Friday, March 28, 2014

முக்தி என்றால் இறைவனைக் கலந்து விடுவது தானே ?

Photo: பன்னெடுங்காலமாக நம் ரிஷிகளும், முனிபுங்கவர்களும், யோகிகளும், தவசிகளும் வனங்களிலும், குகைகளிலும், புலனடக்கி, மனமொடுக்கி கடும் முயற்சியின் பயனாக அடைந்திட்ட ஞானத்தையும், முக்தியையும் வெகு எளிதாகப் பெற்றுத்தருவதாகச் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். பல ஜென்மங்களைக் கடந்தே நம் முன்னோர்களில் பல பேர் பலன்களை அடைந்திருக்கிறார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அதன் படி முக்தி அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உண்மை. இதை மாற்றி அமைக்கவும், இந்தப் பிறவியிலேயே அதை அடைந்திடவும் தங்கள் அறிவின் தெளிவால் உபாயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைக் கடைபிடித்து சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள். இந்த சித்தி என்பது முக்தியின் ஒரு பிரிவாகும். அது என்ன பிரிவு ? முக்தி என்றால் இறைவனைக் கலந்து விடுவது தானே ? என்று கேட்கக் கூடும்.

அதாவது முக்தியை நான்கு விதமாகப் பிரித்து சொல்லியிருக்கிறார்கள். 1. சாரூப்ய முக்தி - இறைவனைப் போன்ற உருவம் பெற்று விடுதல். 2. சாமீப்ய முக்தி - இறைவனுக்கருகில் இடம் பெறுதல். 3. சாலோக்ய முக்தி - இறைவனோடு கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வசித்தல். 4. சாயுஜ்ய முக்தி - இறைவனோடு ஒன்றறக் கலந்து விடுதல். இதில் முதல் முக்திப்படிப் பார்த்தால் உருவமே இல்லாத இறைவனின் உருவம் அடைதல் என்றால் அதுவும் இறைவனைக் கலத்தலே ஆகும். ஆக ஒன்றும் நான்கும் இறையாற்றலோடு கலந்து விடுவதே. இடையில் காணப்படும் இரண்டும், மூன்றுமே சித்தியாகும். அதாவது இறையாற்றலுக்கருகில் வசிப்பது என்றால், ஸ்தூல சரீரத்தைத் துறந்து சூக்கும சரீரத்தோடு பரவெளியில் ஸமாதியில் திளைத்திருப்பதாகும். எனவேதான் முக்தி அடைந்தவர்கள் வருவதில்லை என்று சொல்கிறார்கள். சித்தி அடைந்தவர்களை ஒரு மனதோடு தியானித்தால் வருவார்கள் என்றும் சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாக குரு இராகவேந்திரரைச் சொல்லலாம். அவர் ஜீவ சமாதியில் புகும் போது இன்னும் 400 ஆண்டுகள் இந்த இடத்தில் நான் இருப்பேன். நீங்கள் அழைத்தால் வருவேன். அதற்குப் பிறகே முக்தி அடைவேன் என்று சொன்னதாக வரலாறு. 

இந்த சித்தியோ, முக்தியோ அடைவதற்கு முன் யோகியானவர் அடையும் உண்மையை உணர்ந்த நிலையையே ஞானம் என்கிறோம். ஞானம் அடைந்தவரருக்கு அறியாமை என்னும் அஞ்ஞானம் நீங்கி விடுகிறது. ஏனென்றால் அவர் பிரபஞ்ச மனதோடு தன் மனதை இணைத்து விடுவதால் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. பார்க்கப்படும் பொருள் இன்றி பார்ப்பவர் மட்டுமே என்ற நித்தியானந்த நிலையை அடைகிறார். அலைகளற்ற கடலைப் போல சலனமற்ற சமநிலையில் அவர் மனம் இருக்கிறது. பேதமற்ற நிலையில் அது, இது, நீ. நான் என்ற நிலையைக் கடந்து விடுகிறார். முப்பரிமாணங்களைக் கடந்து அடுத்த பரிணாமத்திற்குள் நுழைகிறார். அங்கே காலம் கிடையாது, உணர்வுகள் கிடையாது, முக்குண தோஷங்கள் கிடையாது, அது ஒரு பரப்பிரம்ம நிலை. எனினும் அவர் மனமானது நான் பிரம்மம் என்ற எண்ணத்தில் நிற்கிறது. இதைத்தான் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார்கள். 

இந்த ஞானிகளை ஜீவன் முக்தர்கள் என்பார்கள். இந்த ஜீவன் முக்தர்களின் சாத்வீக அஹங்காரத் தரத்திற்கேற்ப அவர்களை நான்கு வகையாகச் சொல்வார்கள். 1. பிரம்மவித், 2. பிரம்மவித்வரன், 3. பிரம்மவித்வரீயான், 4. பிரம்மவித் வரிஷ்டர் என்பதாகும். இந்த ஞானத்தின் நிலைகளை ஏழு பிரிவாகச் சொல்வார்கள். அவை சுபேச்சா, விசாரணை, தனுமாநஸி, ஸத்வாபத்தி, அசம்சக்தி, பதார்த்தபாவனை, துரீயம் என்பவைகளாகும். இந்த நிலைகளை பூமிகா என்பார்கள். இந்த நிலைகளைப் பற்றியும், ஞானிகளைப்பற்றியும் ஏற்கனவே சொல்லியிருப்பதால், அடுத்த கட்டத்திற்கு வருவோம். முதல் மூன்று பூமிகாவில் அதாவது ஞானத்தின் நிலைகளில் செயல்படும் ஞானி முமுட்சு என்பார்கள். அதாவது புற உலகப் பொருள்களில் உதாசீனம், வைராக்யம், ஆத்ம ஞான நூல்களை வாசித்தல், பிரம்ம ஞானிகளின் தொடர்பு, கற்ற, கேட்ட விஷயங்களைப் பற்றிய விசாரணை, இடைவிடாத பயிற்சி இவற்றால் மனம் பிரம்மத்தில் லயிக்கிறது. அது ஒரு மெல்லிய நூலைப் போல மாறி விடுகிறது. பிரம்மாகார விருத்தி ஏற்படுகிறது. இதுவே முமுட்சு. 

நான்காவது பூமிகாவில் செயல்படும் ஞானியை பிரம்மவித் என்பார்கள். மேலே சொன்ன மூன்று நிலைப் பயிற்சியால் ஆசைகள் அறவே ஒழிந்து விடுகிறது. தத்துவ ஞானம் வளர்கிறது. மனம் முழுவதும் சத்துவ குணத்தால் நிரம்பி வழிகிறது. ஐந்தாவது பூமிகாவில் செயல்படுபவர் பிரம்மவித்வரன் எனப்படுவார். நான்காவது நிலையில் மனம் சத்துவத்தால் நிரப்பப்படும் போது மனமானது படிப்படியாக பிரம்மத்தில் கரைகிறது. கர்மாக்கள், சம்ஸ்காரங்கள், சங்கல்பங்கள் யாவும் இல்லாமல் போய் விடுகின்றன.இனி ஆறாவது பூமிகாவில் செயல்படும் ஞானி பிரம்மவித் வரீயான் என்றழைக்கப்பட்டுகின்றார். புற மற்றும் அகப் பொருள்களின் காட்சி அறவே இல்லாமல் போய்விடுகின்றது. அதையும் மீறி ஏதாவது காட்சி இருக்குமானால் அது மற்றவர்களின் வற்புறுத்தலினாலானதாகவே இருக்கும். 

ஏழாவது பூமிகாவில் வசிக்கும் ஞானியே பிரம்மவித் வரிஷ்டன். இதுவே துரீயம். இதில் பன்மை உணரர்வுகளேதும் இல்லை. திரிபுடி எதுவுமில்லை. இவர்களால் உலக ஷேமத்துக்காக எதுவும் செய்ய முடியாது. உணவே கூட மற்றவர்கள் தான் இவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விட வேண்டும். இவர்களே அவதூதர்களாக ஆடைகளைத் துறந்து நிர்வாணியாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் சொர்க்கம். அந்த பிரதேஷமெங்கும் பிரகாசம் விளங்கும். ஆறு, ஏழு பூமிகாவில் இருப்பவர்கள் ஐந்து, நான்கு நிலைகளுக்கு இறங்கி வந்து லோக ஷேமத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினால் செய்யலாம். ஏழாவது பூமிகாவில் ஒரு ஞானி 14 நாட்களே உயிர் வாழ முடியும். அதாவது இந்த சரீரத்தில் இருக்க முடியும். ஏழாவது நிலை நீடிக்கும் போது துரீயாதீதம் மலர்கிறது. முக்தியோ, சித்தியோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். ஏன் அவ்வாறென்றால் விருப்பம்ம உள்ளவர்களுக்கு அது ஒரு பற்றிருப்பதால் சித்தி. அந்த பற்றும் அறுத்தவர்களுக்கு முக்தி. 

எனவே இடைவிடாத பலனைப் பற்றிய சிந்தனையில்லாதப் பயிற்சியும், வைராக்யமும், விடா முயற்சியும் இருந்தால் எந்த நொடியிலும், எப்போது வேண்டுமானாலும் ஞானமடைந்து முக்தியை அடையலாம். பலன் குறித்தும் தன்னிலை குறித்தும் கவலை கொள்கிறவர்களுக்கு மேலும் காலதாமதமே ஏற்படும். இதைக் குறித்து சொல்லப்பட்ட வார்த்தையே ''கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்பது''.
பன்னெடுங்காலமாக நம் ரிஷிகளும், முனிபுங்கவர்களும், யோகிகளும், தவசிகளும் வனங்களிலும், குகைகளிலும், புலனடக்கி, மனமொடுக்கி கடும் முயற்சியின் பயனாக அடைந்திட்ட ஞானத்தையும், முக்தியையும் வெகு எளிதாகப் பெற்றுத்தருவதாகச் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். பல ஜென்மங்களைக் கடந்தே நம் முன்னோர்களில் பல பேர் பலன்களை அடைந்திருக்கிறார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அதன் படி முக்தி அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உண்மை. இதை மாற்றி அமைக்கவும், இந்தப் பிறவியிலேயே அதை அடைந்திடவும் தங்கள் அறிவின் தெளிவால் உபாயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைக் கடைபிடித்து சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள். இந்த சித்தி என்பது முக்தியின் ஒரு பிரிவாகும். அது என்ன பிரிவு ? முக்தி என்றால் இறைவனைக் கலந்து விடுவது தானே ? என்று கேட்கக் கூடும்.

அதாவது முக்தியை நான்கு விதமாகப் பிரித்து சொல்லியிருக்கிறார்கள். 1. சாரூப்ய முக்தி - இறைவனைப் போன்ற உருவம் பெற்று விடுதல். 2. சாமீப்ய முக்தி - இறைவனுக்கருகில் இடம் பெறுதல். 3. சாலோக்ய முக்தி - இறைவனோடு கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வசித்தல். 4. சாயுஜ்ய முக்தி - இறைவனோடு ஒன்றறக் கலந்து விடுதல். இதில் முதல் முக்திப்படிப் பார்த்தால் உருவமே இல்லாத இறைவனின் உருவம் அடைதல் என்றால் அதுவும் இறைவனைக் கலத்தலே ஆகும். ஆக ஒன்றும் நான்கும் இறையாற்றலோடு கலந்து விடுவதே. இடையில் காணப்படும் இரண்டும், மூன்றுமே சித்தியாகும். அதாவது இறையாற்றலுக்கருகில் வசிப்பது என்றால், ஸ்தூல சரீரத்தைத் துறந்து சூக்கும சரீரத்தோடு பரவெளியில் ஸமாதியில் திளைத்திருப்பதாகும். எனவேதான் முக்தி அடைந்தவர்கள் வருவதில்லை என்று சொல்கிறார்கள். சித்தி அடைந்தவர்களை ஒரு மனதோடு தியானித்தால் வருவார்கள் என்றும் சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாக குரு இராகவேந்திரரைச் சொல்லலாம். அவர் ஜீவ சமாதியில் புகும் போது இன்னும் 400 ஆண்டுகள் இந்த இடத்தில் நான் இருப்பேன். நீங்கள் அழைத்தால் வருவேன். அதற்குப் பிறகே முக்தி அடைவேன் என்று சொன்னதாக வரலாறு.

இந்த சித்தியோ, முக்தியோ அடைவதற்கு முன் யோகியானவர் அடையும் உண்மையை உணர்ந்த நிலையையே ஞானம் என்கிறோம். ஞானம் அடைந்தவரருக்கு அறியாமை என்னும் அஞ்ஞானம் நீங்கி விடுகிறது. ஏனென்றால் அவர் பிரபஞ்ச மனதோடு தன் மனதை இணைத்து விடுவதால் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. பார்க்கப்படும் பொருள் இன்றி பார்ப்பவர் மட்டுமே என்ற நித்தியானந்த நிலையை அடைகிறார். அலைகளற்ற கடலைப் போல சலனமற்ற சமநிலையில் அவர் மனம் இருக்கிறது. பேதமற்ற நிலையில் அது, இது, நீ. நான் என்ற நிலையைக் கடந்து விடுகிறார். முப்பரிமாணங்களைக் கடந்து அடுத்த பரிணாமத்திற்குள் நுழைகிறார். அங்கே காலம் கிடையாது, உணர்வுகள் கிடையாது, முக்குண தோஷங்கள் கிடையாது, அது ஒரு பரப்பிரம்ம நிலை. எனினும் அவர் மனமானது நான் பிரம்மம் என்ற எண்ணத்தில் நிற்கிறது. இதைத்தான் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார்கள்.

இந்த ஞானிகளை ஜீவன் முக்தர்கள் என்பார்கள். இந்த ஜீவன் முக்தர்களின் சாத்வீக அஹங்காரத் தரத்திற்கேற்ப அவர்களை நான்கு வகையாகச் சொல்வார்கள். 1. பிரம்மவித், 2. பிரம்மவித்வரன், 3. பிரம்மவித்வரீயான், 4. பிரம்மவித் வரிஷ்டர் என்பதாகும். இந்த ஞானத்தின் நிலைகளை ஏழு பிரிவாகச் சொல்வார்கள். அவை சுபேச்சா, விசாரணை, தனுமாநஸி, ஸத்வாபத்தி, அசம்சக்தி, பதார்த்தபாவனை, துரீயம் என்பவைகளாகும். இந்த நிலைகளை பூமிகா என்பார்கள். இந்த நிலைகளைப் பற்றியும், ஞானிகளைப்பற்றியும் ஏற்கனவே சொல்லியிருப்பதால், அடுத்த கட்டத்திற்கு வருவோம். முதல் மூன்று பூமிகாவில் அதாவது ஞானத்தின் நிலைகளில் செயல்படும் ஞானி முமுட்சு என்பார்கள். அதாவது புற உலகப் பொருள்களில் உதாசீனம், வைராக்யம், ஆத்ம ஞான நூல்களை வாசித்தல், பிரம்ம ஞானிகளின் தொடர்பு, கற்ற, கேட்ட விஷயங்களைப் பற்றிய விசாரணை, இடைவிடாத பயிற்சி இவற்றால் மனம் பிரம்மத்தில் லயிக்கிறது. அது ஒரு மெல்லிய நூலைப் போல மாறி விடுகிறது. பிரம்மாகார விருத்தி ஏற்படுகிறது. இதுவே முமுட்சு.

நான்காவது பூமிகாவில் செயல்படும் ஞானியை பிரம்மவித் என்பார்கள். மேலே சொன்ன மூன்று நிலைப் பயிற்சியால் ஆசைகள் அறவே ஒழிந்து விடுகிறது. தத்துவ ஞானம் வளர்கிறது. மனம் முழுவதும் சத்துவ குணத்தால் நிரம்பி வழிகிறது. ஐந்தாவது பூமிகாவில் செயல்படுபவர் பிரம்மவித்வரன் எனப்படுவார். நான்காவது நிலையில் மனம் சத்துவத்தால் நிரப்பப்படும் போது மனமானது படிப்படியாக பிரம்மத்தில் கரைகிறது. கர்மாக்கள், சம்ஸ்காரங்கள், சங்கல்பங்கள் யாவும் இல்லாமல் போய் விடுகின்றன.இனி ஆறாவது பூமிகாவில் செயல்படும் ஞானி பிரம்மவித் வரீயான் என்றழைக்கப்பட்டுகின்றார். புற மற்றும் அகப் பொருள்களின் காட்சி அறவே இல்லாமல் போய்விடுகின்றது. அதையும் மீறி ஏதாவது காட்சி இருக்குமானால் அது மற்றவர்களின் வற்புறுத்தலினாலானதாகவே இருக்கும்.

ஏழாவது பூமிகாவில் வசிக்கும் ஞானியே பிரம்மவித் வரிஷ்டன். இதுவே துரீயம். இதில் பன்மை உணரர்வுகளேதும் இல்லை. திரிபுடி எதுவுமில்லை. இவர்களால் உலக ஷேமத்துக்காக எதுவும் செய்ய முடியாது. உணவே கூட மற்றவர்கள் தான் இவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விட வேண்டும். இவர்களே அவதூதர்களாக ஆடைகளைத் துறந்து நிர்வாணியாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் சொர்க்கம். அந்த பிரதேஷமெங்கும் பிரகாசம் விளங்கும். ஆறு, ஏழு பூமிகாவில் இருப்பவர்கள் ஐந்து, நான்கு நிலைகளுக்கு இறங்கி வந்து லோக ஷேமத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினால் செய்யலாம். ஏழாவது பூமிகாவில் ஒரு ஞானி 14 நாட்களே உயிர் வாழ முடியும். அதாவது இந்த சரீரத்தில் இருக்க முடியும். ஏழாவது நிலை நீடிக்கும் போது துரீயாதீதம் மலர்கிறது. முக்தியோ, சித்தியோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். ஏன் அவ்வாறென்றால் விருப்பம்ம உள்ளவர்களுக்கு அது ஒரு பற்றிருப்பதால் சித்தி. அந்த பற்றும் அறுத்தவர்களுக்கு முக்தி.

எனவே இடைவிடாத பலனைப் பற்றிய சிந்தனையில்லாதப் பயிற்சியும், வைராக்யமும், விடா முயற்சியும் இருந்தால் எந்த நொடியிலும், எப்போது வேண்டுமானாலும் ஞானமடைந்து முக்தியை அடையலாம். பலன் குறித்தும் தன்னிலை குறித்தும் கவலை கொள்கிறவர்களுக்கு மேலும் காலதாமதமே ஏற்படும். இதைக் குறித்து சொல்லப்பட்ட வார்த்தையே ''கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்பது''.

No comments:

Post a Comment