இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பது எது ?
அது பிராணன்தான். அதுவே நம் உடலிலும் பிராணனாக இயங்குகிறது. எண்ணையை வாங்கி
எரிகின்ற தீபம் போலக் காற்றிலுந்தும், உண்ணும் உணவிலிருந்தும், பருகும்
நீரிலிருந்தும் பிராணனை எடுத்துக் கொண்டு நம் உடல் இயங்கிக்
கொண்டிருக்கின்றது. இந்தப் பிராணனைஅதிகமாகப் பெற்றுக் கொள்ள நமக்கு உள்ள
ஒரே வழி சுவாசம் மட்டுமே. இந்த சுவாசத்தை நிகழ்த்துவது எது என்று கேட்டால்,
அது நுரையீரலாகும். நாம் சுவாசிப்பதால் நுரையீரல் இயங்குகிறது என்று
எண்ணினால் அது தவறாகும். நுரையீரலின் இயக்கத்தால்தான் சுவாசம் நடை
பெறுகின்றது என்பதே உண்மையாகும். நுரையீரலானது தன் இயக்கத்தின் மூலம்
காற்றை உறிஞ்சுவதே சுவாசமாக நடைபெறுகின்றது. நுரையீரலுக்கு அத்தகைய அசைவைத்
தருவது பிராணனே. அப்படிப்பட்ட நுரையீரலின் அசைவுகளை உருவாக்கும் தசைகளின்
செயல்களைக் கட்டுப்படுத்தி தன் வசப்படுத்துவதையே பிராணாயாமம் என்பார்கள்.
இதனால் என்ன பயன் என்று கேட்கக் கூடும். தசைகளுக்கு என்று ஒரு வலிவு
இருக்கிறது. நாடி, நரம்புகள் வாயிலாக அவ்வலிவு நுரையீரலை எட்டுகிறது. அதன்
பிறகு நுரையீரல் காற்றை உறிஞ்சுவதற்கேற்ற வகையில் இயங்குகிறது. அப்படி
இயங்கச் செய்யும் சக்தி பிராணனேயாகும். அதாவது பல இயக்கங்களின் நிமித்தம்
குறைவு படும் தன் சக்தியை நிறைவு செய்து கொள்ள அது நுரையீரலைத் தூண்டி
சுவாசத்தை நிகழ்த்துகிறது.
இப்படி உடலின் கண் நடைபெறுகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பது பிராணனே. நுரையீரலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகிய பிராணாயாமத்தின் மூலம் அந்தப் பிராணனை வசப்படுத்தி விட்டால் உடலின் அனைத்து இயக்கங்களையும் நம் வசப்படுத்தி விடலாம். சில மனிதர்களைப் பார்க்கிறோம், அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு உடலில் உள்ள தசைகளை அசைத்துக் காட்டுவார்கள். அப்படிக் குறிப்பிட்ட சில தசைகளை மட்டுமே தன் வசப்படுத்தி அசைக்க முடியும் என்கிற பொழுது உடலிலுள்ள மொத்த தசைகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்தானே. விலங்குகள் காதை அசைக்கின்றன. உடலை அசைக்கின்றன. யானை காதை அசைப்பதோடு மூக்காகிய தும்பிக்கையையும் அசைக்கிறது. நாமும் விலங்காக இருந்த போது இவற்றையெல்லாம் அசைத்திருந்தோம். இப்பொழுதும் முயற்சி செய்தால் நம்மால் நம் உடலில் நடை பெறுகின்ற அனைத்து இயக்கங்களையும் வசப்படுத்தி, அனைத்து உறுப்புகளையும் அசைக்க முடியும். அனிச்சை செயல்களாகிய இதயத் துடிப்பு, ஜீரண இயக்கங்கள், இரத்த ஓட்டம், சுவாசம் போன்ற பல அனிச்சை செயல்களையும் தன்னிச்சை செயல்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் நடைபெறும் மாற்றம் என்ன என்று கேட்டால், பிராணனானது ஸ்தூலமாகவும், சூக்குமமாகவும் இயங்குகிறது. சூக்கும நிலையிலிருக்கும் பிராணனை வசப்படுத்துவதற்கு முன்பு ஸ்தூல நிலையில் உள்ள பிராணனின் இயக்கங்களை வசப்படுத்திப் பழக வேண்டும். அதற்குப் பிறகு அதி சூக்கும நிலையில் உள்ள பிராணனை வசப்படுத்துதல் எளிதாகும். பிராணனை முற்றிலும் வசப்படுத்துவதன் மூலம் உடல் மற்றும் மனம் முற்றிலுமாக நம் வசப்பட்டு விடும். அதி சூக்கும நிலையில் உள்ள பிராணனைக் கட்டுப்படுத்த வல்லமை உள்ளவர்களுக்கு நுரையீரல் இயங்காவிடினும், சுவாசிக்காமலே உயிர் வாழ முடியும். பல நாட்கள் பூமிக்கு அடியிலேயே சுவாசிக்காமல் அவர்களால் இருக்க முடியும். இதனால் ஆகிற பயன் என்னவென்றால் நம் மனம் மற்றும் உடலின் பல இயக்கங்களை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து யோக சாதனங்களைப் புரிவதற்கு எளிதாக இருக்கும். பிராணாயாமம் மூலம் உடல் முழுவதும் பிராணனை வியாபகம் ஆகும் படிச் செய்வதால் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். மனம் சஞ்சலமடையாமல் அமைதியாகத் திகழும்படிக்குச் செய்யலாம். இப்படி நம் மொத்த உடலையும் பிராணாயாமத்தால் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொழுது இந்தப் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் பிராணன் வேறு நம் உடல் வேறு என்கிற வேற்றுமை நிலை மறைந்து விடும். உடலெங்கும் வியாபகமாகி இருக்கும் பிராணனை வசப்படுத்த முடிந்தவனால் அதன் பகுதியாகிய வெளியில் நிரம்பி இருக்கும் பிராணனையும் வசப்படுத்த முடியும். இதுவே யோக சித்தி. இவர்களுக்கு ஆகாத காரியம் எதுவுமில்லை என்கிற போது முக்தி அடைவதற்கு வேறு தடை ஏதும் இருக்க முடியுமா என்ன ?

No comments:
Post a Comment