மேலை
நாட்டு மனோதத்துவ நிபுணர்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ அழுத்தமாக
நினைத்த விஷயங்கள் உள்ளே இருந்து கிளம்பி மனதின் மேல்மட்டத்துக்கு வருகிறது
என்கிறார்கள். அவ்வாறாயின் அவை உள்ளே எங்கோ ஒரிடத்தில் போய்
அமர்ந்திருக்கின்றன, பிறகு வரிசையாக மேலே
வருகின்றன என்பது அவர்கள் கருத்து. பொதுவாக வெளி விவகாரமில்லாமல் தூங்கும்
போது இந்த பழைய ஸடாக்குகள் கிளம்பி வந்து கனவாகிறது என்கிறார்கள். ஆக கனவு
என்பது நாம் முன்பு நினைத்த அல்லது எண்ணிய அழுத்தமான எண்ணங்களின்
பிரதிபலிப்பு. எண்ணங்கள் வலிமையானவை என்கிறார்கள். அழுத்தமான ஆழமான
எண்ணங்கள் செயலாகியே தீரும் என்கிறார்கள். கனவு காணுங்கள் என்கிறார்கள்.
தூக்கத்தில் மட்டுமல்ல, ஒன்றும் வேலையில்லை தியானம் செய்யலாம் என்று
உட்காரும் போது கூட தண்ணீருக்கடியிலிருந்து நீர்குமிழிகள் வரிசையாக மேலே
வருவது போல பழைய நினைவுகள் மனதின் மேல் மட்டத்திற்கு வந்து எண்ணங்களாக
பரிணமித்து விடுகின்றன. அது வரை இல்லாத கவலையெல்லாம் அப்போதுதான் வந்து
குசலம் விசாரிக்கின்றன. முன்னோர்கள் இவற்றை பூர்வ வாசனைகள் என்றும், இவற்றை
அடியோடு ஒழித்தால் மட்டுமே, மனம் பூரணமாகத் தெளிந்து ஆன்ம ஜோதி
பிரகாசிக்கும் என்கிறார்கள். அவர்கள் என்னவோ சொல்லி விட்டார்கள். நாம்
அவற்றைப் போபோ என்று பிடித்துத் தள்ளினாலும் போகுமா ? என்றால், போகாது.
அதற்கு என்னதான் செய்வது ? அதற்கு பேராற்றலாகிய இறைநிலையை எண்ணிக் கொண்டே
இருப்பது மட்டுமே ஒரே வழி. அந்த நல்ல வாசனையை வாவா என்று அழைத்து
மனதுக்குள் இருத்திக் கொண்டால் இந்த பூர்வ வாசனைகள் தங்களுக்கு இடமில்லை
என்று ஓடிப் போகும். உடலால் செய்வது மட்டுமல்ல, மனதின் எண்ணமும் ஒரு
வினையே.இப்படி உடலாலும், மனதாலும் ஏற்பட்ட பழைய வினைகளின் விளைவுகளையே
வாசனைகள் என்பார்கள்.
இந்த வாசனைகள் முளைத்து மேலே வருவதோடு போகுமா ? என்றால் இல்லை. அது மேலும் புதிய வினைகளைச் செய்யத் தூண்டும். இப்படி நாம் இந்த வினைகளின் மொத்த வடிவமாகவே இருக்கிறோம். தியானத்தின் நோக்கமே இந்த வினைகளிலிருந்து விடுபடுவதுதான். அதற்கான சில உபாயங்களைப் பார்ப்போம். முதற்கண் உலகியலுக்கு காரணமான அறியாமையைப் போக்க வேண்டும். இந்த அறியாமைதான் எல்லாவற்றையும் நமக்கு வெவ்வேறாகக் காட்டுகிறது. உண்மை ஒன்றுதான், அதில் பேதங்களோ, இருமைகளோ கிடையாது என்ற உணர்வைத் தவிர மற்ற எல்லாம் அறியாமையே. நம்மிலிருந்து மாறுபட்ட ஒன்று, அது மனிதனாகவோ அல்லது வேறு எந்த பொருளாக இருந்தாலும் சரி, நமக்கு சந்தோஷத்தையோ அல்லது எரிச்சலையோ தரும். அதன் விளைவாக நமக்குள் விருப்போ அல்லது வெறுப்போ உருவாகும். அதனால் அந்த மனிதனுக்கோ அல்லது பொருளுக்கோ சாதகமான அல்லது பாதகமானச் செயலைச் செய்யும்படி அது நம்மைத் தூண்டும். இந்த நமது செயல் அந்த வஸ்துவுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அல்லது விருப்பையோ, வெறுப்பையோ உண்டாக்கும். அது நமக்குள் வாசனையாகப் பரிணமிக்கும். இப்படி உருவாகும் இந்த வாசனைகள் அண்ட வெளிக்குள் ஜட, உயிர் தத்துவங்களுக்குள்ளும் அமைதி இல்லாத நிலையை உண்டாக்கி, கொந்தளிப்பையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது. இப்படி இந்த வினைச் சக்கரம் முடிவு இல்லாமல் சுழன்று கொண்டே இருக்கிறது. எனவே இந்த வேறுபடுத்திக் காட்டும் அறியாமையை உடைத்தால், பூர்வ வாசனைகள் தங்களுடைய சக்தியை இழந்து மெதுவாக அழிந்துவிடும்.
அடுத்ததாக முன் வினைகளால் வரும் புலன் அனுபவங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். நம்மிடமிருந்தோ, பிறரிடமிருந்தோ எழுந்த ஒரு சொல்லையோ, செயலையோ மீண்டும் மீண்டும் எண்ணி நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும். அனுபவங்களை அசையோடும் மனப் போக்கை கைவிட வேண்டும். கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார், பழசை மறக்காதே என்றெல்லாம் இங்கு கற்றுத்தரப்படும். ஆனால் பழையது போகட்டும் இனி புரியும் செயல்களைத் தெளிவாகவும் நற்சிந்தனையோடும் செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை அடைய வேண்டும். அடுத்து இந்த வாசனைகளைத் தேக்கி வைத்திருக்கும் மனம் என்னும் கிண்ணத்தைக் கரையச் செய்ய வேண்டும். மன ஒருமைப்பாடு, தியானம் சமாதி இவற்றால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும். ஒரு சில மணித்துளிகளாவது மனதை முற்றிலுமாக அமைதிப்படுத்தப் பழகிவிட்டால் வாசனைகள் படிப்படியாக அழிந்து போகும். அதற்கான எளிய வழி தனிமைதான். இங்கே உள்ளவர்களிடம் கேட்டால் தத்துவார்த்தமாகப் பேசிக் குழப்பி விடுவார்கள். மற்றவர்களிடம் கேள்வியினால் பந்தப் படுவதைத் தவிர்த்து நமக்குள்ளேயே, நமக்கு நாமே கேள்விகளைக் கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். எவற்றையெல்லாம் விலக்க முடியுமோ அவற்றையெல்லாம் விலக்கி விட்டுத் தனிமையில் இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும். பொருள்கள், நிகழ்ச்சிகள், மனிதர்கள், திட்டங்கள், கடமைகள், ஆசைகள் இவையெல்லாம் கூடக் கூட புதிய புதிய வாசனைகள் தோன்றி வலிமைப் பெற்றுவிடும். நம் தொடர்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும். தொடர்பு முடிந்ததும். மறுபடியும் ஆழ்ந்த அமைதியானத் தனிமைக்குப் போய்விட வேண்டும். தீவிர எதிர்புகளால் நம் தனிமைக்கு தொல்லை சேர்த்து அதைப் பாழாக்கக் கூடாது. அதனால்தான் ஏகாந்தம் இனிது என்றார்கள்.
இறையாற்றல், ஆன்மா, ஆன்மீக விதிகள் இவற்றை வெறும் உலகியல் பொருள்களாக எண்ணிவிடக் கூடாது. இவற்றை விலக்கவும் கூடாது. மாறாக நம் தனிமையால் இவற்றை நிரப்ப வேண்டும். இப்படி எல்லாம் நடைமுறையில் சில, பல மாற்றங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே, வாசனைகளை அழித்து மீள முடியும். இதைப் புரிந்து கொள்ளக் கூட வாசனைகள் தடையாக நிற்கும். ஏன் இவை போன்ற மீட்சியின் வழிமுறைகளைப் படிக்கவே விடாது. புறவுலக வாழ்வென்பது சார்ந்து வாழும் வாழ்வுதான் என்றாலும், நம் மனமானது எதையும் பற்றாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தாமரை இலைத் தண்ணீரைப் போல, ஓட்டுக்குள் உள்ள புளியம் பழத்தைப் போல ஒட்டியும் ஒட்டாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment