Thursday, March 27, 2014

கட என்றால் போ. உள் என்றால் அகம். போஅகம் = போகம். கடஉள் = கடவுள். அதாவது கடந்து உள்ளே போனால் கடவுளை அறியலாம். போகம் புரிந்தாலும் கடவுளை அடையலாம். யோகத்தின் மூலம் போகத்தைப் புரிந்தால் கடவுளை அடையலாம் என்பது சூக்குமக் கருத்து. போகம் என்பது இணைந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பது. யோகத்தில் கூறப்பட்ட வார்த்தையையே சிற்றின்ப நுகர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள் கவிஞர்கள். சிவன் சக்தியோடு இணைவது போகம். குண்டலினி பரத்தோடு இணைவது போகம். போ அகம் உள்ளே போனால் போகத்தில் திளைக்கலாம். 
ஆமிந்த மனிதனுக்குச் சாரணையேகேளு 
ஆயிரத்தெண் மூலியொடு சரக்கோடெட்டும் 
ஓமிந்த காரத்தில் வைத்துப் புடமேசெய்தால் 
ஓகோகோ கடத்தோடே வுயரத்துக்கும் 
தாமிந்த வரையாறுங் கடந்துபாயும் 
தாயான உன்மனையைத் தாண்டியோடும்  
போமிந்த அண்டபகி ரண்டத்தப்பால் 
போய்மீளும் பூரணத்திற் பொருந்துந்தானே. 

போகர் சொன்னது. அவ்வாறு  மேற் கூறியத் போல போய் அகத்திருந்து போகத்தில் திளைத்திருந்ததால் அவர் போகர். முனைப்புடன் கிரியா யோகத்தைக் கடைபிடிப்பவர் முனிவர். சாமி யார் என்று தேடுபவர் சாமியார். யோகம் புரிபவர் யோகி. ஞானமடைந்தவர் ஞானி. தவம் புரிபவர் தவசி. துறவு பூண்டவர் துறவி. அது போல அகத்துள் போயிருந்து போகத்தில் அதாவது சிவசக்தி இணைப்பில்(குண்டலினி + பரம்) திளைத்திருந்தவர் போகர். இந்த பாடலில் பரி பாஷையாக மருந்து தயாரிப்பதை உதாரணப்படுத்தி விளக்கியிருக்கிறார். ஆயிரத்தெண் மூலிகை என்பது சகஸ்ராரமாகும். எட்டுவகையான சரக்கு மற்றும் தாயான உன்மனை என்பது புருவ மத்திக்கும், பிரம்மரந்திரத்திற்கும் இடையில் உள்ள எட்டு வகைக் கலைகளில் இறுதி நிலை கலைக்கு உன்மனி கலை என்று பெயர். அதாவது இந்து, ரோதினி, நாதம், நாதாந்தம், சக்தி, வியாபினி, கமனி, உன்மனி என்பது சரக்கொடு எட்டு. எட்டாவது கலையாகிய உன்மனியில் குண்டலின் பிரவேசிப்பதையே உன்மனி அவத்தை என்பார்கள். அது ஒரு பரவச நிலையாகும். சிவசக்தி ஐக்கியமாகி உறையும் இடம் என்றும், மெய்ஞான பீடம் என்றும் சொல்வார்கள். அடுத்து வரை ஆறு என்பது ஆறு மலைகளையொத்த ஆதாரங்களைக் குறிப்பது. ஓங்காரத்தை உச்சரித்துக் காற்றைக் கட்டி குண்டலினியை இவற்றையெல்லாம் கடந்து மேலேற்றினால் எட்டு வகை சித்திகளைப் பெறுவதோடு. அண்டபகிரண்டமெல்லாம் போய் மீண்டு வர,லாம். பூரணத்தில் கலந்திடலாம். அதாவது பேராற்றலில் கலந்து நின்றிடலாம். விரும்பினால் முக்தியும் கூடும். 

சாரணை என்பது சித்திகளைச் சொல்வதாகும். ஒருவர் சித்திகளை அடைய வேண்டுமென்றால் குண்டலினி யோகம் மூலம் உடலைப் பொன்னுடம்பாகத், திவ்ய தேகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது சுருக்கம். மேலும் அவர் சொல்வதென்னவென்றால், ஒரு யோகியானவர் வைராக்கியத்துடன் 24 தத்துவங்களைக் கட்டுப்படுத்தி வசப்படுத்தி அவையனைத்தையும் ஒடுங்கி நிற்க வேண்டும் என்கிறார். கர்ம, ஞான இந்திரியங்கள் பத்து, தன்மாத்திரைகள் ஐந்து, பஞ்சபூதங்கள் ஐந்து, மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் நான்கு ஆகமொத்தம் 24 தத்துவங்களின் பாற்பட்டு நிற்கும் மனதை ஆன்ம ஒளியை ஏற்குமாறு செய்வதே தத்துவ ஞானம். இவைகளுக்கு மத்தியில் குண்டலினியும் ஒளித்துள்ளது. தத்துவங்களைக் கட்டுப்படுத்தி, அவற்றைக் கடந்து மனதை ஒரு நிலைப்படுத்தி குண்டலினியை உசுப்பி விட்டு சுழுத்தி நிலையை அடைய வேண்டும் என்கிறார். இதுவே சிவநிலையாகும் என்பது போகர் வாக்கு. சிவநிலையில் 24 தத்துவங்களும்ஒடுங்கிச் செயலிழந்து நிற்கின்றன. எனவே கர்மம் எதுவும் நிகழமாட்டா. இதுவே தன்னுள்ளேயே தான் ஒளிந்திருக்கும் சிவ நிலை. இதுவே தன்னை அறியும் நிலை என்பது கோட்பாடு. இந்நிலையிலேயே சிவானுபூதியாகிய பூரணத் தன்மை உணரப்படும். கர்மங்கள், பந்தங்கள் யாவும் விடுபடுகின்றன. இதுவே தான் அவனாக நின்ற நிலை. 

தானென்ற ஞானத்தின் கருவைக்கேளு 
தப்பாது நானுரைத்த தத்துவஞானம். 
ஊனென்ற கெடத்துக்கு ளிந்திரியம்பத்து 
உற்பனமாங் கரணமொடு பதினாலுந்தான் 
கானென்ற செடியொன்று தள்ளிப்போட்டுக் 
காரணமாஞ் சித்தத்தே முனைமூலத்தே 
வேனென்ற சயனநித் திரையேசெய்தால் 
வினையில்லை சிவஞானம் விளங்குந்தானே. 

சயன நித்திரை என்பது தூங்காமல் தூங்கும் விழிப்பு நிலையைக் குறிப்பது.

No comments:

Post a Comment