Thursday, April 3, 2014

கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல ???

Photo: மனதை அடக்கி, ஒடுக்கி, அழித்து, மனோ நாசம் செய்து, மனதை இல்லாமல் செய்து என்று பலப்பல கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் பொழுது தியானம் குறித்த பயமும், எல்லையற்ற சந்தேகமும் வந்து விடுகிறது. தியானம் என்பது மென்மையான விஷயம். அதை அடைவதற்கு பகீரதப் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்பதால் சாதகனுக்கு வைராக்யமும், விடா முயற்சியும் ஏற்படுத்துவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள். அதாவது நமது பழக்கங்களை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. எவ்வளவுதான் முயன்றாலும் புகைப்பதை விட முடியவில்லை என்பவர்களைப் பார்க்கிறோம். இரவானால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை என்று வருந்துபவர்களைப் பார்க்கிறோம். இப்படி பலவிதமான பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போல நம் மனமும் கண்டபடி மதங் கொண்ட யானை போல, கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அங்கும் இங்கும் தன் இஷ்டத்திற்கு அலைந்து பழகி விட்டது. திடீரென்று ஒருநாள் கண்ணை மூடி அமர்ந்து கொண்டு அடங்கு அடங்கு என்றால், அது அடங்குமா என்ன ? வாழ்க்கையே வெறுத்துப் போனாலும் கூட பழைய அனுபவங்களை அது எண்ணி எண்ணி வருந்திக் கொண்டேதான் இருக்கும். அப்படி வாழ்க்கையையே வெறுத்து காடுமேடெல்லாம் அலைந்து பல துயரங்களை அனுபவித்த பிறகே ஞானமடைந்த எத்தனை எத்தனையோ ஞானிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். 

எனவே ஒரு பழக்கத்தை மாறப்பதற்கு வேறொரு பழக்கத்தைக் கைகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிக பாரம் உள்ள வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்துவது போல மனதைக் கொண்டு போய் அதன் பிறப்பிடத்தில் நிறுத்தி விட முடியாது. அது ஒரு போராட்டம் என்று நினைத்தீர்களேயானால் கடைசி வரை போராட்டமாகத்தான் இருக்கும். மாறாக அது இயல்பாக, மென்மையாக, நிதானமாகப் படிப்படியாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். காலையில் சூரியனைக் கண்டு தாமரை மலர்வது போல இயல்பாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். நாம் மனதை உள்நோக்கி உந்தித் தள்ளுவதல்ல தியானம். உள்ளிருந்து ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவதே தியானம். இப்படிக் கீழ்நிலை மனதை தன்னை நோக்கி இழுப்பது உயர்மனமாகும். இந்த உயர் மனமே இதயத் தாமரையாகும். இதயத் தாமரையே மலராத போது அது கீழ் நிலை மனதை எங்ஙனம் கவர்ந்து இழுக்க முடியும். இதற்கான முயற்சிகளே ஆரம்ப நிலைப் புறப் பயிற்சிகளாகும். நம் அன்றாடப் பணிகளில் அடையும் வெற்றிகளுக்குப் பின்னால் இந்த தியானமும், மன ஒருமைப்பாடும் இருக்கிறது. இப்படி அவ்வப்பொழுது நிகழும் அந்த தியானத்தை, மன ஒருமைப்பாட்டை நிரந்தரமாக்கினால் அதுவே நம் பிறப்பின் நோக்கத்தை அடைவதாக அமையும். 

புறப் பொருள்களில் மனதைக் குவிப்பது மன ஒருமைப்பாடு. இதுவே தாரணை. தாரணையின்றி யாரும் தியானத்தை அடைந்து விட முடியாது. பிரார்த்தனை, ஜபம், பிரம்மச்சரியம் போன்ற சாதனங்களால் இதயத் தாமரையை மலரச் செய்து விட்டீர்களானால், பிறகு மனம் இயல்பாக அங்கு ஈர்க்கப்பட்டுக் குவிகிற நிலையே தியானம். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். மன ஒருமைப்பாடு என்கிற பொழுது அங்கு அனைத்து பொறிகளும் இயங்குகின்றன. ஆனால், தியானம் என்கிற பொழுது மனம் மட்டுமே இயங்குகிறது. பிற பொறிகள் எல்லாம் அடங்கி விடுகின்றன. மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள்களோடு உள்ள தொடர்பு தியானத்தில் துண்டிக்கபட்டு விடுகிறது. புற விஷயங்களில் காலத்தின் ஆதிக்கத்திற்குள் நிகழ்த்தப்படுவது மன ஒருமைப்பாடு. ஆனால், உள்ளே காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம். மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள் மனதைக் கட்டுப்படுத்துகிறது. தியானத்தில் புத்தி, அல்லது ஆன்மா மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், முன்னமே இது தெரிந்திருக்கும் பொழுது தியானத்தின் பொழுது நம் நிலை என்ன என்பது நம் அறிவில் இயல்பாகவே உதயமாகிக் கொண்டேயிருக்கும். சந்தேகம் என்றத் தடையே ஏற்படாது. 

நம் மனதிற்கு இரண்டு நிலைப்பாடு உண்டு. அதாவது தன்னுணர்வு நிலை, உணர்வறு நிலை என்பனவாம் அது. குழந்தையாக இருக்கும் பொழுது இருக்கும் தன்னுணர்வானது வளர வளர உணர்வறு நிலைக்குப் போய் விடுகிறது. நாம் சாப்பிடுகிறோம், பேசுகிறோம், நடக்கிறோம், வேலை செய்கிறோம் என்று எல்லாவற்றையும் செய்தாலும் அதை உணர்வதில்லை. இவையனைத்தும் உணர்வறு நிலையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. வேலை செய்வது வேறு, வேலை செய்கிறேன் என்பதை உணர்வது வேறு. எந்தச் செயலுக்கும் ஆன்மாவோடு தொடர்பிருக்கும் வரையில்தான் அது தன்னுணர்வோடு நடக்கும். ஆனால், மனம் எப்பொழுதும் எண்ண அலைகளாக எழுந்து சலனப்பட்டுக் கொண்டே இருப்பதால் நாம் ஆன்மாவை உணர முடிவதில்லை. எனவே நம் ஆன்மா ஒன்று மட்டுமே உணர்வுப் பொருளாக இருக்கிறது. மற்ற மனம் உட்பட அனைத்தும் தன்னுணர்வு அற்றவைகளாக ஆகி விட்டன. இப்படி இடைவிடாது சலனப்பட்டுக் கொண்டே இருக்கும் மனதால் நாம் நம் சொந்த உணர்வு மையத்தை விட்டு விலகி உணர்வறு நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது இந்த அலைகளைப் படிப்படியாக நிறுத்தி, ஒரே ஒரு அலையை மட்டும் நிலை பெறச் செய்யும் பொழுது, தியானம் நமக்கு ஆன்மாவோடு தொடர்பை உண்டாக்கி விடுகிறது. எனவே நம் உணர்வறு நிலை மறைந்து தன்னுணர்வு மேலோங்கி விடுகின்றது. மன ஒருமைப்பாடு என்பது கூட உணர்வறு நிலையில்தான்  நடைபெறுகிறது. தியானத்தால்தான் நாம் தன்னுணர்வு நிலையை அடைந்து மீட்சி பெறுகிறோம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
மனதை அடக்கி, ஒடுக்கி, அழித்து, மனோ நாசம் செய்து, மனதை இல்லாமல் செய்து என்று பலப்பல கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் பொழுது தியானம் குறித்த பயமும், எல்லையற்ற சந்தேகமும் வந்து விடுகிறது. தியானம் என்பது மென்மையான விஷயம். அதை அடைவதற்கு பகீரதப் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்பதால் சாதகனுக்கு வைராக்யமும், விடா முயற்சியும் ஏற்படுத்துவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள். அதாவது நமது பழக்கங்களை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. எவ்வளவுதான் முயன்றாலும் புகைப்பதை விட முடியவில்லை என்பவர்களைப் பார்க்கிறோம். இரவானால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை என்று வருந்துபவர்களைப் பார்க்கிறோம். இப்படி பலவிதமான பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போல நம் மனமும் கண்டபடி மதங் கொண்ட யானை போல, கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அங்கும் இங்கும் தன் இஷ்டத்திற்கு அலைந்து பழகி விட்டது. திடீரென்று ஒருநாள் கண்ணை மூடி அமர்ந்து கொண்டு அடங்கு அடங்கு என்றால், அது அடங்குமா என்ன ? வாழ்க்கையே வெறுத்துப் போனாலும் கூட பழைய அனுபவங்களை அது எண்ணி எண்ணி வருந்திக் கொண்டேதான் இருக்கும். அப்படி வாழ்க்கையையே வெறுத்து காடுமேடெல்லாம் அலைந்து பல துயரங்களை அனுபவித்த பிறகே ஞானமடைந்த எத்தனை எத்தனையோ ஞானிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

எனவே ஒரு பழக்கத்தை மாறப்பதற்கு வேறொரு பழக்கத்தைக் கைகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிக பாரம் உள்ள வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்துவது போல மனதைக் கொண்டு போய் அதன் பிறப்பிடத்தில் நிறுத்தி விட முடியாது. அது ஒரு போராட்டம் என்று நினைத்தீர்களேயானால் கடைசி வரை போராட்டமாகத்தான் இருக்கும். மாறாக அது இயல்பாக, மென்மையாக, நிதானமாகப் படிப்படியாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். காலையில் சூரியனைக் கண்டு தாமரை மலர்வது போல இயல்பாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். நாம் மனதை உள்நோக்கி உந்தித் தள்ளுவதல்ல தியானம். உள்ளிருந்து ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவதே தியானம். இப்படிக் கீழ்நிலை மனதை தன்னை நோக்கி இழுப்பது உயர்மனமாகும். இந்த உயர் மனமே இதயத் தாமரையாகும். இதயத் தாமரையே மலராத போது அது கீழ் நிலை மனதை எங்ஙனம் கவர்ந்து இழுக்க முடியும். இதற்கான முயற்சிகளே ஆரம்ப நிலைப் புறப் பயிற்சிகளாகும். நம் அன்றாடப் பணிகளில் அடையும் வெற்றிகளுக்குப் பின்னால் இந்த தியானமும், மன ஒருமைப்பாடும் இருக்கிறது. இப்படி அவ்வப்பொழுது நிகழும் அந்த தியானத்தை, மன ஒருமைப்பாட்டை நிரந்தரமாக்கினால் அதுவே நம் பிறப்பின் நோக்கத்தை அடைவதாக அமையும்.

புறப் பொருள்களில் மனதைக் குவிப்பது மன ஒருமைப்பாடு. இதுவே தாரணை. தாரணையின்றி யாரும் தியானத்தை அடைந்து விட முடியாது. பிரார்த்தனை, ஜபம், பிரம்மச்சரியம் போன்ற சாதனங்களால் இதயத் தாமரையை மலரச் செய்து விட்டீர்களானால், பிறகு மனம் இயல்பாக அங்கு ஈர்க்கப்பட்டுக் குவிகிற நிலையே தியானம். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். மன ஒருமைப்பாடு என்கிற பொழுது அங்கு அனைத்து பொறிகளும் இயங்குகின்றன. ஆனால், தியானம் என்கிற பொழுது மனம் மட்டுமே இயங்குகிறது. பிற பொறிகள் எல்லாம் அடங்கி விடுகின்றன. மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள்களோடு உள்ள தொடர்பு தியானத்தில் துண்டிக்கபட்டு விடுகிறது. புற விஷயங்களில் காலத்தின் ஆதிக்கத்திற்குள் நிகழ்த்தப்படுவது மன ஒருமைப்பாடு. ஆனால், உள்ளே காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம். மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள் மனதைக் கட்டுப்படுத்துகிறது. தியானத்தில் புத்தி, அல்லது ஆன்மா மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், முன்னமே இது தெரிந்திருக்கும் பொழுது தியானத்தின் பொழுது நம் நிலை என்ன என்பது நம் அறிவில் இயல்பாகவே உதயமாகிக் கொண்டேயிருக்கும். சந்தேகம் என்றத் தடையே ஏற்படாது.

நம் மனதிற்கு இரண்டு நிலைப்பாடு உண்டு. அதாவது தன்னுணர்வு நிலை, உணர்வறு நிலை என்பனவாம் அது. குழந்தையாக இருக்கும் பொழுது இருக்கும் தன்னுணர்வானது வளர வளர உணர்வறு நிலைக்குப் போய் விடுகிறது. நாம் சாப்பிடுகிறோம், பேசுகிறோம், நடக்கிறோம், வேலை செய்கிறோம் என்று எல்லாவற்றையும் செய்தாலும் அதை உணர்வதில்லை. இவையனைத்தும் உணர்வறு நிலையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. வேலை செய்வது வேறு, வேலை செய்கிறேன் என்பதை உணர்வது வேறு. எந்தச் செயலுக்கும் ஆன்மாவோடு தொடர்பிருக்கும் வரையில்தான் அது தன்னுணர்வோடு நடக்கும். ஆனால், மனம் எப்பொழுதும் எண்ண அலைகளாக எழுந்து சலனப்பட்டுக் கொண்டே இருப்பதால் நாம் ஆன்மாவை உணர முடிவதில்லை. எனவே நம் ஆன்மா ஒன்று மட்டுமே உணர்வுப் பொருளாக இருக்கிறது. மற்ற மனம் உட்பட அனைத்தும் தன்னுணர்வு அற்றவைகளாக ஆகி விட்டன. இப்படி இடைவிடாது சலனப்பட்டுக் கொண்டே இருக்கும் மனதால் நாம் நம் சொந்த உணர்வு மையத்தை விட்டு விலகி உணர்வறு நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது இந்த அலைகளைப் படிப்படியாக நிறுத்தி, ஒரே ஒரு அலையை மட்டும் நிலை பெறச் செய்யும் பொழுது, தியானம் நமக்கு ஆன்மாவோடு தொடர்பை உண்டாக்கி விடுகிறது. எனவே நம் உணர்வறு நிலை மறைந்து தன்னுணர்வு மேலோங்கி விடுகின்றது. மன ஒருமைப்பாடு என்பது கூட உணர்வறு நிலையில்தான் நடைபெறுகிறது. தியானத்தால்தான் நாம் தன்னுணர்வு நிலையை அடைந்து மீட்சி பெறுகிறோம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment