Wednesday, April 9, 2014

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும்!

Photo: அறியாமையாகிய அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கிற மனிதனின் வாழ்வு ஒரு மரத்தினுடைய வாழ்வைப் போன்றிருக்கிறது. ஒரு பெரிய மரமாக விரிவடையக் கூடிய அவ்வளவு ஆற்றலும் ஒரு சிறிய விதைக்குள் ஒடுங்கிக் கிடக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் நிலையும் அத்தகையதுதான். விதைக்குள் அடைபட்டுக் கிடக்கும் மரத்தைப் போல அவனும் காற்றையோ வெளிச்சத்தையோ பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறான். புலன்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. மூளை வேலை செய்வதில்லை, அறிவு அவனிடத்தில் ஒடுக்க நிலையில் இருக்கிறது. ஒரு சிசுவுக்கு கர்ப்பவாசத்தில் எத்தனை விதமானத் தடைகளும், குறைகளும் இருக்கின்றதோ அவ்வளவும் அறியாமையில் திகழும் மனிதனுக்கு உலக வாழ்வில் இருக்கிறது. கர்பவாசத்தைப் போன்று அவன் அறிவானது இருளில் மூடிக் கிடக்கிறது. கர்ப்பவாசத்தை விட்டு வெளியே வரவில்லை என்றால் அது சிசுவுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்து விடும். அது போல அறியாமையிலிருந்து விடுபடாத வரையில் ஒரு மனிதன் துன்பத்திலிருந்து விடுபடவே முடியாது. அறிவுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் அருமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார்.     

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும். -குறள்.

சூழ்ந்தழுத்தி, இழுத்துச் சொல்லும் வெள்ளம் போலத் துன்பங்கள் பெருகி வந்தாலும், அறிவுடையவன் முன்பு அத்துன்பங்கள் கெட்டழியும். ஆனால், அறிவுடைமை என்பது என்ன ? இங்குதான் நாம் பிசகி விடுகிறோம். எதனால் தனக்கோ பிறர்க்கோ துன்பம் நேராதோ அத்தகைய எண்ணம், சொல், செயல் கொண்டு ஒழுகுவதே அறிவுடைமை. நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுயநலம் கருதி நாம் செய்யும் தவறான செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறோமே தவிர அறிவுடைமையோடு நடந்து கொள்கிறோமா என்றால், இல்லை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எது நிலையானதோ, எது அழிவற்றதோ, எது தனக்கோ, பிறர்க்கோ, இக்காலத்தோ, வரும் காலத்திலோ துன்பம் தறாத செயலோ அதை அறிந்து, உணர்ந்து ஏற்றுக் கொண்டு வாழ்வதே அறிவுடமையாகும். இன்னொரு உபாயமும் இருக்கிறது. அதாவது, 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
கிடும்பை படாஅ தவர். 

தனக்கு ஏற்படும் துன்பங்களுக்கு துன்பம் நேரும் படி செய்து விடவேண்டும். அது எப்படி என்றால், தன் துன்பங்களுக்குக் காரணம் நாம் முன்பு செய்த வினைகளே என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து அத் துன்பங்களை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் பொழுது, அத் துன்பங்கள் நமக்குத் துன்பமாகத் தோன்றாது. நீதிபதி முன்பு ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு வருந்தும் பொழுது, அவர் மனமிரங்கி அவன் தண்டனையைக் குறைப்பது போல, நம் மனசாட்சி என்கிற நீதிபதியின் முன்பு தன் தவறை ஒருவன் உணர்ந்து தன்னை ஒப்புக் கொடுக்கும் பொழுது அவன் துன்பங்கள் குறைந்து விடும். மேலும் இது போன்றத் துன்பங்களை விளைவிக்கும் செயல்களை இனி மேல் செய்யக் கூடாது என்கிற மனத் தெளிவும் மன உறுதியும் ஏற்படும். இத்தகைய மனத் திட்பத்தையே குறள் வினைத் திட்பம் என்கிறது. இத்தகைய மனத் திட்பம்தான் மனிதரை மேல் நிலைக்கு உயர்த்துவது. இது அறிவோடு கூடிய மனத் திட்பமாக இருத்தல் வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. 

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும். நம் செயல்பாடுகளின் நுட்பங்கள் மனதில் ஊன்றி நிலைத்திருப்பதின் பயனே அது. அதாவது ஆழ்மனதில் அந்த நுட்பங்களை அழுத்தமாக, வலுவாகப் பதித்துக் கொண்டதின் பயனாகும். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 

ஒரு எண்ணம் எந்த அளவுக்கு திண்ணமாக அதாவது வலிமையாக விளங்குகிறதோ, அந்த அளவுக்கு அந்த எண்ணம் விரைவாக ஈடேறும். அப்படி எண்ணத்திற்கு வலிமை சேர்க்க வேண்டுமானால் மனதில் உதிக்கும் எண்ணங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும். கோடிக்கணக்கில் எண்ணிக்கையில் அடங்காத அளவு உதித்துக் கொண்டிருப்பதால்தான் அவற்றை எண்ணங்கள் என்று அழைக்கிறார்கள். மன உறுதி என்பது ஒருவன் தேவையற்ற எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபடும் அளவுக்கே ஏற்படும். எண்ணங்களின் தொகுப்பே மனம் என்பதால் எண்ணங்கள் குறையக் குறைய மனம் வசப்பட்டு ஒருமுனைப் பாங்கு வாய்க்கும். தியானம் இதற்கு எளிய உபாயமாக இருக்கிறது. தியானத்தினால் மனமானது பேரறிவின் பிரிதிபலிப்பால் பிரகாசிக்கிறது. அறிவொளி துலங்கும் அளவு மனிதனுடைய வாழ்வு மகத்துவம் பெறுகிறது.
அறியாமையாகிய அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கிற மனிதனின் வாழ்வு ஒரு மரத்தினுடைய வாழ்வைப் போன்றிருக்கிறது. ஒரு பெரிய மரமாக விரிவடையக் கூடிய அவ்வளவு ஆற்றலும் ஒரு சிறிய விதைக்குள் ஒடுங்கிக் கிடக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் நிலையும் அத்தகையதுதான். விதைக்குள் அடைபட்டுக் கிடக்கும் மரத்தைப் போல அவனும் காற்றையோ வெளிச்சத்தையோ பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறான். புலன்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. மூளை வேலை செய்வதில்லை, அறிவு அவனிடத்தில் ஒடுக்க நிலையில் இருக்கிறது. ஒரு சிசுவுக்கு கர்ப்பவாசத்தில் எத்தனை விதமானத் தடைகளும், குறைகளும் இருக்கின்றதோ அவ்வளவும் அறியாமையில் திகழும் மனிதனுக்கு உலக வாழ்வில் இருக்கிறது. கர்பவாசத்தைப் போன்று அவன் அறிவானது இருளில் மூடிக் கிடக்கிறது. கர்ப்பவாசத்தை விட்டு வெளியே வரவில்லை என்றால் அது சிசுவுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்து விடும். அது போல அறியாமையிலிருந்து விடுபடாத வரையில் ஒரு மனிதன் துன்பத்திலிருந்து விடுபடவே முடியாது. அறிவுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் அருமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார்.

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும். -குறள்.

சூழ்ந்தழுத்தி, இழுத்துச் சொல்லும் வெள்ளம் போலத் துன்பங்கள் பெருகி வந்தாலும், அறிவுடையவன் முன்பு அத்துன்பங்கள் கெட்டழியும். ஆனால், அறிவுடைமை என்பது என்ன ? இங்குதான் நாம் பிசகி விடுகிறோம். எதனால் தனக்கோ பிறர்க்கோ துன்பம் நேராதோ அத்தகைய எண்ணம், சொல், செயல் கொண்டு ஒழுகுவதே அறிவுடைமை. நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுயநலம் கருதி நாம் செய்யும் தவறான செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறோமே தவிர அறிவுடைமையோடு நடந்து கொள்கிறோமா என்றால், இல்லை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எது நிலையானதோ, எது அழிவற்றதோ, எது தனக்கோ, பிறர்க்கோ, இக்காலத்தோ, வரும் காலத்திலோ துன்பம் தறாத செயலோ அதை அறிந்து, உணர்ந்து ஏற்றுக் கொண்டு வாழ்வதே அறிவுடமையாகும். இன்னொரு உபாயமும் இருக்கிறது. அதாவது,

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
கிடும்பை படாஅ தவர்.

தனக்கு ஏற்படும் துன்பங்களுக்கு துன்பம் நேரும் படி செய்து விடவேண்டும். அது எப்படி என்றால், தன் துன்பங்களுக்குக் காரணம் நாம் முன்பு செய்த வினைகளே என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து அத் துன்பங்களை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் பொழுது, அத் துன்பங்கள் நமக்குத் துன்பமாகத் தோன்றாது. நீதிபதி முன்பு ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு வருந்தும் பொழுது, அவர் மனமிரங்கி அவன் தண்டனையைக் குறைப்பது போல, நம் மனசாட்சி என்கிற நீதிபதியின் முன்பு தன் தவறை ஒருவன் உணர்ந்து தன்னை ஒப்புக் கொடுக்கும் பொழுது அவன் துன்பங்கள் குறைந்து விடும். மேலும் இது போன்றத் துன்பங்களை விளைவிக்கும் செயல்களை இனி மேல் செய்யக் கூடாது என்கிற மனத் தெளிவும் மன உறுதியும் ஏற்படும். இத்தகைய மனத் திட்பத்தையே குறள் வினைத் திட்பம் என்கிறது. இத்தகைய மனத் திட்பம்தான் மனிதரை மேல் நிலைக்கு உயர்த்துவது. இது அறிவோடு கூடிய மனத் திட்பமாக இருத்தல் வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும். நம் செயல்பாடுகளின் நுட்பங்கள் மனதில் ஊன்றி நிலைத்திருப்பதின் பயனே அது. அதாவது ஆழ்மனதில் அந்த நுட்பங்களை அழுத்தமாக, வலுவாகப் பதித்துக் கொண்டதின் பயனாகும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

ஒரு எண்ணம் எந்த அளவுக்கு திண்ணமாக அதாவது வலிமையாக விளங்குகிறதோ, அந்த அளவுக்கு அந்த எண்ணம் விரைவாக ஈடேறும். அப்படி எண்ணத்திற்கு வலிமை சேர்க்க வேண்டுமானால் மனதில் உதிக்கும் எண்ணங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும். கோடிக்கணக்கில் எண்ணிக்கையில் அடங்காத அளவு உதித்துக் கொண்டிருப்பதால்தான் அவற்றை எண்ணங்கள் என்று அழைக்கிறார்கள். மன உறுதி என்பது ஒருவன் தேவையற்ற எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபடும் அளவுக்கே ஏற்படும். எண்ணங்களின் தொகுப்பே மனம் என்பதால் எண்ணங்கள் குறையக் குறைய மனம் வசப்பட்டு ஒருமுனைப் பாங்கு வாய்க்கும். தியானம் இதற்கு எளிய உபாயமாக இருக்கிறது. தியானத்தினால் மனமானது பேரறிவின் பிரிதிபலிப்பால் பிரகாசிக்கிறது. அறிவொளி துலங்கும் அளவு மனிதனுடைய வாழ்வு மகத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment