல் சக்தி, ஞாபக சக்தி அனைத்தையும் உள்ளடக்கியது மனம்.

மனித சக்தி & இரத்தம் ஓட்டம் + காற்று ஓட்டம் + பிராண சக்தி ஓட்டம்.சரியாகக் கவனிக்கவில்லை எனில் குறையும்.இரத்த ஓட்டம் & பார்க்கலாம் & அறியலாம் & உணரலாம் & நம்மிடம் இருந்து குறைவுபடாது & தளர்வுறும். நம் உடலுக்குள்ளேயே அமைந்தது.

காற்று ஓட்டம் & அறியலாம் & உணரலாம். மூக்கருகில் விரல் வைத்துப் பார்த்தும் உணரலாம். பரவெளியில் இருந்து உள் வரும் & வெளியேறும்.பிராண ஓட்டம் & பார்க்க இயலாது. உள் மன ஆற்றலால் உணரலாம்.

காந்த சக்தி ஓட்டம் & இயங்க இயங்க சக்தி விரயமாகும். வெளியேறும் தினமும் சார்ஜ் செய்யப்பட வேண்டும்.இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், பிராண ஓட்டம், வெப்ப ஓட்டம் நமது உடலின் மின்காந்த சக்தி அளவுகளை நிர்ணயம் செய்கின்றன. உடலின் காந்த சக்தி அளவை உயர்த்தும் கலை உள்ளது. 

பிரபஞ்சத்திலும் இவ்வகை சக்தி பரவியுள்ளது. மனம் எனும் கருவியை செம்மைப்படுத்தி, நல்ல விளை நிலமாக்கி பிரபஞ்ச காந்த சக்தி அபிரிதமாகப் பெற்று அற்புதப் பலன் பெறலாம்.

வெளிமனம் துள்ளிடும் மனம். அலை பாயும் மனம் & குரங்கு குட்டிக்கு சமம். தன்னிறைவு கொள்ளாது. ஐம்புலன் உதவியால் இயங்கும் & அன்றாட வேலைகள். கடமைகளை வெளிமன உதவியுடன் இயல்பாகச் செய்ய இயலுகிறது. வெளிமனம் சிறப்பாகச் செயல்படாத போது அன்றாடப் பணிகள் நிலை தடுமாறி நமது குணம் மாறுபட்டு அவப்பெயர் அடைகிறோம். மனிதனை எளிதில் தூங்கவிடாது.
ஆழ்மனம் ,உள்மனம்: & அபார சக்தி கொண்டது & ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளது. அளப்பரிய ஆற்றல்கள் அடங்கிய நிலையில் உள்ளது. உறங்கும் பூதம் எனலாம்.கடல் தண்ணீர் ஒன்றுதான் & மேல் நிலையில் எவ்வளவு ஆர்ப்பாட்ட அலை & அடிப்பகுதி எவ்வளவு அமைதி நிலை & அதுபோலே உள்மனம் & ஆழ்மனம், உள்மனம் பார்க்காமல், கேட்காமல் இயங்கும்.

உள்மனம் வெளிமனக் கட்டளைப்படி மறுப்பில்லாமல் செய்து முடிக்கும். ஆனால் அவசர காலத்தில் உள்மனக்கட்டளைப் படி மனிதன் செயல்படுகிறான். அவசர காலம் முடிந்தவுடன் வெளிமனம் தனது பொறுப்பை மறுபடி ஏற்றுக் கொள்கிறது.
தூங்கும்போது & வெளிமனம் ஓய்வு எடுக்கிறது. உள்மனம் நிறைய நேரம் முழு ஓய்வு எடுப்பதில்லை & அரை குறை விழிப்பு நிலையில் உள்ளது. உள் மனதினால் ஜீரணம், சுவாசம், கழிவு வெளியேற்றம் பிறந்தது முதல் இறப்பு வரை நடைபெறுகின்றன. அதனால் உள்மனதிற்கு ஓய்வு இல்லை. ஆழ்ந்த, அமைதியான, சுகமான, கவலையற்ற உறக்கத்தில் உள்மனம் குறுக்கிடுவதில்லை. அதுவும் பூரண ஓய்வெடுக்கிறது. அப்போதும் உயிர் நிலை செயல்கள், ஜீரணம், புதிய திசுக்கள் உருவாகுதல் நடைபெறுகின்றன. சுவாசம் 20 விழுக்காடு நிலையில் நடைபெறுகின்றன.

நன்றாக உறங்கியவர்கள் மறுநாள் அதீத சுறுசுறுப்பு, உந்து சக்தி, உற்சாகம், சந்தோஷம் மிகுந்து காணப்படுவர்.மனிதன் மனோ சக்தி மூலம் தேக காந்த சக்தியை பிரபஞ்சத்து சக்தி மூலம் கூட்டும் வல்லமையால் ஆரோக்கியத்தை அடைய இயலும். தேக காந்த சக்தி குறையும் சமயம் ஆரோக்கியம் குறைகிறது. இத்தேக காந்த சக்தி அபரிதமாகும் போது பிறரை வசியப்படுத்தும், குணப்படுத்தும், வல்லமை பெறலாம்.

No comments:

Post a Comment