Wednesday, April 9, 2014

எது நல்லது ? எது கெட்டது ?

Photo: நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்லை என்றும் சொல்லிக் கொள்பவன் சோம்பேறி. நம்மைப் படைக்கும் முன்பே நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்து வைத்து விட்டது பிரபஞ்சம். ஒவ்வொன்றாகச் சீரமைத்துச் சீரமைத்துக் கடைசியாகவே நம்மைப் படைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எதையெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றோ, துன்பம் தரக்கூடியத் என்றோ அது புறக்கணித்து வைத்ததோ, அவற்றைய எல்லாம் நாம் பற்றிக் கொண்டு பிரபஞ்சத்தோடு முரண்பட்டுப் போகிறோம். அது நமக்காக சீரமைத்து, வடிவமைத்துத் தந்த நல்ல விஷயங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். அது நமக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், நாமோ புலன்களுக்கும், புலனிச்சைகளுக்கும் அடிமைகளாகி நம் சுயேச்சையை இழந்து கொத்தடிமைகளைப் போல அல்லல்பட்டு மாய்ந்து போகிறோம். எது நல்லது ? எது கெட்டது ? என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளியாமல் அறியாமை இருளில் முடங்கிக் கிடக்கிறோம். பொய்யின் உதவியோடு உண்மையைத் தேடுகிறோம். துன்பத்தின் உதவி கொண்டு இன்பத்தை அடைய நினைக்கிறோம். 

கண்ணிருந்தும் குருடாய், கை, கால்களிருந்தும் முடமாய், அவநம்பிக்கை எனும் ஓட்டைப் படகில் ஏறி வாழ்க்கை எனும் நதியைக் கடக்க நினைக்கிறோம். செயல்களை நாம் செய்து விட்டு எல்லாம் விதி என்கிறோம். கண்ணெதிரே விளக்கை விட்டு விட்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற விழைகிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் செய்து விட்டுக் கடவுளுக்குக் கண்ணில்லையே என்கிறோம். சிறு வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. வாலிபன் ஒருவன் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சலசலப்பு கேட்கவே, சுற்றுமுற்றும் பார்க்கிறான். பாதை ஓரத்தில் ஒரு புதரில் இருந்தே அந்த சப்தம் வந்ததை உணர்கிறான். மீண்டும் மீண்டும் புதர் அசைவதைக் கண்ட அவன் அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் கொண்டு புதரை விலக்கிப் பார்க்கிற பொழுது, அங்கே ஒரு கொழுத்த நரி படுத்துக் கிடந்தது. அதற்கு நான்கு காலுமே ஊனமாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. நான்கு காலும் இல்லாத இந்த நரி எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது என்று யோசித்தான். எனவே அவன் ஒரு மரத்தின் மீது ஏறிகமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தான். 

சிறிது நேரம் கழித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிங்கம் ஒன்று ஒரு முயலைக் கவ்விக் கொண்டு வந்து நரியின் முன் போட்டு விட்டுப் போனது. வாலிபனுக்கு ஒரே அதிசயமாகி விட்டது. என்னே கடவுளின் கருணை ! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுள் உணவளிப்பார் என்று சொல்வது சரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அப்பொழுது அவன், காலில்லாத நரியைக் கூட இவ்விதமாகக் காக்கும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார்தானே ? அவர் என்னை எப்படி காப்பாற்றுவார் என்று பார்க்கப் போகிறேன். எனவே இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன். நரிக்கு உணவளிப்பது போல எனக்கும் எப்படியாவது இறைவன் உணவளிக்கட்டுமே என்று நினைத்தான். உடனே வேலைக்குச் செல்லாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். ஒரு நாள் கடந்தது, இரண்டு நாட்கள் கடந்தது யாரும் அவனுக்கு உணவளிக்க வரவேயில்லை. மூன்றாம் நாளும் வந்தது. பசியின் வேதனை அதிகரித்தது. உணவு கிடைக்கவில்லை. மனம் சோர்வடைந்தான். அவனுக்குக் கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. கடவுள் இரக்கமில்லாதவன். கண்ணில்லாதவன். கால்களை இழந்த ஒரு நரிக்கு உணவு படைக்கும் அவன் இத்தனை காலம் அவருடைய பக்தனாக இருந்த என்னை ஏமாற்றி விட்டான், என்று மனதிற்குள் வசை பாடினான். 

இறுதியில் அசதி ஏற்படவே எப்படியோ தூங்கிப் போனான். திடீரென்று யாரோ அவனை எழுப்புவது போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தால், எதிரே ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் நின்றிருந்தார்கள். இவன் இப்படி மெலிந்து போய் சோர்வாகப் படுத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். உடல் நலமில்லையா என்று பதறினார்கள். அவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அப்பொழுது அவன் தாயார் அவனை எழுப்பி அமரச் செய்து கொஞ்சம் கஞ்சி தயார் செய்து குடிக்க வைத்து விட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். மகனே நீ காட்டில் கால் இழந்த நரியைப் பார்த்தாய். அதற்கு உணவளிக்கும் சிங்கத்தையும் பார்த்தாய். நரியைப் பின்பற்ற நினைத்த நீ ஏன் சிங்கத்தை பின்பற்ற மறந்தாய். நரியோ ஊனமுற்றது. நீயோ சிங்கத்தைப் போல ஊனமேதுமில்லாத வாலிபன். இதை நீ ஏன் மறந்தாய் ? ஊனமுற்றவர்களைக் காக்கவே ஊனமேதுமில்லாத பலமுள்ளவர்களைக் கடவுள் படைத்துள்ளார். ஊனமுற்றுக் கிடக்கும் மனித சமுதாயத்தைக் காக்கவே கடவுள் உன்னை ஊனமற்றவனாகப் படைத்துள்ளார். எனவே நீ எழுந்து சென்று கால்களற்ற நரியைப் போலத் துன்புற்றுக் கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்று என்று தெளிவாகக் கணீரென்று விளக்கினார்கள். அவன் மனமும் தெளிவடைந்தது. எழுந்து முகம் கழுவி வரச் சென்றான். அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தாயார் திறப்பார்கள் என்று நினைத்து பேசாமல் இருந்தான். மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்த அவன் தாயார் எங்கு சென்றார்கள் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் அங்கு பைகளைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ந்தார்கள். 

வந்து தனக்கு உணவளித்து தன் மனதைத் தெளிவித்தது கடவுள்தான் என்று உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. இது கதைதான். ஆனால், சொல்கிற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவருமே கால்களை இழந்த நரியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அந்த நரிக்குக் கடவுளாக நின்று காப்பாற்றும் சிங்கத்திடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மனம் எதைப் பற்றுகிறதோ அதுவாகவே மாறும் என்பதை உணர்ந்து நரிகளாக மாறுவதை மறந்து சிங்கங்களாக மாறி ஊனங்களைக் களைவோமாக.
நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்லை என்றும் சொல்லிக் கொள்பவன் சோம்பேறி. நம்மைப் படைக்கும் முன்பே நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்து வைத்து விட்டது பிரபஞ்சம். ஒவ்வொன்றாகச் சீரமைத்துச் சீரமைத்துக் கடைசியாகவே நம்மைப் படைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எதையெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றோ, துன்பம் தரக்கூடியத் என்றோ அது புறக்கணித்து வைத்ததோ, அவற்றைய எல்லாம் நாம் பற்றிக் கொண்டு பிரபஞ்சத்தோடு முரண்பட்டுப் போகிறோம். அது நமக்காக சீரமைத்து, வடிவமைத்துத் தந்த நல்ல விஷயங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். அது நமக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், நாமோ புலன்களுக்கும், புலனிச்சைகளுக்கும் அடிமைகளாகி நம் சுயேச்சையை இழந்து கொத்தடிமைகளைப் போல அல்லல்பட்டு மாய்ந்து போகிறோம். எது நல்லது ? எது கெட்டது ? என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளியாமல் அறியாமை இருளில் முடங்கிக் கிடக்கிறோம். பொய்யின் உதவியோடு உண்மையைத் தேடுகிறோம். துன்பத்தின் உதவி கொண்டு இன்பத்தை அடைய நினைக்கிறோம்.

கண்ணிருந்தும் குருடாய், கை, கால்களிருந்தும் முடமாய், அவநம்பிக்கை எனும் ஓட்டைப் படகில் ஏறி வாழ்க்கை எனும் நதியைக் கடக்க நினைக்கிறோம். செயல்களை நாம் செய்து விட்டு எல்லாம் விதி என்கிறோம். கண்ணெதிரே விளக்கை விட்டு விட்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற விழைகிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் செய்து விட்டுக் கடவுளுக்குக் கண்ணில்லையே என்கிறோம். சிறு வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. வாலிபன் ஒருவன் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சலசலப்பு கேட்கவே, சுற்றுமுற்றும் பார்க்கிறான். பாதை ஓரத்தில் ஒரு புதரில் இருந்தே அந்த சப்தம் வந்ததை உணர்கிறான். மீண்டும் மீண்டும் புதர் அசைவதைக் கண்ட அவன் அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் கொண்டு புதரை விலக்கிப் பார்க்கிற பொழுது, அங்கே ஒரு கொழுத்த நரி படுத்துக் கிடந்தது. அதற்கு நான்கு காலுமே ஊனமாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. நான்கு காலும் இல்லாத இந்த நரி எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது என்று யோசித்தான். எனவே அவன் ஒரு மரத்தின் மீது ஏறிகமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிங்கம் ஒன்று ஒரு முயலைக் கவ்விக் கொண்டு வந்து நரியின் முன் போட்டு விட்டுப் போனது. வாலிபனுக்கு ஒரே அதிசயமாகி விட்டது. என்னே கடவுளின் கருணை ! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுள் உணவளிப்பார் என்று சொல்வது சரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அப்பொழுது அவன், காலில்லாத நரியைக் கூட இவ்விதமாகக் காக்கும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார்தானே ? அவர் என்னை எப்படி காப்பாற்றுவார் என்று பார்க்கப் போகிறேன். எனவே இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன். நரிக்கு உணவளிப்பது போல எனக்கும் எப்படியாவது இறைவன் உணவளிக்கட்டுமே என்று நினைத்தான். உடனே வேலைக்குச் செல்லாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். ஒரு நாள் கடந்தது, இரண்டு நாட்கள் கடந்தது யாரும் அவனுக்கு உணவளிக்க வரவேயில்லை. மூன்றாம் நாளும் வந்தது. பசியின் வேதனை அதிகரித்தது. உணவு கிடைக்கவில்லை. மனம் சோர்வடைந்தான். அவனுக்குக் கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. கடவுள் இரக்கமில்லாதவன். கண்ணில்லாதவன். கால்களை இழந்த ஒரு நரிக்கு உணவு படைக்கும் அவன் இத்தனை காலம் அவருடைய பக்தனாக இருந்த என்னை ஏமாற்றி விட்டான், என்று மனதிற்குள் வசை பாடினான்.

இறுதியில் அசதி ஏற்படவே எப்படியோ தூங்கிப் போனான். திடீரென்று யாரோ அவனை எழுப்புவது போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தால், எதிரே ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் நின்றிருந்தார்கள். இவன் இப்படி மெலிந்து போய் சோர்வாகப் படுத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். உடல் நலமில்லையா என்று பதறினார்கள். அவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அப்பொழுது அவன் தாயார் அவனை எழுப்பி அமரச் செய்து கொஞ்சம் கஞ்சி தயார் செய்து குடிக்க வைத்து விட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். மகனே நீ காட்டில் கால் இழந்த நரியைப் பார்த்தாய். அதற்கு உணவளிக்கும் சிங்கத்தையும் பார்த்தாய். நரியைப் பின்பற்ற நினைத்த நீ ஏன் சிங்கத்தை பின்பற்ற மறந்தாய். நரியோ ஊனமுற்றது. நீயோ சிங்கத்தைப் போல ஊனமேதுமில்லாத வாலிபன். இதை நீ ஏன் மறந்தாய் ? ஊனமுற்றவர்களைக் காக்கவே ஊனமேதுமில்லாத பலமுள்ளவர்களைக் கடவுள் படைத்துள்ளார். ஊனமுற்றுக் கிடக்கும் மனித சமுதாயத்தைக் காக்கவே கடவுள் உன்னை ஊனமற்றவனாகப் படைத்துள்ளார். எனவே நீ எழுந்து சென்று கால்களற்ற நரியைப் போலத் துன்புற்றுக் கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்று என்று தெளிவாகக் கணீரென்று விளக்கினார்கள். அவன் மனமும் தெளிவடைந்தது. எழுந்து முகம் கழுவி வரச் சென்றான். அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தாயார் திறப்பார்கள் என்று நினைத்து பேசாமல் இருந்தான். மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்த அவன் தாயார் எங்கு சென்றார்கள் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் அங்கு பைகளைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ந்தார்கள்.

வந்து தனக்கு உணவளித்து தன் மனதைத் தெளிவித்தது கடவுள்தான் என்று உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. இது கதைதான். ஆனால், சொல்கிற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவருமே கால்களை இழந்த நரியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அந்த நரிக்குக் கடவுளாக நின்று காப்பாற்றும் சிங்கத்திடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மனம் எதைப் பற்றுகிறதோ அதுவாகவே மாறும் என்பதை உணர்ந்து நரிகளாக மாறுவதை மறந்து சிங்கங்களாக மாறி ஊனங்களைக் களைவோமாக.

No comments:

Post a Comment