Wednesday, April 9, 2014

நம்பிக்"கை"யே இறைவனின் "கை"..

Photo: நம்பிக்கை தான் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து விடும் மூச்சு நமக்கு சொந்தமா ? நாம் பிழைத்திருப்போமா என்பதும் யாருக்கும் தெரியது. ஆனாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும், நம் வாழ்க்கை அனுபவங்களின் பெரும் பகுதிகளில் நாம் நம்பிக்கை சிதைக்கப்பட்டவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கிறோம். இதனால் எதை நம்புவது, யாரை நம்புவது என்ற கேள்விக்கு விடை காணுவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விடுகின்றது. கணவனை மனைவி நம்புகிறாள், மனைவியைக் கணவன் நம்புகிறான், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புகின்றன, பிள்ளைகளைப் பெற்றோர் நம்புகின்றனர், நண்பர்கள், உற்றார், உறவினர், முதலாளி, தொழிலாளி என்று எல்லாத் தரப்பிலும் ஒருவருக்கொருவர்  நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நம்பிக்கை துரோகம் இல்லாத களம் வெகு குறைவே. தன்னை பாதுகாத்துக் கொள்ளவோ, தான் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கொள்வதற்காகவோ, சுய நலம் முன்னிட்டோ எல்லாத் தரப்பினிலும் துரோகம் காணப்படுகிறது. எனவே நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கிறோம். பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் போவதால், எந்த விஷயத்திலும் தைரியமாக, முழு மனதோடு ஈடுபடமுடியாமல் போய் விடுவதால் முடிவில் தானும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவே ஆகி விடுகிறோம்.

எதை இழந்தாலும் ஒருவன் தனது தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது. தன்னம்பிக்கை இருப்பவனிடத்து மன உறுதியும், அறிவில் தெளிவும் இயல்பாகவே அமைந்து விடும். எனவே அப்படிப்பட்டவர்களை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஏனெனில் தன்னம்பிக்கை இருப்பவர்களிடத்தில்தான் தன்முயற்சி மிகுந்து காணப்படும். ஆனால், இந்த உலகில் ஒரு போதும் நம்மை ஏமாற்றாத நம்பிக்கை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அதுதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை என்பது செயல்களால் நிகழ்வது அல்ல. அது மனதிற்குள் ஏற்படுவது. மனம் பரிபக்குவமடைந்த உண்மையான தெய்வ நம்பிக்கை உடையவர்கள் செயல்களில் தீமையே இருக்காது. எனவே அவர்கள் வினைகளின் விளைவுகளாகிய வாழ்வில் துன்பமோ, ஏமாற்றமோ ஒரு போதும் ஏற்படாது. இதைக் குறித்து நம் முன்னோர்கள் பல தெளிவுகளை ஆதாரங்களை நமக்குத் தந்திருந்தாலும், நாம் அவற்றையும் நம்பியும், நம்பாமலும் எண்ணற்றக் கேள்விகளோடு அவநம்பிக்கை கொண்டே விளங்குகிறோம். அவர்கள் கூறியவற்றைக் குறித்து ஆராய முற்படுகிறோமே தவிர, அவர்கள் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வதில்லை. ஒரு சில இடங்களில் தெய்வ  கைங்கரியங்கள் செய்கிறவர்கள் கூட அவ நம்பிக்கையோடு கைங்கரியத்தை ஒரு தொழிலாகவே செய்கிற நிலைமை காணப்படுகிறது. இது வருந்தத்தக்க விஷயமாகும். தெய்வ நம்பிக்கை என்பது பல விதங்களில் காணப்படுகிறது. ஆனால், எல்லா விதமான நம்பிக்கைகளும் மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவே தரப்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. 

ஒரு ஏழை விதவைத்தாய் தன் மகனை எப்படியாவது மிகச் சிறந்த கல்விமானாக ஆக்க வேண்டும் என்று விரும்பினாள். பள்ளிக் கூடமோ தூரத்தில் இருந்து. அங்கு செல்ல வேண்டுமென்றால் வழியில் உள்ள ஒரு காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லாமல் அவனை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தாள். முதல் நாள் அவள் துணை இருந்ததால் பிரச்சனையில்லாமல் போயிற்று. ஆனால், மறுநாளோ அந்தச் சிறுவன் காட்டைக் கடந்து சென்று வரும் பொழுது மிகவும் பயந்து காய்ச்சலே வந்து விட்டது. உடல் குணமாகி மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமான பொழுது, அவன் தன் தாயைத் துணைக்கு அழைத்தான். அவளோ, மகனே நானும் வேலைக்குச் செல்லாமல் உன்னுடன் வந்து விட்டால் உணவுக்கு என்ன செய்வது ? எனவே பயப்படாதே. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை. நீ அஞ்சாதே. நீ காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பிக்கும் பொழுது ''கண்ணா'' என்று கூப்பிடு. அவன் உனக்குத் துணையாக வருவான் என்று பலவாறாகத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள். அவனும் சரியென்று சொல்லி தைரியமாகப் புறப்பட்டுப் போனான். நாட்கள் கடந்து போயின இந்நிலையில் ஒரு நாள் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வந்தது. எல்லோரும் அவரவர் தகுதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப பரிசுப் பொருட்களை வாங்கிப் பெயரெழுதி மேசையில் வைத்து விட்டனர். அந்த ஏழைச் சிறுவனோ  பால் நிரம்பிய ஒரு மண் சாடியைக் கொண்டு போய் மேசையில் வைத்தான். 

ஆசிரியர் வந்து அனைத்து பரிசுப் பொருட்களையும் பார்த்து மகிழ்ந்து போனார். அப்பொழுது அந்த மண் சாடி அவர் கண்ணில் பட்டது. உடனே வெறுப்போடு பணியாளரைக் கூப்பிட்டு இதைக் கொண்டு போய் வெளியில் போடு என்றார். பணியாளரோ பாலை வீணாக்க வேண்டாமே என்று எண்ணி அதைக் கொண்டு போய் சமையலறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். ஆனால், அதிசயமாக பாலை ஊற்ற ஊற்ற வந்து கொண்டே இருந்தது. சாடியில் பால் வற்றவே இல்லை. பணியாளர் பயந்து போய் ஆசிரியரிடத்தில் விவரத்தைக் கூறினார். ஆசிரியரும் வந்து பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தார். இது எப்படி சாத்தியம் என்று அவருக்கு ஒரே குழப்பமாகி விட்டது. உடனே வகுப்பறைக்கு வந்து இந்தப் பால் சாடியைக் கொண்டு வந்தது யார் ? என்று வினவினார். அந்த ஏழைச் சிறுவன் தான் கொண்டு வந்ததாகத் தெரிவித்தான். உனக்கு இது எவ்வாறு கிடைத்தது ? என்று கேட்டார். அவன் சொன்னான் எனக்கு பள்ளிக் கூடம் செல்வதற்குத் துணையாக வரும் கண்ணன் என்கிற சிறுவன் தந்ததாகச் சொன்னான். அவன் யார் ? உனக்குத் தெரிந்தவனா ? என்று ஆசிரியர் கேட்கவே, அவனும் தன் தாய் ஆரம்பத்தில் தன்னிடம் சொன்னபடி தினமும் காட்டுப் பகுதி வந்தவுடன் தான் ''கண்ணா'' என்று அழைப்பதாகவும், உடனே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தனக்குத் துணையாக வருவதாகவும், உங்கள் பிறந்தநாள் பரிசு வாங்க என் தாயிடம் பணம் கேட்ட பொழுது, அவர்கள் இல்லையென்று சொல்லவே, தான் மிகவும் வருத்தமுடன் இருந்ததாகவும், அதைக் கண்ட சிறுவன் காரணத்தைக் கேட்டறிந்து இந்த பால் சாடியைப் பரிசாகத் தந்ததாகவும் தெரிவித்தான். 

ஆசிரியர் அவன் சொன்னதை நம்பவில்லை. பொய் சொல்லாதே உண்மையைச் சொல் என்று மிரட்டினார். இதை எந்த மந்திரவாதியிடமிருந்து வாங்கி வந்தாய் ? என்று பிரம்பால் அடித்தார். சிறுவன் பயந்து போய் தாங்கள் என்னுடன் வாருங்கள் நான் கண்ணனைக் காட்டுகிறேன் என்று சொன்னான். உடனே ஆசிரியரும் அவனை அழைத்துக் கொண்டு காட்டு வழியின் துவக்கப் பகுதிக்குச் சென்றார். கண்ணனைக் கூப்பிடு பார்ப்போம் என்றார். ஏழைச் சிறுவனும் ''கண்ணா'' ''கண்ணா'' என்று பலமுறை அழைத்தான். கண்ணன் வரவேயில்லை. அவனுக்கு அழுகையாக வந்தது. கண்ணா நீ வரவில்லை என்றால் ஆசிரியர் என்னை நம்ப மாட்டார். நான் பொய்யன் என்று எண்ணி என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டார். எனவே வந்து விடு என்று கதறி அழுதான். ஆசிரியர் அவனை ஏளனமாகப் பார்த்தார். திடீரென்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நண்பா உன்னுடைய உள்ளம் தூய்மாயானது. கள்ளம் கபடமற்றது. எனவே நீ அழைத்ததால் நான் வந்தேன். ஆனால், உன் ஆசிரியரின் மனமோ அப்படிப்பட்டதன்று. அவர் நீ சொன்னதை நம்பவில்லை. நான் வந்தாலும் என்னையும் அவர் நம்ப மாட்டார். இப்படிப்பட்ட அவநம்பிக்கை கொண்டவர்களிடத்திற்கு நான் வரவே மாட்டேன் என்றது.  ஆசிரியர் வெட்கமடைந்தார். அந்த மாணவனை தன் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைப்பதாக அழைத்துச் சென்றார். இது ஒரு பழைய கதை. கதையின் கரு என்ன என்பது மட்டுமே நமக்கு முக்கியம். ஆகவே, களங்கமில்லாத உண்மையான நம்பிக்கை உள்ளவர்களுக்கு எந்நிலையிலும் இறைவனின் துணை கிடைக்கும் என்பதே கருத்து. 

எத்தெந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்தெந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன். - கீதை அத் 8, சுலோ 21. 
எனவே நம்பிக்கையை அழிவற்ற இறைவன் மேல் வைப்பவர்கள் ஒருபோதும் துன்பப்படுவதில்லை. அதைத் தவிர மற்ற அனைத்து நம்பிக்கைகளும் நிலை மாறக் கூடியவைகளே. இறைவனை வடிவமாகவோ, வடிவமற்றவனாகவோ, ஆற்றல் மிகு சக்தியாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள். ஆனால், நம்பிக்கையை மட்டும் எந்த வித மாறுதலுமில்லாமல் நிலையாகப் பிடித்துக் கொள். நீ கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கையாகும். அது ஒருநாளும் நம்பியவரைக் கைவிட்டதில்லை.
நம்பிக்கை தான் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து விடும் மூச்சு நமக்கு சொந்தமா ? நாம் பிழைத்திருப்போமா என்பதும் யாருக்கும் தெரியது. ஆனாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும், நம் வாழ்க்கை அனுபவங்களின் பெரும் பகுதிகளில் நாம் நம்பிக்கை சிதைக்கப்பட்டவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கிறோம். இதனால் எதை நம்புவது, யாரை நம்புவது என்ற கேள்விக்கு விடை காணுவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விடுகின்றது. கணவனை மனைவி நம்புகிறாள், மனைவியைக் கணவன் நம்புகிறான், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புகின்றன, பிள்ளைகளைப் பெற்றோர் நம்புகின்றனர், நண்பர்கள், உற்றார், உறவினர், முதலாளி, தொழிலாளி என்று எல்லாத் தரப்பிலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நம்பிக்கை துரோகம் இல்லாத களம் வெகு குறைவே. தன்னை பாதுகாத்துக் கொள்ளவோ, தான் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கொள்வதற்காகவோ, சுய நலம் முன்னிட்டோ எல்லாத் தரப்பினிலும் துரோகம் காணப்படுகிறது. எனவே நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கிறோம். பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் போவதால், எந்த விஷயத்திலும் தைரியமாக, முழு மனதோடு ஈடுபடமுடியாமல் போய் விடுவதால் முடிவில் தானும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவே ஆகி விடுகிறோம்.

எதை இழந்தாலும் ஒருவன் தனது தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது. தன்னம்பிக்கை இருப்பவனிடத்து மன உறுதியும், அறிவில் தெளிவும் இயல்பாகவே அமைந்து விடும். எனவே அப்படிப்பட்டவர்களை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஏனெனில் தன்னம்பிக்கை இருப்பவர்களிடத்தில்தான் தன்முயற்சி மிகுந்து காணப்படும். ஆனால், இந்த உலகில் ஒரு போதும் நம்மை ஏமாற்றாத நம்பிக்கை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அதுதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை என்பது செயல்களால் நிகழ்வது அல்ல. அது மனதிற்குள் ஏற்படுவது. மனம் பரிபக்குவமடைந்த உண்மையான தெய்வ நம்பிக்கை உடையவர்கள் செயல்களில் தீமையே இருக்காது. எனவே அவர்கள் வினைகளின் விளைவுகளாகிய வாழ்வில் துன்பமோ, ஏமாற்றமோ ஒரு போதும் ஏற்படாது. இதைக் குறித்து நம் முன்னோர்கள் பல தெளிவுகளை ஆதாரங்களை நமக்குத் தந்திருந்தாலும், நாம் அவற்றையும் நம்பியும், நம்பாமலும் எண்ணற்றக் கேள்விகளோடு அவநம்பிக்கை கொண்டே விளங்குகிறோம். அவர்கள் கூறியவற்றைக் குறித்து ஆராய முற்படுகிறோமே தவிர, அவர்கள் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வதில்லை. ஒரு சில இடங்களில் தெய்வ கைங்கரியங்கள் செய்கிறவர்கள் கூட அவ நம்பிக்கையோடு கைங்கரியத்தை ஒரு தொழிலாகவே செய்கிற நிலைமை காணப்படுகிறது. இது வருந்தத்தக்க விஷயமாகும். தெய்வ நம்பிக்கை என்பது பல விதங்களில் காணப்படுகிறது. ஆனால், எல்லா விதமான நம்பிக்கைகளும் மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவே தரப்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏழை விதவைத்தாய் தன் மகனை எப்படியாவது மிகச் சிறந்த கல்விமானாக ஆக்க வேண்டும் என்று விரும்பினாள். பள்ளிக் கூடமோ தூரத்தில் இருந்து. அங்கு செல்ல வேண்டுமென்றால் வழியில் உள்ள ஒரு காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லாமல் அவனை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தாள். முதல் நாள் அவள் துணை இருந்ததால் பிரச்சனையில்லாமல் போயிற்று. ஆனால், மறுநாளோ அந்தச் சிறுவன் காட்டைக் கடந்து சென்று வரும் பொழுது மிகவும் பயந்து காய்ச்சலே வந்து விட்டது. உடல் குணமாகி மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமான பொழுது, அவன் தன் தாயைத் துணைக்கு அழைத்தான். அவளோ, மகனே நானும் வேலைக்குச் செல்லாமல் உன்னுடன் வந்து விட்டால் உணவுக்கு என்ன செய்வது ? எனவே பயப்படாதே. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை. நீ அஞ்சாதே. நீ காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பிக்கும் பொழுது ''கண்ணா'' என்று கூப்பிடு. அவன் உனக்குத் துணையாக வருவான் என்று பலவாறாகத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள். அவனும் சரியென்று சொல்லி தைரியமாகப் புறப்பட்டுப் போனான். நாட்கள் கடந்து போயின இந்நிலையில் ஒரு நாள் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வந்தது. எல்லோரும் அவரவர் தகுதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப பரிசுப் பொருட்களை வாங்கிப் பெயரெழுதி மேசையில் வைத்து விட்டனர். அந்த ஏழைச் சிறுவனோ பால் நிரம்பிய ஒரு மண் சாடியைக் கொண்டு போய் மேசையில் வைத்தான்.

ஆசிரியர் வந்து அனைத்து பரிசுப் பொருட்களையும் பார்த்து மகிழ்ந்து போனார். அப்பொழுது அந்த மண் சாடி அவர் கண்ணில் பட்டது. உடனே வெறுப்போடு பணியாளரைக் கூப்பிட்டு இதைக் கொண்டு போய் வெளியில் போடு என்றார். பணியாளரோ பாலை வீணாக்க வேண்டாமே என்று எண்ணி அதைக் கொண்டு போய் சமையலறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். ஆனால், அதிசயமாக பாலை ஊற்ற ஊற்ற வந்து கொண்டே இருந்தது. சாடியில் பால் வற்றவே இல்லை. பணியாளர் பயந்து போய் ஆசிரியரிடத்தில் விவரத்தைக் கூறினார். ஆசிரியரும் வந்து பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தார். இது எப்படி சாத்தியம் என்று அவருக்கு ஒரே குழப்பமாகி விட்டது. உடனே வகுப்பறைக்கு வந்து இந்தப் பால் சாடியைக் கொண்டு வந்தது யார் ? என்று வினவினார். அந்த ஏழைச் சிறுவன் தான் கொண்டு வந்ததாகத் தெரிவித்தான். உனக்கு இது எவ்வாறு கிடைத்தது ? என்று கேட்டார். அவன் சொன்னான் எனக்கு பள்ளிக் கூடம் செல்வதற்குத் துணையாக வரும் கண்ணன் என்கிற சிறுவன் தந்ததாகச் சொன்னான். அவன் யார் ? உனக்குத் தெரிந்தவனா ? என்று ஆசிரியர் கேட்கவே, அவனும் தன் தாய் ஆரம்பத்தில் தன்னிடம் சொன்னபடி தினமும் காட்டுப் பகுதி வந்தவுடன் தான் ''கண்ணா'' என்று அழைப்பதாகவும், உடனே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தனக்குத் துணையாக வருவதாகவும், உங்கள் பிறந்தநாள் பரிசு வாங்க என் தாயிடம் பணம் கேட்ட பொழுது, அவர்கள் இல்லையென்று சொல்லவே, தான் மிகவும் வருத்தமுடன் இருந்ததாகவும், அதைக் கண்ட சிறுவன் காரணத்தைக் கேட்டறிந்து இந்த பால் சாடியைப் பரிசாகத் தந்ததாகவும் தெரிவித்தான்.

ஆசிரியர் அவன் சொன்னதை நம்பவில்லை. பொய் சொல்லாதே உண்மையைச் சொல் என்று மிரட்டினார். இதை எந்த மந்திரவாதியிடமிருந்து வாங்கி வந்தாய் ? என்று பிரம்பால் அடித்தார். சிறுவன் பயந்து போய் தாங்கள் என்னுடன் வாருங்கள் நான் கண்ணனைக் காட்டுகிறேன் என்று சொன்னான். உடனே ஆசிரியரும் அவனை அழைத்துக் கொண்டு காட்டு வழியின் துவக்கப் பகுதிக்குச் சென்றார். கண்ணனைக் கூப்பிடு பார்ப்போம் என்றார். ஏழைச் சிறுவனும் ''கண்ணா'' ''கண்ணா'' என்று பலமுறை அழைத்தான். கண்ணன் வரவேயில்லை. அவனுக்கு அழுகையாக வந்தது. கண்ணா நீ வரவில்லை என்றால் ஆசிரியர் என்னை நம்ப மாட்டார். நான் பொய்யன் என்று எண்ணி என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டார். எனவே வந்து விடு என்று கதறி அழுதான். ஆசிரியர் அவனை ஏளனமாகப் பார்த்தார். திடீரென்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நண்பா உன்னுடைய உள்ளம் தூய்மாயானது. கள்ளம் கபடமற்றது. எனவே நீ அழைத்ததால் நான் வந்தேன். ஆனால், உன் ஆசிரியரின் மனமோ அப்படிப்பட்டதன்று. அவர் நீ சொன்னதை நம்பவில்லை. நான் வந்தாலும் என்னையும் அவர் நம்ப மாட்டார். இப்படிப்பட்ட அவநம்பிக்கை கொண்டவர்களிடத்திற்கு நான் வரவே மாட்டேன் என்றது. ஆசிரியர் வெட்கமடைந்தார். அந்த மாணவனை தன் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைப்பதாக அழைத்துச் சென்றார். இது ஒரு பழைய கதை. கதையின் கரு என்ன என்பது மட்டுமே நமக்கு முக்கியம். ஆகவே, களங்கமில்லாத உண்மையான நம்பிக்கை உள்ளவர்களுக்கு எந்நிலையிலும் இறைவனின் துணை கிடைக்கும் என்பதே கருத்து.

எத்தெந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்தெந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன். - கீதை அத் 8, சுலோ 21.
எனவே நம்பிக்கையை அழிவற்ற இறைவன் மேல் வைப்பவர்கள் ஒருபோதும் துன்பப்படுவதில்லை. அதைத் தவிர மற்ற அனைத்து நம்பிக்கைகளும் நிலை மாறக் கூடியவைகளே. இறைவனை வடிவமாகவோ, வடிவமற்றவனாகவோ, ஆற்றல் மிகு சக்தியாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள். ஆனால், நம்பிக்கையை மட்டும் எந்த வித மாறுதலுமில்லாமல் நிலையாகப் பிடித்துக் கொள். நீ கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கையாகும். அது ஒருநாளும் நம்பியவரைக் கைவிட்டதில்லை.

No comments:

Post a Comment