என்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளவோ, கூட்டம் சேர்க்கவோ, நிறையத் தெரிந்து
கொண்டு விட்டோம் என்று அஹங்காரம் கொண்டோ இங்கு நான் வரவில்லை. இன்னும்
நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
பயணிக்கிற பொழுது கிடைக்கிற விஷயங்களை, என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன். எனவே நான் மஹானோ, ஞானியோ, யோகியோ அல்ல. சொல்லப் போனால் நான்
ஒரு நல்ல சீடன் கூட அல்ல. நான் குருவாக ஏற்றுக் கொண்டவரோடு கூட எனக்கு சில
முரண்பட்ட கருத்துகள் இருக்கிறது. அதற்குக் காரணம் நான் என்கிற அஹங்கார
எண்ணமே தவிர வேறொன்றுமில்லை. குரு சொல்வதை அப்படியே மறுப்பேதுமின்றி
ஏற்றுக் கொள்பவனால்தான் மேன்மையடையவோ, உண்மையை உணரவோ முடியும். கேள்விகள்
பெருந் தடைகளாகும். குருவின் திருவடியைத் தொடர்ந்தால் உண்மை தக்க
காலகட்டத்தில் புலப்படும். குருமார்கள் நிறைய இருக்கிறார்கள். இனி யார்
நல்ல குரு ? என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். குருவுக்கு பரிட்சை
வைக்கும் அளவிற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது ? அப்படி ஒரு தகுதி நமக்கு
இருந்தால் நமக்கு எதற்கு குரு தேவைப்படுகிறார் என்பது எனக்குப்
புரியவில்லை. குரு எப்படிப்பட்டவர் என்பதைக் குறித்து நாம் கவலைப்படத்
தேவையில்லை. அவர் தரும் பயிற்சிகளை முனைப்போடு செய்து வருவது மட்டுமே நம்
வேலை. போகர் நிறைய மனைவிகளை உடையவர் என்பதால் புலிப்பாணி சித்தர் எந்த
விதத்திலும் குறைந்து போய் விடவில்லை. போகரும்தான் எப்பேர்பட்ட சித்தர்.
இரசவாத விஞ்ஞானி. எனவே நம் தகுதியை அதாவது நல்ல சீடனாக விளங்கும் தகுதியை
ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் கடமை என்பதை உணர்க.
அறிவப்பவனாக இருப்பது பரம்பொருளாகும். அதாவது பரமாத்மா. அறிவிக்கப்படுவதை
மனதால் ஆராய்ந்து வியாக்கியானம் செய்வது ஜீவாத்மா. ஆனால், ஒவ்வொரு
ஜீவாத்மாவுக்கும் ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளபடியால்,
அறிவிக்கப்படுகின்ற புறப் பொருள்களை அவரவர் மனப்பான்மைக்கேற்ப
பொருள்படுத்திக் கொள்கிறார்கள். பண்பட்டுள்ள மனிதனோ ஆன்ம ஒளியின் உதவியால்
உண்மையை பாங்குடன் உணர்ந்து கொள்கிறார். நமது அறியாமையே பல்வேறு மனப்பாங்கு
உடையவர்களாக நம்மை இருள் எனும் அஞ்ஞானம் மிகுந்தவர்களாக, உண்மையை
உணரமாட்டாதவர்களாக வைத்திருக்கிறது. நல்ல பண்பட்ட மனப்பாங்குடைய ஞானியானவர்
நம் அஞ்ஞான இருளை அகற்றி நம் அறிவிற்கு உண்மையை விளக்கி ஆன்ம ஒளியை
பிரகாசிக்கச் செய்கிறார். எனவேதான் அத்தகையவர்களை குரு என்பார்கள். குரு
என்றால் இருளைப் போக்கி ஒளியைத் தருபவர் என்பது பொருள். அதாவது அஞ்ஞானத்தை
விலக்கி ஞானத்தை(அறிவொளியை) பிரகாசிக்கச் செய்பவர். சுட்டிக் காட்டுபவர்,
தொட்டுக் காட்டுபவர், வழிகாட்டுபவர் என்று பலவாறாகச் சொல்வார்கள். அதன்
பிறகு அவரவர் தன் முயற்சி என்பதே அந்த அறிவில் பிரகாசிக்கும் ஆன்ம ஒளியை
மேலும் மேலும் பிரகாசிக்கச் செய்து நம் மனதை அதில் கரைத்து விடுகிறது
என்பதையும் நினைவில் கொள்க. ஒரு குருவிடம் பயிலும் 105 மாணாக்கர்களில்
ஒருவன்தான் மற்ற அனைவரையும் விட வல்லவனாக இருக்கிறான். அது அவன் விடா
முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் கிடைத்த பலன்.
அஞ்ஞானம் என்பது என்னவென்றால் உண்மையை உணராமல் இருப்பதே. நான் நான் என்று தன்னை முன்னிறுத்தி தனி வியக்தியை நிலை நாட்டுவது. இதையே அஹங்காரம் என்றும் கூறுவார்கள். அதாவது தான் அல்லாத ஒன்றை தான் என்றோ, தனதென்றோ கருதுவது அஹங்காரம். இதன் அடுத்த நிலைப்பாடு அஞ்ஞானம். நம்முடைய நிஜமான சொரூபம் ஆத்மா. அதை அறிந்து கொள்ளாமல் இருப்பது அஞ்ஞானம். இதையே நான் இந்த உடல், இந்த மனம், இது என்னுடையது, எல்லாம் எனக்கே உரியது போன்ற நிலை அஹங்காரம். அஹங்காரத்தின் விளைவு அஞ்ஞானமாகிய இருளில் ஜீவனை அழுத்தி வைக்கிறது. தன்னை உடல்மயமாகவேக் கருதுவது அஹங்காரம். இதுவே உண்மைக்குப் புறம்பானதால் இதுவே அஞ்ஞானம். இதை நம் அறிவுக்கு உணர்த்தி, உண்மையை விளங்கச் செய்து நீ இந்த உடலல்ல, நீ சச்சிதானந்த சொரூபம் என்று தெளிவிப்பவர் குரு. எல்லோருக்கும் தானே தெளிதல் என்பது வாய்த்து விடாது. கோடியில் ஒருவருக்கு அது மரபு அணுக்களின் வாயிலாக அமைந்து விடுவதுண்டு. மற்றபடி அனைவருக்கும் குரு என்பவரின் தேவை அவசியமாகும். இப்பொழுது எனக்கு குரு யார் என்றே தெரியவில்லை. முதன் முதலில் என்னை மடியில் உட்கார வைத்து தாம்பாளத்தில் நெல்லை பரப்பி கையை பிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தவர்தான் என் குருவா ? அல்லது முதலாம் வகுப்பில் அனா, ஆவன்னா, இனா, ஈயன்னா என்று கற்றுக் கொடுத்தவரா, அதற்குப் பிறகு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு குரு வருவார்கள். டியூசன் குருமார்கள் வேறு, பாட்டுக்கு குரு, நடனத்திற்கு குரு, வேலை கற்றுக் கொள்ளும் பொழுது குரு என்று கணக்கற்ற குருக்களுக்கிடையே யாரை குருவாகக் கொள்வது ?
என்று இராஜராஜன் கேட்கப் போகிறார் என்பது புரிகிறது. இவர்கள் அனைவரும் நம் குருமார்கள்தான். இவர்கள் மட்டுமல்ல, நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நண்பர்கள், நம் உறவினர்கள், பெற்றோர் இவ்வளவு ஏன் நம் பிள்ளைகள் கூட நமக்கு குருதான். ஆனால் இவர்கள் என்னதான் உணர்த்தினாலும், அதன் மூலம் நாம் தெளிவு பெற்றாலும், அந்த ஞானம் புறப் பொருளைக் குறித்ததாகவே இருப்பதால் நம் அஞ்ஞானம் என்பது விலகாது. இதற்கு ஒரு முடிவு என்பதே ஏற்படாது. நேற்று ஒருவர் தந்த தெளிவு இன்று வேறொருவரின் கருத்தினால் மாறி விடும். இந்த குருமார்கள் தரும் ஞானம் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தது. அது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் யார் பரம் பொருளைக் குறித்த தெளிவை உங்கள் அறிவுக்கு உணர்த்த வல்லவரோ அவரே உண்மையான குரு. அவரே சற்குரு. அவரே மெய்ஞான குரு. அவரே ஸ்தூல குரு. அவரே சூக்கும குருவான இறைவனின் ஸ்தூல வடிவம். அவர் காலமெல்லாம் உங்கள் அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே வார்த்தையில் உங்கள் மனமென்னும் மலையை புரட்டிப் போட்டு விட்டு வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பி விட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருப்பர். வந்த சுவடும் தெரியாது, போன சுவடும் தெரியாது. எதையும் எதிர் பார்ப்பதுமில்லை. தந்தால் எதையும் ஏற்றுக் கொள்வதுவும் இல்லை. ஏனென்றால் இங்கு காணும் யாவும் அவர்களுடையதே. எனவே இதன் மூலம் நான் சொல்ல வருவதென்னவென்றால் முதலில் ஒரு நல்ல சீடனாக நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வேண்டும் என்பதே. அப்படியானால் ஒரு நாள் உங்களிடத்தில் குரு வருவார். அருள் தருவார். இது சத்தியம்.
குருவே சரணம், குருவின் திருவடிகளே சரணம்.

No comments:
Post a Comment