Wednesday, April 9, 2014

எது நல்லது ? எது கெட்டது ?

Photo: நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்லை என்றும் சொல்லிக் கொள்பவன் சோம்பேறி. நம்மைப் படைக்கும் முன்பே நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்து வைத்து விட்டது பிரபஞ்சம். ஒவ்வொன்றாகச் சீரமைத்துச் சீரமைத்துக் கடைசியாகவே நம்மைப் படைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எதையெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றோ, துன்பம் தரக்கூடியத் என்றோ அது புறக்கணித்து வைத்ததோ, அவற்றைய எல்லாம் நாம் பற்றிக் கொண்டு பிரபஞ்சத்தோடு முரண்பட்டுப் போகிறோம். அது நமக்காக சீரமைத்து, வடிவமைத்துத் தந்த நல்ல விஷயங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். அது நமக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், நாமோ புலன்களுக்கும், புலனிச்சைகளுக்கும் அடிமைகளாகி நம் சுயேச்சையை இழந்து கொத்தடிமைகளைப் போல அல்லல்பட்டு மாய்ந்து போகிறோம். எது நல்லது ? எது கெட்டது ? என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளியாமல் அறியாமை இருளில் முடங்கிக் கிடக்கிறோம். பொய்யின் உதவியோடு உண்மையைத் தேடுகிறோம். துன்பத்தின் உதவி கொண்டு இன்பத்தை அடைய நினைக்கிறோம். 

கண்ணிருந்தும் குருடாய், கை, கால்களிருந்தும் முடமாய், அவநம்பிக்கை எனும் ஓட்டைப் படகில் ஏறி வாழ்க்கை எனும் நதியைக் கடக்க நினைக்கிறோம். செயல்களை நாம் செய்து விட்டு எல்லாம் விதி என்கிறோம். கண்ணெதிரே விளக்கை விட்டு விட்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற விழைகிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் செய்து விட்டுக் கடவுளுக்குக் கண்ணில்லையே என்கிறோம். சிறு வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. வாலிபன் ஒருவன் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சலசலப்பு கேட்கவே, சுற்றுமுற்றும் பார்க்கிறான். பாதை ஓரத்தில் ஒரு புதரில் இருந்தே அந்த சப்தம் வந்ததை உணர்கிறான். மீண்டும் மீண்டும் புதர் அசைவதைக் கண்ட அவன் அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் கொண்டு புதரை விலக்கிப் பார்க்கிற பொழுது, அங்கே ஒரு கொழுத்த நரி படுத்துக் கிடந்தது. அதற்கு நான்கு காலுமே ஊனமாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. நான்கு காலும் இல்லாத இந்த நரி எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது என்று யோசித்தான். எனவே அவன் ஒரு மரத்தின் மீது ஏறிகமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தான். 

சிறிது நேரம் கழித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிங்கம் ஒன்று ஒரு முயலைக் கவ்விக் கொண்டு வந்து நரியின் முன் போட்டு விட்டுப் போனது. வாலிபனுக்கு ஒரே அதிசயமாகி விட்டது. என்னே கடவுளின் கருணை ! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுள் உணவளிப்பார் என்று சொல்வது சரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அப்பொழுது அவன், காலில்லாத நரியைக் கூட இவ்விதமாகக் காக்கும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார்தானே ? அவர் என்னை எப்படி காப்பாற்றுவார் என்று பார்க்கப் போகிறேன். எனவே இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன். நரிக்கு உணவளிப்பது போல எனக்கும் எப்படியாவது இறைவன் உணவளிக்கட்டுமே என்று நினைத்தான். உடனே வேலைக்குச் செல்லாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். ஒரு நாள் கடந்தது, இரண்டு நாட்கள் கடந்தது யாரும் அவனுக்கு உணவளிக்க வரவேயில்லை. மூன்றாம் நாளும் வந்தது. பசியின் வேதனை அதிகரித்தது. உணவு கிடைக்கவில்லை. மனம் சோர்வடைந்தான். அவனுக்குக் கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. கடவுள் இரக்கமில்லாதவன். கண்ணில்லாதவன். கால்களை இழந்த ஒரு நரிக்கு உணவு படைக்கும் அவன் இத்தனை காலம் அவருடைய பக்தனாக இருந்த என்னை ஏமாற்றி விட்டான், என்று மனதிற்குள் வசை பாடினான். 

இறுதியில் அசதி ஏற்படவே எப்படியோ தூங்கிப் போனான். திடீரென்று யாரோ அவனை எழுப்புவது போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தால், எதிரே ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் நின்றிருந்தார்கள். இவன் இப்படி மெலிந்து போய் சோர்வாகப் படுத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். உடல் நலமில்லையா என்று பதறினார்கள். அவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அப்பொழுது அவன் தாயார் அவனை எழுப்பி அமரச் செய்து கொஞ்சம் கஞ்சி தயார் செய்து குடிக்க வைத்து விட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். மகனே நீ காட்டில் கால் இழந்த நரியைப் பார்த்தாய். அதற்கு உணவளிக்கும் சிங்கத்தையும் பார்த்தாய். நரியைப் பின்பற்ற நினைத்த நீ ஏன் சிங்கத்தை பின்பற்ற மறந்தாய். நரியோ ஊனமுற்றது. நீயோ சிங்கத்தைப் போல ஊனமேதுமில்லாத வாலிபன். இதை நீ ஏன் மறந்தாய் ? ஊனமுற்றவர்களைக் காக்கவே ஊனமேதுமில்லாத பலமுள்ளவர்களைக் கடவுள் படைத்துள்ளார். ஊனமுற்றுக் கிடக்கும் மனித சமுதாயத்தைக் காக்கவே கடவுள் உன்னை ஊனமற்றவனாகப் படைத்துள்ளார். எனவே நீ எழுந்து சென்று கால்களற்ற நரியைப் போலத் துன்புற்றுக் கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்று என்று தெளிவாகக் கணீரென்று விளக்கினார்கள். அவன் மனமும் தெளிவடைந்தது. எழுந்து முகம் கழுவி வரச் சென்றான். அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தாயார் திறப்பார்கள் என்று நினைத்து பேசாமல் இருந்தான். மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்த அவன் தாயார் எங்கு சென்றார்கள் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் அங்கு பைகளைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ந்தார்கள். 

வந்து தனக்கு உணவளித்து தன் மனதைத் தெளிவித்தது கடவுள்தான் என்று உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. இது கதைதான். ஆனால், சொல்கிற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவருமே கால்களை இழந்த நரியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அந்த நரிக்குக் கடவுளாக நின்று காப்பாற்றும் சிங்கத்திடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மனம் எதைப் பற்றுகிறதோ அதுவாகவே மாறும் என்பதை உணர்ந்து நரிகளாக மாறுவதை மறந்து சிங்கங்களாக மாறி ஊனங்களைக் களைவோமாக.
நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்லை என்றும் சொல்லிக் கொள்பவன் சோம்பேறி. நம்மைப் படைக்கும் முன்பே நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்து வைத்து விட்டது பிரபஞ்சம். ஒவ்வொன்றாகச் சீரமைத்துச் சீரமைத்துக் கடைசியாகவே நம்மைப் படைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எதையெல்லாம் நமக்குத் தேவையில்லையென்றோ, துன்பம் தரக்கூடியத் என்றோ அது புறக்கணித்து வைத்ததோ, அவற்றைய எல்லாம் நாம் பற்றிக் கொண்டு பிரபஞ்சத்தோடு முரண்பட்டுப் போகிறோம். அது நமக்காக சீரமைத்து, வடிவமைத்துத் தந்த நல்ல விஷயங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். அது நமக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், நாமோ புலன்களுக்கும், புலனிச்சைகளுக்கும் அடிமைகளாகி நம் சுயேச்சையை இழந்து கொத்தடிமைகளைப் போல அல்லல்பட்டு மாய்ந்து போகிறோம். எது நல்லது ? எது கெட்டது ? என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளியாமல் அறியாமை இருளில் முடங்கிக் கிடக்கிறோம். பொய்யின் உதவியோடு உண்மையைத் தேடுகிறோம். துன்பத்தின் உதவி கொண்டு இன்பத்தை அடைய நினைக்கிறோம்.

கண்ணிருந்தும் குருடாய், கை, கால்களிருந்தும் முடமாய், அவநம்பிக்கை எனும் ஓட்டைப் படகில் ஏறி வாழ்க்கை எனும் நதியைக் கடக்க நினைக்கிறோம். செயல்களை நாம் செய்து விட்டு எல்லாம் விதி என்கிறோம். கண்ணெதிரே விளக்கை விட்டு விட்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற விழைகிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் செய்து விட்டுக் கடவுளுக்குக் கண்ணில்லையே என்கிறோம். சிறு வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. வாலிபன் ஒருவன் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சலசலப்பு கேட்கவே, சுற்றுமுற்றும் பார்க்கிறான். பாதை ஓரத்தில் ஒரு புதரில் இருந்தே அந்த சப்தம் வந்ததை உணர்கிறான். மீண்டும் மீண்டும் புதர் அசைவதைக் கண்ட அவன் அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் கொண்டு புதரை விலக்கிப் பார்க்கிற பொழுது, அங்கே ஒரு கொழுத்த நரி படுத்துக் கிடந்தது. அதற்கு நான்கு காலுமே ஊனமாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. நான்கு காலும் இல்லாத இந்த நரி எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது என்று யோசித்தான். எனவே அவன் ஒரு மரத்தின் மீது ஏறிகமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிங்கம் ஒன்று ஒரு முயலைக் கவ்விக் கொண்டு வந்து நரியின் முன் போட்டு விட்டுப் போனது. வாலிபனுக்கு ஒரே அதிசயமாகி விட்டது. என்னே கடவுளின் கருணை ! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுள் உணவளிப்பார் என்று சொல்வது சரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அப்பொழுது அவன், காலில்லாத நரியைக் கூட இவ்விதமாகக் காக்கும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார்தானே ? அவர் என்னை எப்படி காப்பாற்றுவார் என்று பார்க்கப் போகிறேன். எனவே இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன். நரிக்கு உணவளிப்பது போல எனக்கும் எப்படியாவது இறைவன் உணவளிக்கட்டுமே என்று நினைத்தான். உடனே வேலைக்குச் செல்லாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். ஒரு நாள் கடந்தது, இரண்டு நாட்கள் கடந்தது யாரும் அவனுக்கு உணவளிக்க வரவேயில்லை. மூன்றாம் நாளும் வந்தது. பசியின் வேதனை அதிகரித்தது. உணவு கிடைக்கவில்லை. மனம் சோர்வடைந்தான். அவனுக்குக் கடவுள் மேல் கோபம் வந்து விட்டது. கடவுள் இரக்கமில்லாதவன். கண்ணில்லாதவன். கால்களை இழந்த ஒரு நரிக்கு உணவு படைக்கும் அவன் இத்தனை காலம் அவருடைய பக்தனாக இருந்த என்னை ஏமாற்றி விட்டான், என்று மனதிற்குள் வசை பாடினான்.

இறுதியில் அசதி ஏற்படவே எப்படியோ தூங்கிப் போனான். திடீரென்று யாரோ அவனை எழுப்புவது போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தால், எதிரே ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் நின்றிருந்தார்கள். இவன் இப்படி மெலிந்து போய் சோர்வாகப் படுத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். உடல் நலமில்லையா என்று பதறினார்கள். அவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அப்பொழுது அவன் தாயார் அவனை எழுப்பி அமரச் செய்து கொஞ்சம் கஞ்சி தயார் செய்து குடிக்க வைத்து விட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். மகனே நீ காட்டில் கால் இழந்த நரியைப் பார்த்தாய். அதற்கு உணவளிக்கும் சிங்கத்தையும் பார்த்தாய். நரியைப் பின்பற்ற நினைத்த நீ ஏன் சிங்கத்தை பின்பற்ற மறந்தாய். நரியோ ஊனமுற்றது. நீயோ சிங்கத்தைப் போல ஊனமேதுமில்லாத வாலிபன். இதை நீ ஏன் மறந்தாய் ? ஊனமுற்றவர்களைக் காக்கவே ஊனமேதுமில்லாத பலமுள்ளவர்களைக் கடவுள் படைத்துள்ளார். ஊனமுற்றுக் கிடக்கும் மனித சமுதாயத்தைக் காக்கவே கடவுள் உன்னை ஊனமற்றவனாகப் படைத்துள்ளார். எனவே நீ எழுந்து சென்று கால்களற்ற நரியைப் போலத் துன்புற்றுக் கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்று என்று தெளிவாகக் கணீரென்று விளக்கினார்கள். அவன் மனமும் தெளிவடைந்தது. எழுந்து முகம் கழுவி வரச் சென்றான். அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தாயார் திறப்பார்கள் என்று நினைத்து பேசாமல் இருந்தான். மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்த அவன் தாயார் எங்கு சென்றார்கள் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், ஊருக்குச் சென்றிருந்த அவன் தாயார் அங்கு பைகளைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ந்தார்கள்.

வந்து தனக்கு உணவளித்து தன் மனதைத் தெளிவித்தது கடவுள்தான் என்று உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. இது கதைதான். ஆனால், சொல்கிற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவருமே கால்களை இழந்த நரியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அந்த நரிக்குக் கடவுளாக நின்று காப்பாற்றும் சிங்கத்திடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மனம் எதைப் பற்றுகிறதோ அதுவாகவே மாறும் என்பதை உணர்ந்து நரிகளாக மாறுவதை மறந்து சிங்கங்களாக மாறி ஊனங்களைக் களைவோமாக.

சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

Photo: சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை பாமரர்களும் அறியும்படிக்கு வெளிப்படுத்த முயன்றது பதஞ்சலி மகான்தான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பல தடைகளைக் கடந்துதான் அது இன்று நம் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. ஆனால், மகிமையறியாத சிலர் அதை பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு விற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது அது மறைக்கப்பட்டே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதயமாகி விடுகின்றது. அவர் அதில் எல்லா ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மனமே மந்திரக் கோல் என்றுதான் சொல்கிறார். எனவேதான் அகத்தியமுனி, 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே! 

என்றுரைக்கிறார். ஆனால். மனம் செம்மையாகும் வரை இவற்றையெல்லாம் கை கொள்வது அவசியமாகும். மனதை செம்மைப்படுத்துவது என்பது இடைவிடாமல் எழுந்து கொண்டேயிருக்கும் பல்வேறு எண்ணங்களை அனுமதிக்காமல், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை எழச் செய்து அதில் முழு மனதையும் குவித்து மனதின் எண்ணங்களை குறைத்து முழுவதுமாக இல்லாமல் செய்வதுதான். இதுவே தியானமுமாகும். இந்த நிலையை அடைந்த பிறகு நாம் எதையும் செய்யத் தேவையில்லை. அங்கேயே, அதிலேயே நிலை பெற்று சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம். 

நேற்று நம் சூக்கும சரீரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒன்றிலிருந்து ஒன்று சூக்குமத் தன்மை குறைந்து வெளி நோக்கி வந்து ஜட நிலையை அடைகிறது என்று சொன்னேனல்லவா, அது போல அவைகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப  அவற்றிற்கு மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். எல்லாம் ஒன்றிலிருந்து விரிந்த நிலைகளேயாதலால், ஒன்றைக் கட்டுப்படுத்தினால், அது எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. தியானத்தின் மூலம் மனதை புத்தி அல்லது அறிவு கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு நிலையில் நிற்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கும் பொழுது பொறிகள் அனைத்தும் கட்டுக்குள் வந்து விடுகின்றன. இப்படி எல்லாத் தத்துவங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த வல்லவரையே தவ சீலர்கள் என்கிறோம். 

வேதத்திலும் சரி, வேதாந்தத்திலும் சரி பேராற்றலை, எல்லாம் வல்லப் பரம்பொருளை அடைவதற்கு கையாளப்படுகின்ற அனைத்து வழிகளிலும் சரி மனோ நாசமே முடிவாக இருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது. மனோ நாசம், மனம் அழிதல் என்றால் அது ஏதோ பயங்கரமான விஷயமாக இருக்குமோ என்று யாரும் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. அது தியானத்தின் மூலம் மனிதனுடைய மனம் மற்றும், புத்தி சரீரங்கள் தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதேயாகும். நம் ஸ்தூல உடலை தளர்வாகவும், உறுதியாகவும், நடுநிலையில் அதை நேராகவும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு, மூச்சை கவனித்து சமப்படுத்துவதன் மூலம் புறவுரைகளில் இருந்து தன் மனதை உள்முகமாகச் செலுத்துவது கடினமில்லை. அதற்குப் பிறகு தன்னுணர்வுடன் சூக்கும உரைகளையும் கடக்க மேற்கொள்வதுதான் முயற்சி. இங்குதான் மந்திரங்கள், இஷ்ட தெய்வத்தின் உருவங்கள் உதவுகின்றன. ஒரே சிந்தனையில் மனதைச் செலுத்துவதற்காகவே உருவமோ, சின்னமோ பயன்படுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலைப்பட்ட பிறகு அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏறும் வரை ஏணி தேவைப்படுகிறது. அதற்காக அதை யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவதில்லை. உணவுக்குப் பிறகு தட்டை நாம் தின்பதில்ல. தட்டு உணவாகாது. ஆனால், தட்டு இல்லாமல் சாப்பிட முடியாது என்பதையும் மறந்து விடக் கூடாது. மந்திரங்களைத் தாரகம் என்பார்கள். அதாவது கடத்துவிப்பது என்று பொருள். நமது எல்லா கோசங்களையும், உணர்வுகளையும் கடக்க மனதை நிலை பெறச் செய்ய மந்திரங்கள் உதவுவதால்தான் தாரக மந்திரங்கள் என்று சொல்கிறார்கள். மனதிற்கு தரம் தருவது மந்திரங்கள். கண்டபடி அலையும் தரமற்ற செயலில் இருந்து ஒரே நிலையில் நிலைக்கும் தரத்தை மனம் அடைவதற்கு மந்திரங்கள் உதவுகின்றன. 

சராசரி மனித வாழ்வில் தியானம் மன ஆற்றலை மேம்படுத்தி, புத்தி கூர்மையை உருவாக்கி அதன் மூலம் குறைவற்ற, நிறைவான, வெற்றிகரமான வாழ்வை ஏற்படுத்தித் தருகிறது. அதனால்தான் இன்று அனைத்து தரப்பினரும் தியானம் பற்றிப் பேசுகிறார்கள், தியானம் செய்கிறார்கள். இதுவே பழக்கமாகி வரும் பொழுது அவர்களுக்குள் இயல்பாகவே பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அமைதி அவர்களுக்குள் சத்துவ குணத்தை மேம்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல், மனம், ஆன்மா என்று பிரிந்து கிடந்த மன இயக்கங்கள் ஒருங்கிணைப்பை பெற்று விடுகின்றன. யோகங்களும் இந்த இணைப்பை முன்னிட்டே செய்யப்படுகின்றன. தவத்தையே வாழ்வாகக் கொள்வது யோகம். வாழ்வையே தவமாக வாழ்ந்து விடுவது அறம். எனவே இல்வாழ்விற்கும் ஆன்மிக மேம்பாட்டுக்கும் சம்மந்தமில்லை என்று சிலர் சொல்வது தவறான கருத்தாகும். இல்லறத்தை நல்லறம் என்று நம் முன்னோர்கள் போற்றிப் பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தரப்பினராக இருந்தாலும் சரி மனமே மார்க்கமாக இருக்கிறது. எனவேதான் மனமில்லையேல் மார்க்கமில்லை என்றும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் சொல்கிறார்கள்.
சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை பாமரர்களும் அறியும்படிக்கு வெளிப்படுத்த முயன்றது பதஞ்சலி மகான்தான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பல தடைகளைக் கடந்துதான் அது இன்று நம் கைகளுக்கு வசப்பட்டிருக்கிறது. ஆனால், மகிமையறியாத சிலர் அதை பழைய புத்தகக் கடைகளில் எடைக்கு விற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது அது மறைக்கப்பட்டே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதயமாகி விடுகின்றது. அவர் அதில் எல்லா ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மனமே மந்திரக் கோல் என்றுதான் சொல்கிறார். எனவேதான் அகத்தியமுனி,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!

என்றுரைக்கிறார். ஆனால். மனம் செம்மையாகும் வரை இவற்றையெல்லாம் கை கொள்வது அவசியமாகும். மனதை செம்மைப்படுத்துவது என்பது இடைவிடாமல் எழுந்து கொண்டேயிருக்கும் பல்வேறு எண்ணங்களை அனுமதிக்காமல், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை எழச் செய்து அதில் முழு மனதையும் குவித்து மனதின் எண்ணங்களை குறைத்து முழுவதுமாக இல்லாமல் செய்வதுதான். இதுவே தியானமுமாகும். இந்த நிலையை அடைந்த பிறகு நாம் எதையும் செய்யத் தேவையில்லை. அங்கேயே, அதிலேயே நிலை பெற்று சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

நேற்று நம் சூக்கும சரீரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒன்றிலிருந்து ஒன்று சூக்குமத் தன்மை குறைந்து வெளி நோக்கி வந்து ஜட நிலையை அடைகிறது என்று சொன்னேனல்லவா, அது போல அவைகள் மேற்கொள்ளும் பணிகளுக்கேற்ப அவற்றிற்கு மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். எல்லாம் ஒன்றிலிருந்து விரிந்த நிலைகளேயாதலால், ஒன்றைக் கட்டுப்படுத்தினால், அது எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. தியானத்தின் மூலம் மனதை புத்தி அல்லது அறிவு கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு நிலையில் நிற்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கும் பொழுது பொறிகள் அனைத்தும் கட்டுக்குள் வந்து விடுகின்றன. இப்படி எல்லாத் தத்துவங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த வல்லவரையே தவ சீலர்கள் என்கிறோம்.

வேதத்திலும் சரி, வேதாந்தத்திலும் சரி பேராற்றலை, எல்லாம் வல்லப் பரம்பொருளை அடைவதற்கு கையாளப்படுகின்ற அனைத்து வழிகளிலும் சரி மனோ நாசமே முடிவாக இருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது. மனோ நாசம், மனம் அழிதல் என்றால் அது ஏதோ பயங்கரமான விஷயமாக இருக்குமோ என்று யாரும் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. அது தியானத்தின் மூலம் மனிதனுடைய மனம் மற்றும், புத்தி சரீரங்கள் தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதேயாகும். நம் ஸ்தூல உடலை தளர்வாகவும், உறுதியாகவும், நடுநிலையில் அதை நேராகவும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு, மூச்சை கவனித்து சமப்படுத்துவதன் மூலம் புறவுரைகளில் இருந்து தன் மனதை உள்முகமாகச் செலுத்துவது கடினமில்லை. அதற்குப் பிறகு தன்னுணர்வுடன் சூக்கும உரைகளையும் கடக்க மேற்கொள்வதுதான் முயற்சி. இங்குதான் மந்திரங்கள், இஷ்ட தெய்வத்தின் உருவங்கள் உதவுகின்றன. ஒரே சிந்தனையில் மனதைச் செலுத்துவதற்காகவே உருவமோ, சின்னமோ பயன்படுத்தப்படுகிறது. மனம் ஒரு நிலைப்பட்ட பிறகு அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏறும் வரை ஏணி தேவைப்படுகிறது. அதற்காக அதை யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவதில்லை. உணவுக்குப் பிறகு தட்டை நாம் தின்பதில்ல. தட்டு உணவாகாது. ஆனால், தட்டு இல்லாமல் சாப்பிட முடியாது என்பதையும் மறந்து விடக் கூடாது. மந்திரங்களைத் தாரகம் என்பார்கள். அதாவது கடத்துவிப்பது என்று பொருள். நமது எல்லா கோசங்களையும், உணர்வுகளையும் கடக்க மனதை நிலை பெறச் செய்ய மந்திரங்கள் உதவுவதால்தான் தாரக மந்திரங்கள் என்று சொல்கிறார்கள். மனதிற்கு தரம் தருவது மந்திரங்கள். கண்டபடி அலையும் தரமற்ற செயலில் இருந்து ஒரே நிலையில் நிலைக்கும் தரத்தை மனம் அடைவதற்கு மந்திரங்கள் உதவுகின்றன.

சராசரி மனித வாழ்வில் தியானம் மன ஆற்றலை மேம்படுத்தி, புத்தி கூர்மையை உருவாக்கி அதன் மூலம் குறைவற்ற, நிறைவான, வெற்றிகரமான வாழ்வை ஏற்படுத்தித் தருகிறது. அதனால்தான் இன்று அனைத்து தரப்பினரும் தியானம் பற்றிப் பேசுகிறார்கள், தியானம் செய்கிறார்கள். இதுவே பழக்கமாகி வரும் பொழுது அவர்களுக்குள் இயல்பாகவே பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அமைதி அவர்களுக்குள் சத்துவ குணத்தை மேம்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல், மனம், ஆன்மா என்று பிரிந்து கிடந்த மன இயக்கங்கள் ஒருங்கிணைப்பை பெற்று விடுகின்றன. யோகங்களும் இந்த இணைப்பை முன்னிட்டே செய்யப்படுகின்றன. தவத்தையே வாழ்வாகக் கொள்வது யோகம். வாழ்வையே தவமாக வாழ்ந்து விடுவது அறம். எனவே இல்வாழ்விற்கும் ஆன்மிக மேம்பாட்டுக்கும் சம்மந்தமில்லை என்று சிலர் சொல்வது தவறான கருத்தாகும். இல்லறத்தை நல்லறம் என்று நம் முன்னோர்கள் போற்றிப் பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எத்தரப்பினராக இருந்தாலும் சரி மனமே மார்க்கமாக இருக்கிறது. எனவேதான் மனமில்லையேல் மார்க்கமில்லை என்றும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் சொல்கிறார்கள்.

Thursday, April 3, 2014

உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம்

Photo: நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேல் நாட்டிலும் கூட இது பற்றிய நம்பிக்கை உள்ளது. அவர்கள் சூக்கும சரீரங்களின் எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவால் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் சரீரத்தை அன்னமய கோசம் என்று சொல்கிறோம். அதற்கு சரியான வேளையில் சரியான விகிதத்தில் உணவு தரப்படவில்லை என்றால் அது வலுக்குன்றி பலவீனம் அடைகின்றது. அது போலவே பிராண சக்தி குறைவு படும் பொழுது பிராணமய கோசம் பலவீனமடைகிறது. இப்படி அடிப்படை ஆதார சக்தி குறைவுபடும் பொழுதோ, இயக்கம் கூடும் பொழுதோ, குறையும் பொழுதோ அந்தந்த சரீரங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை சக்தியாக இருப்பது ப்ராண சக்தியே ஆகும். இதில் நம் மனோமய கோசமானது பலவீனமடைவது ஏன் என்று பார்க்கும் பொழுது அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருப்பதினாலேயேயாகும். அதிகமாக உழைப்பதநினாலோ, நடப்பதினாலோ, ஓடுவதினாலோ நம் அன்னமய கோசம் களைப்படைந்து விடுவது போல, சில நேரங்களில் நம் மனோமய கோசமும் களைப்படைந்து விடுகிறது. ஆனால், அன்னமய கோசத்தின் களைப்பை உணர்ந்து கொள்கிற அளவு நாம் நம் மனோமய கோசத்தின் களைப்பை உணர்வதில்லை. இதனால் மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற நிலைகள் உருவாகி முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

உடல் சோர்வு நீங்க சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். அது போல மனதின் களைப்பு நீங்கவும் அதற்கு ஓய்வு அவசியமாகும். அதற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மனதை எந்த வித சிந்தனையுமின்றி அமைதியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பிராண சக்தி அடுத்தபடியாக சூக்குமமானதும், நம் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பதும் மனமேயாதலால், மனம் அமைதியாக இருப்பதால் மற்ற நான்கு கோசங்களுமே வலிமையடைகின்றன. அதனதன் சக்தி விரையங்கள் தவிர்க்கப்படுகின்றன. இவை வெவ்வேறு நிலைப் பாட்டையும், இயக்கங்களையும் கொண்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. ஒன்று பலவீனமடையும் பொழுது மற்றவைகளும் பலவீனமடைந்து விடுகின்றன. ஒன்று வலிமையடையும் பொழுது மற்றவைகளும் வலிமையடைகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று உள்முகமாகச் சூக்குமமாக விளங்குகின்றன. நன்றாகக் கவனித்தீர்களென்றால் இந்த ஐந்தில் நடுவில் மையமாக விளங்குவது மனமே என்பது தெளிவாகும். மனமே எல்லாவற்றிற்கும் மையமாக இருந்து கொண்டு பிராண சக்தியை ஏற்றுக் கொண்டு இயங்குகிறது. மனம் அமைதியாக இருந்தால் மற்றவைகளும் சலனமற்று மெதுவாக இயங்குகின்றன. இதனால் சக்தி விரையம் தவிர்க்கப்படுகிறது. எனவே அனைத்திலும் பிராண சக்தியின் திணிவு ஏற்பட்டு விடுகிறது. பிராணனின் திணிவு அதிகரிக்கும் பொழுது அது தங்கு தடையின்றி அனைத்து சரீரங்களிலும் பரவுகிறது. நாடி நரம்புகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் ஆதாரச் சக்கரங்கள் நன்கு சீராக இயங்கி நமக்கு அனைத்து பிரபஞ்ச சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன. 

பிராண ஓட்டம் தங்கு தடையின்றி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவும் பொழுது, வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், காற்றோட்டம் போன்ற அனைத்தும் உடலெங்கும் ஒரே சீராகப் பரவுகின்றன. எனவே பஞ்ச பூதங்களாலான நம் சரீரத்தில் பஞ்ச பூத தன்மாத்திரைகளின் இயக்கங்களும் சீராகவும், செம்மையாகவும் நடைபெறுகின்றன. மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி கிடைப்பதால் அது நன்கு செயல்படுகிறது. எனவே மனதை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்வதால் ஏற்படும் பலன்கள் எவ்வளவு மிகுதியானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்வோம். ஆனால், மனதை அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லையே என்று நினைக்கக் கூடும். அது உண்மைதான். எனினும், நம் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பழக்கங்களால் ஏற்படுபவையேயாகும். இந்தப் பழக்கங்கள் மூலமாகவே எண்ணங்கள் செயலாக பரிணமித்து நடைபெறுகின்றன. எனவே மனம் அமைதியாக விளங்கவும் நாம் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் அதன் இயக்கம் புலன் சார்ந்த புற விசயங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. எனவே அதை மடைமாற்றம் செய்து உள்முகமாகத் திருப்பி விடும் பொழுது பழைய பழக்கங்கள் மறைந்து மனம் ஒரே நிலையில் இருக்க, இயங்கப் பழகிக் கொள்ளும். மனச் சிதறல் எனப்படும் பலவிதமான எண்ணங்களின் எழுச்சியிலிருந்து நாம் விடுபடலாம். இதனால் மனத் தெளிவும், புத்தி கூர்மையும் ஏற்படும். மனத் தெளிவு என்பது சித்தத்தில் சலனமற்ற நிலையை உருவாக்கும், புத்தி கூர்மையென்பது சலனமற்ற சித்தத்தின் உள்ளே துலங்கும் ஆன்பமாவை பிரதிபலிக்கும். 

ஆன்ம ஒளி அறிவில் பிரிதிபலிப்பதே அறிவொளி எனப்படுகிறது. அறிவில் பிரகாசம் உடையவர்களே ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள். தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தியானம் செய்து வரும் பொழுது அது நமக்கு வெற்றிகரமான, சிக்கலற்ற நல் வாழ்வை அமைத்துத் தரும். அதுவே மத்திம வயதைக் கடந்த ஓய்வு காலங்களில் மிக விரைவான ஆன்மிக மேம்பாட்டையும் பெற்றுத் தரும். ஏனென்றால் நாம் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் தியானப் பழக்கம் அப்பொழுது நமக்குக் கை கொடுக்கும். ஓய்வு எனும் பொழுது நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் தியானம் செய்ய ஏதுவாக அமையும். எனவே அறிவில் சிறந்த, முதிர்ந்த அனுபவ சாலியாக, ஞானியாக, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையவராக விளங்கலாம். மன அமைதியை ஏற்படுத்துவதற்காக பல யுக்திகளைக் கை கொள்வார்கள். எனவே பல விதமான தியான முறைகள் பேசப்படுகின்றன. எதுவும் குறைந்ததல்ல. எல்லாம் ஒவ்வொரு நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே குழப்பம் தேவையில்லை. நம் நடைமுறை வாழ்விற்கு ஏற்றார் போன்ற ஒரு முறையைப் பின்பற்றி குறைவற்ற நிறைவான மனிதராக விளங்குவோமாக.
நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேல் நாட்டிலும் கூட இது பற்றிய நம்பிக்கை உள்ளது. அவர்கள் சூக்கும சரீரங்களின் எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவால் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் சரீரத்தை அன்னமய கோசம் என்று சொல்கிறோம். அதற்கு சரியான வேளையில் சரியான விகிதத்தில் உணவு தரப்படவில்லை என்றால் அது வலுக்குன்றி பலவீனம் அடைகின்றது. அது போலவே பிராண சக்தி குறைவு படும் பொழுது பிராணமய கோசம் பலவீனமடைகிறது. இப்படி அடிப்படை ஆதார சக்தி குறைவுபடும் பொழுதோ, இயக்கம் கூடும் பொழுதோ, குறையும் பொழுதோ அந்தந்த சரீரங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை சக்தியாக இருப்பது ப்ராண சக்தியே ஆகும். இதில் நம் மனோமய கோசமானது பலவீனமடைவது ஏன் என்று பார்க்கும் பொழுது அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருப்பதினாலேயேயாகும். அதிகமாக உழைப்பதநினாலோ, நடப்பதினாலோ, ஓடுவதினாலோ நம் அன்னமய கோசம் களைப்படைந்து விடுவது போல, சில நேரங்களில் நம் மனோமய கோசமும் களைப்படைந்து விடுகிறது. ஆனால், அன்னமய கோசத்தின் களைப்பை உணர்ந்து கொள்கிற அளவு நாம் நம் மனோமய கோசத்தின் களைப்பை உணர்வதில்லை. இதனால் மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற நிலைகள் உருவாகி முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

உடல் சோர்வு நீங்க சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். அது போல மனதின் களைப்பு நீங்கவும் அதற்கு ஓய்வு அவசியமாகும். அதற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மனதை எந்த வித சிந்தனையுமின்றி அமைதியாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பிராண சக்தி அடுத்தபடியாக சூக்குமமானதும், நம் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பதும் மனமேயாதலால், மனம் அமைதியாக இருப்பதால் மற்ற நான்கு கோசங்களுமே வலிமையடைகின்றன. அதனதன் சக்தி விரையங்கள் தவிர்க்கப்படுகின்றன. இவை வெவ்வேறு நிலைப் பாட்டையும், இயக்கங்களையும் கொண்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. ஒன்று பலவீனமடையும் பொழுது மற்றவைகளும் பலவீனமடைந்து விடுகின்றன. ஒன்று வலிமையடையும் பொழுது மற்றவைகளும் வலிமையடைகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று உள்முகமாகச் சூக்குமமாக விளங்குகின்றன. நன்றாகக் கவனித்தீர்களென்றால் இந்த ஐந்தில் நடுவில் மையமாக விளங்குவது மனமே என்பது தெளிவாகும். மனமே எல்லாவற்றிற்கும் மையமாக இருந்து கொண்டு பிராண சக்தியை ஏற்றுக் கொண்டு இயங்குகிறது. மனம் அமைதியாக இருந்தால் மற்றவைகளும் சலனமற்று மெதுவாக இயங்குகின்றன. இதனால் சக்தி விரையம் தவிர்க்கப்படுகிறது. எனவே அனைத்திலும் பிராண சக்தியின் திணிவு ஏற்பட்டு விடுகிறது. பிராணனின் திணிவு அதிகரிக்கும் பொழுது அது தங்கு தடையின்றி அனைத்து சரீரங்களிலும் பரவுகிறது. நாடி நரம்புகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் ஆதாரச் சக்கரங்கள் நன்கு சீராக இயங்கி நமக்கு அனைத்து பிரபஞ்ச சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன.

பிராண ஓட்டம் தங்கு தடையின்றி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவும் பொழுது, வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், காற்றோட்டம் போன்ற அனைத்தும் உடலெங்கும் ஒரே சீராகப் பரவுகின்றன. எனவே பஞ்ச பூதங்களாலான நம் சரீரத்தில் பஞ்ச பூத தன்மாத்திரைகளின் இயக்கங்களும் சீராகவும், செம்மையாகவும் நடைபெறுகின்றன. மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி கிடைப்பதால் அது நன்கு செயல்படுகிறது. எனவே மனதை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்வதால் ஏற்படும் பலன்கள் எவ்வளவு மிகுதியானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்வோம். ஆனால், மனதை அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லையே என்று நினைக்கக் கூடும். அது உண்மைதான். எனினும், நம் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பழக்கங்களால் ஏற்படுபவையேயாகும். இந்தப் பழக்கங்கள் மூலமாகவே எண்ணங்கள் செயலாக பரிணமித்து நடைபெறுகின்றன. எனவே மனம் அமைதியாக விளங்கவும் நாம் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் அதன் இயக்கம் புலன் சார்ந்த புற விசயங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. எனவே அதை மடைமாற்றம் செய்து உள்முகமாகத் திருப்பி விடும் பொழுது பழைய பழக்கங்கள் மறைந்து மனம் ஒரே நிலையில் இருக்க, இயங்கப் பழகிக் கொள்ளும். மனச் சிதறல் எனப்படும் பலவிதமான எண்ணங்களின் எழுச்சியிலிருந்து நாம் விடுபடலாம். இதனால் மனத் தெளிவும், புத்தி கூர்மையும் ஏற்படும். மனத் தெளிவு என்பது சித்தத்தில் சலனமற்ற நிலையை உருவாக்கும், புத்தி கூர்மையென்பது சலனமற்ற சித்தத்தின் உள்ளே துலங்கும் ஆன்பமாவை பிரதிபலிக்கும்.

ஆன்ம ஒளி அறிவில் பிரிதிபலிப்பதே அறிவொளி எனப்படுகிறது. அறிவில் பிரகாசம் உடையவர்களே ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள். தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தியானம் செய்து வரும் பொழுது அது நமக்கு வெற்றிகரமான, சிக்கலற்ற நல் வாழ்வை அமைத்துத் தரும். அதுவே மத்திம வயதைக் கடந்த ஓய்வு காலங்களில் மிக விரைவான ஆன்மிக மேம்பாட்டையும் பெற்றுத் தரும். ஏனென்றால் நாம் ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் தியானப் பழக்கம் அப்பொழுது நமக்குக் கை கொடுக்கும். ஓய்வு எனும் பொழுது நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் தியானம் செய்ய ஏதுவாக அமையும். எனவே அறிவில் சிறந்த, முதிர்ந்த அனுபவ சாலியாக, ஞானியாக, இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையவராக விளங்கலாம். மன அமைதியை ஏற்படுத்துவதற்காக பல யுக்திகளைக் கை கொள்வார்கள். எனவே பல விதமான தியான முறைகள் பேசப்படுகின்றன. எதுவும் குறைந்ததல்ல. எல்லாம் ஒவ்வொரு நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே குழப்பம் தேவையில்லை. நம் நடைமுறை வாழ்விற்கு ஏற்றார் போன்ற ஒரு முறையைப் பின்பற்றி குறைவற்ற நிறைவான மனிதராக விளங்குவோமாக.

ஆல்பா தியானம் செய்யும் முறை..

Photo: Lawrence Timer - வணக்கம் சார், எனக்கு ஆல்பா தியானம் செய்யும் முறை பற்றி கூறவும். தியானத்தில் செய்ய வேண்டியதும், செய்ய கூடாதவை என்ன? please give me a answer as a help sir. 

மனித மூளையின் அமைப்பு வலது, இடது என்று இரண்டு நிலைகளில் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இதில் இடது பக்க மூளையானது நம் புலன்களோடு தொடர்புடையது. அது நாம் ஜாக்ரதா நிலையில் இருக்கும் போது அல்லது உணர்வோடு இருக்கும் போது புலன்கள் மூலம் வருகிற தகவல்களை சேகரித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதோடு, அந்நிலையில் எழும் எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது. இடது பக்க மூளையானது மனிதன் விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது. நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற வரை  தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. இந்த வலது பக்க மூளைப் பகுதியே ஆழ்மனம் எனப்படுகிறது. இதை Sub Concious mind என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் இதை இன்னும் நுட்பமாகஆராய்ந்து,  இவை அனைத்தும் இயங்கத் தேவையான நாடி, நரம்புகளின் தொகுப்பை தன்னிச்சை, நரம்பு மண்டலம், அனிச்சை நரம்பு மண்டலம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். 

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக ஞானிகளும், விஞ்ஞானிகளும் கூறியிருக்கிறார்கள். எண்ணம் உதயமாகும் பொழுது எழுகின்ற அலைச் சுற்றுகளை வைத்து இது கணக்கிடப் படுகின்றது. ஆல்பா அலை எழும் பொழுது மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec), பீட்டாவில் 13 சுற்றுகளுக்கு அதிகமாகவும், தீட்டா நிலையில் 4 லிருந்து 7 சுற்றுகள் வரையும், டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் குறைவாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதில் பீட்டா நிலை என்பது விழிப்பு நிலையாகும். மனம் வேகமாக இயங்கும் நிலை
ஆல்பா நிலை. இது விழிப்பிற்கும், உறக்கத்திற்கும் இடைப்பட்ட தூங்காமல் தூங்கும் தியான நிலை. இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. டெல்டா என்பது சமாதி நிலை. நம் ஜாக்ரதை அவத்தையின் போது புலன்கள் இயங்கிக் கொண்டே இருப்பதால் நினைவு மனம் விழிப்பு நிலையிலும், ஆழ்மனம் உறக்க நிலையிலும் இருக்கிறது.

இப்படி உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனதை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் இயக்கங்களைக் குறைக்க வேண்டும். நம் புலன்கள் மூலம் நிகழும் புற உலக இயக்கங்களைத் துண்டித்தால் நினைவு மனத்தின் செயல்பாடுகள் குறையும். நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதை எளிமையாக சொன்னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலைதான் இது. அது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகின்து. இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

மனிதனுக்கு பலவிதமான தடைகள் ஏற்படும் பொழுதும், தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் பொழுதும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறையும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை தியானம் தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. இதையே  நீங்கள் ஒவ்வொரு மூச்சையும் உங்கள் பணிகளுக்கிடையில் கவனித்து நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடப் பழகிக் கொண்டீர்களானால் அதன் பலன் அளவிடற்கரியது. தியானம் வேறு ஆல்பா தியானம் வேறு அல்ல. பல படித்தரங்கள், பல அனுபவங்கள் என்று தியானத்தை நோக்கிய பயணத்தின் அனுபவங்களை வைத்து பலவேறு பெயர்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டுள்ளீர்கள். மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். என்ன செய்யக் கூடாது என்று கேட்டால் முயற்சியைக் கைவிடக் கூடாது அவ்வளவுதான். எனவே விழிப்பு நிலைக்கு மனதைக் கொண்டு செல்வதின் ஆங்கிலப் பெயரே ஆல்பா தியானம்.

கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல ???

Photo: மனதை அடக்கி, ஒடுக்கி, அழித்து, மனோ நாசம் செய்து, மனதை இல்லாமல் செய்து என்று பலப்பல கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் பொழுது தியானம் குறித்த பயமும், எல்லையற்ற சந்தேகமும் வந்து விடுகிறது. தியானம் என்பது மென்மையான விஷயம். அதை அடைவதற்கு பகீரதப் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்பதால் சாதகனுக்கு வைராக்யமும், விடா முயற்சியும் ஏற்படுத்துவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள். அதாவது நமது பழக்கங்களை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. எவ்வளவுதான் முயன்றாலும் புகைப்பதை விட முடியவில்லை என்பவர்களைப் பார்க்கிறோம். இரவானால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை என்று வருந்துபவர்களைப் பார்க்கிறோம். இப்படி பலவிதமான பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போல நம் மனமும் கண்டபடி மதங் கொண்ட யானை போல, கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அங்கும் இங்கும் தன் இஷ்டத்திற்கு அலைந்து பழகி விட்டது. திடீரென்று ஒருநாள் கண்ணை மூடி அமர்ந்து கொண்டு அடங்கு அடங்கு என்றால், அது அடங்குமா என்ன ? வாழ்க்கையே வெறுத்துப் போனாலும் கூட பழைய அனுபவங்களை அது எண்ணி எண்ணி வருந்திக் கொண்டேதான் இருக்கும். அப்படி வாழ்க்கையையே வெறுத்து காடுமேடெல்லாம் அலைந்து பல துயரங்களை அனுபவித்த பிறகே ஞானமடைந்த எத்தனை எத்தனையோ ஞானிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். 

எனவே ஒரு பழக்கத்தை மாறப்பதற்கு வேறொரு பழக்கத்தைக் கைகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிக பாரம் உள்ள வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்துவது போல மனதைக் கொண்டு போய் அதன் பிறப்பிடத்தில் நிறுத்தி விட முடியாது. அது ஒரு போராட்டம் என்று நினைத்தீர்களேயானால் கடைசி வரை போராட்டமாகத்தான் இருக்கும். மாறாக அது இயல்பாக, மென்மையாக, நிதானமாகப் படிப்படியாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். காலையில் சூரியனைக் கண்டு தாமரை மலர்வது போல இயல்பாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். நாம் மனதை உள்நோக்கி உந்தித் தள்ளுவதல்ல தியானம். உள்ளிருந்து ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவதே தியானம். இப்படிக் கீழ்நிலை மனதை தன்னை நோக்கி இழுப்பது உயர்மனமாகும். இந்த உயர் மனமே இதயத் தாமரையாகும். இதயத் தாமரையே மலராத போது அது கீழ் நிலை மனதை எங்ஙனம் கவர்ந்து இழுக்க முடியும். இதற்கான முயற்சிகளே ஆரம்ப நிலைப் புறப் பயிற்சிகளாகும். நம் அன்றாடப் பணிகளில் அடையும் வெற்றிகளுக்குப் பின்னால் இந்த தியானமும், மன ஒருமைப்பாடும் இருக்கிறது. இப்படி அவ்வப்பொழுது நிகழும் அந்த தியானத்தை, மன ஒருமைப்பாட்டை நிரந்தரமாக்கினால் அதுவே நம் பிறப்பின் நோக்கத்தை அடைவதாக அமையும். 

புறப் பொருள்களில் மனதைக் குவிப்பது மன ஒருமைப்பாடு. இதுவே தாரணை. தாரணையின்றி யாரும் தியானத்தை அடைந்து விட முடியாது. பிரார்த்தனை, ஜபம், பிரம்மச்சரியம் போன்ற சாதனங்களால் இதயத் தாமரையை மலரச் செய்து விட்டீர்களானால், பிறகு மனம் இயல்பாக அங்கு ஈர்க்கப்பட்டுக் குவிகிற நிலையே தியானம். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். மன ஒருமைப்பாடு என்கிற பொழுது அங்கு அனைத்து பொறிகளும் இயங்குகின்றன. ஆனால், தியானம் என்கிற பொழுது மனம் மட்டுமே இயங்குகிறது. பிற பொறிகள் எல்லாம் அடங்கி விடுகின்றன. மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள்களோடு உள்ள தொடர்பு தியானத்தில் துண்டிக்கபட்டு விடுகிறது. புற விஷயங்களில் காலத்தின் ஆதிக்கத்திற்குள் நிகழ்த்தப்படுவது மன ஒருமைப்பாடு. ஆனால், உள்ளே காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம். மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள் மனதைக் கட்டுப்படுத்துகிறது. தியானத்தில் புத்தி, அல்லது ஆன்மா மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், முன்னமே இது தெரிந்திருக்கும் பொழுது தியானத்தின் பொழுது நம் நிலை என்ன என்பது நம் அறிவில் இயல்பாகவே உதயமாகிக் கொண்டேயிருக்கும். சந்தேகம் என்றத் தடையே ஏற்படாது. 

நம் மனதிற்கு இரண்டு நிலைப்பாடு உண்டு. அதாவது தன்னுணர்வு நிலை, உணர்வறு நிலை என்பனவாம் அது. குழந்தையாக இருக்கும் பொழுது இருக்கும் தன்னுணர்வானது வளர வளர உணர்வறு நிலைக்குப் போய் விடுகிறது. நாம் சாப்பிடுகிறோம், பேசுகிறோம், நடக்கிறோம், வேலை செய்கிறோம் என்று எல்லாவற்றையும் செய்தாலும் அதை உணர்வதில்லை. இவையனைத்தும் உணர்வறு நிலையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. வேலை செய்வது வேறு, வேலை செய்கிறேன் என்பதை உணர்வது வேறு. எந்தச் செயலுக்கும் ஆன்மாவோடு தொடர்பிருக்கும் வரையில்தான் அது தன்னுணர்வோடு நடக்கும். ஆனால், மனம் எப்பொழுதும் எண்ண அலைகளாக எழுந்து சலனப்பட்டுக் கொண்டே இருப்பதால் நாம் ஆன்மாவை உணர முடிவதில்லை. எனவே நம் ஆன்மா ஒன்று மட்டுமே உணர்வுப் பொருளாக இருக்கிறது. மற்ற மனம் உட்பட அனைத்தும் தன்னுணர்வு அற்றவைகளாக ஆகி விட்டன. இப்படி இடைவிடாது சலனப்பட்டுக் கொண்டே இருக்கும் மனதால் நாம் நம் சொந்த உணர்வு மையத்தை விட்டு விலகி உணர்வறு நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது இந்த அலைகளைப் படிப்படியாக நிறுத்தி, ஒரே ஒரு அலையை மட்டும் நிலை பெறச் செய்யும் பொழுது, தியானம் நமக்கு ஆன்மாவோடு தொடர்பை உண்டாக்கி விடுகிறது. எனவே நம் உணர்வறு நிலை மறைந்து தன்னுணர்வு மேலோங்கி விடுகின்றது. மன ஒருமைப்பாடு என்பது கூட உணர்வறு நிலையில்தான்  நடைபெறுகிறது. தியானத்தால்தான் நாம் தன்னுணர்வு நிலையை அடைந்து மீட்சி பெறுகிறோம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
மனதை அடக்கி, ஒடுக்கி, அழித்து, மனோ நாசம் செய்து, மனதை இல்லாமல் செய்து என்று பலப்பல கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் பொழுது தியானம் குறித்த பயமும், எல்லையற்ற சந்தேகமும் வந்து விடுகிறது. தியானம் என்பது மென்மையான விஷயம். அதை அடைவதற்கு பகீரதப் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்பதால் சாதகனுக்கு வைராக்யமும், விடா முயற்சியும் ஏற்படுத்துவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள். அதாவது நமது பழக்கங்களை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. எவ்வளவுதான் முயன்றாலும் புகைப்பதை விட முடியவில்லை என்பவர்களைப் பார்க்கிறோம். இரவானால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை என்று வருந்துபவர்களைப் பார்க்கிறோம். இப்படி பலவிதமான பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போல நம் மனமும் கண்டபடி மதங் கொண்ட யானை போல, கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அங்கும் இங்கும் தன் இஷ்டத்திற்கு அலைந்து பழகி விட்டது. திடீரென்று ஒருநாள் கண்ணை மூடி அமர்ந்து கொண்டு அடங்கு அடங்கு என்றால், அது அடங்குமா என்ன ? வாழ்க்கையே வெறுத்துப் போனாலும் கூட பழைய அனுபவங்களை அது எண்ணி எண்ணி வருந்திக் கொண்டேதான் இருக்கும். அப்படி வாழ்க்கையையே வெறுத்து காடுமேடெல்லாம் அலைந்து பல துயரங்களை அனுபவித்த பிறகே ஞானமடைந்த எத்தனை எத்தனையோ ஞானிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

எனவே ஒரு பழக்கத்தை மாறப்பதற்கு வேறொரு பழக்கத்தைக் கைகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிக பாரம் உள்ள வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்துவது போல மனதைக் கொண்டு போய் அதன் பிறப்பிடத்தில் நிறுத்தி விட முடியாது. அது ஒரு போராட்டம் என்று நினைத்தீர்களேயானால் கடைசி வரை போராட்டமாகத்தான் இருக்கும். மாறாக அது இயல்பாக, மென்மையாக, நிதானமாகப் படிப்படியாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். காலையில் சூரியனைக் கண்டு தாமரை மலர்வது போல இயல்பாக நடைபெற வேண்டிய ஒரு மாற்றமாகும். நாம் மனதை உள்நோக்கி உந்தித் தள்ளுவதல்ல தியானம். உள்ளிருந்து ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவதே தியானம். இப்படிக் கீழ்நிலை மனதை தன்னை நோக்கி இழுப்பது உயர்மனமாகும். இந்த உயர் மனமே இதயத் தாமரையாகும். இதயத் தாமரையே மலராத போது அது கீழ் நிலை மனதை எங்ஙனம் கவர்ந்து இழுக்க முடியும். இதற்கான முயற்சிகளே ஆரம்ப நிலைப் புறப் பயிற்சிகளாகும். நம் அன்றாடப் பணிகளில் அடையும் வெற்றிகளுக்குப் பின்னால் இந்த தியானமும், மன ஒருமைப்பாடும் இருக்கிறது. இப்படி அவ்வப்பொழுது நிகழும் அந்த தியானத்தை, மன ஒருமைப்பாட்டை நிரந்தரமாக்கினால் அதுவே நம் பிறப்பின் நோக்கத்தை அடைவதாக அமையும்.

புறப் பொருள்களில் மனதைக் குவிப்பது மன ஒருமைப்பாடு. இதுவே தாரணை. தாரணையின்றி யாரும் தியானத்தை அடைந்து விட முடியாது. பிரார்த்தனை, ஜபம், பிரம்மச்சரியம் போன்ற சாதனங்களால் இதயத் தாமரையை மலரச் செய்து விட்டீர்களானால், பிறகு மனம் இயல்பாக அங்கு ஈர்க்கப்பட்டுக் குவிகிற நிலையே தியானம். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். மன ஒருமைப்பாடு என்கிற பொழுது அங்கு அனைத்து பொறிகளும் இயங்குகின்றன. ஆனால், தியானம் என்கிற பொழுது மனம் மட்டுமே இயங்குகிறது. பிற பொறிகள் எல்லாம் அடங்கி விடுகின்றன. மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள்களோடு உள்ள தொடர்பு தியானத்தில் துண்டிக்கபட்டு விடுகிறது. புற விஷயங்களில் காலத்தின் ஆதிக்கத்திற்குள் நிகழ்த்தப்படுவது மன ஒருமைப்பாடு. ஆனால், உள்ளே காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம். மன ஒருமைப்பாட்டில் புறப் பொருள் மனதைக் கட்டுப்படுத்துகிறது. தியானத்தில் புத்தி, அல்லது ஆன்மா மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், முன்னமே இது தெரிந்திருக்கும் பொழுது தியானத்தின் பொழுது நம் நிலை என்ன என்பது நம் அறிவில் இயல்பாகவே உதயமாகிக் கொண்டேயிருக்கும். சந்தேகம் என்றத் தடையே ஏற்படாது.

நம் மனதிற்கு இரண்டு நிலைப்பாடு உண்டு. அதாவது தன்னுணர்வு நிலை, உணர்வறு நிலை என்பனவாம் அது. குழந்தையாக இருக்கும் பொழுது இருக்கும் தன்னுணர்வானது வளர வளர உணர்வறு நிலைக்குப் போய் விடுகிறது. நாம் சாப்பிடுகிறோம், பேசுகிறோம், நடக்கிறோம், வேலை செய்கிறோம் என்று எல்லாவற்றையும் செய்தாலும் அதை உணர்வதில்லை. இவையனைத்தும் உணர்வறு நிலையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. வேலை செய்வது வேறு, வேலை செய்கிறேன் என்பதை உணர்வது வேறு. எந்தச் செயலுக்கும் ஆன்மாவோடு தொடர்பிருக்கும் வரையில்தான் அது தன்னுணர்வோடு நடக்கும். ஆனால், மனம் எப்பொழுதும் எண்ண அலைகளாக எழுந்து சலனப்பட்டுக் கொண்டே இருப்பதால் நாம் ஆன்மாவை உணர முடிவதில்லை. எனவே நம் ஆன்மா ஒன்று மட்டுமே உணர்வுப் பொருளாக இருக்கிறது. மற்ற மனம் உட்பட அனைத்தும் தன்னுணர்வு அற்றவைகளாக ஆகி விட்டன. இப்படி இடைவிடாது சலனப்பட்டுக் கொண்டே இருக்கும் மனதால் நாம் நம் சொந்த உணர்வு மையத்தை விட்டு விலகி உணர்வறு நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது இந்த அலைகளைப் படிப்படியாக நிறுத்தி, ஒரே ஒரு அலையை மட்டும் நிலை பெறச் செய்யும் பொழுது, தியானம் நமக்கு ஆன்மாவோடு தொடர்பை உண்டாக்கி விடுகிறது. எனவே நம் உணர்வறு நிலை மறைந்து தன்னுணர்வு மேலோங்கி விடுகின்றது. மன ஒருமைப்பாடு என்பது கூட உணர்வறு நிலையில்தான் நடைபெறுகிறது. தியானத்தால்தான் நாம் தன்னுணர்வு நிலையை அடைந்து மீட்சி பெறுகிறோம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

மூச்சின் பல சூட்சுமங்கள்!

Photo: நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம். எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. மருத்துவர் இழுத்து மூச்சுவிடு என்று ஸ்டெதாஸ்கோப்பை முதுகில் வைக்கும் போதுதான் நமக்கு மூச்சுவிடுவது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. நான் சொல்வது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் மூச்சுவடுவது பற்றிய சிந்தனையே இல்லாமல் பிறந்து, வளர்ந்து, இறந்து போனவர்களும் உண்டு. இழுத்துவிடும் மூச்சு நின்னாப் போச்சு என்பார்கள். ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு எத்தனை மூச்சு என்று தீர்மானிக்கப் பட்டிருக்கும், எனவே சுவாசத்தை இழுத்து மெதுவாக விட்டுப் பழகுவதால் பிராணசக்தி அதிகம் கிடைக்கும், ஆயுள் நீளும். 

இந்த மூச்சின் பல சூட்சுமங்கள் நம் முன்னோர்களால் நமக்கு திறந்து காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் நமக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நான் தியானம் கற்று பயிற்சி செய்யத் துவங்கிய காலத்தில், ஆர்வக் கோளாரு காரணமாக நடுஇரவில்கூட எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி கண்ணைமூடி உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த என் அறையில் என்னுடன் தங்கும் ஒரு சக தொழிலாளி, நீ காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் தியானம் செய். ஆனால் மூச்சை மறக்காமல் எப்போதும் எந்த வேலையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இரு. நன்றாக சிரமமில்லாமல் இழுத்து மெதுவாக விட்டு பழகி வா. நிறைய நன்மைகளைப் பெறுவாய். தியானமும் கைகூடும் என்றார். வேறு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். மேலும் மூச்சை கவனித்து பழக்கத்துக்கு கொண்டுவருவதற்கு சோம்பல் வேறு. ஆனால் சொன்னவர் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஸ்வாமிகள் என்ற சித்தரின் நேரடி சீடர். ஸ்வாமிகளின் ஸமாதிநிலைக்கு பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து பணி செய்து கொண்டிருந்தார். எனவே நானும் அவர் சொன்னபடியே செய்து வந்தேன். 

ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் விரைவில் பழக்கத்துக்கு வந்து விட்டது. கொஞ்சநாள் கழிந்த பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் போது காதில் வேகமாக காற்றடிப்பது போன்ற பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது. முதலில் பயந்துவிட்டேன். உறக்கம் நீங்கி கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு பார்த்தால் கண்ணை மூடிய சிறிது நேரத்திலேயே கேட்கும். ஆனால் தொடர்ந்து கேட்காது . ஒரு நொடிதான். சிறிது நாட்களில் வேறொரு அவஸ்த்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது என் இதயம் துடிப்பது எனக்கு கேட்கும். கண்விழித்து ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு அமர்ந்தால் சொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்பது படிப்படியாக மறைந்து விடும். சில நேரங்களில் மூச்சை மெதுவாக விடுகிறேன் பேர்வழி என்று அப்படியே உறங்கிப் போக, மூச்சுவிட மறந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அலறி அடித்துக் கொண்டு எழுவதும் உண்டு. காலையில் கண்விழித்தால் எதிரில் தெரியும் சுவரில் டீவிப் பெட்டியில் கேபிள் கட்டாகி விட்டால் தெரியுமே அதுபோல கொச கொசவென்று புள்ளிப் புள்ளியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரியும். சிறிது நேரம் கழித்து எழுந்து கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தால் சுவர் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. 

அந்த ஸ்வாமிகளின் சீடரே என்னிடம் ''ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று கேட்டார். நான் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அவர் சபாஷ் அருமையான முன்னேற்றம் தெரிகிறது என்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார். நாம் சொல்வதைச் சொன்னாலும் எல்லோரும் அதை கடைபிடிக்க மாட்டார்கள். அப்படியே கடைபிடித்தாலும் உறுதியாக நிலைக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படி அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். நாம் பிரச்சனையைச் சொன்னால்  இவர் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று நான் கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஆனால் அவர் அதை உணர்ந்து விட்டார். பளிச்சென்று  உனது இந்தக் கோபமும் கூடப் படிப்படியாகக் குறைந்து விடும் என்றார். பிறகு சொல்ல ஆரம்பித்தார். நீ சுவாசத்தை உற்று கவனித்து அதை முறையாக கையாள்வதாலே உன் உள் உணர்வு விழிப்பு நிலையை அடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இதெல்லாம். அந்த காதில் கேட்ட பேரிரைச்சல் வேறொன்றுமில்லை உன் இரத்த ஓட்டத்தின் சத்தமே, புலன் வழியே வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மனம் உள் முகமாக திரும்பியதால் உள் உணர்வுகள் கூர்மையாகி வருவதால்தான் உன் இதயத் துடிப்பை உன்னால் கேட்க முடிந்தது. மூச்சு மெதுவாக விடுவது என்கிற பழக்கம் இன்னும் முழுமைக்கு வரவில்லை மேலும் அனிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த சுவாசம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவேதான் இரவில் நீ தூங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவற்றில் நீ பார்த்தது அணுக்களின் அசைவையே . 

ஆனால் இவையெல்லாம் 30% வெற்றியே இன்னும் நீ முக்கால் கிணறு தாண்டியாக வேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு நீளக் கதை எதற்கென்றால்? சுவாசத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே. இதில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு காட்டுவாசிப் பெண் முதுகில் குழந்தையை தொங்கவிட்டு, அதில் அந்தக் குழந்தை முன் புறமாக கவிழ்ந்து தாடையை மார்பின் மேல் பகுதியில் அழுத்தியவாறு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு குழந்தையை தூக்கிக் கொண்டே அலைய வேண்டும் ? என்று கேட்டால். பல காரணங்களைச் சொன்னாலும், ஒரு காரணம் பளிச்சென்று என்மனதைத் தொட்டது. அதாவது முன் புறமாக கவிழ்ந்து தலையைத் தொங்கப் போட்டுத் தூங்கும் அந்தக் குழந்தையால் வாயால் சுவாசிக்கவே முடியாது. மூக்கால் மட்டுமே சுவாசிக்க முடியும். அதுவே பழக்கத்துக்கும் வந்துவிடும். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வாயால் சுவாசிக்காது என்றார்கள். சுவாசம் என்பது மூக்கால் மட்டுமே நடைபெற வேண்டும். ஏனென்றால் மூக்கில் மட்டுமே காற்றை வடிகட்டக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அப்படியே மீறி எதுவாவது உள்ளே போனால் தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினங்களும் வாய்திறந்து தூங்குவதில்லை. வாய்வழியாக சுவாசிப்பதுமில்லை. 

வாய்வழியாக சுவாசிப்பதனால் அசுத்த காற்று நுரையீரலை அடைவதுடன், காற்று குளிர்ச்சியடைந்து உள்ளே போவதால், சுவாச உறுப்புகள் வீக்கம் அடைகின்றன. தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுபவன் விழித்தெழும் போது வாயிலும், தொண்டையிலும் ஒரு எரிச்சலை உணர்வான். ஆனால் நாசி வழியாக காற்று உள்ளே போகும் போது உஷ்ணமாகிப் போவதால் சளி பிடிக்காது. வாயின் மூலம் மூச்சு விடுவதால் பல தொற்று நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. எனவே குழந்தையிலிருந்தே இந்த வாய் வழி மூச்சுவிடுவதைத் தவர்க்க நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்படி பழக்கம் இருப்பின் அதை மாற்ற வேண்டும். அதைப்போலவே ஒரு நாயைக்கவனித்துப் பார்த்தால், அது இரவில் தூங்காவிடினும் படுக்கும் போது இடது பக்கம் கீழிருக்கும் படி படுக்கும். பகலில் வலது பக்கம் கீழிருக்கும்படி படுக்கும். ஏனென்றால் பகலில் உஷ்ணமான நேரத்தில் இடது கலை ஓடினால் உடலில் உஷ்ணத்தின் தாக்கம் இருக்காது. இரவில் சூரியகலை ஓடினால் உடலில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்காது. அதாவது உஷணம் சமன்படுத்தப்படும். இதை நாய்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நம்மை எல்லோரும் இடது பக்கமாக படுங்கள் அதுதான் இதயத்துக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். அப்படி படுப்பதினால் உடல் அதிக உஷ்ணமடைந்து நோய்களுக்கு ஏதுவாகும். பகலில் தூங்கக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டோம். சரி, அப்படியே தூங்கினாலும் சரி, ஓய்வாக படுத்திருந்தாலும் சரி வலது பக்கம் கீழிருக்கும் படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் இடது பக்கம் கீழிருக்கும்படிக்கு படுத்துக் கொள்ளுங்கள். மேலும் சரியாக முழு மூச்சு வாங்கி விடுவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம். எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. மருத்துவர் இழுத்து மூச்சுவிடு என்று ஸ்டெதாஸ்கோப்பை முதுகில் வைக்கும் போதுதான் நமக்கு மூச்சுவிடுவது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. நான் சொல்வது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் மூச்சுவடுவது பற்றிய சிந்தனையே இல்லாமல் பிறந்து, வளர்ந்து, இறந்து போனவர்களும் உண்டு. இழுத்துவிடும் மூச்சு நின்னாப் போச்சு என்பார்கள். ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு எத்தனை மூச்சு என்று தீர்மானிக்கப் பட்டிருக்கும், எனவே சுவாசத்தை இழுத்து மெதுவாக விட்டுப் பழகுவதால் பிராணசக்தி அதிகம் கிடைக்கும், ஆயுள் நீளும்.

இந்த மூச்சின் பல சூட்சுமங்கள் நம் முன்னோர்களால் நமக்கு திறந்து காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் நமக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நான் தியானம் கற்று பயிற்சி செய்யத் துவங்கிய காலத்தில், ஆர்வக் கோளாரு காரணமாக நடுஇரவில்கூட எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி கண்ணைமூடி உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த என் அறையில் என்னுடன் தங்கும் ஒரு சக தொழிலாளி, நீ காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் தியானம் செய். ஆனால் மூச்சை மறக்காமல் எப்போதும் எந்த வேலையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இரு. நன்றாக சிரமமில்லாமல் இழுத்து மெதுவாக விட்டு பழகி வா. நிறைய நன்மைகளைப் பெறுவாய். தியானமும் கைகூடும் என்றார். வேறு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். மேலும் மூச்சை கவனித்து பழக்கத்துக்கு கொண்டுவருவதற்கு சோம்பல் வேறு. ஆனால் சொன்னவர் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஸ்வாமிகள் என்ற சித்தரின் நேரடி சீடர். ஸ்வாமிகளின் ஸமாதிநிலைக்கு பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து பணி செய்து கொண்டிருந்தார். எனவே நானும் அவர் சொன்னபடியே செய்து வந்தேன்.

ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் விரைவில் பழக்கத்துக்கு வந்து விட்டது. கொஞ்சநாள் கழிந்த பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் போது காதில் வேகமாக காற்றடிப்பது போன்ற பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது. முதலில் பயந்துவிட்டேன். உறக்கம் நீங்கி கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு பார்த்தால் கண்ணை மூடிய சிறிது நேரத்திலேயே கேட்கும். ஆனால் தொடர்ந்து கேட்காது . ஒரு நொடிதான். சிறிது நாட்களில் வேறொரு அவஸ்த்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது என் இதயம் துடிப்பது எனக்கு கேட்கும். கண்விழித்து ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு அமர்ந்தால் சொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்பது படிப்படியாக மறைந்து விடும். சில நேரங்களில் மூச்சை மெதுவாக விடுகிறேன் பேர்வழி என்று அப்படியே உறங்கிப் போக, மூச்சுவிட மறந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அலறி அடித்துக் கொண்டு எழுவதும் உண்டு. காலையில் கண்விழித்தால் எதிரில் தெரியும் சுவரில் டீவிப் பெட்டியில் கேபிள் கட்டாகி விட்டால் தெரியுமே அதுபோல கொச கொசவென்று புள்ளிப் புள்ளியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரியும். சிறிது நேரம் கழித்து எழுந்து கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தால் சுவர் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது.

அந்த ஸ்வாமிகளின் சீடரே என்னிடம் ''ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று கேட்டார். நான் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அவர் சபாஷ் அருமையான முன்னேற்றம் தெரிகிறது என்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார். நாம் சொல்வதைச் சொன்னாலும் எல்லோரும் அதை கடைபிடிக்க மாட்டார்கள். அப்படியே கடைபிடித்தாலும் உறுதியாக நிலைக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படி அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். நாம் பிரச்சனையைச் சொன்னால் இவர் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று நான் கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஆனால் அவர் அதை உணர்ந்து விட்டார். பளிச்சென்று உனது இந்தக் கோபமும் கூடப் படிப்படியாகக் குறைந்து விடும் என்றார். பிறகு சொல்ல ஆரம்பித்தார். நீ சுவாசத்தை உற்று கவனித்து அதை முறையாக கையாள்வதாலே உன் உள் உணர்வு விழிப்பு நிலையை அடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இதெல்லாம். அந்த காதில் கேட்ட பேரிரைச்சல் வேறொன்றுமில்லை உன் இரத்த ஓட்டத்தின் சத்தமே, புலன் வழியே வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மனம் உள் முகமாக திரும்பியதால் உள் உணர்வுகள் கூர்மையாகி வருவதால்தான் உன் இதயத் துடிப்பை உன்னால் கேட்க முடிந்தது. மூச்சு மெதுவாக விடுவது என்கிற பழக்கம் இன்னும் முழுமைக்கு வரவில்லை மேலும் அனிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த சுவாசம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவேதான் இரவில் நீ தூங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவற்றில் நீ பார்த்தது அணுக்களின் அசைவையே .

ஆனால் இவையெல்லாம் 30% வெற்றியே இன்னும் நீ முக்கால் கிணறு தாண்டியாக வேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு நீளக் கதை எதற்கென்றால்? சுவாசத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே. இதில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு காட்டுவாசிப் பெண் முதுகில் குழந்தையை தொங்கவிட்டு, அதில் அந்தக் குழந்தை முன் புறமாக கவிழ்ந்து தாடையை மார்பின் மேல் பகுதியில் அழுத்தியவாறு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு குழந்தையை தூக்கிக் கொண்டே அலைய வேண்டும் ? என்று கேட்டால். பல காரணங்களைச் சொன்னாலும், ஒரு காரணம் பளிச்சென்று என்மனதைத் தொட்டது. அதாவது முன் புறமாக கவிழ்ந்து தலையைத் தொங்கப் போட்டுத் தூங்கும் அந்தக் குழந்தையால் வாயால் சுவாசிக்கவே முடியாது. மூக்கால் மட்டுமே சுவாசிக்க முடியும். அதுவே பழக்கத்துக்கும் வந்துவிடும். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வாயால் சுவாசிக்காது என்றார்கள். சுவாசம் என்பது மூக்கால் மட்டுமே நடைபெற வேண்டும். ஏனென்றால் மூக்கில் மட்டுமே காற்றை வடிகட்டக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அப்படியே மீறி எதுவாவது உள்ளே போனால் தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினங்களும் வாய்திறந்து தூங்குவதில்லை. வாய்வழியாக சுவாசிப்பதுமில்லை.

வாய்வழியாக சுவாசிப்பதனால் அசுத்த காற்று நுரையீரலை அடைவதுடன், காற்று குளிர்ச்சியடைந்து உள்ளே போவதால், சுவாச உறுப்புகள் வீக்கம் அடைகின்றன. தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுபவன் விழித்தெழும் போது வாயிலும், தொண்டையிலும் ஒரு எரிச்சலை உணர்வான். ஆனால் நாசி வழியாக காற்று உள்ளே போகும் போது உஷ்ணமாகிப் போவதால் சளி பிடிக்காது. வாயின் மூலம் மூச்சு விடுவதால் பல தொற்று நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. எனவே குழந்தையிலிருந்தே இந்த வாய் வழி மூச்சுவிடுவதைத் தவர்க்க நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்படி பழக்கம் இருப்பின் அதை மாற்ற வேண்டும். அதைப்போலவே ஒரு நாயைக்கவனித்துப் பார்த்தால், அது இரவில் தூங்காவிடினும் படுக்கும் போது இடது பக்கம் கீழிருக்கும் படி படுக்கும். பகலில் வலது பக்கம் கீழிருக்கும்படி படுக்கும். ஏனென்றால் பகலில் உஷ்ணமான நேரத்தில் இடது கலை ஓடினால் உடலில் உஷ்ணத்தின் தாக்கம் இருக்காது. இரவில் சூரியகலை ஓடினால் உடலில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்காது. அதாவது உஷணம் சமன்படுத்தப்படும். இதை நாய்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நம்மை எல்லோரும் இடது பக்கமாக படுங்கள் அதுதான் இதயத்துக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். அப்படி படுப்பதினால் உடல் அதிக உஷ்ணமடைந்து நோய்களுக்கு ஏதுவாகும். பகலில் தூங்கக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டோம். சரி, அப்படியே தூங்கினாலும் சரி, ஓய்வாக படுத்திருந்தாலும் சரி வலது பக்கம் கீழிருக்கும் படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் இடது பக்கம் கீழிருக்கும்படிக்கு படுத்துக் கொள்ளுங்கள். மேலும் சரியாக முழு மூச்சு வாங்கி விடுவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

Tuesday, April 1, 2014

ஓம் என்னும் உயிர்ச்சக்தி

Photo: ஓம் என்னும் உயிர்ச்சக்தி

தேவைகள் இரண்டு வகை. ஒன்று புறத்தேவை. மற்றொன்று அகத்தேவை. புறத்தேவைகள் சில மணித்துளிகள் மட்டுமே இன்பம் தரும். அகத்தேவைகள் ஆண்டுக் கணக்கில் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கும்.
எந்த வகையான தேவையாக இருந்தாலும் அவரின் தேவையை அவரவரே அடைந்து கொள்ள வேண்டும்.
மனித உடல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அது படைப்பைக் குறிக்கும். வளரும் உடலைப் பேணுதல் வேண்டும். அது காத்தலைக் குறிக்கும். எல்லா உடலுக்கும் இறுதியென ஒன்றிருக்கும். அது அழித்தலைக் குறிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்பவன் முக்கண்ணன் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.

முக்கண்ணன் என்பவர் வேறு எங்கும் வெளியில் இல்லை. அவர் அவரவர் உடம்புக்குள்ளேயே இருக்கின்றார். உள்ளேயிருக்கும் முக்கண்ணனை இயக்குகின்ற விசை நம்மிடமிருக்கிறது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருப்பவர்ளைப் போல, முக்கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் அனேகம்.
நம்மிடமிருக்கும் விசையைப் பயன்படுத்தினால் நமக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் நமக்குக் கிடைக்கும். தேவைகளை வேண்டுமென்று விரும்புகின்ற மனம், தேவைகளை அடைவதற்காகத் தினந்தோறும் சிறிது நேரமாவது முயற்சி செய்ய வேண்டும்.
எந்த முயற்சியும் இல்லாமல் அடைகின்ற 'தேவைகளெல்லாம் நீர்க்குமிழிகள் போல் தோன்றி அடுத்த கணத்தில் மறைந்துவிடும். முயற்சி செய்து அடைகின்ற தேவைகள் நீண்ட காலம் நன்மையடையச் செய்வதுடன் இன்பத்தை நுகரச் செய்யும்.

தேவைகளை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகளை சாதனை என்பர். சாதனை செய்யாமல் எந்தத் தேவையையும் சாதிக்க முடியாது. சாதனை செய்பவர்களே சாதனையாளர்கள். சாதனை செய்யாதவர்கள் வெறும் வேதனையாளர்கள்.
மலையின் உச்சியில் மணி வயிரம் இருக்கிறது என்று தெரிகிறது. மலையேறிச் செல்லாமல் மலையாடிவாரத்தில் நின்றுக்கொண்டு மணியே! என்று சொன்னால் மணி வருமா? என்று சிந்திக்க வேண்டும்.
நம்முன்னே மூன்று சக்திகள் இருக்கின்றன. அச்சக்திகளால் தேவைகள் அனைத்தையும் அடைந்துவிடலாம். அச்சக்தியை இயக்கும் விசை 'ஓம்’ ஆகு.

ஓம் என்னும் விசையை இயக்க இயக்க நமக்குள்ளே இருக்கும் மூன்று சக்திகளும் இயங்கத் தொடங்கும்.
ஓம் என்னும் மந்திர ஒலியை, காலையிலும் மாலையிலும் சுமார் ஒரு சில மணி நேரங்கள் சொல்லிக் கொண்டு சாதனை செய்து கொண்டு வந்தால், திறந்து கிடக்கும் ஐம்புலன்களின் ஆசாபாசங்களின் கதவுகள் மூடிக்கொள்ளும். அகக்கதவு திறக்கும். அப்போது வேதனைகள் எல்லாம் மறைந்துவிடும். சாதனை செய்யச் செய்ய தேவைகள் எல்லாவற்றையும் அடைந்துவிடலாம்.

தேவைகள் நிறைவேறும்போது, சித்திகள் கைகூடும், மனத்துக்குள் புது வகையான ஒழுக்கமும் ஞான அறிவும் உதயமாகும். இளமையுடன் இருக்க காயகற்பம் என்னும் மருந்து இருப்பதாகக் கூறுவார்கள். காயகற்பம் உண்டவர்கள் கற்பகாலம் வரை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்கள்.
அத்தகைய காயகற்பத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். எந்தக் காயகற்பமும் நம் கையில் தான் & செய்யும் சாதனையில்தான் இருக்கிறது.
நரை, திரை, மூப்பு, சாக்காடு என்னும் நான்கு வகையான துன்பள்ஙகளையும் அகற்றி என்றும் இளமையுடனிருக்க வகை செய்யும் காயகற்பமாகவும் விளங்குகிறது. ஓம் என்னும் மந்திர ஒலி.

இக்காயகற்கப்பயிற்சியை காலை, மாலை, இரவு படுக்கைக்குச் செல்லும் போதும், உதயத்தில் எழும்போதும் தினந்தோறும் தவறாமல் ஒரு பத்து நிமிட நேரம் செய்ய வேண்டும்.

வலது நாசி வழியாகக் காற்றை உள்ளே இழுக்கும் போதும் ஓம், உள்ளே சென்ற காற்று உள்ளே நிறுத்தும் போதும் ஓம் உள்ளே நின்று காற்று வெளியே வரும்போதும் ஓம் என்றும் உச்சரித்துக் கொண்டுவந்தால் உடல் வெப்பமாகும். மூலத்திலே இருக்கும் முக்கண்ணன் விழித்தெழுவார்.
எண்ணியது நடக்கும். சொல்வது கிடைக்கும் வல்லமை உண்டாகும். நல்லவை தோன்றும். ஞாலமே இனியதாகும். வாழ்வில் இன்பமுண்டாகும்.