Wednesday, April 9, 2014

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும்!

Photo: அறியாமையாகிய அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கிற மனிதனின் வாழ்வு ஒரு மரத்தினுடைய வாழ்வைப் போன்றிருக்கிறது. ஒரு பெரிய மரமாக விரிவடையக் கூடிய அவ்வளவு ஆற்றலும் ஒரு சிறிய விதைக்குள் ஒடுங்கிக் கிடக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் நிலையும் அத்தகையதுதான். விதைக்குள் அடைபட்டுக் கிடக்கும் மரத்தைப் போல அவனும் காற்றையோ வெளிச்சத்தையோ பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறான். புலன்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. மூளை வேலை செய்வதில்லை, அறிவு அவனிடத்தில் ஒடுக்க நிலையில் இருக்கிறது. ஒரு சிசுவுக்கு கர்ப்பவாசத்தில் எத்தனை விதமானத் தடைகளும், குறைகளும் இருக்கின்றதோ அவ்வளவும் அறியாமையில் திகழும் மனிதனுக்கு உலக வாழ்வில் இருக்கிறது. கர்பவாசத்தைப் போன்று அவன் அறிவானது இருளில் மூடிக் கிடக்கிறது. கர்ப்பவாசத்தை விட்டு வெளியே வரவில்லை என்றால் அது சிசுவுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்து விடும். அது போல அறியாமையிலிருந்து விடுபடாத வரையில் ஒரு மனிதன் துன்பத்திலிருந்து விடுபடவே முடியாது. அறிவுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் அருமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார்.     

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும். -குறள்.

சூழ்ந்தழுத்தி, இழுத்துச் சொல்லும் வெள்ளம் போலத் துன்பங்கள் பெருகி வந்தாலும், அறிவுடையவன் முன்பு அத்துன்பங்கள் கெட்டழியும். ஆனால், அறிவுடைமை என்பது என்ன ? இங்குதான் நாம் பிசகி விடுகிறோம். எதனால் தனக்கோ பிறர்க்கோ துன்பம் நேராதோ அத்தகைய எண்ணம், சொல், செயல் கொண்டு ஒழுகுவதே அறிவுடைமை. நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுயநலம் கருதி நாம் செய்யும் தவறான செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறோமே தவிர அறிவுடைமையோடு நடந்து கொள்கிறோமா என்றால், இல்லை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எது நிலையானதோ, எது அழிவற்றதோ, எது தனக்கோ, பிறர்க்கோ, இக்காலத்தோ, வரும் காலத்திலோ துன்பம் தறாத செயலோ அதை அறிந்து, உணர்ந்து ஏற்றுக் கொண்டு வாழ்வதே அறிவுடமையாகும். இன்னொரு உபாயமும் இருக்கிறது. அதாவது, 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
கிடும்பை படாஅ தவர். 

தனக்கு ஏற்படும் துன்பங்களுக்கு துன்பம் நேரும் படி செய்து விடவேண்டும். அது எப்படி என்றால், தன் துன்பங்களுக்குக் காரணம் நாம் முன்பு செய்த வினைகளே என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து அத் துன்பங்களை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் பொழுது, அத் துன்பங்கள் நமக்குத் துன்பமாகத் தோன்றாது. நீதிபதி முன்பு ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு வருந்தும் பொழுது, அவர் மனமிரங்கி அவன் தண்டனையைக் குறைப்பது போல, நம் மனசாட்சி என்கிற நீதிபதியின் முன்பு தன் தவறை ஒருவன் உணர்ந்து தன்னை ஒப்புக் கொடுக்கும் பொழுது அவன் துன்பங்கள் குறைந்து விடும். மேலும் இது போன்றத் துன்பங்களை விளைவிக்கும் செயல்களை இனி மேல் செய்யக் கூடாது என்கிற மனத் தெளிவும் மன உறுதியும் ஏற்படும். இத்தகைய மனத் திட்பத்தையே குறள் வினைத் திட்பம் என்கிறது. இத்தகைய மனத் திட்பம்தான் மனிதரை மேல் நிலைக்கு உயர்த்துவது. இது அறிவோடு கூடிய மனத் திட்பமாக இருத்தல் வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. 

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும். நம் செயல்பாடுகளின் நுட்பங்கள் மனதில் ஊன்றி நிலைத்திருப்பதின் பயனே அது. அதாவது ஆழ்மனதில் அந்த நுட்பங்களை அழுத்தமாக, வலுவாகப் பதித்துக் கொண்டதின் பயனாகும். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 

ஒரு எண்ணம் எந்த அளவுக்கு திண்ணமாக அதாவது வலிமையாக விளங்குகிறதோ, அந்த அளவுக்கு அந்த எண்ணம் விரைவாக ஈடேறும். அப்படி எண்ணத்திற்கு வலிமை சேர்க்க வேண்டுமானால் மனதில் உதிக்கும் எண்ணங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும். கோடிக்கணக்கில் எண்ணிக்கையில் அடங்காத அளவு உதித்துக் கொண்டிருப்பதால்தான் அவற்றை எண்ணங்கள் என்று அழைக்கிறார்கள். மன உறுதி என்பது ஒருவன் தேவையற்ற எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபடும் அளவுக்கே ஏற்படும். எண்ணங்களின் தொகுப்பே மனம் என்பதால் எண்ணங்கள் குறையக் குறைய மனம் வசப்பட்டு ஒருமுனைப் பாங்கு வாய்க்கும். தியானம் இதற்கு எளிய உபாயமாக இருக்கிறது. தியானத்தினால் மனமானது பேரறிவின் பிரிதிபலிப்பால் பிரகாசிக்கிறது. அறிவொளி துலங்கும் அளவு மனிதனுடைய வாழ்வு மகத்துவம் பெறுகிறது.
அறியாமையாகிய அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கிற மனிதனின் வாழ்வு ஒரு மரத்தினுடைய வாழ்வைப் போன்றிருக்கிறது. ஒரு பெரிய மரமாக விரிவடையக் கூடிய அவ்வளவு ஆற்றலும் ஒரு சிறிய விதைக்குள் ஒடுங்கிக் கிடக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் நிலையும் அத்தகையதுதான். விதைக்குள் அடைபட்டுக் கிடக்கும் மரத்தைப் போல அவனும் காற்றையோ வெளிச்சத்தையோ பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறான். புலன்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. மூளை வேலை செய்வதில்லை, அறிவு அவனிடத்தில் ஒடுக்க நிலையில் இருக்கிறது. ஒரு சிசுவுக்கு கர்ப்பவாசத்தில் எத்தனை விதமானத் தடைகளும், குறைகளும் இருக்கின்றதோ அவ்வளவும் அறியாமையில் திகழும் மனிதனுக்கு உலக வாழ்வில் இருக்கிறது. கர்பவாசத்தைப் போன்று அவன் அறிவானது இருளில் மூடிக் கிடக்கிறது. கர்ப்பவாசத்தை விட்டு வெளியே வரவில்லை என்றால் அது சிசுவுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்து விடும். அது போல அறியாமையிலிருந்து விடுபடாத வரையில் ஒரு மனிதன் துன்பத்திலிருந்து விடுபடவே முடியாது. அறிவுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் அருமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார்.

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும். -குறள்.

சூழ்ந்தழுத்தி, இழுத்துச் சொல்லும் வெள்ளம் போலத் துன்பங்கள் பெருகி வந்தாலும், அறிவுடையவன் முன்பு அத்துன்பங்கள் கெட்டழியும். ஆனால், அறிவுடைமை என்பது என்ன ? இங்குதான் நாம் பிசகி விடுகிறோம். எதனால் தனக்கோ பிறர்க்கோ துன்பம் நேராதோ அத்தகைய எண்ணம், சொல், செயல் கொண்டு ஒழுகுவதே அறிவுடைமை. நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுயநலம் கருதி நாம் செய்யும் தவறான செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறோமே தவிர அறிவுடைமையோடு நடந்து கொள்கிறோமா என்றால், இல்லை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எது நிலையானதோ, எது அழிவற்றதோ, எது தனக்கோ, பிறர்க்கோ, இக்காலத்தோ, வரும் காலத்திலோ துன்பம் தறாத செயலோ அதை அறிந்து, உணர்ந்து ஏற்றுக் கொண்டு வாழ்வதே அறிவுடமையாகும். இன்னொரு உபாயமும் இருக்கிறது. அதாவது,

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
கிடும்பை படாஅ தவர்.

தனக்கு ஏற்படும் துன்பங்களுக்கு துன்பம் நேரும் படி செய்து விடவேண்டும். அது எப்படி என்றால், தன் துன்பங்களுக்குக் காரணம் நாம் முன்பு செய்த வினைகளே என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து அத் துன்பங்களை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் பொழுது, அத் துன்பங்கள் நமக்குத் துன்பமாகத் தோன்றாது. நீதிபதி முன்பு ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு வருந்தும் பொழுது, அவர் மனமிரங்கி அவன் தண்டனையைக் குறைப்பது போல, நம் மனசாட்சி என்கிற நீதிபதியின் முன்பு தன் தவறை ஒருவன் உணர்ந்து தன்னை ஒப்புக் கொடுக்கும் பொழுது அவன் துன்பங்கள் குறைந்து விடும். மேலும் இது போன்றத் துன்பங்களை விளைவிக்கும் செயல்களை இனி மேல் செய்யக் கூடாது என்கிற மனத் தெளிவும் மன உறுதியும் ஏற்படும். இத்தகைய மனத் திட்பத்தையே குறள் வினைத் திட்பம் என்கிறது. இத்தகைய மனத் திட்பம்தான் மனிதரை மேல் நிலைக்கு உயர்த்துவது. இது அறிவோடு கூடிய மனத் திட்பமாக இருத்தல் வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும். நம் செயல்பாடுகளின் நுட்பங்கள் மனதில் ஊன்றி நிலைத்திருப்பதின் பயனே அது. அதாவது ஆழ்மனதில் அந்த நுட்பங்களை அழுத்தமாக, வலுவாகப் பதித்துக் கொண்டதின் பயனாகும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

ஒரு எண்ணம் எந்த அளவுக்கு திண்ணமாக அதாவது வலிமையாக விளங்குகிறதோ, அந்த அளவுக்கு அந்த எண்ணம் விரைவாக ஈடேறும். அப்படி எண்ணத்திற்கு வலிமை சேர்க்க வேண்டுமானால் மனதில் உதிக்கும் எண்ணங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும். கோடிக்கணக்கில் எண்ணிக்கையில் அடங்காத அளவு உதித்துக் கொண்டிருப்பதால்தான் அவற்றை எண்ணங்கள் என்று அழைக்கிறார்கள். மன உறுதி என்பது ஒருவன் தேவையற்ற எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபடும் அளவுக்கே ஏற்படும். எண்ணங்களின் தொகுப்பே மனம் என்பதால் எண்ணங்கள் குறையக் குறைய மனம் வசப்பட்டு ஒருமுனைப் பாங்கு வாய்க்கும். தியானம் இதற்கு எளிய உபாயமாக இருக்கிறது. தியானத்தினால் மனமானது பேரறிவின் பிரிதிபலிப்பால் பிரகாசிக்கிறது. அறிவொளி துலங்கும் அளவு மனிதனுடைய வாழ்வு மகத்துவம் பெறுகிறது.

ராகம், காமம், துவேஷம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசூயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம்

Photo: தெய்வீக வாழ்வைக் குறித்து நம் தேசத்தில், நம் முன்னோர்களால் விளக்கப்பட்டுள்ள அளவு வேறு எங்கும் விளக்கப்படவில்லை. எனவே அதில் ஆர்வம் கொண்டு பலர் தெய்வீக வாழ்வில் நாட்டம் கொண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் என்னதான் பின்பற்றினாலும் நிறைய பேர் முன்னம் இருந்ததை விடக் கீழ் நிலைக்குப் போய் விடுகின்றனர். ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து மனதைப் பண்படுத்துவதற்குப் பதிலாக, மேலும் மேலும் உலகாய விஷயங்களைக் குறித்து கவலை கொண்டு, அவற்றைப் பெற இறைவனின் உதவியை நாடுகின்றனர். இதனால் மேலும் மனம் குப்பையாகி விடுகிறது. தெய்வீக வாழ்வை மார்க்கம் எனறு குறிப்பிடுவார்கள். மார்க்கம் என்றால் பாதை அல்லது நெறி என்று கொள்ளலாம். பாதை என்கிற பொழுது நம் தேடல் பயணம் என்று ஆகி விடும். போக்கும் வரவும், புணர்வுமில்லாத எங்கும் நீக்கமற நிரம்பி நிற்கும்  பரம்பொருளை அடைவதற்கு நாம் பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அடையலாம்.எனவே நெறி என்பதே சரியான பொருளாகும். ஆனால், நெறியைக் கடைபிடிப்பவன் குறியை அதாவது இலக்கை அடைவான் என்பது கோட்பாடு. இங்கே நிலைமையோ வேறு நெறியையே குறியாகக் கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம். அதாவது ஒரு பாதையில் பயணம் செய்தால் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். போய்ச் சேர வேண்டிய இடம் குறி. நமது சரியான பயணம் நெறி. ஆனால் நாமோ நடந்து கொண்டேயிருக்கிறோம். பயணத்திலேயே நம் மனம் மயங்கி நிற்கிறது. பிறகு எங்ஙனம் குறியை அடைவது. இப்படி நம் மனம் மயங்கி நிற்பதற்குக் காரணமாக அமைவது என்ன ? 

சுற்றி சுற்றி எந்த விஷயத்தைத் தொட்டாலும் அங்கே மனம் வந்து விடுகிறது. மனம் கெட்டுவிட்டால் குணமும் கெட்டு விடுகிறது. குணம் கெட்டு விட்டால் வாழ்வே கெட்டு விடும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, யோக சாதனைகள் மற்றும் தியானத்திற்கும் பொருந்தும். மனம் கெட்டுப் போவதற்கு காரணமாக உள்ள குற்றங்கள் பதிமூன்று என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. அவை ராகம், காமம், துவேஷம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசூயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம் என்பவையாகும்.
ராகம் - ஆண்மை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் வேறு விதமாகப் பொருள் கூறுவோம். ஆனால் வள்ளுவப் பெருந்தகை அதற்கு அற்புதமான பொருள் கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ''பிறன் மனை நோக்காப் பேராண்மை'' என்கிறார். அது எப்படி ? கண்ணுன்னு இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க என்று எதிர் கேள்வியை வீசுபவர்கள் உண்டு. பார்க்கலாம், ஆனால் தவறான நோக்கத்தோடு பார்க்கக் கூடாது. உங்கள் நோக்கங்கள் மாறும் போது உணர்வுகள் மாறும். தவறான உணர்வுகள் எழும் போது உடலில் ஒவ்வாத இராசயன மாற்றங்கள் நிகழும். அது நம் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பைத் தந்து விடும். பிறன் மனைவி மேல் ஆசைப் பட்டு, அவளை அடைய வேண்டும் என எண்ணும் போது அது வெறியாக மாறிவிடும். அது காம வெறி. நம் மனைவியோடு ஏற்படும் போது அந்த உணர்வு நம் உடலை பாதிப்பதில்லை. அது இணக்கமான உறவு, உணர்வு. இப்படித் தவறான நோக்கத்தோடு பிற பெண்கள் மீது ஆசைப்படும் குற்றத்தையே ராகம் என்கிறார்கள். இந்தக் குற்றத்தின் பிடியில் சிக்கியவன் பகை, அச்சம், பாவம் போன்றவற்றால் அழிவான். அழிந்தாலும் பரவாயில்லை அடைந்தே தீருவேன் என்ற நிலைக்கு மனதை இந்த குற்றம் தள்ளிவிடும். இதற்கு புராணங்களில் இந்திரன் இராவணன் என்று பல உதாரணங்கள் காட்டப்பட்டுள்ளன.

காமம் - இது போதும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் குற்றமாகும். மனமானது ஆசையைத் தூண்டிவிடும். திருப்தியே ஏற்படாது. இந்தப் பற்றானது மனதின் தூய்மையைக் கெடுக்கும். இதன்பிடியில் சிக்கிச் சீரழிந்தவர்கள் கோடி. சாதகர்களுக்கு இந்த குற்றம் பேரிடரைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன்பாற் பட்டவன் மீள்வது கடினம்.

துவேஷம் - காரணமே இல்லாமலோ அல்லது ஏதோ ஒரு காணரத்திற்காகவோ மற்றவர்கள் மேல் இடைவிடாமல் வெறுப்பைக் காட்டும் குற்றமாகும். இதனால் பல கொடிய செயலைச் செய்ய மனம் தூண்டிவிடும். பிறர் மேல் நாம் காட்டும் துவேஷம்உணர்வுகள் வாயிலாக நம் வாழ்வை கடுமையாக பாதிக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். 

குரோதம் - இது தீராத பகை, இதனால் கொள்ளும் நீண்ட சினம். மகாபாரதத்தில் இந்த குற்றம் உள்ளவர்கள் அனைவரும் அழிந்ததாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மனதின் மிக மோசமான ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. மனதில் இந்த குற்றம் உள்ளவன் அழிவது உறுதி.

உலோபம் - இதைக் கஞ்சத்தனம் என்பார்கள். உதவும் மனம் இல்லாமல் போவதால் இது ஒரு வகை சுயநலப் போக்கே. நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் இந்த குணம் உள்ளவன் கையில் கிடைக்கும் பொருளும் அழியும் அவனும் அழிவான். இந்தக் குற்றம் உள்ளவன் கருணை, அன்பு போன்ற நற்குணங்கள் இல்லாத கடின சித்தம் உடையனாக இருப்பதால் இவன் சாதகன் என்ற நிலைக்கே தகுதியானவன் இல்லை.

மோகம் - ஒருகுறிப்பிட்ட பொருளின் மீதோ, உறவுகள் மீதோ, விலங்குகள் மீதோ கொள்ளும் ஆசாபாசம். அது எதன் மீது வேண்டுமானாலும் அமையலாம். இது ஆன்மிக முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அறிவுருத்தப்பட்டுள்ளது.

மதம் - இதை கர்வம், செருக்கு என்றும் சொல்வார்கள். இதனால் பிறரை மதிக்கும் குணத்தை மனம் இழந்து விடுகிறது. தானே உயர்ந்தவன் என்கிற மனப் போக்கு வந்து விடுகிறது. மதம் பிடித்தவன் தன் சிந்தனா சக்தியை இழந்து விடுவான் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாற்சரியம் - பிறருடைய முன்னேற்றம் கண்டு பொறாமைப்பட்டு அவர்களுக்கு கேடு நினைக்கும் ஒரு குற்றமாகும். இக்குற்றம் மனதில் கொண்டவன் அழிவது உறுதி.

இரட்சியம் - இது தான் பெற்ற துன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என நினைக்கும் கேவலமான ஒரு மனக் குற்றமாகும். இந்தக் குற்றம் உள்ளவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

அசூயை - இதற்கு இரண்டுவிதமான விளக்கங்கள் காணப்படுகின்றன. தான் அனுபவிக்கும் ஒன்றை மற்றவர்கள் எவரும் அனுபவிக்கக் கூடாது என்கிற ஒரு குணம் என்றும் ஒன்றைப் பார்த்தவுடன் முகம் சுளிப்பது என்பது இந்த இரண்டு குற்றங்களுமே அசூயைதான். இது பொறாமை, ஆசை, சுயநலம் சார்ந்ததல்ல. பிறரை அருவருப்பாக எண்ணும் ஒரு மனப் போக்கு.

டம்பம் - இது பகட்டு. பேச்சிலும், செயலிலும் மற்றவர்களை விட தானே சிறந்தவன் என்று அலட்டிக் கொள்ளும் மனப் போக்கு. பிறர் தம்மை புகழ வேண்டும் என்பதற்காக அதிகம் அலட்டிக் கொள்வது. ஆடம்பரமாகக் காட்டிக் கொள்வது. இதுவும் ஒருவகை மனக் குற்றமாகவே கருதப்படுகிறது.

தர்ப்பம் - இது ஒரு வகையான அதிகப்படியான தன் முனைப்பு என்று கூடச் சொல்லலாம். தானே பெரிய வீரன் என்கிற ஒரு எண்ணம் தோன்றுவதால் பிறரை குறைவாக எண்ணும் மனக்குற்றம். இந்த எண்ணம் அழிவைத்தான் தரும். மற்றவர்கள் பலத்தை எடைபோடத் தெரியாமல் போய்விடும்.

ஆங்காரம் - இதுவும் அதே நிலையை ஒத்ததுதான். இதில் மதம், தர்ப்பம், கோபம் எல்லாம் கூடிய ஒரு நிலை. இறுமாப்பு கூடிய நிலை. இந்த நிலை மிகக் கொடியது. யோக சாதகர்களுக்கு, தியான ஒழுக்கம் கடை பிடிப்பவர்களுக்கு இந்தக் குற்றங்கள் யாவும் பெரும் தடைகளே. மன ஒருமைப்பாடு நீடித்திருப்பதே முக்கியம். மனம் சலனமடைய இந்த த் தடைகள் காரணமாகி விடுகின்றன. கவனம் சிதறிவிட்டால் மீண்டும் கவனம் கொண்டுவரத் தாமதமாகும்.
தெய்வீக வாழ்வைக் குறித்து நம் தேசத்தில், நம் முன்னோர்களால் விளக்கப்பட்டுள்ள அளவு வேறு எங்கும் விளக்கப்படவில்லை. எனவே அதில் ஆர்வம் கொண்டு பலர் தெய்வீக வாழ்வில் நாட்டம் கொண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் என்னதான் பின்பற்றினாலும் நிறைய பேர் முன்னம் இருந்ததை விடக் கீழ் நிலைக்குப் போய் விடுகின்றனர். ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து மனதைப் பண்படுத்துவதற்குப் பதிலாக, மேலும் மேலும் உலகாய விஷயங்களைக் குறித்து கவலை கொண்டு, அவற்றைப் பெற இறைவனின் உதவியை நாடுகின்றனர். இதனால் மேலும் மனம் குப்பையாகி விடுகிறது. தெய்வீக வாழ்வை மார்க்கம் எனறு குறிப்பிடுவார்கள். மார்க்கம் என்றால் பாதை அல்லது நெறி என்று கொள்ளலாம். பாதை என்கிற பொழுது நம் தேடல் பயணம் என்று ஆகி விடும். போக்கும் வரவும், புணர்வுமில்லாத எங்கும் நீக்கமற நிரம்பி நிற்கும் பரம்பொருளை அடைவதற்கு நாம் பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அடையலாம்.எனவே நெறி என்பதே சரியான பொருளாகும். ஆனால், நெறியைக் கடைபிடிப்பவன் குறியை அதாவது இலக்கை அடைவான் என்பது கோட்பாடு. இங்கே நிலைமையோ வேறு நெறியையே குறியாகக் கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம். அதாவது ஒரு பாதையில் பயணம் செய்தால் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். போய்ச் சேர வேண்டிய இடம் குறி. நமது சரியான பயணம் நெறி. ஆனால் நாமோ நடந்து கொண்டேயிருக்கிறோம். பயணத்திலேயே நம் மனம் மயங்கி நிற்கிறது. பிறகு எங்ஙனம் குறியை அடைவது. இப்படி நம் மனம் மயங்கி நிற்பதற்குக் காரணமாக அமைவது என்ன ?

சுற்றி சுற்றி எந்த விஷயத்தைத் தொட்டாலும் அங்கே மனம் வந்து விடுகிறது. மனம் கெட்டுவிட்டால் குணமும் கெட்டு விடுகிறது. குணம் கெட்டு விட்டால் வாழ்வே கெட்டு விடும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, யோக சாதனைகள் மற்றும் தியானத்திற்கும் பொருந்தும். மனம் கெட்டுப் போவதற்கு காரணமாக உள்ள குற்றங்கள் பதிமூன்று என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. அவை ராகம், காமம், துவேஷம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசூயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம் என்பவையாகும்.
ராகம் - ஆண்மை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் வேறு விதமாகப் பொருள் கூறுவோம். ஆனால் வள்ளுவப் பெருந்தகை அதற்கு அற்புதமான பொருள் கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ''பிறன் மனை நோக்காப் பேராண்மை'' என்கிறார். அது எப்படி ? கண்ணுன்னு இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க என்று எதிர் கேள்வியை வீசுபவர்கள் உண்டு. பார்க்கலாம், ஆனால் தவறான நோக்கத்தோடு பார்க்கக் கூடாது. உங்கள் நோக்கங்கள் மாறும் போது உணர்வுகள் மாறும். தவறான உணர்வுகள் எழும் போது உடலில் ஒவ்வாத இராசயன மாற்றங்கள் நிகழும். அது நம் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பைத் தந்து விடும். பிறன் மனைவி மேல் ஆசைப் பட்டு, அவளை அடைய வேண்டும் என எண்ணும் போது அது வெறியாக மாறிவிடும். அது காம வெறி. நம் மனைவியோடு ஏற்படும் போது அந்த உணர்வு நம் உடலை பாதிப்பதில்லை. அது இணக்கமான உறவு, உணர்வு. இப்படித் தவறான நோக்கத்தோடு பிற பெண்கள் மீது ஆசைப்படும் குற்றத்தையே ராகம் என்கிறார்கள். இந்தக் குற்றத்தின் பிடியில் சிக்கியவன் பகை, அச்சம், பாவம் போன்றவற்றால் அழிவான். அழிந்தாலும் பரவாயில்லை அடைந்தே தீருவேன் என்ற நிலைக்கு மனதை இந்த குற்றம் தள்ளிவிடும். இதற்கு புராணங்களில் இந்திரன் இராவணன் என்று பல உதாரணங்கள் காட்டப்பட்டுள்ளன.

காமம் - இது போதும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் குற்றமாகும். மனமானது ஆசையைத் தூண்டிவிடும். திருப்தியே ஏற்படாது. இந்தப் பற்றானது மனதின் தூய்மையைக் கெடுக்கும். இதன்பிடியில் சிக்கிச் சீரழிந்தவர்கள் கோடி. சாதகர்களுக்கு இந்த குற்றம் பேரிடரைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன்பாற் பட்டவன் மீள்வது கடினம்.

துவேஷம் - காரணமே இல்லாமலோ அல்லது ஏதோ ஒரு காணரத்திற்காகவோ மற்றவர்கள் மேல் இடைவிடாமல் வெறுப்பைக் காட்டும் குற்றமாகும். இதனால் பல கொடிய செயலைச் செய்ய மனம் தூண்டிவிடும். பிறர் மேல் நாம் காட்டும் துவேஷம்உணர்வுகள் வாயிலாக நம் வாழ்வை கடுமையாக பாதிக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

குரோதம் - இது தீராத பகை, இதனால் கொள்ளும் நீண்ட சினம். மகாபாரதத்தில் இந்த குற்றம் உள்ளவர்கள் அனைவரும் அழிந்ததாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மனதின் மிக மோசமான ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. மனதில் இந்த குற்றம் உள்ளவன் அழிவது உறுதி.

உலோபம் - இதைக் கஞ்சத்தனம் என்பார்கள். உதவும் மனம் இல்லாமல் போவதால் இது ஒரு வகை சுயநலப் போக்கே. நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் இந்த குணம் உள்ளவன் கையில் கிடைக்கும் பொருளும் அழியும் அவனும் அழிவான். இந்தக் குற்றம் உள்ளவன் கருணை, அன்பு போன்ற நற்குணங்கள் இல்லாத கடின சித்தம் உடையனாக இருப்பதால் இவன் சாதகன் என்ற நிலைக்கே தகுதியானவன் இல்லை.

மோகம் - ஒருகுறிப்பிட்ட பொருளின் மீதோ, உறவுகள் மீதோ, விலங்குகள் மீதோ கொள்ளும் ஆசாபாசம். அது எதன் மீது வேண்டுமானாலும் அமையலாம். இது ஆன்மிக முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அறிவுருத்தப்பட்டுள்ளது.

மதம் - இதை கர்வம், செருக்கு என்றும் சொல்வார்கள். இதனால் பிறரை மதிக்கும் குணத்தை மனம் இழந்து விடுகிறது. தானே உயர்ந்தவன் என்கிற மனப் போக்கு வந்து விடுகிறது. மதம் பிடித்தவன் தன் சிந்தனா சக்தியை இழந்து விடுவான் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாற்சரியம் - பிறருடைய முன்னேற்றம் கண்டு பொறாமைப்பட்டு அவர்களுக்கு கேடு நினைக்கும் ஒரு குற்றமாகும். இக்குற்றம் மனதில் கொண்டவன் அழிவது உறுதி.

இரட்சியம் - இது தான் பெற்ற துன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என நினைக்கும் கேவலமான ஒரு மனக் குற்றமாகும். இந்தக் குற்றம் உள்ளவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

அசூயை - இதற்கு இரண்டுவிதமான விளக்கங்கள் காணப்படுகின்றன. தான் அனுபவிக்கும் ஒன்றை மற்றவர்கள் எவரும் அனுபவிக்கக் கூடாது என்கிற ஒரு குணம் என்றும் ஒன்றைப் பார்த்தவுடன் முகம் சுளிப்பது என்பது இந்த இரண்டு குற்றங்களுமே அசூயைதான். இது பொறாமை, ஆசை, சுயநலம் சார்ந்ததல்ல. பிறரை அருவருப்பாக எண்ணும் ஒரு மனப் போக்கு.

டம்பம் - இது பகட்டு. பேச்சிலும், செயலிலும் மற்றவர்களை விட தானே சிறந்தவன் என்று அலட்டிக் கொள்ளும் மனப் போக்கு. பிறர் தம்மை புகழ வேண்டும் என்பதற்காக அதிகம் அலட்டிக் கொள்வது. ஆடம்பரமாகக் காட்டிக் கொள்வது. இதுவும் ஒருவகை மனக் குற்றமாகவே கருதப்படுகிறது.

தர்ப்பம் - இது ஒரு வகையான அதிகப்படியான தன் முனைப்பு என்று கூடச் சொல்லலாம். தானே பெரிய வீரன் என்கிற ஒரு எண்ணம் தோன்றுவதால் பிறரை குறைவாக எண்ணும் மனக்குற்றம். இந்த எண்ணம் அழிவைத்தான் தரும். மற்றவர்கள் பலத்தை எடைபோடத் தெரியாமல் போய்விடும்.

ஆங்காரம் - இதுவும் அதே நிலையை ஒத்ததுதான். இதில் மதம், தர்ப்பம், கோபம் எல்லாம் கூடிய ஒரு நிலை. இறுமாப்பு கூடிய நிலை. இந்த நிலை மிகக் கொடியது. யோக சாதகர்களுக்கு, தியான ஒழுக்கம் கடை பிடிப்பவர்களுக்கு இந்தக் குற்றங்கள் யாவும் பெரும் தடைகளே. மன ஒருமைப்பாடு நீடித்திருப்பதே முக்கியம். மனம் சலனமடைய இந்த த் தடைகள் காரணமாகி விடுகின்றன. கவனம் சிதறிவிட்டால் மீண்டும் கவனம் கொண்டுவரத் தாமதமாகும்.

புலால் உணவு உண்டால்????

Photo: ஐயா எனக்கு ஒரு சந்தேகம், புலால் உணவு உண்டால், அந்த விலங்கினப் பதிவுகள் நம் உடலில் கலந்து நமக்கும் மிருகக் குணம் வந்து விடும் என்று சொல்கிறார்களே உண்மையா ? அப்படியானால் மான், ஆடு, மாடு போன்ற சாதுவான விலங்குகளை வேட்டையாடித் தின்னுகின்ற சிங்கம், புலி போன்ற விலங்குகள் ஏன் சாதுவாக மாறுவதில்லை ? 

முதலில் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். தொடும் உணர்வு ஓரறிவு, அதனுடன் வாய் இணைவது ஈரறிவு, தொடும் உணர்வு, வாய், மூக்கு என்ற மூன்றும் சேர்ந்தது மூன்றறிவு, தொடு உணர்வு, வாய், மூக்கு, கண் நான்கும் சேர்ந்தது நாலறிவு, இவற்றோடு செவி இருப்பது ஐந்தறிவு. இந்த ஐந்து புலன்களும் ஐந்து உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே மனம் என்ற ஒன்றைப் பெற்றிருக்கிறான். அந்த கரணங்களாகிய புத்தி, அஹங்காரம், சித்தம் இந்த மூன்றும் விலங்குகளுக்கும் உண்டு. ஆனால் நான்காவது அந்த கரணமாகிய மனம் அவைகளுக்குக் கிடையாது. அந்த மனம் என்றால் என்ன என்றால் எண்ணங்களின் தொகுப்பு. அந்த எண்ணங்களுக்கு ஆதாரமாக இருப்பது சொல். அது இல்லை என்றால் எந்த எண்ணமும் எழாது. மனமும் கிடையாது. எனவே சொல்லும், சொல்லால் எழும் எண்ணமுமே மனம் என்கிற  ஆறறிவாகும். இவை அனைத்தும் பெற்று சிந்திக்கும் திறன் பெற்றவன் மனிதன். "மக்கள் தாமே ஆறறிவுயிரே" (தொல்காப்பியம் - 1532). 

இதனடிப்படையில் எண்ணிப் பார்க்கின்ற பொழுது மனிதன் மற்ற உயிர்களை விட எதனால் மாறுபட்டவன், உயர்ந்தவன் என்பது புலனாகிறது. ஆனால், ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லையே என்று அதே தொல்காப்பியர் ஓரிடத்தில் சொல்கிறார். அதற்குக் காரணம் இந்த மனமே. விலங்குகள் புலன் வழியாக உணர்வை அறிகின்றன பிறகு செயல்படுகின்றன அதோடு முடிந்து விடுகிறது. அங்கு சொல்லுமில்லை, எண்ணமும் இல்லை, எனவே எண்ணப் பதிவுகளுமில்லை. எண்ணப்பதிவுகளையே நம் முன்னோர்கள் கர்ம பீஜங்கள் என்பார்கள். விலங்குகளுக்கு உணவு, இனப் பெருக்கம், பாதுகாத்துக் கொள்ளுதல், பயப்படுதல்,  தவிர வேறு எந்தப் பதிவுகளும் சித்தத்தில் அல்லது கருமையத்தில் இருக்காது. அதாவது ஐந்து புலன்களின் மூலம் தொடு உணர்வு, முகர்தல், பார்ப்பது, கேட்பது, உண்ணுவது தவிர வேறு எந்தப் பதிவுகளும் அங்கே கிடையாது. இவைகளின் மூலம் நிகழும் ஒரே விதமான செயல்களே பழக்கமாகி அங்கே அழுத்தம் பெற்று இயல்பாகவே ஆகி விட்ட காரணத்தினால், உணவின் மூலம் ஏற்றுக் கொள்ளும் வலுக்குன்றிய புதிய பதிவுகள் அங்கே  செயலிழந்து போகின்றன. மனிதனுக்கு மட்டுமே சொல் என்ற ஒன்று இருப்பதால் அதன் மூலம் அவன் நிறைய எண்ணங்களை உருவாக்கி அவற்றை வினைப் பதிவுகாக சித்தத்தில் ஏற்றுக் கொள்கிறான். எனவே ஒவ்வொரு வினை வித்துகளும் மீண்டும் எண்ணங்களாக முளைத்து வரும் பொழுது அதற்கேற்ற உணர்வுகளையும் அவன் நுகர்கிறான்.  

கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். அதுவே சித்தம். அதிதான் நம் வினைப்பதிவுகள் வித்துக்களாக இருக்கின்றன. அதிலிருந்தே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவும், பெண்பாலுக்கு முட்டையும் தோன்றி வரும். இவை கூடியே புதிய உயிர் தோன்றும். கருமையத் தொடர்பையே விஞ்ஞானம் ஜீன்கள் அதாவது மரபு என்றழைக்கிறது. அப்படிப்பட்ட கருமையத்தில் நம் ஒவ்வொரு செயலும், நுகர்ச்சியும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது.  ஒரு பொருளைப் பார்த்தவுடன் அது மனதில் பதிந்து, பிறகு தானாகவோ அல்லது யாரேனும் சொன்னாலோ உடன் அந்தப் பொருள் நம் மனதில் தோன்றுவது இதனால்தான். நம்முடைய பல்வேறு அனுபங்களும் அலை வடிவத்தில் மாற்றம் பெற்றுச் சுருங்கி கருமையத்தில் பதிந்து விடுகிறது. எனவே மீண்டும் நாம் நினைக்கும் பொழுது அந்த உருவமோ அல்லது அனுபவமோ அதே தன்மைகளுடன் நமக்குள் உள்ளுணர்வாகத் தோன்றுகிறது. நாம் உட்கொள்கின்ற உயிரினங்களுக்கு 5 உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளையும், நுகர்ச்சிகளையும் அவற்றின் கருமைம் சேமித்து வைத்திருக்கிறது. கொல்லப்படும் உயிரினத்தின் இறுதி கட்ட மரண அவஸ்தைகளும் உணர்வுகளும் அதன் கருமையத்தில் பதிவாகி விடும். அந்த நொடியே அவற்றின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அணுக்களின் மையங்களிலும் அது பதிவாகும். அந்தப் பதிவுகள் அனைத்தும் அலைவடிவத்தில் இருக்கும். நாம் அதை உண்ணும் பொழுது அந்த பதிவுகள் நமது உதிரத்தில் கலந்து பாவப் பதிவாக நம் கருமையத்திலும் பதிவாகி விடும்.
ஏனென்றால்  விலங்குகளைப் போலல்லாமல் நமக்குள் மனமும், கோடிக்கணக்கான வினைப்பதிவுகளும் இருப்பதால் இது நிகழ்கிறது. 

மேலும் நாம் உண்ணும் உணவே மாறுபட்ட பல உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானமே இன்று ஏற்றுக் கொள்கிறது. புலால் உணவு ஜீரணிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாலும், அதன் கழிவுகள் உடலில் தங்கி விடுவதாலும் பல்வேறு மாறுபட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இப்பொழுது மீண்டும் விஞ்ஞானம் சொல்வதை நினைவுபடுத்துகிறேன், அதாவது மாறுபட்ட உணர்வுகளே நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் இப்பொழுது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வழியிலாவது நம் செயலை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், தவறைத் திருத்திக் கொள்ள முயலுவதே அறிவுடைமையாகும். பிற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைப் பறிப்பது விலங்குகளில் இருந்து மேம்பட்ட மனிதனுக்கு ஏற்புடைய செயலாகாது என்பதே என்னுடைய தாழ்மையானக் கருத்து.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம், புலால் உணவு உண்டால், அந்த விலங்கினப் பதிவுகள் நம் உடலில் கலந்து நமக்கும் மிருகக் குணம் வந்து விடும் என்று சொல்கிறார்களே உண்மையா ? அப்படியானால் மான், ஆடு, மாடு போன்ற சாதுவான விலங்குகளை வேட்டையாடித் தின்னுகின்ற சிங்கம், புலி போன்ற விலங்குகள் ஏன் சாதுவாக மாறுவதில்லை ?

எது நல்லது ? எது கெட்டது ?

Photo: நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்லை என்றும் சொல்லிக் கொள்பவன் சோம்பேறி. நம்மைப் படைக்கும் முன்பே நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்து வைத்து விட்டது பிரபஞ்சம். ஒவ்வொன்றாகச் சீரமைத்துச் சீரமைத்துக் கடைசியாகவே நம்மைப் படைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எதையெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றோ, துன்பம் தரக்கூடியத் என்றோ அது புறக்கணித்து வைத்ததோ, அவற்றைய எல்லாம் நாம் பற்றிக் கொண்டு பிரபஞ்சத்தோடு முரண்பட்டுப் போகிறோம். அது நமக்காக சீரமைத்து, வடிவமைத்துத் தந்த நல்ல விஷயங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். அது நமக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், நாமோ புலன்களுக்கும், புலனிச்சைகளுக்கும் அடிமைகளாகி நம் சுயேச்சையை இழந்து கொத்தடிமைகளைப் போல அல்லல்பட்டு மாய்ந்து போகிறோம். எது நல்லது ? எது கெட்டது ? என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளியாமல் அறியாமை இருளில் முடங்கிக் கிடக்கிறோம். பொய்யின் உதவியோடு உண்மையைத் தேடுகிறோம். துன்பத்தின் உதவி கொண்டு இன்பத்தை அடைய நினைக்கிறோம். 

கண்ணிருந்தும் குருடாய், கை, கால்களிருந்தும் முடமாய், அவநம்பிக்கை எனும் ஓட்டைப் படகில் ஏறி வாழ்க்கை எனும் நதியைக் கடக்க நினைக்கிறோம். செயல்களை நாம் செய்து விட்டு எல்லாம் விதி என்கிறோம். கண்ணெதிரே விளக்கை விட்டு விட்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற விழைகிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் செய்து விட்டுக் கடவுளுக்குக் கண்ணில்லையே என்கிறோம். சிறு வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. வாலிபன் ஒருவன் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சலசலப்பு கேட்கவே, சுற்றுமுற்றும் பார்க்கிறான். பாதை ஓரத்தில் ஒரு புதரில் இருந்தே அந்த சப்தம் வந்ததை உணர்கிறான். மீண்டும் மீண்டும் புதர் அசைவதைக் கண்ட அவன் அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் கொண்டு புதரை விலக்கிப் பார்க்கிற பொழுது, அங்கே ஒரு கொழுத்த நரி படுத்துக் கிடந்தது. அதற்கு நான்கு காலுமே ஊனமாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. நான்கு காலும் இல்லாத இந்த நரி எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது என்று யோசித்தான். எனவே அவன் ஒரு மரத்தின் மீது ஏறிகமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தான். 

சிறிது நேரம் கழித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிங்கம் ஒன்று ஒரு முயலைக் கவ்விக் கொண்டு வந்து நரியின் முன் போட்டு விட்டுப் போனது. வாலிபனுக்கு ஒரே அதிசயமாகி விட்டது. என்னே கடவுளின் கருணை ! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுள் உணவளிப்பார் என்று சொல்வது சரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அப்பொழுது அவன், காலில்லாத நரியைக் கூட இவ்விதமாகக் காக்கும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார்தானே ? அவர் என்னை எப்படி காப்பாற்றுவார் என்று பார்க்கப் போகிறேன். எனவே இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன். நரிக்கு உணவளிப்பது போல எனக்கும் எப்படியாவது இறைவன் உணவளிக்கட்டுமே என்று நினைத்தான். உடனே வேலைக்குச் செல்லாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். ஒரு நாள் கடந்தது, இரண்டு நாட்கள் கடந்தது யாரும் அவனுக்கு உணவளிக்க வரவேயில்லை. மூன்றாம் நாளும் வந்தது. பசியின் வேதனை அதிகரித்தது. உணவு கிடைக்கவில்லை. மனம் சோர்வடைந்தான். அவனுக்குக் கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. கடவுள் இரக்கமில்லாதவன். கண்ணில்லாதவன். கால்களை இழந்த ஒரு நரிக்கு உணவு படைக்கும் அவன் இத்தனை காலம் அவருடைய பக்தனாக இருந்த என்னை ஏமாற்றி விட்டான், என்று மனதிற்குள் வசை பாடினான். 

இறுதியில் அசதி ஏற்படவே எப்படியோ தூங்கிப் போனான். திடீரென்று யாரோ அவனை எழுப்புவது போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தால், எதிரே ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் நின்றிருந்தார்கள். இவன் இப்படி மெலிந்து போய் சோர்வாகப் படுத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். உடல் நலமில்லையா என்று பதறினார்கள். அவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அப்பொழுது அவன் தாயார் அவனை எழுப்பி அமரச் செய்து கொஞ்சம் கஞ்சி தயார் செய்து குடிக்க வைத்து விட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். மகனே நீ காட்டில் கால் இழந்த நரியைப் பார்த்தாய். அதற்கு உணவளிக்கும் சிங்கத்தையும் பார்த்தாய். நரியைப் பின்பற்ற நினைத்த நீ ஏன் சிங்கத்தை பின்பற்ற மறந்தாய். நரியோ ஊனமுற்றது. நீயோ சிங்கத்தைப் போல ஊனமேதுமில்லாத வாலிபன். இதை நீ ஏன் மறந்தாய் ? ஊனமுற்றவர்களைக் காக்கவே ஊனமேதுமில்லாத பலமுள்ளவர்களைக் கடவுள் படைத்துள்ளார். ஊனமுற்றுக் கிடக்கும் மனித சமுதாயத்தைக் காக்கவே கடவுள் உன்னை ஊனமற்றவனாகப் படைத்துள்ளார். எனவே நீ எழுந்து சென்று கால்களற்ற நரியைப் போலத் துன்புற்றுக் கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்று என்று தெளிவாகக் கணீரென்று விளக்கினார்கள். அவன் மனமும் தெளிவடைந்தது. எழுந்து முகம் கழுவி வரச் சென்றான். அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தாயார் திறப்பார்கள் என்று நினைத்து பேசாமல் இருந்தான். மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்த அவன் தாயார் எங்கு சென்றார்கள் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் அங்கு பைகளைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ந்தார்கள். 

வந்து தனக்கு உணவளித்து தன் மனதைத் தெளிவித்தது கடவுள்தான் என்று உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. இது கதைதான். ஆனால், சொல்கிற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவருமே கால்களை இழந்த நரியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அந்த நரிக்குக் கடவுளாக நின்று காப்பாற்றும் சிங்கத்திடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மனம் எதைப் பற்றுகிறதோ அதுவாகவே மாறும் என்பதை உணர்ந்து நரிகளாக மாறுவதை மறந்து சிங்கங்களாக மாறி ஊனங்களைக் களைவோமாக.
நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்லை என்றும் சொல்லிக் கொள்பவன் சோம்பேறி. நம்மைப் படைக்கும் முன்பே நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்து வைத்து விட்டது பிரபஞ்சம். ஒவ்வொன்றாகச் சீரமைத்துச் சீரமைத்துக் கடைசியாகவே நம்மைப் படைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எதையெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றோ, துன்பம் தரக்கூடியத் என்றோ அது புறக்கணித்து வைத்ததோ, அவற்றைய எல்லாம் நாம் பற்றிக் கொண்டு பிரபஞ்சத்தோடு முரண்பட்டுப் போகிறோம். அது நமக்காக சீரமைத்து, வடிவமைத்துத் தந்த நல்ல விஷயங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். அது நமக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், நாமோ புலன்களுக்கும், புலனிச்சைகளுக்கும் அடிமைகளாகி நம் சுயேச்சையை இழந்து கொத்தடிமைகளைப் போல அல்லல்பட்டு மாய்ந்து போகிறோம். எது நல்லது ? எது கெட்டது ? என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளியாமல் அறியாமை இருளில் முடங்கிக் கிடக்கிறோம். பொய்யின் உதவியோடு உண்மையைத் தேடுகிறோம். துன்பத்தின் உதவி கொண்டு இன்பத்தை அடைய நினைக்கிறோம்.

கண்ணிருந்தும் குருடாய், கை, கால்களிருந்தும் முடமாய், அவநம்பிக்கை எனும் ஓட்டைப் படகில் ஏறி வாழ்க்கை எனும் நதியைக் கடக்க நினைக்கிறோம். செயல்களை நாம் செய்து விட்டு எல்லாம் விதி என்கிறோம். கண்ணெதிரே விளக்கை விட்டு விட்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற விழைகிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் செய்து விட்டுக் கடவுளுக்குக் கண்ணில்லையே என்கிறோம். சிறு வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. வாலிபன் ஒருவன் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சலசலப்பு கேட்கவே, சுற்றுமுற்றும் பார்க்கிறான். பாதை ஓரத்தில் ஒரு புதரில் இருந்தே அந்த சப்தம் வந்ததை உணர்கிறான். மீண்டும் மீண்டும் புதர் அசைவதைக் கண்ட அவன் அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் கொண்டு புதரை விலக்கிப் பார்க்கிற பொழுது, அங்கே ஒரு கொழுத்த நரி படுத்துக் கிடந்தது. அதற்கு நான்கு காலுமே ஊனமாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. நான்கு காலும் இல்லாத இந்த நரி எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது என்று யோசித்தான். எனவே அவன் ஒரு மரத்தின் மீது ஏறிகமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிங்கம் ஒன்று ஒரு முயலைக் கவ்விக் கொண்டு வந்து நரியின் முன் போட்டு விட்டுப் போனது. வாலிபனுக்கு ஒரே அதிசயமாகி விட்டது. என்னே கடவுளின் கருணை ! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுள் உணவளிப்பார் என்று சொல்வது சரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அப்பொழுது அவன், காலில்லாத நரியைக் கூட இவ்விதமாகக் காக்கும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார்தானே ? அவர் என்னை எப்படி காப்பாற்றுவார் என்று பார்க்கப் போகிறேன். எனவே இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன். நரிக்கு உணவளிப்பது போல எனக்கும் எப்படியாவது இறைவன் உணவளிக்கட்டுமே என்று நினைத்தான். உடனே வேலைக்குச் செல்லாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். ஒரு நாள் கடந்தது, இரண்டு நாட்கள் கடந்தது யாரும் அவனுக்கு உணவளிக்க வரவேயில்லை. மூன்றாம் நாளும் வந்தது. பசியின் வேதனை அதிகரித்தது. உணவு கிடைக்கவில்லை. மனம் சோர்வடைந்தான். அவனுக்குக் கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. கடவுள் இரக்கமில்லாதவன். கண்ணில்லாதவன். கால்களை இழந்த ஒரு நரிக்கு உணவு படைக்கும் அவன் இத்தனை காலம் அவருடைய பக்தனாக இருந்த என்னை ஏமாற்றி விட்டான், என்று மனதிற்குள் வசை பாடினான்.

இறுதியில் அசதி ஏற்படவே எப்படியோ தூங்கிப் போனான். திடீரென்று யாரோ அவனை எழுப்புவது போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தால், எதிரே ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் நின்றிருந்தார்கள். இவன் இப்படி மெலிந்து போய் சோர்வாகப் படுத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். உடல் நலமில்லையா என்று பதறினார்கள். அவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அப்பொழுது அவன் தாயார் அவனை எழுப்பி அமரச் செய்து கொஞ்சம் கஞ்சி தயார் செய்து குடிக்க வைத்து விட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். மகனே நீ காட்டில் கால் இழந்த நரியைப் பார்த்தாய். அதற்கு உணவளிக்கும் சிங்கத்தையும் பார்த்தாய். நரியைப் பின்பற்ற நினைத்த நீ ஏன் சிங்கத்தை பின்பற்ற மறந்தாய். நரியோ ஊனமுற்றது. நீயோ சிங்கத்தைப் போல ஊனமேதுமில்லாத வாலிபன். இதை நீ ஏன் மறந்தாய் ? ஊனமுற்றவர்களைக் காக்கவே ஊனமேதுமில்லாத பலமுள்ளவர்களைக் கடவுள் படைத்துள்ளார். ஊனமுற்றுக் கிடக்கும் மனித சமுதாயத்தைக் காக்கவே கடவுள் உன்னை ஊனமற்றவனாகப் படைத்துள்ளார். எனவே நீ எழுந்து சென்று கால்களற்ற நரியைப் போலத் துன்புற்றுக் கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்று என்று தெளிவாகக் கணீரென்று விளக்கினார்கள். அவன் மனமும் தெளிவடைந்தது. எழுந்து முகம் கழுவி வரச் சென்றான். அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தாயார் திறப்பார்கள் என்று நினைத்து பேசாமல் இருந்தான். மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்த அவன் தாயார் எங்கு சென்றார்கள் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் அங்கு பைகளைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ந்தார்கள்.

வந்து தனக்கு உணவளித்து தன் மனதைத் தெளிவித்தது கடவுள்தான் என்று உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. இது கதைதான். ஆனால், சொல்கிற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவருமே கால்களை இழந்த நரியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அந்த நரிக்குக் கடவுளாக நின்று காப்பாற்றும் சிங்கத்திடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மனம் எதைப் பற்றுகிறதோ அதுவாகவே மாறும் என்பதை உணர்ந்து நரிகளாக மாறுவதை மறந்து சிங்கங்களாக மாறி ஊனங்களைக் களைவோமாக.

சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

Photo: சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை பாமரர்களும் அறியும்படிக்கு வெளிப்படுத்த முயன்றது பதஞ்சலி மகான்தான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பல தடைகளைக் கடந்துதான் அது இன்று நம் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. ஆனால், மகிமையறியாத சிலர் அதை பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு விற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது அது மறைக்கப்பட்டே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதயமாகி விடுகின்றது. அவர் அதில் எல்லா ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மனமே மந்திரக் கோல் என்றுதான் சொல்கிறார். எனவேதான் அகத்தியமுனி, 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே! 

என்றுரைக்கிறார். ஆனால். மனம் செம்மையாகும் வரை இவற்றையெல்லாம் கை கொள்வது அவசியமாகும். மனதை செம்மைப்படுத்துவது என்பது இடைவிடாமல் எழுந்து கொண்டேயிருக்கும் பல்வேறு எண்ணங்களை அனுமதிக்காமல், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை எழச் செய்து அதில் முழு மனதையும் குவித்து மனதின் எண்ணங்களை குறைத்து முழுவதுமாக இல்லாமல் செய்வதுதான். இதுவே தியானமுமாகும். இந்த நிலையை அடைந்த பிறகு நாம் எதையும் செய்யத் தேவையில்லை. அங்கேயே, அதிலேயே நிலை பெற்று சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம். 

நேற்று நம் சூக்கும சரீரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒன்றிலிருந்து ஒன்று சூக்குமத் தன்மை குறைந்து வெளி நோக்கி வந்து ஜட நிலையை அடைகிறது என்று சொன்னேனல்லவா, அது போல அவைகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப  அவற்றிற்கு மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். எல்லாம் ஒன்றிலிருந்து விரிந்த நிலைகளேயாதலால், ஒன்றைக் கட்டுப்படுத்தினால், அது எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. தியானத்தின் மூலம் மனதை புத்தி அல்லது அறிவு கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு நிலையில் நிற்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கும் பொழுது பொறிகள் அனைத்தும் கட்டுக்குள் வந்து விடுகின்றன. இப்படி எல்லாத் தத்துவங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த வல்லவரையே தவ சீலர்கள் என்கிறோம். 

வேதத்திலும் சரி, வேதாந்தத்திலும் சரி பேராற்றலை, எல்லாம் வல்லப் பரம்பொருளை அடைவதற்கு கையாளப்படுகின்ற அனைத்து வழிகளிலும் சரி மனோ நாசமே முடிவாக இருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது. மனோ நாசம், மனம் அழிதல் என்றால் அது ஏதோ பயங்கரமான விஷயமாக இருக்குமோ என்று யாரும் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. அது தியானத்தின் மூலம் மனிதனுடைய மனம் மற்றும், புத்தி சரீரங்கள் தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதேயாகும். நம் ஸ்தூல உடலை தளர்வாகவும், உறுதியாகவும், நடுநிலையில் அதை நேராகவும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு, மூச்சை கவனித்து சமப்படுத்துவதன் மூலம் புறவுரைகளில் இருந்து தன் மனதை உள்முகமாகச் செலுத்துவது கடினமில்லை. அதற்குப் பிறகு தன்னுணர்வுடன் சூக்கும உரைகளையும் கடக்க மேற்கொள்வதுதான் முயற்சி. இங்குதான் மந்திரங்கள், இஷ்ட தெய்வத்தின் உருவங்கள் உதவுகின்றன. ஒரே சிந்தனையில் மனதைச் செலுத்துவதற்காகவே உருவமோ, சின்னமோ பயன்படுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலைப்பட்ட பிறகு அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏறும் வரை ஏணி தேவைப்படுகிறது. அதற்காக அதை யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவதில்லை. உணவுக்குப் பிறகு தட்டை நாம் தின்பதில்ல. தட்டு உணவாகாது. ஆனால், தட்டு இல்லாமல் சாப்பிட முடியாது என்பதையும் மறந்து விடக் கூடாது. மந்திரங்களைத் தாரகம் என்பார்கள். அதாவது கடத்துவிப்பது என்று பொருள். நமது எல்லா கோசங்களையும், உணர்வுகளையும் கடக்க மனதை நிலை பெறச் செய்ய மந்திரங்கள் உதவுவதால்தான் தாரக மந்திரங்கள் என்று சொல்கிறார்கள். மனதிற்கு தரம் தருவது மந்திரங்கள். கண்டபடி அலையும் தரமற்ற செயலில் இருந்து ஒரே நிலையில் நிலைக்கும் தரத்தை மனம் அடைவதற்கு மந்திரங்கள் உதவுகின்றன. 

சராசரி மனித வாழ்வில் தியானம் மன ஆற்றலை மேம்படுத்தி, புத்தி கூர்மையை உருவாக்கி அதன் மூலம் குறைவற்ற, நிறைவான, வெற்றிகரமான வாழ்வை ஏற்படுத்தித் தருகிறது. அதனால்தான் இன்று அனைத்து தரப்பினரும் தியானம் பற்றிப் பேசுகிறார்கள், தியானம் செய்கிறார்கள். இதுவே பழக்கமாகி வரும் பொழுது அவர்களுக்குள் இயல்பாகவே பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அமைதி அவர்களுக்குள் சத்துவ குணத்தை மேம்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல், மனம், ஆன்மா என்று பிரிந்து கிடந்த மன இயக்கங்கள் ஒருங்கிணைப்பை பெற்று விடுகின்றன. யோகங்களும் இந்த இணைப்பை முன்னிட்டே செய்யப்படுகின்றன. தவத்தையே வாழ்வாகக் கொள்வது யோகம். வாழ்வையே தவமாக வாழ்ந்து விடுவது அறம். எனவே இல்வாழ்விற்கும் ஆன்மிக மேம்பாட்டுக்கும் சம்மந்தமில்லை என்று சிலர் சொல்வது தவறான கருத்தாகும். இல்லறத்தை நல்லறம் என்று நம் முன்னோர்கள் போற்றிப் பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தரப்பினராக இருந்தாலும் சரி மனமே மார்க்கமாக இருக்கிறது. எனவேதான் மனமில்லையேல் மார்க்கமில்லை என்றும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் சொல்கிறார்கள்.
சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை பாமரர்களும் அறியும்படிக்கு வெளிப்படுத்த முயன்றது பதஞ்சலி மகான்தான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பல தடைகளைக் கடந்துதான் அது இன்று நம் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. ஆனால், மகிமையறியாத சிலர் அதை பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு விற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது அது மறைக்கப்பட்டே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதயமாகி விடுகின்றது. அவர் அதில் எல்லா ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மனமே மந்திரக் கோல் என்றுதான் சொல்கிறார். எனவேதான் அகத்தியமுனி,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!

என்றுரைக்கிறார். ஆனால். மனம் செம்மையாகும் வரை இவற்றையெல்லாம் கை கொள்வது அவசியமாகும். மனதை செம்மைப்படுத்துவது என்பது இடைவிடாமல் எழுந்து கொண்டேயிருக்கும் பல்வேறு எண்ணங்களை அனுமதிக்காமல், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை எழச் செய்து அதில் முழு மனதையும் குவித்து மனதின் எண்ணங்களை குறைத்து முழுவதுமாக இல்லாமல் செய்வதுதான். இதுவே தியானமுமாகும். இந்த நிலையை அடைந்த பிறகு நாம் எதையும் செய்யத் தேவையில்லை. அங்கேயே, அதிலேயே நிலை பெற்று சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

நேற்று நம் சூக்கும சரீரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒன்றிலிருந்து ஒன்று சூக்குமத் தன்மை குறைந்து வெளி நோக்கி வந்து ஜட நிலையை அடைகிறது என்று சொன்னேனல்லவா, அது போல அவைகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப அவற்றிற்கு மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். எல்லாம் ஒன்றிலிருந்து விரிந்த நிலைகளேயாதலால், ஒன்றைக் கட்டுப்படுத்தினால், அது எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. தியானத்தின் மூலம் மனதை புத்தி அல்லது அறிவு கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு நிலையில் நிற்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கும் பொழுது பொறிகள் அனைத்தும் கட்டுக்குள் வந்து விடுகின்றன. இப்படி எல்லாத் தத்துவங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த வல்லவரையே தவ சீலர்கள் என்கிறோம்.

வேதத்திலும் சரி, வேதாந்தத்திலும் சரி பேராற்றலை, எல்லாம் வல்லப் பரம்பொருளை அடைவதற்கு கையாளப்படுகின்ற அனைத்து வழிகளிலும் சரி மனோ நாசமே முடிவாக இருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது. மனோ நாசம், மனம் அழிதல் என்றால் அது ஏதோ பயங்கரமான விஷயமாக இருக்குமோ என்று யாரும் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. அது தியானத்தின் மூலம் மனிதனுடைய மனம் மற்றும், புத்தி சரீரங்கள் தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதேயாகும். நம் ஸ்தூல உடலை தளர்வாகவும், உறுதியாகவும், நடுநிலையில் அதை நேராகவும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு, மூச்சை கவனித்து சமப்படுத்துவதன் மூலம் புறவுரைகளில் இருந்து தன் மனதை உள்முகமாகச் செலுத்துவது கடினமில்லை. அதற்குப் பிறகு தன்னுணர்வுடன் சூக்கும உரைகளையும் கடக்க மேற்கொள்வதுதான் முயற்சி. இங்குதான் மந்திரங்கள், இஷ்ட தெய்வத்தின் உருவங்கள் உதவுகின்றன. ஒரே சிந்தனையில் மனதைச் செலுத்துவதற்காகவே உருவமோ, சின்னமோ பயன்படுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலைப்பட்ட பிறகு அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏறும் வரை ஏணி தேவைப்படுகிறது. அதற்காக அதை யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவதில்லை. உணவுக்குப் பிறகு தட்டை நாம் தின்பதில்ல. தட்டு உணவாகாது. ஆனால், தட்டு இல்லாமல் சாப்பிட முடியாது என்பதையும் மறந்து விடக் கூடாது. மந்திரங்களைத் தாரகம் என்பார்கள். அதாவது கடத்துவிப்பது என்று பொருள். நமது எல்லா கோசங்களையும், உணர்வுகளையும் கடக்க மனதை நிலை பெறச் செய்ய மந்திரங்கள் உதவுவதால்தான் தாரக மந்திரங்கள் என்று சொல்கிறார்கள். மனதிற்கு தரம் தருவது மந்திரங்கள். கண்டபடி அலையும் தரமற்ற செயலில் இருந்து ஒரே நிலையில் நிலைக்கும் தரத்தை மனம் அடைவதற்கு மந்திரங்கள் உதவுகின்றன.

சராசரி மனித வாழ்வில் தியானம் மன ஆற்றலை மேம்படுத்தி, புத்தி கூர்மையை உருவாக்கி அதன் மூலம் குறைவற்ற, நிறைவான, வெற்றிகரமான வாழ்வை ஏற்படுத்தித் தருகிறது. அதனால்தான் இன்று அனைத்து தரப்பினரும் தியானம் பற்றிப் பேசுகிறார்கள், தியானம் செய்கிறார்கள். இதுவே பழக்கமாகி வரும் பொழுது அவர்களுக்குள் இயல்பாகவே பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அமைதி அவர்களுக்குள் சத்துவ குணத்தை மேம்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல், மனம், ஆன்மா என்று பிரிந்து கிடந்த மன இயக்கங்கள் ஒருங்கிணைப்பை பெற்று விடுகின்றன. யோகங்களும் இந்த இணைப்பை முன்னிட்டே செய்யப்படுகின்றன. தவத்தையே வாழ்வாகக் கொள்வது யோகம். வாழ்வையே தவமாக வாழ்ந்து விடுவது அறம். எனவே இல்வாழ்விற்கும் ஆன்மிக மேம்பாட்டுக்கும் சம்மந்தமில்லை என்று சிலர் சொல்வது தவறான கருத்தாகும். இல்லறத்தை நல்லறம் என்று நம் முன்னோர்கள் போற்றிப் பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தரப்பினராக இருந்தாலும் சரி மனமே மார்க்கமாக இருக்கிறது. எனவேதான் மனமில்லையேல் மார்க்கமில்லை என்றும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் சொல்கிறார்கள்.

Thursday, April 3, 2014

உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம்

Photo: நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேல் நாட்டிலும் கூட இது பற்றிய நம்பிக்கை உள்ளது. அவர்கள் சூக்கும சரீரங்களின் எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவால் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் சரீரத்தை அன்னமய கோசம் என்று சொல்கிறோம். அதற்கு சரியான வேளையில் சரியான விகிதத்தில் உணவு தரப்படவில்லை என்றால் அது வலுக்குன்றி பலவீனம் அடைகின்றது. அது போலவே பிராண சக்தி குறைவு படும் பொழுது பிராணமய கோசம் பலவீனமடைகிறது. இப்படி அடிப்படை ஆதார சக்தி குறைவுபடும் பொழுதோ, இயக்கம் கூடும் பொழுதோ, குறையும் பொழுதோ அந்தந்த சரீரங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை சக்தியாக இருப்பது ப்ராண சக்தியே ஆகும். இதில் நம் மனோமய கோசமானது பலவீனமடைவது ஏன் என்று பார்க்கும் பொழுது அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருப்பதினாலேயேயாகும். அதிகமாக உழைப்பதநினாலோ, நடப்பதினாலோ, ஓடுவதினாலோ நம் அன்னமய கோசம் களைப்படைந்து விடுவது போல, சில நேரங்களில் நம் மனோமய கோசமும் களைப்படைந்து விடுகிறது. ஆனால், அன்னமய கோசத்தின் களைப்பை உணர்ந்து கொள்கிற அளவு நாம் நம் மனோமய கோசத்தின் களைப்பை உணர்வதில்லை. இதனால் மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற நிலைகள் உருவாகி முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

உடல் சோர்வு நீங்க சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். அது போல மனதின் களைப்பு நீங்கவும் அதற்கு ஓய்வு அவசியமாகும். அதற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மனதை எந்த வித சிந்தனையுமின்றி அமைதியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பிராண சக்தி அடுத்தபடியாக சூக்குமமானதும், நம் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பதும் மனமேயாதலால், மனம் அமைதியாக இருப்பதால் மற்ற நான்கு கோசங்களுமே வலிமையடைகின்றன. அதனதன் சக்தி விரையங்கள் தவிர்க்கப்படுகின்றன. இவை வெவ்வேறு நிலைப் பாட்டையும், இயக்கங்களையும் கொண்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. ஒன்று பலவீனமடையும் பொழுது மற்றவைகளும் பலவீனமடைந்து விடுகின்றன. ஒன்று வலிமையடையும் பொழுது மற்றவைகளும் வலிமையடைகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று உள்முகமாகச் சூக்குமமாக விளங்குகின்றன. நன்றாகக் கவனித்தீர்களென்றால் இந்த ஐந்தில் நடுவில் மையமாக விளங்குவது மனமே என்பது தெளிவாகும். மனமே எல்லாவற்றிற்கும் மையமாக இருந்து கொண்டு பிராண சக்தியை ஏற்றுக் கொண்டு இயங்குகிறது. மனம் அமைதியாக இருந்தால் மற்றவைகளும் சலனமற்று மெதுவாக இயங்குகின்றன. இதனால் சக்தி விரையம் தவிர்க்கப்படுகிறது. எனவே அனைத்திலும் பிராண சக்தியின் திணிவு ஏற்பட்டு விடுகிறது. பிராணனின் திணிவு அதிகரிக்கும் பொழுது அது தங்கு தடையின்றி அனைத்து சரீரங்களிலும் பரவுகிறது. நாடி நரம்புகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் ஆதாரச் சக்கரங்கள் நன்கு சீராக இயங்கி நமக்கு அனைத்து பிரபஞ்ச சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன. 

பிராண ஓட்டம் தங்கு தடையின்றி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவும் பொழுது, வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், காற்றோட்டம் போன்ற அனைத்தும் உடலெங்கும் ஒரே சீராகப் பரவுகின்றன. எனவே பஞ்ச பூதங்களாலான நம் சரீரத்தில் பஞ்ச பூத தன்மாத்திரைகளின் இயக்கங்களும் சீராகவும், செம்மையாகவும் நடைபெறுகின்றன. மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி கிடைப்பதால் அது நன்கு செயல்படுகிறது. எனவே மனதை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்வதால் ஏற்படும் பலன்கள் எவ்வளவு மிகுதியானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்வோம். ஆனால், மனதை அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லையே என்று நினைக்கக் கூடும். அது உண்மைதான். எனினும், நம் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பழக்கங்களால் ஏற்படுபவையேயாகும். இந்தப் பழக்கங்கள் மூலமாகவே எண்ணங்கள் செயலாக பரிணமித்து நடைபெறுகின்றன. எனவே மனம் அமைதியாக விளங்கவும் நாம் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் அதன் இயக்கம் புலன் சார்ந்த புற விசயங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. எனவே அதை மடைமாற்றம் செய்து உள்முகமாகத் திருப்பி விடும் பொழுது பழைய பழக்கங்கள் மறைந்து மனம் ஒரே நிலையில் இருக்க, இயங்கப் பழகிக் கொள்ளும். மனச் சிதறல் எனப்படும் பலவிதமான எண்ணங்களின் எழுச்சியிலிருந்து நாம் விடுபடலாம். இதனால் மனத் தெளிவும், புத்தி கூர்மையும் ஏற்படும். மனத் தெளிவு என்பது சித்தத்தில் சலனமற்ற நிலையை உருவாக்கும், புத்தி கூர்மையென்பது சலனமற்ற சித்தத்தின் உள்ளே துலங்கும் ஆன்பமாவை பிரதிபலிக்கும். 

ஆன்ம ஒளி அறிவில் பிரிதிபலிப்பதே அறிவொளி எனப்படுகிறது. அறிவில் பிரகாசம் உடையவர்களே ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள். தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தியானம் செய்து வரும் பொழுது அது நமக்கு வெற்றிகரமான, சிக்கலற்ற நல் வாழ்வை அமைத்துத் தரும். அதுவே மத்திம வயதைக் கடந்த ஓய்வு காலங்களில் மிக விரைவான ஆன்மிக மேம்பாட்டையும் பெற்றுத் தரும். ஏனென்றால் நாம் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் தியானப் பழக்கம் அப்பொழுது நமக்குக் கை கொடுக்கும். ஓய்வு எனும் பொழுது நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் தியானம் செய்ய ஏதுவாக அமையும். எனவே அறிவில் சிறந்த, முதிர்ந்த அனுபவ சாலியாக, ஞானியாக, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையவராக விளங்கலாம். மன அமைதியை ஏற்படுத்துவதற்காக பல யுக்திகளைக் கை கொள்வார்கள். எனவே பல விதமான தியான முறைகள் பேசப்படுகின்றன. எதுவும் குறைந்ததல்ல. எல்லாம் ஒவ்வொரு நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே குழப்பம் தேவையில்லை. நம் நடைமுறை வாழ்விற்கு ஏற்றார் போன்ற ஒரு முறையைப் பின்பற்றி குறைவற்ற நிறைவான மனிதராக விளங்குவோமாக.
நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேல் நாட்டிலும் கூட இது பற்றிய நம்பிக்கை உள்ளது. அவர்கள் சூக்கும சரீரங்களின் எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவால் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் சரீரத்தை அன்னமய கோசம் என்று சொல்கிறோம். அதற்கு சரியான வேளையில் சரியான விகிதத்தில் உணவு தரப்படவில்லை என்றால் அது வலுக்குன்றி பலவீனம் அடைகின்றது. அது போலவே பிராண சக்தி குறைவு படும் பொழுது பிராணமய கோசம் பலவீனமடைகிறது. இப்படி அடிப்படை ஆதார சக்தி குறைவுபடும் பொழுதோ, இயக்கம் கூடும் பொழுதோ, குறையும் பொழுதோ அந்தந்த சரீரங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை சக்தியாக இருப்பது ப்ராண சக்தியே ஆகும். இதில் நம் மனோமய கோசமானது பலவீனமடைவது ஏன் என்று பார்க்கும் பொழுது அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருப்பதினாலேயேயாகும். அதிகமாக உழைப்பதநினாலோ, நடப்பதினாலோ, ஓடுவதினாலோ நம் அன்னமய கோசம் களைப்படைந்து விடுவது போல, சில நேரங்களில் நம் மனோமய கோசமும் களைப்படைந்து விடுகிறது. ஆனால், அன்னமய கோசத்தின் களைப்பை உணர்ந்து கொள்கிற அளவு நாம் நம் மனோமய கோசத்தின் களைப்பை உணர்வதில்லை. இதனால் மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற நிலைகள் உருவாகி முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

உடல் சோர்வு நீங்க சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். அது போல மனதின் களைப்பு நீங்கவும் அதற்கு ஓய்வு அவசியமாகும். அதற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மனதை எந்த வித சிந்தனையுமின்றி அமைதியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பிராண சக்தி அடுத்தபடியாக சூக்குமமானதும், நம் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பதும் மனமேயாதலால், மனம் அமைதியாக இருப்பதால் மற்ற நான்கு கோசங்களுமே வலிமையடைகின்றன. அதனதன் சக்தி விரையங்கள் தவிர்க்கப்படுகின்றன. இவை வெவ்வேறு நிலைப் பாட்டையும், இயக்கங்களையும் கொண்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. ஒன்று பலவீனமடையும் பொழுது மற்றவைகளும் பலவீனமடைந்து விடுகின்றன. ஒன்று வலிமையடையும் பொழுது மற்றவைகளும் வலிமையடைகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று உள்முகமாகச் சூக்குமமாக விளங்குகின்றன. நன்றாகக் கவனித்தீர்களென்றால் இந்த ஐந்தில் நடுவில் மையமாக விளங்குவது மனமே என்பது தெளிவாகும். மனமே எல்லாவற்றிற்கும் மையமாக இருந்து கொண்டு பிராண சக்தியை ஏற்றுக் கொண்டு இயங்குகிறது. மனம் அமைதியாக இருந்தால் மற்றவைகளும் சலனமற்று மெதுவாக இயங்குகின்றன. இதனால் சக்தி விரையம் தவிர்க்கப்படுகிறது. எனவே அனைத்திலும் பிராண சக்தியின் திணிவு ஏற்பட்டு விடுகிறது. பிராணனின் திணிவு அதிகரிக்கும் பொழுது அது தங்கு தடையின்றி அனைத்து சரீரங்களிலும் பரவுகிறது. நாடி நரம்புகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் ஆதாரச் சக்கரங்கள் நன்கு சீராக இயங்கி நமக்கு அனைத்து பிரபஞ்ச சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன.

பிராண ஓட்டம் தங்கு தடையின்றி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவும் பொழுது, வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், காற்றோட்டம் போன்ற அனைத்தும் உடலெங்கும் ஒரே சீராகப் பரவுகின்றன. எனவே பஞ்ச பூதங்களாலான நம் சரீரத்தில் பஞ்ச பூத தன்மாத்திரைகளின் இயக்கங்களும் சீராகவும், செம்மையாகவும் நடைபெறுகின்றன. மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி கிடைப்பதால் அது நன்கு செயல்படுகிறது. எனவே மனதை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்வதால் ஏற்படும் பலன்கள் எவ்வளவு மிகுதியானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்வோம். ஆனால், மனதை அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லையே என்று நினைக்கக் கூடும். அது உண்மைதான். எனினும், நம் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பழக்கங்களால் ஏற்படுபவையேயாகும். இந்தப் பழக்கங்கள் மூலமாகவே எண்ணங்கள் செயலாக பரிணமித்து நடைபெறுகின்றன. எனவே மனம் அமைதியாக விளங்கவும் நாம் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் அதன் இயக்கம் புலன் சார்ந்த புற விசயங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. எனவே அதை மடைமாற்றம் செய்து உள்முகமாகத் திருப்பி விடும் பொழுது பழைய பழக்கங்கள் மறைந்து மனம் ஒரே நிலையில் இருக்க, இயங்கப் பழகிக் கொள்ளும். மனச் சிதறல் எனப்படும் பலவிதமான எண்ணங்களின் எழுச்சியிலிருந்து நாம் விடுபடலாம். இதனால் மனத் தெளிவும், புத்தி கூர்மையும் ஏற்படும். மனத் தெளிவு என்பது சித்தத்தில் சலனமற்ற நிலையை உருவாக்கும், புத்தி கூர்மையென்பது சலனமற்ற சித்தத்தின் உள்ளே துலங்கும் ஆன்பமாவை பிரதிபலிக்கும்.

ஆன்ம ஒளி அறிவில் பிரிதிபலிப்பதே அறிவொளி எனப்படுகிறது. அறிவில் பிரகாசம் உடையவர்களே ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள். தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தியானம் செய்து வரும் பொழுது அது நமக்கு வெற்றிகரமான, சிக்கலற்ற நல் வாழ்வை அமைத்துத் தரும். அதுவே மத்திம வயதைக் கடந்த ஓய்வு காலங்களில் மிக விரைவான ஆன்மிக மேம்பாட்டையும் பெற்றுத் தரும். ஏனென்றால் நாம் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் தியானப் பழக்கம் அப்பொழுது நமக்குக் கை கொடுக்கும். ஓய்வு எனும் பொழுது நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் தியானம் செய்ய ஏதுவாக அமையும். எனவே அறிவில் சிறந்த, முதிர்ந்த அனுபவ சாலியாக, ஞானியாக, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையவராக விளங்கலாம். மன அமைதியை ஏற்படுத்துவதற்காக பல யுக்திகளைக் கை கொள்வார்கள். எனவே பல விதமான தியான முறைகள் பேசப்படுகின்றன. எதுவும் குறைந்ததல்ல. எல்லாம் ஒவ்வொரு நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே குழப்பம் தேவையில்லை. நம் நடைமுறை வாழ்விற்கு ஏற்றார் போன்ற ஒரு முறையைப் பின்பற்றி குறைவற்ற நிறைவான மனிதராக விளங்குவோமாக.

ஆல்பா தியானம் செய்யும் முறை..

Photo: Lawrence Timer - வணக்கம் சார், எனக்கு ஆல்பா தியானம் செய்யும் முறை பற்றி கூறவும். தியானத்தில் செய்ய வேண்டியதும், செய்ய கூடாதவை என்ன? please give me a answer as a help sir. 

மனித மூளையின் அமைப்பு வலது, இடது என்று இரண்டு நிலைகளில் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இதில் இடது பக்க மூளையானது நம் புலன்களோடு தொடர்புடையது. அது நாம் ஜாக்ரதா நிலையில் இருக்கும் போது அல்லது உணர்வோடு இருக்கும் போது புலன்கள் மூலம் வருகிற தகவல்களை சேகரித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதோடு, அந்நிலையில் எழும் எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது. இடது பக்க மூளையானது மனிதன் விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது. நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற வரை  தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. இந்த வலது பக்க மூளைப் பகுதியே ஆழ்மனம் எனப்படுகிறது. இதை Sub Concious mind என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் இதை இன்னும் நுட்பமாகஆராய்ந்து,  இவை அனைத்தும் இயங்கத் தேவையான நாடி, நரம்புகளின் தொகுப்பை தன்னிச்சை, நரம்பு மண்டலம், அனிச்சை நரம்பு மண்டலம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். 

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக ஞானிகளும், விஞ்ஞானிகளும் கூறியிருக்கிறார்கள். எண்ணம் உதயமாகும் பொழுது எழுகின்ற அலைச் சுற்றுகளை வைத்து இது கணக்கிடப் படுகின்றது. ஆல்பா அலை எழும் பொழுது மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec), பீட்டாவில் 13 சுற்றுகளுக்கு அதிகமாகவும், தீட்டா நிலையில் 4 லிருந்து 7 சுற்றுகள் வரையும், டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் குறைவாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதில் பீட்டா நிலை என்பது விழிப்பு நிலையாகும். மனம் வேகமாக இயங்கும் நிலை
ஆல்பா நிலை. இது விழிப்பிற்கும், உறக்கத்திற்கும் இடைப்பட்ட தூங்காமல் தூங்கும் தியான நிலை. இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. டெல்டா என்பது சமாதி நிலை. நம் ஜாக்ரதை அவத்தையின் போது புலன்கள் இயங்கிக் கொண்டே இருப்பதால் நினைவு மனம் விழிப்பு நிலையிலும், ஆழ்மனம் உறக்க நிலையிலும் இருக்கிறது.

இப்படி உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனதை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் இயக்கங்களைக் குறைக்க வேண்டும். நம் புலன்கள் மூலம் நிகழும் புற உலக இயக்கங்களைத் துண்டித்தால் நினைவு மனத்தின் செயல்பாடுகள் குறையும். நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதை எளிமையாக சொன்னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலைதான் இது. அது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகின்து. இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

மனிதனுக்கு பலவிதமான தடைகள் ஏற்படும் பொழுதும், தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் பொழுதும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறையும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை தியானம் தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. இதையே  நீங்கள் ஒவ்வொரு மூச்சையும் உங்கள் பணிகளுக்கிடையில் கவனித்து நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடப் பழகிக் கொண்டீர்களானால் அதன் பலன் அளவிடற்கரியது. தியானம் வேறு ஆல்பா தியானம் வேறு அல்ல. பல படித்தரங்கள், பல அனுபவங்கள் என்று தியானத்தை நோக்கிய பயணத்தின் அனுபவங்களை வைத்து பலவேறு பெயர்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டுள்ளீர்கள். மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். என்ன செய்யக் கூடாது என்று கேட்டால் முயற்சியைக் கைவிடக் கூடாது அவ்வளவுதான். எனவே விழிப்பு நிலைக்கு மனதைக் கொண்டு செல்வதின் ஆங்கிலப் பெயரே ஆல்பா தியானம்.