Friday, March 28, 2014

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடைய வேண்டும்

Photo: யோகம் என்றால் இணைப்பது அதாவது ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்று பொதுவாக நாம் சொல்கிறோம். ஆனால், அதற்கு முன்னால் நாம் நமக்குள்ளே பிரிந்து கிடக்கும் மூன்று விஷயங்களை வலிமையாக்கி ஒன்றுபடுத்தி இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதற்கான பயிற்சி முறைகளையே யோகம் என்கிறோம். அந்த மூன்றையுமே மும்மூர்த்திகள் என்கிறார்கள். அவை உடலாகிய ப்ரம்மன், மனமாகிய விஷ்ணு, உயிராகிய சிவமாகும். அகண்டாகாரத்தில் ஒன்றாக விளங்கும் பரப்ரம்மம் இந்தப் பிரபஞ்சத்தில் மூன்றாகப் பிரிந்து இயங்கியும், இயக்கியும் வருகிறது. இந்த உண்மை நிலைகளை விளக்கி நிற்பதே தத்துவங்கள். அனுபவத்தால் அதை விளங்கிக் கொள்வதே ஞானம். இப்படி ஜீவனை தன் செயல்களின் விளைவால் உண்டாகும் அனுபவத்தால் மேலான, உயர்ந்த, ஆழ்ந்த நிலைக்குத் தயார் செய்வதே வாழ்வாகும். 

ஞானம் ஞானம் என்று சொல்கிறோமே, அது ஏதோ இல்லாத ஒன்றை புதிதாகப் பெற்றுக் கொள்வது என்று நினைத்தால் அது தவறான எண்ணமாகும். அது ஏற்கனவே நமக்குள்ளே உள்ள மறந்து போன, மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை, நம் யதார்த்த சொரூபத்தை உணர்ந்து அதை அடைவதேயாகும். அந்த யதார்த்த சொரூபமான ஆத்மனே யாண்டும் இருப்பது. அதற்கு அழிவோ, மரணமோ கிடையாது என்பதை உணர்வதே ஞானம். இந்த ஞானத்தை அடையும் முயற்சியில் பகுத்துணர்வது என்கிற விவேகமே விதையாக இருக்கிறது. பற்றின்மை என்கிற வைராக்யமே வேராகத் திகழ்கிறது. இந்த விதையானது வேர்விட்டு முளைப்பதற்கு நீர் அவசியமல்லவா ? குருவின் கிருபையே அந்த நீராக, மழையாக விளங்குகிறது. அதன் பொருட்டு உள்ளத்தில் மலரும் ப்ரம்மஞானமே பூவாகிறது. விளைவு பழமாகிய முக்தி வாய்க்கிறது. 

இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். அதாவது, தன்னடக்கம், புலனடக்கமாகிய இயம, நியம, பிரத்தியாகாரம் விதையாகும். தாரணை என்கிற மன ஒருமைப்பாடு வேராகும். மனம் ஒடுங்கிய நிலையில் தியானத்தில் மலர்வது பூவாகும். இதையே பக்தி யோகத்தில் சரணாகதி என்பர். இனி உணர்வு கடந்த சமாதி நிலையாகிய இணைதல் பழமாகிய பயனாகும்.  இயற்கையாகிய தாவரத்திலும் மற்ற எல்லாவற்றிலும் நிகழும் ஒழுங்கும், நேர்த்தியும் நம் உள்ளிலும் நிகழும் போது நாம் யதார்த்த சொரூபத்தை அடைகிறோம். அந்த ஒழுங்கும் நேர்த்தியும் பிரிந்து இயங்கும் உடல், மனம், உயிர் இந்த மூன்றையும் இணைக்கும் போதுதான் சாத்தியமாகிறது. ஆனால், மனிதன் இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியுமான சாதனைகளை விரும்புவதில்லை. புலன் உலக விவகாரங்களையே இன்பமென்று கருதி, அதிலேயே திருப்தியடைந்து பிறவிச் சுழலில் அகப்பட்டு மாய்கின்றான். பிறக்கின்றான், பொருள் சேர்க்கிறான், இன்பத்தையோ துன்பத்தையோ அடைகிறான், மாண்டு போகிறான். இதுவே இயல்பாகப் போய் விட்டது. இதனால் மோட்ச நாட்டம் என்கிற இயல்பான வீடு பேற்றை அடையும் முனைப்பு அற்றுப் போய் விட்டது. நம் யதார்த்த சொரூபமே நமக்கு அமானுஷ்யமாகவும், அதிசயமாகவும் ஆகிவிட்டது. 

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடைய வேண்டும் என்று மாலை நேரத்தில் விரையும் பறவைகளையும், விலங்குகளையும் பாருங்கள். அதைப் போல நாமும் நம் வீடாகிய வீடு பேற்றை அடைய வேண்டும் என்பதை உணருங்கள். அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். இதயத்தை விரிவடையச் செய்யுங்கள். நம்பிக்கையை ஆழமாக வேரூன்றும்படிச் செய்யுங்கள். உண்மையை உணர்ந்து,மேன்மையை அடைந்து விடுங்கள்.
யோகம் என்றால் இணைப்பது அதாவது ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்று பொதுவாக நாம் சொல்கிறோம். ஆனால், அதற்கு முன்னால் நாம் நமக்குள்ளே பிரிந்து கிடக்கும் மூன்று விஷயங்களை வலிமையாக்கி ஒன்றுபடுத்தி இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதற்கான பயிற்சி முறைகளையே யோகம் என்கிறோம். அந்த மூன்றையுமே மும்மூர்த்திகள் என்கிறார்கள். அவை உடலாகிய ப்ரம்மன், மனமாகிய விஷ்ணு, உயிராகிய சிவமாகும். அகண்டாகாரத்தில் ஒன்றாக விளங்கும் பரப்ரம்மம் இந்தப் பிரபஞ்சத்தில் மூன்றாகப் பிரிந்து இயங்கியும், இயக்கியும் வருகிறது. இந்த உண்மை நிலைகளை விளக்கி நிற்பதே தத்துவங்கள். அனுபவத்தால் அதை விளங்கிக் கொள்வதே ஞானம். இப்படி ஜீவனை தன் செயல்களின் விளைவால் உண்டாகும் அனுபவத்தால் மேலான, உயர்ந்த, ஆழ்ந்த நிலைக்குத் தயார் செய்வதே வாழ்வாகும்.

ஞானம் ஞானம் என்று சொல்கிறோமே, அது ஏதோ இல்லாத ஒன்றை புதிதாகப் பெற்றுக் கொள்வது என்று நினைத்தால் அது தவறான எண்ணமாகும். அது ஏற்கனவே நமக்குள்ளே உள்ள மறந்து போன, மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை, நம் யதார்த்த சொரூபத்தை உணர்ந்து அதை அடைவதேயாகும். அந்த யதார்த்த சொரூபமான ஆத்மனே யாண்டும் இருப்பது. அதற்கு அழிவோ, மரணமோ கிடையாது என்பதை உணர்வதே ஞானம். இந்த ஞானத்தை அடையும் முயற்சியில் பகுத்துணர்வது என்கிற விவேகமே விதையாக இருக்கிறது. பற்றின்மை என்கிற வைராக்யமே வேராகத் திகழ்கிறது. இந்த விதையானது வேர்விட்டு முளைப்பதற்கு நீர் அவசியமல்லவா ? குருவின் கிருபையே அந்த நீராக, மழையாக விளங்குகிறது. அதன் பொருட்டு உள்ளத்தில் மலரும் ப்ரம்மஞானமே பூவாகிறது. விளைவு பழமாகிய முக்தி வாய்க்கிறது.

இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். அதாவது, தன்னடக்கம், புலனடக்கமாகிய இயம, நியம, பிரத்தியாகாரம் விதையாகும். தாரணை என்கிற மன ஒருமைப்பாடு வேராகும். மனம் ஒடுங்கிய நிலையில் தியானத்தில் மலர்வது பூவாகும். இதையே பக்தி யோகத்தில் சரணாகதி என்பர். இனி உணர்வு கடந்த சமாதி நிலையாகிய இணைதல் பழமாகிய பயனாகும். இயற்கையாகிய தாவரத்திலும் மற்ற எல்லாவற்றிலும் நிகழும் ஒழுங்கும், நேர்த்தியும் நம் உள்ளிலும் நிகழும் போது நாம் யதார்த்த சொரூபத்தை அடைகிறோம். அந்த ஒழுங்கும் நேர்த்தியும் பிரிந்து இயங்கும் உடல், மனம், உயிர் இந்த மூன்றையும் இணைக்கும் போதுதான் சாத்தியமாகிறது. ஆனால், மனிதன் இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியுமான சாதனைகளை விரும்புவதில்லை. புலன் உலக விவகாரங்களையே இன்பமென்று கருதி, அதிலேயே திருப்தியடைந்து பிறவிச் சுழலில் அகப்பட்டு மாய்கின்றான். பிறக்கின்றான், பொருள் சேர்க்கிறான், இன்பத்தையோ துன்பத்தையோ அடைகிறான், மாண்டு போகிறான். இதுவே இயல்பாகப் போய் விட்டது. இதனால் மோட்ச நாட்டம் என்கிற இயல்பான வீடு பேற்றை அடையும் முனைப்பு அற்றுப் போய் விட்டது. நம் யதார்த்த சொரூபமே நமக்கு அமானுஷ்யமாகவும், அதிசயமாகவும் ஆகிவிட்டது.

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடைய வேண்டும் என்று மாலை நேரத்தில் விரையும் பறவைகளையும், விலங்குகளையும் பாருங்கள். அதைப் போல நாமும் நம் வீடாகிய வீடு பேற்றை அடைய வேண்டும் என்பதை உணருங்கள். அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். இதயத்தை விரிவடையச் செய்யுங்கள். நம்பிக்கையை ஆழமாக வேரூன்றும்படிச் செய்யுங்கள். உண்மையை உணர்ந்து,மேன்மையை அடைந்து விடுங்கள்.

No comments:

Post a Comment