Wednesday, April 9, 2014

சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

Photo: சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை பாமரர்களும் அறியும்படிக்கு வெளிப்படுத்த முயன்றது பதஞ்சலி மகான்தான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பல தடைகளைக் கடந்துதான் அது இன்று நம் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. ஆனால், மகிமையறியாத சிலர் அதை பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு விற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது அது மறைக்கப்பட்டே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதயமாகி விடுகின்றது. அவர் அதில் எல்லா ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மனமே மந்திரக் கோல் என்றுதான் சொல்கிறார். எனவேதான் அகத்தியமுனி, 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே! 

என்றுரைக்கிறார். ஆனால். மனம் செம்மையாகும் வரை இவற்றையெல்லாம் கை கொள்வது அவசியமாகும். மனதை செம்மைப்படுத்துவது என்பது இடைவிடாமல் எழுந்து கொண்டேயிருக்கும் பல்வேறு எண்ணங்களை அனுமதிக்காமல், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை எழச் செய்து அதில் முழு மனதையும் குவித்து மனதின் எண்ணங்களை குறைத்து முழுவதுமாக இல்லாமல் செய்வதுதான். இதுவே தியானமுமாகும். இந்த நிலையை அடைந்த பிறகு நாம் எதையும் செய்யத் தேவையில்லை. அங்கேயே, அதிலேயே நிலை பெற்று சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம். 

நேற்று நம் சூக்கும சரீரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒன்றிலிருந்து ஒன்று சூக்குமத் தன்மை குறைந்து வெளி நோக்கி வந்து ஜட நிலையை அடைகிறது என்று சொன்னேனல்லவா, அது போல அவைகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப  அவற்றிற்கு மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். எல்லாம் ஒன்றிலிருந்து விரிந்த நிலைகளேயாதலால், ஒன்றைக் கட்டுப்படுத்தினால், அது எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. தியானத்தின் மூலம் மனதை புத்தி அல்லது அறிவு கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு நிலையில் நிற்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கும் பொழுது பொறிகள் அனைத்தும் கட்டுக்குள் வந்து விடுகின்றன. இப்படி எல்லாத் தத்துவங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த வல்லவரையே தவ சீலர்கள் என்கிறோம். 

வேதத்திலும் சரி, வேதாந்தத்திலும் சரி பேராற்றலை, எல்லாம் வல்லப் பரம்பொருளை அடைவதற்கு கையாளப்படுகின்ற அனைத்து வழிகளிலும் சரி மனோ நாசமே முடிவாக இருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது. மனோ நாசம், மனம் அழிதல் என்றால் அது ஏதோ பயங்கரமான விஷயமாக இருக்குமோ என்று யாரும் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. அது தியானத்தின் மூலம் மனிதனுடைய மனம் மற்றும், புத்தி சரீரங்கள் தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதேயாகும். நம் ஸ்தூல உடலை தளர்வாகவும், உறுதியாகவும், நடுநிலையில் அதை நேராகவும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு, மூச்சை கவனித்து சமப்படுத்துவதன் மூலம் புறவுரைகளில் இருந்து தன் மனதை உள்முகமாகச் செலுத்துவது கடினமில்லை. அதற்குப் பிறகு தன்னுணர்வுடன் சூக்கும உரைகளையும் கடக்க மேற்கொள்வதுதான் முயற்சி. இங்குதான் மந்திரங்கள், இஷ்ட தெய்வத்தின் உருவங்கள் உதவுகின்றன. ஒரே சிந்தனையில் மனதைச் செலுத்துவதற்காகவே உருவமோ, சின்னமோ பயன்படுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலைப்பட்ட பிறகு அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏறும் வரை ஏணி தேவைப்படுகிறது. அதற்காக அதை யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவதில்லை. உணவுக்குப் பிறகு தட்டை நாம் தின்பதில்ல. தட்டு உணவாகாது. ஆனால், தட்டு இல்லாமல் சாப்பிட முடியாது என்பதையும் மறந்து விடக் கூடாது. மந்திரங்களைத் தாரகம் என்பார்கள். அதாவது கடத்துவிப்பது என்று பொருள். நமது எல்லா கோசங்களையும், உணர்வுகளையும் கடக்க மனதை நிலை பெறச் செய்ய மந்திரங்கள் உதவுவதால்தான் தாரக மந்திரங்கள் என்று சொல்கிறார்கள். மனதிற்கு தரம் தருவது மந்திரங்கள். கண்டபடி அலையும் தரமற்ற செயலில் இருந்து ஒரே நிலையில் நிலைக்கும் தரத்தை மனம் அடைவதற்கு மந்திரங்கள் உதவுகின்றன. 

சராசரி மனித வாழ்வில் தியானம் மன ஆற்றலை மேம்படுத்தி, புத்தி கூர்மையை உருவாக்கி அதன் மூலம் குறைவற்ற, நிறைவான, வெற்றிகரமான வாழ்வை ஏற்படுத்தித் தருகிறது. அதனால்தான் இன்று அனைத்து தரப்பினரும் தியானம் பற்றிப் பேசுகிறார்கள், தியானம் செய்கிறார்கள். இதுவே பழக்கமாகி வரும் பொழுது அவர்களுக்குள் இயல்பாகவே பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அமைதி அவர்களுக்குள் சத்துவ குணத்தை மேம்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல், மனம், ஆன்மா என்று பிரிந்து கிடந்த மன இயக்கங்கள் ஒருங்கிணைப்பை பெற்று விடுகின்றன. யோகங்களும் இந்த இணைப்பை முன்னிட்டே செய்யப்படுகின்றன. தவத்தையே வாழ்வாகக் கொள்வது யோகம். வாழ்வையே தவமாக வாழ்ந்து விடுவது அறம். எனவே இல்வாழ்விற்கும் ஆன்மிக மேம்பாட்டுக்கும் சம்மந்தமில்லை என்று சிலர் சொல்வது தவறான கருத்தாகும். இல்லறத்தை நல்லறம் என்று நம் முன்னோர்கள் போற்றிப் பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தரப்பினராக இருந்தாலும் சரி மனமே மார்க்கமாக இருக்கிறது. எனவேதான் மனமில்லையேல் மார்க்கமில்லை என்றும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் சொல்கிறார்கள்.
சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை பாமரர்களும் அறியும்படிக்கு வெளிப்படுத்த முயன்றது பதஞ்சலி மகான்தான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பல தடைகளைக் கடந்துதான் அது இன்று நம் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. ஆனால், மகிமையறியாத சிலர் அதை பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு விற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது அது மறைக்கப்பட்டே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதயமாகி விடுகின்றது. அவர் அதில் எல்லா ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மனமே மந்திரக் கோல் என்றுதான் சொல்கிறார். எனவேதான் அகத்தியமுனி,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!

என்றுரைக்கிறார். ஆனால். மனம் செம்மையாகும் வரை இவற்றையெல்லாம் கை கொள்வது அவசியமாகும். மனதை செம்மைப்படுத்துவது என்பது இடைவிடாமல் எழுந்து கொண்டேயிருக்கும் பல்வேறு எண்ணங்களை அனுமதிக்காமல், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை எழச் செய்து அதில் முழு மனதையும் குவித்து மனதின் எண்ணங்களை குறைத்து முழுவதுமாக இல்லாமல் செய்வதுதான். இதுவே தியானமுமாகும். இந்த நிலையை அடைந்த பிறகு நாம் எதையும் செய்யத் தேவையில்லை. அங்கேயே, அதிலேயே நிலை பெற்று சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

நேற்று நம் சூக்கும சரீரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒன்றிலிருந்து ஒன்று சூக்குமத் தன்மை குறைந்து வெளி நோக்கி வந்து ஜட நிலையை அடைகிறது என்று சொன்னேனல்லவா, அது போல அவைகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப அவற்றிற்கு மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். எல்லாம் ஒன்றிலிருந்து விரிந்த நிலைகளேயாதலால், ஒன்றைக் கட்டுப்படுத்தினால், அது எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. தியானத்தின் மூலம் மனதை புத்தி அல்லது அறிவு கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு நிலையில் நிற்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கும் பொழுது பொறிகள் அனைத்தும் கட்டுக்குள் வந்து விடுகின்றன. இப்படி எல்லாத் தத்துவங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த வல்லவரையே தவ சீலர்கள் என்கிறோம்.

வேதத்திலும் சரி, வேதாந்தத்திலும் சரி பேராற்றலை, எல்லாம் வல்லப் பரம்பொருளை அடைவதற்கு கையாளப்படுகின்ற அனைத்து வழிகளிலும் சரி மனோ நாசமே முடிவாக இருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது. மனோ நாசம், மனம் அழிதல் என்றால் அது ஏதோ பயங்கரமான விஷயமாக இருக்குமோ என்று யாரும் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. அது தியானத்தின் மூலம் மனிதனுடைய மனம் மற்றும், புத்தி சரீரங்கள் தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதேயாகும். நம் ஸ்தூல உடலை தளர்வாகவும், உறுதியாகவும், நடுநிலையில் அதை நேராகவும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு, மூச்சை கவனித்து சமப்படுத்துவதன் மூலம் புறவுரைகளில் இருந்து தன் மனதை உள்முகமாகச் செலுத்துவது கடினமில்லை. அதற்குப் பிறகு தன்னுணர்வுடன் சூக்கும உரைகளையும் கடக்க மேற்கொள்வதுதான் முயற்சி. இங்குதான் மந்திரங்கள், இஷ்ட தெய்வத்தின் உருவங்கள் உதவுகின்றன. ஒரே சிந்தனையில் மனதைச் செலுத்துவதற்காகவே உருவமோ, சின்னமோ பயன்படுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலைப்பட்ட பிறகு அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏறும் வரை ஏணி தேவைப்படுகிறது. அதற்காக அதை யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவதில்லை. உணவுக்குப் பிறகு தட்டை நாம் தின்பதில்ல. தட்டு உணவாகாது. ஆனால், தட்டு இல்லாமல் சாப்பிட முடியாது என்பதையும் மறந்து விடக் கூடாது. மந்திரங்களைத் தாரகம் என்பார்கள். அதாவது கடத்துவிப்பது என்று பொருள். நமது எல்லா கோசங்களையும், உணர்வுகளையும் கடக்க மனதை நிலை பெறச் செய்ய மந்திரங்கள் உதவுவதால்தான் தாரக மந்திரங்கள் என்று சொல்கிறார்கள். மனதிற்கு தரம் தருவது மந்திரங்கள். கண்டபடி அலையும் தரமற்ற செயலில் இருந்து ஒரே நிலையில் நிலைக்கும் தரத்தை மனம் அடைவதற்கு மந்திரங்கள் உதவுகின்றன.

சராசரி மனித வாழ்வில் தியானம் மன ஆற்றலை மேம்படுத்தி, புத்தி கூர்மையை உருவாக்கி அதன் மூலம் குறைவற்ற, நிறைவான, வெற்றிகரமான வாழ்வை ஏற்படுத்தித் தருகிறது. அதனால்தான் இன்று அனைத்து தரப்பினரும் தியானம் பற்றிப் பேசுகிறார்கள், தியானம் செய்கிறார்கள். இதுவே பழக்கமாகி வரும் பொழுது அவர்களுக்குள் இயல்பாகவே பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அமைதி அவர்களுக்குள் சத்துவ குணத்தை மேம்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல், மனம், ஆன்மா என்று பிரிந்து கிடந்த மன இயக்கங்கள் ஒருங்கிணைப்பை பெற்று விடுகின்றன. யோகங்களும் இந்த இணைப்பை முன்னிட்டே செய்யப்படுகின்றன. தவத்தையே வாழ்வாகக் கொள்வது யோகம். வாழ்வையே தவமாக வாழ்ந்து விடுவது அறம். எனவே இல்வாழ்விற்கும் ஆன்மிக மேம்பாட்டுக்கும் சம்மந்தமில்லை என்று சிலர் சொல்வது தவறான கருத்தாகும். இல்லறத்தை நல்லறம் என்று நம் முன்னோர்கள் போற்றிப் பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தரப்பினராக இருந்தாலும் சரி மனமே மார்க்கமாக இருக்கிறது. எனவேதான் மனமில்லையேல் மார்க்கமில்லை என்றும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment