Thursday, April 10, 2014

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே!!!

Photo: தாமரை இலையானது தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது காய்ந்து போகும். ஆனாலும் அது தண்ணீரில் துளி கூட நனைவதில்லை. அவ்வாறே மனிதன் கர்மத்திலேயே பிறந்து, கர்மத்திலேயே வளர்ந்து, வாழ்நாள் முழுவதும் கர்ம சொரூபியாகவே வாழ்கிறான். இருப்பினும் அவன் தன் மெய்யான இயல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்து இருப்பானேயாகில் எந்தக் கர்மமும் அவனைக் கட்டுப்படுவதில்லை. மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மம் என்கிற வினைகள் என்று பொதுவாக நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல, கர்மத்தை தானே செய்வதாக ஏற்றுக் கொண்டு அதைச் சுமந்து கொண்டு திரியும் மனமேயாகும். எனவே வேலை செய்வதை ஒருவன் வெறுத்தோ அல்லது வேலை செய்யாமல் சோம்பிக் கிடப்பதையோ ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பம் துன்பம் என்கிற இருமைகளில் கட்டுண்டவனாகிறான். அவ்வாறின்றி எத்தனையோ கர்மங்களைப் புரிவதற்கிடையிலும் ஒருவன் விருப்பு வெறுப்பற்று இருப்பானேயானால் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உருவாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. அப்படிப்பட்டவனே கர்மம் செய்தும் செய்யாதவனாக இருக்கிறான். 

ஒரு குழந்தையின் கையைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாய், சற்று எட்ட நின்று கொண்டு அந்தக் குழந்தையை தன்னை நோக்கி வா வா என்று அழைப்பது போன்று, பரம்பொருளானது தன்னுடைய அளவில்லாத சக்திகளனைத்தையும் மனிதனுக்கு வழங்கியிருக்கிறாது. அச்சக்திகளைப் பயன்படுத்தி ஜீவனானவன் தன்னிடத்தில் வந்து சேர வேண்டும் என்பதே நோக்கம். அது ஏன் இவ்வாறு படைத்து விட்டு பிறகு தன்னை நோக்கி வரச் செய்ய வேண்டும் ? என்று சிலர் கேட்கிறார்கள். அது இயல்பாகவே நடக்க ஆரம்பித்து விட்ட ஒரு விஷயமாகும். அதனால்தான் அதை இயற்கை என்கிறோம். அவ்வாறு தன்னிலிருந்து பிரிந்து சென்ற அனைத்தையும் தன்னை நோக்கி ஆகர்ஷிக்கின்ற முயற்சியையே மாயை என்கிறோம். அதன் அந்த முயற்சியில் ஒவ்வொன்றாகச் சீரமைக்கப்பட்டு இறுதி கட்டமாக அனைத்தையும் உணர்ந்து அறிவால் தெளியும் மனிதனாக நாம் பரிணமித்திருக்கிறோம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே மனித முயற்சியும், பரம்பொருள் நிலையும் விளங்குகிறது. எனவேதான் தன் முயற்சியால்தான் மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கீதை சொல்கிறது. 

அது தன்னைத் தானே மனிதன் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது. தன்னைத் தானே கீழ்நிலைக்கு கொண்டு செல்வதும், தனக்குத் தானே நண்பனாக இருப்பதும், தனக்குத் தானே பகைவனாக இருப்பதும் ஜீவனின் முரண்பட்ட இயல்புகளாக இருக்கிறது. எனவே இதிலிருந்து ஜீவனை விடுபடுவதற்கு, மனதை விடுவிப்பதற்கு அது பல யுக்திகளை முன் வைக்கிறது. பாரத்தை சுமந்து செல்வதற்கு சிரமப்படும் ஒருவன் வண்டி ஒன்றை அமர்த்திக் கொள்கிறான். வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு தலைச் சுமையை இறக்கி வைக்க வேண்டுமா இல்லையா ? இறக்கி வைப்பதில்லை. எனவேதான் பரம்பொருளானவர் சொல்கிறார், நானே வண்டிக்காரன். நானே சாரதி. உன் பாரத்தை என் வண்டியில் இறக்கி வைத்து விடு. அவ்வாறாயின் சுகமாகப் போய்ச் சேர வேண்டிய இடத்தில் நானே உன்னைச் சேர்ப்பிக்கிறேன் என்கிறார். ஆனால், நாமோ பாரத்தை இறக்கி வைப்பதில்லை. அப்படி வைக்க விடாமல் செய்வது எது என்று பார்த்தால், அது வேறொன்றுமில்லை, அதுதான் பற்று. எல்லாம் எனதென்றும், இந்த இந்திரியங்கள், இந்த உடல், இந்த மனம் எல்லாம் தானே என்றும், செயல்களைனத்தும் தன் சக்தியினாலேயே தன் விருப்பப்படியே  நடக்கிறதென்றும்  அனைத்தையும் நம் மனமானது விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. பற்றிக் கொண்டிருப்பதினால்தான் அதைப் பற்று என்று சொல்கிறார்கள். பற்றறுத்தவர் பரமனை அடைவார். 

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே. அதில் ஒரு சிறு பகுதியே மனிதனாவான். மனிதனின் பிராணன், மனம், புலன்கள், அறிவு இவற்றின் மூலம் செயல்படுகின்ற சக்தி பரம்பொருளின் சக்தியின் ஒரு சிறு பகுதியே. இப்படி உலகனைத்திலும் பல்வேறு சக்திகளாக அது விரிந்து இயக்கி நிற்கிறது. இந்த சக்திகளை அடையாளம் தெரிந்து கொண்டு அவை தோன்றுமிடத்தைத் தேடிப் போனால், எல்லாம் பரம்பொருளிடமிருந்தே வருகின்றன என்பது புலனாகும். இதற்கு முயற்சி செய்பவர்கள் யோகிகள். இதை உணர்ந்தவர்களே ஞானிகள். முயற்சியில் வென்றவர்கள் முக்தர்கள். கூர்ந்து கவனித்தால் நம் எல்லோருக்குள்ளும் கண்ணனும், அர்ஜுனனும், பாண்டவர்களும், கௌரவர்களும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் குருஷேத்திரம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இதில் யார் பாண்டவர்கள் ? யார் கௌரவர்கள் ? எது நல்லது ? எது கெட்டது ? என்பதைத் தீர்மானிப்பது யார் ?
தாமரை இலையானது தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது காய்ந்து போகும். ஆனாலும் அது தண்ணீரில் துளி கூட நனைவதில்லை. அவ்வாறே மனிதன் கர்மத்திலேயே பிறந்து, கர்மத்திலேயே வளர்ந்து, வாழ்நாள் முழுவதும் கர்ம சொரூபியாகவே வாழ்கிறான். இருப்பினும் அவன் தன் மெய்யான இயல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்து இருப்பானேயாகில் எந்தக் கர்மமும் அவனைக் கட்டுப்படுவதில்லை. மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மம் என்கிற வினைகள் என்று பொதுவாக நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல, கர்மத்தை தானே செய்வதாக ஏற்றுக் கொண்டு அதைச் சுமந்து கொண்டு திரியும் மனமேயாகும். எனவே வேலை செய்வதை ஒருவன் வெறுத்தோ அல்லது வேலை செய்யாமல் சோம்பிக் கிடப்பதையோ ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பம் துன்பம் என்கிற இருமைகளில் கட்டுண்டவனாகிறான். அவ்வாறின்றி எத்தனையோ கர்மங்களைப் புரிவதற்கிடையிலும் ஒருவன் விருப்பு வெறுப்பற்று இருப்பானேயானால் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உருவாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. அப்படிப்பட்டவனே கர்மம் செய்தும் செய்யாதவனாக இருக்கிறான்.

ஒரு குழந்தையின் கையைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாய், சற்று எட்ட நின்று கொண்டு அந்தக் குழந்தையை தன்னை நோக்கி வா வா என்று அழைப்பது போன்று, பரம்பொருளானது தன்னுடைய அளவில்லாத சக்திகளனைத்தையும் மனிதனுக்கு வழங்கியிருக்கிறாது. அச்சக்திகளைப் பயன்படுத்தி ஜீவனானவன் தன்னிடத்தில் வந்து சேர வேண்டும் என்பதே நோக்கம். அது ஏன் இவ்வாறு படைத்து விட்டு பிறகு தன்னை நோக்கி வரச் செய்ய வேண்டும் ? என்று சிலர் கேட்கிறார்கள். அது இயல்பாகவே நடக்க ஆரம்பித்து விட்ட ஒரு விஷயமாகும். அதனால்தான் அதை இயற்கை என்கிறோம். அவ்வாறு தன்னிலிருந்து பிரிந்து சென்ற அனைத்தையும் தன்னை நோக்கி ஆகர்ஷிக்கின்ற முயற்சியையே மாயை என்கிறோம். அதன் அந்த முயற்சியில் ஒவ்வொன்றாகச் சீரமைக்கப்பட்டு இறுதி கட்டமாக அனைத்தையும் உணர்ந்து அறிவால் தெளியும் மனிதனாக நாம் பரிணமித்திருக்கிறோம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே மனித முயற்சியும், பரம்பொருள் நிலையும் விளங்குகிறது. எனவேதான் தன் முயற்சியால்தான் மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கீதை சொல்கிறது.

அது தன்னைத் தானே மனிதன் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது. தன்னைத் தானே கீழ்நிலைக்கு கொண்டு செல்வதும், தனக்குத் தானே நண்பனாக இருப்பதும், தனக்குத் தானே பகைவனாக இருப்பதும் ஜீவனின் முரண்பட்ட இயல்புகளாக இருக்கிறது. எனவே இதிலிருந்து ஜீவனை விடுபடுவதற்கு, மனதை விடுவிப்பதற்கு அது பல யுக்திகளை முன் வைக்கிறது. பாரத்தை சுமந்து செல்வதற்கு சிரமப்படும் ஒருவன் வண்டி ஒன்றை அமர்த்திக் கொள்கிறான். வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு தலைச் சுமையை இறக்கி வைக்க வேண்டுமா இல்லையா ? இறக்கி வைப்பதில்லை. எனவேதான் பரம்பொருளானவர் சொல்கிறார், நானே வண்டிக்காரன். நானே சாரதி. உன் பாரத்தை என் வண்டியில் இறக்கி வைத்து விடு. அவ்வாறாயின் சுகமாகப் போய்ச் சேர வேண்டிய இடத்தில் நானே உன்னைச் சேர்ப்பிக்கிறேன் என்கிறார். ஆனால், நாமோ பாரத்தை இறக்கி வைப்பதில்லை. அப்படி வைக்க விடாமல் செய்வது எது என்று பார்த்தால், அது வேறொன்றுமில்லை, அதுதான் பற்று. எல்லாம் எனதென்றும், இந்த இந்திரியங்கள், இந்த உடல், இந்த மனம் எல்லாம் தானே என்றும், செயல்களைனத்தும் தன் சக்தியினாலேயே தன் விருப்பப்படியே நடக்கிறதென்றும் அனைத்தையும் நம் மனமானது விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. பற்றிக் கொண்டிருப்பதினால்தான் அதைப் பற்று என்று சொல்கிறார்கள். பற்றறுத்தவர் பரமனை அடைவார்.

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே. அதில் ஒரு சிறு பகுதியே மனிதனாவான். மனிதனின் பிராணன், மனம், புலன்கள், அறிவு இவற்றின் மூலம் செயல்படுகின்ற சக்தி பரம்பொருளின் சக்தியின் ஒரு சிறு பகுதியே. இப்படி உலகனைத்திலும் பல்வேறு சக்திகளாக அது விரிந்து இயக்கி நிற்கிறது. இந்த சக்திகளை அடையாளம் தெரிந்து கொண்டு அவை தோன்றுமிடத்தைத் தேடிப் போனால், எல்லாம் பரம்பொருளிடமிருந்தே வருகின்றன என்பது புலனாகும். இதற்கு முயற்சி செய்பவர்கள் யோகிகள். இதை உணர்ந்தவர்களே ஞானிகள். முயற்சியில் வென்றவர்கள் முக்தர்கள். கூர்ந்து கவனித்தால் நம் எல்லோருக்குள்ளும் கண்ணனும், அர்ஜுனனும், பாண்டவர்களும், கௌரவர்களும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் குருஷேத்திரம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இதில் யார் பாண்டவர்கள் ? யார் கௌரவர்கள் ? எது நல்லது ? எது கெட்டது ? என்பதைத் தீர்மானிப்பது யார் ?

1 comment:

  1. உங்கள் பதிவுகள் நல்ல ஆன்மீக கருத்தை மனதில் விதைகின்றன. உங்கள் எழுத்து, சிந்தனைவளம் நன்றாக உள்ளது. சேவை தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி,
    அருண்

    ReplyDelete