Friday, March 28, 2014

ஜீவன்முக்தர்கள் தங்களுக்கு இன்னல்கள் வராமல் செய்து கொள்ள முடியாதா ?

Photo: நாம் நமது துன்பங்களைப் போக்கி அருளும் பொருட்டு ஞானிகள், மகான்களை நாடுகிறோம். ஆனால், மிகப் பெரிய ஞானிகள் மகான்கள் கூட தங்கள் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்தார்கள் என்றும், நோய் வாய்ப்பட்டு துன்பப்பட்டதாகவும் சொல்கிறார்களே, ஞானமடைந்த ஜீவன்முக்தர்கள் தங்களுக்கு இன்னல்கள் வராமல் செய்து கொள்ள முடியாதா ? என்று என் நண்பர் இராசராசன் நேற்று கேள்விக் கனையை வீசினார். இவர் மட்டுமல்ல இன்னும் சில நண்பர்கள், ''பல ஆண்டுகளாக மணிக்கணக்கில் தியானம் செய்கிறேன். தியானத்தில் உணர்வு அதிகமாக அதிகமாக துன்பங்கள் அதிகமாகி விட்டது. எல்லாவற்றையும் விட்டு விடலாமா என்று தோன்றுகிறது என்பார்கள். சிலர் விட்டுவிடவும் செய்வார்கள். 

அதாவது, பாலைவனத்தில் நடந்து செல்லும் ஒருவன் மிகவும் களைத்துப் போய் விடுகிறான். தாகம் நாக்கைப் பிடுங்குகிறது. போதாதக் குறைக்கு சுடு மணலில் நடந்து நடந்து இரண்டு கால்களிலும் கொப்பளங்கள் வேறு தோன்றி விட்டன. உடலெல்லாம் வலி. வேதனை, நரக வேதனை. எப்படியோ தட்டுத் தடுமாறி பாலைவனத்தின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய சோலை ஒன்றைக் கண்டு, அங்கு போய் இளைப்பாறுகிறான். ஆனாலும், கால் வலியும், தலைவலியும் அவனை வாட்டி எடுக்கிறது. துன்பமான வெயிலையும், சுடு மணலையும் விட்டு விலகி இன்பமான சூழலுக்கு வந்த பின்பும் கூட அவனது கஷ்டமானது உடனடியாக தீர்வதில்லை. இந்த நிலைதான் தியானத்தில் உணர்வடைந்தவர்களுக்கும், ஞானிகளுக்கும் ஏற்பட்டது. 

பிரபஞ்ச வாழ்வு துன்பங்கள் நிறைந்தது. துன்பம் இல்லாமல் இன்பத்தை மட்டும் தனித்து இவ்வுலகில் அடைய முடியாது. அப்படி மனிதன்படுகின்ற துன்பங்களுக்குக் காரணமாக இருப்பது அஞ்ஞானமேயாகும். தியானத்தில் உணர்வு பெற்று நிலைத்திருப்பவர்களுக்கும், ஞானிகளுக்கும் அஞ்ஞானம் என்பது அடிபட்டுப் போய் விடுகிறது. என்றாலும் அந்தப் பழைய உடம்பிலேதான் அந்த ஞானியானவர் ஜீவன் முக்தன் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனவே உடலில் வாய்த்துள்ள பிராப்த கர்மம் என்பது ஞானிக்கும் உண்டு. அவர்களுக்கு தேகஆத்ம உணர்வு அற்றுப் போவதால் அவர்களால் துன்பங்களைச் சகித்துக் கொள்வதுதான் சாத்தியமே தவிர, பிராப்த கர்மங்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவோ, அஞ்ஞானத்தோடு கூடிய உடலை ஒதுக்கவோ முடியாது. ஆனால், துரியத்தின் எல்லை வரைப் போய் துரிய அதீதத்திற்கு போகும் போது எந்த கர்மங்களும் மிஞ்சுவதில்லை. இந்த தேகமும் அப்போது தேவையில்லை. 

துரிய அதீதம் என்பது எட்டா நிலை என்று வர்ணிக்கப்படும் எட்டாம் நிலை. துரியம் ஏழாம் நிலை. அதற்குக் கீழே ஆறு ஞான நிலைகள் இருக்கின்றன. மக்களோடு வாழ்ந்து அவர்களுக்கு சேவை செய்த ஞானிகளெல்லாம் ஐந்தாம் நிலை, ஆறாம் நிலையில் உள்ளவர்களே. அவர்கள் தங்கள் மனோ பலத்தை மற்றவர்களுக்காக பிரயோகிக்க இயலுமே அன்றி. அவர்கள் கொண்ட சரீரத்தின் பிராப்த கர்மத்தை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். எனினும், அதனால் விளையும் துன்பம் அவர்கள் மனோபலத்தை எந்த வகையிலும் பாதிக்காது. தியானத்தில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஞானத்தின் நிலைகளை எட்டாத வரை துன்பமானது அவர்கள் நுண்ணிய மனதால் உணரப்படுவதால், அது பெருந்துன்பமாகத் தெரிகிறது. அதையெல்லாம் வைராக்யத்துடன் கடப்பவர்களுக்கே ஞானத்தின் வாசல் வழி திறக்கும்.
நாம் நமது துன்பங்களைப் போக்கி அருளும் பொருட்டு ஞானிகள், மகான்களை நாடுகிறோம். ஆனால், மிகப் பெரிய ஞானிகள் மகான்கள் கூட தங்கள் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்தார்கள் என்றும், நோய் வாய்ப்பட்டு துன்பப்பட்டதாகவும் சொல்கிறார்களே, ஞானமடைந்த ஜீவன்முக்தர்கள் தங்களுக்கு இன்னல்கள் வராமல் செய்து கொள்ள முடியாதா ? என்று என் நண்பர் இராசராசன் நேற்று கேள்விக் கனையை வீசினார். இவர் மட்டுமல்ல இன்னும் சில நண்பர்கள், ''பல ஆண்டுகளாக மணிக்கணக்கில் தியானம் செய்கிறேன். தியானத்தில் உணர்வு அதிகமாக அதிகமாக துன்பங்கள் அதிகமாகி விட்டது. எல்லாவற்றையும் விட்டு விடலாமா என்று தோன்றுகிறது என்பார்கள். சிலர் விட்டுவிடவும் செய்வார்கள்.

அதாவது, பாலைவனத்தில் நடந்து செல்லும் ஒருவன் மிகவும் களைத்துப் போய் விடுகிறான். தாகம் நாக்கைப் பிடுங்குகிறது. போதாதக் குறைக்கு சுடு மணலில் நடந்து நடந்து இரண்டு கால்களிலும் கொப்பளங்கள் வேறு தோன்றி விட்டன. உடலெல்லாம் வலி. வேதனை, நரக வேதனை. எப்படியோ தட்டுத் தடுமாறி பாலைவனத்தின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய சோலை ஒன்றைக் கண்டு, அங்கு போய் இளைப்பாறுகிறான். ஆனாலும், கால் வலியும், தலைவலியும் அவனை வாட்டி எடுக்கிறது. துன்பமான வெயிலையும், சுடு மணலையும் விட்டு விலகி இன்பமான சூழலுக்கு வந்த பின்பும் கூட அவனது கஷ்டமானது உடனடியாக தீர்வதில்லை. இந்த நிலைதான் தியானத்தில் உணர்வடைந்தவர்களுக்கும், ஞானிகளுக்கும் ஏற்பட்டது.

பிரபஞ்ச வாழ்வு துன்பங்கள் நிறைந்தது. துன்பம் இல்லாமல் இன்பத்தை மட்டும் தனித்து இவ்வுலகில் அடைய முடியாது. அப்படி மனிதன்படுகின்ற துன்பங்களுக்குக் காரணமாக இருப்பது அஞ்ஞானமேயாகும். தியானத்தில் உணர்வு பெற்று நிலைத்திருப்பவர்களுக்கும், ஞானிகளுக்கும் அஞ்ஞானம் என்பது அடிபட்டுப் போய் விடுகிறது. என்றாலும் அந்தப் பழைய உடம்பிலேதான் அந்த ஞானியானவர் ஜீவன் முக்தன் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனவே உடலில் வாய்த்துள்ள பிராப்த கர்மம் என்பது ஞானிக்கும் உண்டு. அவர்களுக்கு தேகஆத்ம உணர்வு அற்றுப் போவதால் அவர்களால் துன்பங்களைச் சகித்துக் கொள்வதுதான் சாத்தியமே தவிர, பிராப்த கர்மங்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவோ, அஞ்ஞானத்தோடு கூடிய உடலை ஒதுக்கவோ முடியாது. ஆனால், துரியத்தின் எல்லை வரைப் போய் துரிய அதீதத்திற்கு போகும் போது எந்த கர்மங்களும் மிஞ்சுவதில்லை. இந்த தேகமும் அப்போது தேவையில்லை.

துரிய அதீதம் என்பது எட்டா நிலை என்று வர்ணிக்கப்படும் எட்டாம் நிலை. துரியம் ஏழாம் நிலை. அதற்குக் கீழே ஆறு ஞான நிலைகள் இருக்கின்றன. மக்களோடு வாழ்ந்து அவர்களுக்கு சேவை செய்த ஞானிகளெல்லாம் ஐந்தாம் நிலை, ஆறாம் நிலையில் உள்ளவர்களே. அவர்கள் தங்கள் மனோ பலத்தை மற்றவர்களுக்காக பிரயோகிக்க இயலுமே அன்றி. அவர்கள் கொண்ட சரீரத்தின் பிராப்த கர்மத்தை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். எனினும், அதனால் விளையும் துன்பம் அவர்கள் மனோபலத்தை எந்த வகையிலும் பாதிக்காது. தியானத்தில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஞானத்தின் நிலைகளை எட்டாத வரை துன்பமானது அவர்கள் நுண்ணிய மனதால் உணரப்படுவதால், அது பெருந்துன்பமாகத் தெரிகிறது. அதையெல்லாம் வைராக்யத்துடன் கடப்பவர்களுக்கே ஞானத்தின் வாசல் வழி திறக்கும்.

No comments:

Post a Comment