Thursday, April 3, 2014

உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம்

Photo: நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேல் நாட்டிலும் கூட இது பற்றிய நம்பிக்கை உள்ளது. அவர்கள் சூக்கும சரீரங்களின் எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவால் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் சரீரத்தை அன்னமய கோசம் என்று சொல்கிறோம். அதற்கு சரியான வேளையில் சரியான விகிதத்தில் உணவு தரப்படவில்லை என்றால் அது வலுக்குன்றி பலவீனம் அடைகின்றது. அது போலவே பிராண சக்தி குறைவு படும் பொழுது பிராணமய கோசம் பலவீனமடைகிறது. இப்படி அடிப்படை ஆதார சக்தி குறைவுபடும் பொழுதோ, இயக்கம் கூடும் பொழுதோ, குறையும் பொழுதோ அந்தந்த சரீரங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை சக்தியாக இருப்பது ப்ராண சக்தியே ஆகும். இதில் நம் மனோமய கோசமானது பலவீனமடைவது ஏன் என்று பார்க்கும் பொழுது அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருப்பதினாலேயேயாகும். அதிகமாக உழைப்பதநினாலோ, நடப்பதினாலோ, ஓடுவதினாலோ நம் அன்னமய கோசம் களைப்படைந்து விடுவது போல, சில நேரங்களில் நம் மனோமய கோசமும் களைப்படைந்து விடுகிறது. ஆனால், அன்னமய கோசத்தின் களைப்பை உணர்ந்து கொள்கிற அளவு நாம் நம் மனோமய கோசத்தின் களைப்பை உணர்வதில்லை. இதனால் மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற நிலைகள் உருவாகி முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

உடல் சோர்வு நீங்க சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். அது போல மனதின் களைப்பு நீங்கவும் அதற்கு ஓய்வு அவசியமாகும். அதற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மனதை எந்த வித சிந்தனையுமின்றி அமைதியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பிராண சக்தி அடுத்தபடியாக சூக்குமமானதும், நம் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பதும் மனமேயாதலால், மனம் அமைதியாக இருப்பதால் மற்ற நான்கு கோசங்களுமே வலிமையடைகின்றன. அதனதன் சக்தி விரையங்கள் தவிர்க்கப்படுகின்றன. இவை வெவ்வேறு நிலைப் பாட்டையும், இயக்கங்களையும் கொண்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. ஒன்று பலவீனமடையும் பொழுது மற்றவைகளும் பலவீனமடைந்து விடுகின்றன. ஒன்று வலிமையடையும் பொழுது மற்றவைகளும் வலிமையடைகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று உள்முகமாகச் சூக்குமமாக விளங்குகின்றன. நன்றாகக் கவனித்தீர்களென்றால் இந்த ஐந்தில் நடுவில் மையமாக விளங்குவது மனமே என்பது தெளிவாகும். மனமே எல்லாவற்றிற்கும் மையமாக இருந்து கொண்டு பிராண சக்தியை ஏற்றுக் கொண்டு இயங்குகிறது. மனம் அமைதியாக இருந்தால் மற்றவைகளும் சலனமற்று மெதுவாக இயங்குகின்றன. இதனால் சக்தி விரையம் தவிர்க்கப்படுகிறது. எனவே அனைத்திலும் பிராண சக்தியின் திணிவு ஏற்பட்டு விடுகிறது. பிராணனின் திணிவு அதிகரிக்கும் பொழுது அது தங்கு தடையின்றி அனைத்து சரீரங்களிலும் பரவுகிறது. நாடி நரம்புகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் ஆதாரச் சக்கரங்கள் நன்கு சீராக இயங்கி நமக்கு அனைத்து பிரபஞ்ச சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன. 

பிராண ஓட்டம் தங்கு தடையின்றி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவும் பொழுது, வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், காற்றோட்டம் போன்ற அனைத்தும் உடலெங்கும் ஒரே சீராகப் பரவுகின்றன. எனவே பஞ்ச பூதங்களாலான நம் சரீரத்தில் பஞ்ச பூத தன்மாத்திரைகளின் இயக்கங்களும் சீராகவும், செம்மையாகவும் நடைபெறுகின்றன. மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி கிடைப்பதால் அது நன்கு செயல்படுகிறது. எனவே மனதை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்வதால் ஏற்படும் பலன்கள் எவ்வளவு மிகுதியானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்வோம். ஆனால், மனதை அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லையே என்று நினைக்கக் கூடும். அது உண்மைதான். எனினும், நம் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பழக்கங்களால் ஏற்படுபவையேயாகும். இந்தப் பழக்கங்கள் மூலமாகவே எண்ணங்கள் செயலாக பரிணமித்து நடைபெறுகின்றன. எனவே மனம் அமைதியாக விளங்கவும் நாம் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் அதன் இயக்கம் புலன் சார்ந்த புற விசயங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. எனவே அதை மடைமாற்றம் செய்து உள்முகமாகத் திருப்பி விடும் பொழுது பழைய பழக்கங்கள் மறைந்து மனம் ஒரே நிலையில் இருக்க, இயங்கப் பழகிக் கொள்ளும். மனச் சிதறல் எனப்படும் பலவிதமான எண்ணங்களின் எழுச்சியிலிருந்து நாம் விடுபடலாம். இதனால் மனத் தெளிவும், புத்தி கூர்மையும் ஏற்படும். மனத் தெளிவு என்பது சித்தத்தில் சலனமற்ற நிலையை உருவாக்கும், புத்தி கூர்மையென்பது சலனமற்ற சித்தத்தின் உள்ளே துலங்கும் ஆன்பமாவை பிரதிபலிக்கும். 

ஆன்ம ஒளி அறிவில் பிரிதிபலிப்பதே அறிவொளி எனப்படுகிறது. அறிவில் பிரகாசம் உடையவர்களே ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள். தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தியானம் செய்து வரும் பொழுது அது நமக்கு வெற்றிகரமான, சிக்கலற்ற நல் வாழ்வை அமைத்துத் தரும். அதுவே மத்திம வயதைக் கடந்த ஓய்வு காலங்களில் மிக விரைவான ஆன்மிக மேம்பாட்டையும் பெற்றுத் தரும். ஏனென்றால் நாம் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் தியானப் பழக்கம் அப்பொழுது நமக்குக் கை கொடுக்கும். ஓய்வு எனும் பொழுது நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் தியானம் செய்ய ஏதுவாக அமையும். எனவே அறிவில் சிறந்த, முதிர்ந்த அனுபவ சாலியாக, ஞானியாக, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையவராக விளங்கலாம். மன அமைதியை ஏற்படுத்துவதற்காக பல யுக்திகளைக் கை கொள்வார்கள். எனவே பல விதமான தியான முறைகள் பேசப்படுகின்றன. எதுவும் குறைந்ததல்ல. எல்லாம் ஒவ்வொரு நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே குழப்பம் தேவையில்லை. நம் நடைமுறை வாழ்விற்கு ஏற்றார் போன்ற ஒரு முறையைப் பின்பற்றி குறைவற்ற நிறைவான மனிதராக விளங்குவோமாக.
நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேல் நாட்டிலும் கூட இது பற்றிய நம்பிக்கை உள்ளது. அவர்கள் சூக்கும சரீரங்களின் எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவால் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் சரீரத்தை அன்னமய கோசம் என்று சொல்கிறோம். அதற்கு சரியான வேளையில் சரியான விகிதத்தில் உணவு தரப்படவில்லை என்றால் அது வலுக்குன்றி பலவீனம் அடைகின்றது. அது போலவே பிராண சக்தி குறைவு படும் பொழுது பிராணமய கோசம் பலவீனமடைகிறது. இப்படி அடிப்படை ஆதார சக்தி குறைவுபடும் பொழுதோ, இயக்கம் கூடும் பொழுதோ, குறையும் பொழுதோ அந்தந்த சரீரங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை சக்தியாக இருப்பது ப்ராண சக்தியே ஆகும். இதில் நம் மனோமய கோசமானது பலவீனமடைவது ஏன் என்று பார்க்கும் பொழுது அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருப்பதினாலேயேயாகும். அதிகமாக உழைப்பதநினாலோ, நடப்பதினாலோ, ஓடுவதினாலோ நம் அன்னமய கோசம் களைப்படைந்து விடுவது போல, சில நேரங்களில் நம் மனோமய கோசமும் களைப்படைந்து விடுகிறது. ஆனால், அன்னமய கோசத்தின் களைப்பை உணர்ந்து கொள்கிற அளவு நாம் நம் மனோமய கோசத்தின் களைப்பை உணர்வதில்லை. இதனால் மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற நிலைகள் உருவாகி முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

உடல் சோர்வு நீங்க சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். அது போல மனதின் களைப்பு நீங்கவும் அதற்கு ஓய்வு அவசியமாகும். அதற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மனதை எந்த வித சிந்தனையுமின்றி அமைதியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பிராண சக்தி அடுத்தபடியாக சூக்குமமானதும், நம் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பதும் மனமேயாதலால், மனம் அமைதியாக இருப்பதால் மற்ற நான்கு கோசங்களுமே வலிமையடைகின்றன. அதனதன் சக்தி விரையங்கள் தவிர்க்கப்படுகின்றன. இவை வெவ்வேறு நிலைப் பாட்டையும், இயக்கங்களையும் கொண்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. ஒன்று பலவீனமடையும் பொழுது மற்றவைகளும் பலவீனமடைந்து விடுகின்றன. ஒன்று வலிமையடையும் பொழுது மற்றவைகளும் வலிமையடைகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று உள்முகமாகச் சூக்குமமாக விளங்குகின்றன. நன்றாகக் கவனித்தீர்களென்றால் இந்த ஐந்தில் நடுவில் மையமாக விளங்குவது மனமே என்பது தெளிவாகும். மனமே எல்லாவற்றிற்கும் மையமாக இருந்து கொண்டு பிராண சக்தியை ஏற்றுக் கொண்டு இயங்குகிறது. மனம் அமைதியாக இருந்தால் மற்றவைகளும் சலனமற்று மெதுவாக இயங்குகின்றன. இதனால் சக்தி விரையம் தவிர்க்கப்படுகிறது. எனவே அனைத்திலும் பிராண சக்தியின் திணிவு ஏற்பட்டு விடுகிறது. பிராணனின் திணிவு அதிகரிக்கும் பொழுது அது தங்கு தடையின்றி அனைத்து சரீரங்களிலும் பரவுகிறது. நாடி நரம்புகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் ஆதாரச் சக்கரங்கள் நன்கு சீராக இயங்கி நமக்கு அனைத்து பிரபஞ்ச சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன.

பிராண ஓட்டம் தங்கு தடையின்றி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவும் பொழுது, வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், காற்றோட்டம் போன்ற அனைத்தும் உடலெங்கும் ஒரே சீராகப் பரவுகின்றன. எனவே பஞ்ச பூதங்களாலான நம் சரீரத்தில் பஞ்ச பூத தன்மாத்திரைகளின் இயக்கங்களும் சீராகவும், செம்மையாகவும் நடைபெறுகின்றன. மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி கிடைப்பதால் அது நன்கு செயல்படுகிறது. எனவே மனதை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்வதால் ஏற்படும் பலன்கள் எவ்வளவு மிகுதியானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்வோம். ஆனால், மனதை அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லையே என்று நினைக்கக் கூடும். அது உண்மைதான். எனினும், நம் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பழக்கங்களால் ஏற்படுபவையேயாகும். இந்தப் பழக்கங்கள் மூலமாகவே எண்ணங்கள் செயலாக பரிணமித்து நடைபெறுகின்றன. எனவே மனம் அமைதியாக விளங்கவும் நாம் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் அதன் இயக்கம் புலன் சார்ந்த புற விசயங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. எனவே அதை மடைமாற்றம் செய்து உள்முகமாகத் திருப்பி விடும் பொழுது பழைய பழக்கங்கள் மறைந்து மனம் ஒரே நிலையில் இருக்க, இயங்கப் பழகிக் கொள்ளும். மனச் சிதறல் எனப்படும் பலவிதமான எண்ணங்களின் எழுச்சியிலிருந்து நாம் விடுபடலாம். இதனால் மனத் தெளிவும், புத்தி கூர்மையும் ஏற்படும். மனத் தெளிவு என்பது சித்தத்தில் சலனமற்ற நிலையை உருவாக்கும், புத்தி கூர்மையென்பது சலனமற்ற சித்தத்தின் உள்ளே துலங்கும் ஆன்பமாவை பிரதிபலிக்கும்.

ஆன்ம ஒளி அறிவில் பிரிதிபலிப்பதே அறிவொளி எனப்படுகிறது. அறிவில் பிரகாசம் உடையவர்களே ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள். தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தியானம் செய்து வரும் பொழுது அது நமக்கு வெற்றிகரமான, சிக்கலற்ற நல் வாழ்வை அமைத்துத் தரும். அதுவே மத்திம வயதைக் கடந்த ஓய்வு காலங்களில் மிக விரைவான ஆன்மிக மேம்பாட்டையும் பெற்றுத் தரும். ஏனென்றால் நாம் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் தியானப் பழக்கம் அப்பொழுது நமக்குக் கை கொடுக்கும். ஓய்வு எனும் பொழுது நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் தியானம் செய்ய ஏதுவாக அமையும். எனவே அறிவில் சிறந்த, முதிர்ந்த அனுபவ சாலியாக, ஞானியாக, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையவராக விளங்கலாம். மன அமைதியை ஏற்படுத்துவதற்காக பல யுக்திகளைக் கை கொள்வார்கள். எனவே பல விதமான தியான முறைகள் பேசப்படுகின்றன. எதுவும் குறைந்ததல்ல. எல்லாம் ஒவ்வொரு நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே குழப்பம் தேவையில்லை. நம் நடைமுறை வாழ்விற்கு ஏற்றார் போன்ற ஒரு முறையைப் பின்பற்றி குறைவற்ற நிறைவான மனிதராக விளங்குவோமாக.

No comments:

Post a Comment